Sunday, June 5, 2016

நீர் என்னைச் சுத்தப்படுத்த முடியும்

முன்னுரை

மாற்கு 1:40-42
இன்று, கடும் சிரமங்களுக்கு மத்தியில் இயேசுவைப் பார்க்க வந்த குஷ்டரோகி ஒருவனையும் அவனுடைய ஆவியிக்குரிய ஜீவியத்தின் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய தங்கப் பாளையம் பற்றியும், அதிசயமாக சுகம் பெற்றதைப் பற்றியும் கற்றுக் கொள்ளப் போகிறோம். நமது அறியாமையைப் போக்கக் கூடிய சில வேத வசனங்களை ஆராய்வோம்.

ஆழமாக ஆராய்வதற்கு முன் இந்த குஷ்டரோகியைப் பற்றி ஆராய்வோம்:
a.
அவனின் பெயர், வயது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
b.
அவன் எப்பளவு காலம் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டான் என்று வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், லூக்கா 5.12ல் அவன் குஷ்டத்தால் மூடப்பட்டிருந்தான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது அவன் நெடுங்காலம் குஷ்டத்தால் பேரளவில் பாதிக்கப்பட்டிருந்தான் என்று புரியத் தருகிறது.
c.
இயேசுவைப் பற்றி அவனுக்கு யார் அறிவித்தார் என்ற தகவல் எதுவும் கிடையாது.

இந்தக் குஷ்டரோகு குணம்பெற்ற மூன்று நிலைகளைக் காயப்போகிறோம்!

1.
நிலை 1 – மாற்கு 1: 40
குஷ்டரோகி ஒருவன் இயேசுவை அணுகுதல்)....

அவன் சுகம் பெறுவதற்கு இதுவே முதல் படி...
சுகத்துக்காக அவன் இயேசுவை நாடி வந்ததை நாம் பாராட்டிப் போற்ற வேண்டும்!
ஏன்? இயேசுவண்டை அவன் வருவதைப் போற்றிப் புகழுவதற்கு முன்பு அவனுடைய அறுஅறுப்பான நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும்! 
குஷ்டரோகி இயேசுவண்டை வரதற்கு ஒரு சிலதடைகள்இருந்தன!
அவை யாவை என்பதைக் காண்போம்:

a.
மோசேயின் சட்டம் அல்லது யூத சட்டம்
    பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் இயேசுவின் காலத்திலும குஷ்டரோகம் பயங்கரமான வியாதியாகக் கருதப்பட்டது! பரலோக ஈடுபாடு இல்லாதமல் எந்த மருந்தும் குணப்படுத்த முடியாது! ஒரு ஆசாரியனே நோயாளியை ஆராய்ந்து அவன் நோய் நிலையை உறுதிப்படுத்த முடியும்!
   
இவ்வியாதி ஒருவனின் புலனை அழித்துப்போடும்; நரம்பு முனைகளைச் சேதப்படுத்தும்புலன்கள் செயல்பட முடியாததால், மேலும் தங்கள் உடலில் காயப்படும்படி தங்களை அறியாமல் செயல்பட்டு விடுவார்கள். இதன் கடை நிலை பக்கவாதம்! 
   
குஷ்டரோகம் உறுதிப்படுத்தப்படும் முதல் வாரத்தில் ஒருவர் ஒருவார காலத்துக்கு jனியறையில் அடைக்கப்படுவார். அவனுக்கு சுகம் ஏற்படவில்லை என்றால், அவன் அடைபட்டு கிடக்கும் காலம் மாதங்களாகவும் வருடங்களாகவும் நீடிக்கும்.!
   
இஸ்ரேலியே முகாமுக்கு வெளியே அவன் தங்கியிருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. – அது ஒரு குகையாகவோ, புறம்பான காடாகவோ இருக்கலாம்.(இப்படி இருந்தும் அவர்குளுக்கும் மற்றவர்களுக்கும் தொடர்பு கிடையாது. தீண்டப்படாதகவர்களாக அவர்கள் நடத்தப்படுவார்கள்; சமுயத்திலும், சமயத்திலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. சட்டம் அவர்கள் தீட்டானவர்கள் என்று அறிவிக்கிறது. பிற நபர்களோடு எந்த தொடுதலும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் நெறுங்கி வராதபட மற்றவர்கள் அவர்களுக்கு எதிராக கற்களை விட்டு எறிவார்கள். அதனால்தான் அவர்கள் துக்கத்தை வெளிப்படுத்தும ஆடை அணியவேண்டும், தலை சீவப்படாமல் அலங்கோலமாகவும், தாடிகள் மூடப்பட்டும், ‘தீட்டு, தீட்டு…..’ என்று அவடுத்தவர்கள் விலகிச் செல்லும்படியும் கூவிக்கொண்டு செல்ல வேண்டும்! 
   
