Monday, October 17, 2016

உள்ளார்ந்த ஊழியம்


செய்தி: மறைதிரு ரூபன் கனகலிங்கம்

·         அனுதின அமைதி நேரம்
கிறிஸ்தவர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளர வேண்டும். 2 பேதுரு 3:18. தாவரங்கள் வளர்வதற்கு நீரும், சூரிய வெளிச்சமும், காற்றும் தேவை. நமது சரீர வளர்ச்சிக்கு உணவும், நீரும், காற்றும் சூரிய  வெளிச்சமும் தேகப்பியாசமும் தேவை. நமது ஆவிக்குரிய ஜீவிய வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

சவால்கள்:
இந்த உலகின் பரபரப்பான ஜீவியத்தில் தேவனுடனான தொடர்ப் துண்டித்துப் போவது எளிது. நமது சரீரம் ஊட்டச்சத்தை இழந்து பெலவீனமடையும் சூழ்நிலையில் நாம் உலகப்பிரகாரமான காரியங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறோம்.

தீர்வு:
அனுதின அமைதி நேரம் நமது ஆவிக்குரிய ஜீவியத்தை உயிர்ப்பிக்கச்செய்து துடிப்பாகச் செயல்படத் தூண்டும். சங்கீதம் 27:14, ஏசாயா 40:29-31

இடமும் நேரமும்:
இடம்: ஓசையும் இடையூறும் இல்லாத அமைதியான இடம். மத்தேயு 6:6. அமைதியின் மத்தியில் தேவன் பேசுகிறார். புற சப்தத்திற்கு உன் செவிகளையும் சிந்தையையும் மூடிக் கொள்.
நேரம்: அது உன் சரீரத்திற்குத் தேவையான பொறுத்தமான மற்றும் வழக்கமான நேரமாக இருக்க வேண்டும். இந்நாள் கலை நேரமே தொடங்குவதற்குப் பொறுத்தமானது. ஆதி.18:27, சங