தீட்டு!" இதற் மூலம் பிறர் அப்பால் சென்றுவிட முடியும்!
   
இந்த நோய் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சில குடும்ப உறுப்பினர்கள், பிச்சை எடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, அவ்வப்போது உணவும் உடைமைகளும் கொடுக்கப்படும்.

   
குறிப்புசட்டம் மற்றும் கூட்டத்தினிமித்தம் உள்ள அச்சத்தினால் (மத். 8.1) அவன் இயேசுவிடம் இருந்தும் ஒதுங்கியிருந்திருக்கலாம்.! 
               
இந்தக் குஷ்டரோகி சரீரம்மனம்உணர்வுசமூக ரீதியாக துன்பம் அனுபவித்திருப்பான்!

  b.
உடன் வியாதிக்காரர்கள்
      அவனுடைன் சேர்ந்து வாழ்ந்துவந்த குஷ்டரோகிகள், அவனை, இயேசுவண்டைச் செல்லவேண்டாம் என்று பின்வாங்கச் செய்திருப்பார்கள்!

  c. "
சொந்த மனசாட்சி"
      அந்த வியாதி மனசாட்சியாக, ‘உன் நிலைமையைப் பார், நான் (குஷ்டரோக) நீண்ட நாளாக உன்னோடு இருக்கிறேன்! நான் உன்னை விட்டு விலகுவதில்லை! இது உன் விதி (தலையெழுத்து)!"

இந்தத்  தடைகள் யாவும் அவனின் சிறையிருப்புக் கூட்டில் இருந்து விடுவிடுத்திருக்காது. ஆனால் இவை யாவாற்றுக்கும் மத்தியில் ஏதோ ஒன்று அவனின் சிந்தையைத் திறந்திருக்கும்!

குறிப்பு: இயேசுவண்டை வர எது தடுக்கிறது? நீ இயேசுவண்டை வர எது தடையாக இருக்கிறது? சுயமாகவே அனுதாபத்தைத் தேடிக் கொள்ளாதே, உன் நிலைமைக்கு நொண்டிச் சாக்கு தேடிக் கொள்ளாதே! குறை கூறுவதை நிறுத்து! கவனத்தைக் குவி! மனதில் தீர்மானமாய் இது! மன உறுதியாய் இரு! குஷ்டரோகியைப்போல், பர்த்திமேயுவைப் போல், உரிப்போக்குடைய பெண்ணைப் போல் நீயும் இயேசுவண்டை வர தீர்மானம் கொள்...

2.
இரண்டாவது நிலைமாற்கு 1:40
...
முழங்காலிட்டு இயேசுவிடம் மன்றாடினான்,

இப்படிச் செய்வதன் மூலம் அவன் இயேசுவிடம் என்ன சொல்ல வருகிறான்?! இயேசுவுக்கு அவன் சொல்லும்செய்துயாது?
நீர் மாத்திரமே என் நம்பிக்கைஎன்றச் செய்தியைச் சொல்கிறான். என்னை உம்மிடத்தில் சரணடையச்செய்கிறேன்! உம்மைப் போக விடேன்..."

3.
மூன்றாம் நிலை மாற்கு 1:40
... "
உமக்குச் சித்தமானால், நான் சுத்தமாவேன்."

இந்தக் குஷ்டரோகியின் வல்லமையான அறிக்கையைக் காணுங்கள்! 
குஷ்டரோகி இதைத்தான் சொல்கிறான், "இயேசுவே, நீர் என்னைச் சுத்தமாக்க முடியும், நீர் என்னைச் சுகப்படுத்த முடியும்... ஆனால், எல்லாம் உம் கரத்திலே உண்டு." இந்தக் குஷ்டரோகியின் விசுவாசத்தைப் பாருங்கள்! 
இந்தக் குஷ்டரோகி தன் நிலைமையை இயேசுவிடம் ஒப்படைத்தாலும் அவனுடைய விசுவாவம் அற்புதம் நிறைந்தது!
நீரே என்னைச் சுகப்படுத்த முடியும் CAN HEAL ME!!! என்று குஷ்டரோகி இயேசுவண்டைச் சொல்கிறான். ஆனால் உமது கிருபையையே சார்ந்திருக்கிறேன்!

இயேசுவின் பிரதியுத்திரத்தைக் காணுங்கள்... மாற்கு 1:41

A.
இயேசுவானவர் இரக்கத்தால் துலங்கினார்! அல்லேலூயா!
B.
இயேசுவானவர் தம் கரத்தை நீட்டி அந்தக் குஷ்டரோகியை சொஷ்டமாக்கினார்
 
குறிப்பு: குஷ்டரோகி எப்போது கடைசியாகத் தொடப்பட்டான் என்று அறியோம். ஆனால், சட்டம் தொடப்படுவதற்குத் தடையாக இருக்கிறது ... யாரும் அவனைத் தொட விரும்பவில்லை. ஆனால், இயேசு தொட்டார்.
C.
இயேசு என்ன சொன்னார்?
  "
சுத்தமாகு" 

இயேசுவானவரின் ஒரு தொடுதலும் இரு வார்த்தைகளும் மாத்திரமே!

என்ன நடந்தது? மாற்கு 1: 42 உடனடியாக குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கி அவன் சுகம் பெற்றான்! என்ன அற்புதம்! என்ன சந்தோஷம்!

குறிப்பு: இயேசுவின் தொடுதல் சரீர சுகத்தை மாத்திரமல்ல, சிந்தை, உணர்வு, ஆவியையும் குணமாக்கியது. இயேசுவின் தொடுதல் எப்போதும்மொத்தமாகவரும்.. அது முழுமையான சுகம்! ஆமென்!


                        "...
நீர் என்னைச் சுத்தப்படுத்த முடியும்"

பாஸ்டர் ஜோசுவா ரமேஸ்

எழுப்புதல் அறுவடை தரிசனம்

ஹூடுட் சட்டம்

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தேசத்தின் ஆவிக்குரிய முன்னேற்றத்தைத் தாக்கம் செய்திருக்கிறது. பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் மசோதாவின் முதல் வாசிப்புக்காக தங்கள் சட்ட திருத்தத்தைச் சமர்ப்பித்தார். மேலோட்டமாக அந்த சட்டம் கிளந்தானில் ஹூடுட் சட்டத்தை அமல் படுத்த வலியுறுத்துகிறது. அம்மாநிலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ஷாரியா பாணியிலான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

என்னைப் பொறுத்த வரை இந்த நடவடிக்கை பின்வரும் காரியங்களைக் காட்டுகிறது:

1.             அம்னோ நீடித்து நிலைத்திருக்க வேறு எதிர்கட்சிகள் தேவைப்படவில்லை. சமய ஐக்கியத்திற்காக வேறு எந்த எதிர்கட்சியுடனும் கூட்டு சேரத் தயங்காது.

2.             சமய ரீதியாக அந்த மசோதா கிளந்தானில் மட்டும் செயல்படுத்தப்படும். ஆனால், அதன் செயலாக்கம் வெற்றிபெறும் பட்சத்தில், இதர மாநிலங்களுக்கும் விரிவாக்கம் காணும். இதன் மூலம் இந்நாடு இஸ்லாமிய நாடாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

3.             நம்மைப் போன்ற பன்மை சமுதாயத்தில் இது குடிமக்களை ஆபத்துக்கு இட்டுச் செல்லும். ஒவ்வொருவரும் இந்த ஷாரிய சட்டத்துக்கு அடிபணிய கட்டாயப்படுத்தப்படுவர்:
-          கரம் அல்லது கால் வெட்டப்படுதல்
-          பொது கசையடி
-          பொது கல்லடி

4.             குடிமக்கள் அனைவரையும் சமமாகப் பார்க்கும், தற்போது செயல்படுத்தப்படும் சட்டதிட்டத்தை மறுக்கச் செய்யும். பின்னர் ஒவ்வொரு உலாமாக்களும் (இஸ்லாமிய சமய குரு) சுய இச்சையின்படி சட்டத்தை வியாக்கியானம் செய்யத் தொடங்குவர்.

இக்காலக்கட்டம் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் முக்கியமானது. நமது தேசத்தில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனியுங்கள். ஜெபிக்கும் நேரத்தில் இது உதவியாக இருக்கும். நமது ஜீவியத்திற்கும் சாட்சிக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டபடி நமது சாட்சியை தற்காக்க உதவும். ஒடுக்கப்படுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கும் இது நம்மை ஆயத்தப்படுத்தும்.


மலேசியா, நமது தேசத்தைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

தேவனுடைய ராஜ்யம்

தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசுவானவர் பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் பல முறை வழியுறுத்தி வந்தார். இந்த ராஜ்யம் யாது? இந்த ராஜ்யத்தில் நாம் எங்கே இருப்போம்?

இயேசுவைப் பொறுத்தவரை, இது தேவனால் ஸ்தாபிக்கப்படும் புதிய ஆட்சி முறை ஆகும்.இயேசுவானவர் வெளிப்படையாக தம் ஊழியத்தை ஆரம்பித்தவுடனேயே இந்த ராஜ்யமும் தொடங்கி விட்டது! மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும இயேசுவானவர் 6 வகையான உவமானக் கதையைப் பயன்படுத்தி இந்த இராஜ்யத்தைப் பற்றி விளக்குகிறார். அவற்றில் இரண்டை ஆராய்ந்து அதன் உபதேசங்களைப் பெற்றுக் கொள்வோம்:

1.       விதைகளை விதைப்பவன் உவமானத்தின் மூலம் இந்த ராஜ்யம் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. வேதாகமத்தில் தேவ ராஜ்யம் தொடர்பான விபரம் அடங்கியிருக்கிறது. ஆனால் ஒரு சிலரே அந்த ராஜ்யத்தை ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சத்தியத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள் நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் ஆசீர்வாதங்களைப் பெறுவர். எனவே, இந்த ராஜ்யத்தில் வாசம் செய்கிறவர்களுக்கு அபரிமிதமான ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற செய்தி இதில் பொதிந்துள்ளது.

2.     களைகள் பற்றிய உவமானத்தில், தேவனின் பிள்ளைகளும் பிசாசின் பிள்ளைகளும் பக்கம் பக்கமாக ஜீவிப்பார்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். ஆனால், கடைசி காலத்தில் சத்தியம் வெளிப்படும். பிசாசின் பிள்ளைகளோ, இப்போது நாம் களைகளை எரிப்பது போல், அக்கினியில் வீசப்படுவர்! ஆகவே, இந்த உவமானம் கடைசி காலத்தில் தெட்டத் தெளிவாகத் தெரியும் என்று இப்பாடம் நினைவுறுத்துகிறது.

இவ்வுலக ராஜ்யம் போல் அல்லாமல் தேவனுடைய ராஜ்யம் தன் சொந்த ஆட்சி நெறிகளைக் கொண்டிருக்கும். அங்கே ஊழல் கிடையாது. அநீதி பெருகி வளர அங்கே இடம் இருக்காது. பிதாவாகிய தேவன் நீதியோடு ஆட்சி செய்வார். ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த ராஜ்யம் கிடைக்கும். ஒவ்வொரு விசுவாசியும் இந்த ராஜ்யத்தில் குடியுரிமை பெற்றவர்கள்.


பரிசுத்த ஆவியால் நாம் நிரப்பப்பட்டு இந்த ராஜ்யத்தில் பங்கு பெற பாத்திரர் ஆகுவோம். இவ்வகையில் நாம் பல உலக ராஜ்யங்களில் காண்பது போலல்லாமல் புதிய ராஜ்யத்திற்கு ஈர்க்கப்படுவோம். 

ஜெபித்தல்

எல்லா மதச் சடங்கிலும் ஜெபிக்கும் (இறை வணக்கம்) அப்பியாஷம் காணப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவர்த்தில் தனித் தன்மையும் மாறுபாடும் காணப்படுகிறது:

A.            ஆண்டவர் நமது அருகில் இருப்பதால் நீ சொல்வதையும் கேட்பதையும் அவர் கேட்கிறார்;

B.            நாம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். இதையே இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். யோவான் சுவிசேஷத்தில் இயேசுவிந் நாமத்தில் ஜெபிக்கும் போது பரலோகா பிதா சாதகமான பதிலைத் தருகிறார் என்று வாசிக்கிறோம்.

எனவே நண்பர்களே, இந்த ஓயாத ஜெப சலுகையின் வல்லமையைப் புறக்கணித்து விடாதீர்கள். இயேசுவின் பெயரில் என்ன சொல்லி ஜெபித்தாலும் அது அவரின் உள்ளத்தைத் தொடும். ஏன்? ஜெபிப்பதுதான் இயேசுவின் உள்ள ஊழியமாய் இருக்கிறது! இயேசுவானவர் ஜெபத்தைக் கேட்ட ஆண்டவரின் வலது புறத்தில் அமர்ந்து தமது பிள்ளைகளின் விண்ணப்பங்களைக் கேட்கிறார் என்று வேதம் சொல்கிறது.,


இயேசுவின் உள்ளத்தை விடாமல் தொடுவதற்குக் கற்றுக் கொள்வோம். ஜெபத்தின் வல்லமையை தேவனுடைய பிள்ளைகள் கற்றுக்கொள்வது நன்மையாய் இருக்கிறது. இடைவிடாத ஜெபத்திற்கான நேரத்தை ஒதுக்கும் படி உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். 

ஏன் புத்தாண்டு தேவை?

C.K. செஸ்டார்டன் என்பவர் பின்வருமாறு கூறுகிறார்:
"ஒரு புத்தாண்டு வேண்டும் என்பதற்காக நாம் அதைக் கொண்டாடவில்லை. ஒரு புதிய ஆத்துமா, புதிய மூக்கு, புதிய பாதம், புதிய முதுகுத் தண்டு, புதிய காது, புதிய கண் ஆகியவை வேண்டும் என்பதற்காகவே நாமக்குப் புத்தாண்டு தேவைப்படுகிறது."
சிந்திப்பதற்கு ஒரு நல்ல கருத்து!

ஒரு புத்தாண்டு என்றால் என்ன: காலத்தைக் குறிக்கும் சொல்; அல்லது கால மாற்றத்தின் அளவை?

சபையாரே, கடந்த ஜனவரி 2ல் நான் ஸ்டார் நாளிதழில் வாசித்த மிக அறுமையான கட்டுரை. ஜோசப் தான் என்ற ஒரு தலை சிறந்த நிறுவனத் தலைவர். தேசத்தை முன்னேற்றுவதில் அதிக வாஞ்சையுடையவர் பின்வருமாறு எழுதினார்: புத்தாண்டு என்பது காலத்தின் வளர்ச்சி மாத்திரம் அல்ல; அது தேவ கிருபையால் கிடைத்த சிலாக்கியம் என்று காண வேண்டும். அவர் அந்தப் புத்தாண்டைக் குறித்து மூன்று விதமான கண்ணோட்டங்களைத் தந்துள்ளார்.

பார்வை 1
காலம் என்பது ஒரு நம்பிக்கை
இந்த மதிப்பு மிக்க புதிய ஆண்டு நம்பிக்கையோடு கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: என்னைச் சூழ்ந்துள்ளவர்களுக்குத் தாக்கம் ஏற்படும் அளவுக்குக் காலத்தைக் காண்கிறேனா?

பார்வை 2
காலம் என்பது ஒரு முதலீடு
சிந்தையில் கடந்து போனவற்றைக் குறித்துத் தொடங்கவும். எத்தகையான ‘கனியை’ இந்த ஆண்டு முடிவதற்கு முன் காண விரும்புகிறேன்?

பார்வை 3
காலம் என்பது பொக்கீஷம்
எங்கே உங்கள் பொக்கீஷம் இருக்கிறதோ அங்கேதான் உங்கள் உள்ளமும் இருக்கும். 2016ம் ஆண்டு உங்களுக்கு எப்படி அமையப் போகிறது என்பது, அந்தப் பொக்கீஷத்தையும் அது இருக்கும் இடத்தையும் சார்ந்து இருக்கும். (என் தீர்மானத்தை என் உள்ளம் கிரகித்துச் செயல்படும்)

தேவனின் கிருபையால் நாம் அனைவரும் இந்தப் புத்தாண்டைப் பெற்றுக் கொண்டோம். படைப்பின் செயற்பாங்கில் நானும் அங்கம் வகிக்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, கனவு காணுங்கள்; அதுவும் பெரிதாகக் காணுங்கள். தேவ அச்சத்தோடு உமக்கும் உம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தைப் படைத்துக் கொள்ளவும்.


உங்கள் கனவுகள் நிதர்சனமாகும் வகையில் 2016ம் ஆண்டு அமையும். இந்த ஈவை நாம் அக்கறையோடும் மகிழ்ச்சியோடும் உபசரிப்போமாக. 2016ம் ஆசீர்வாதமாக அமையட்டும்.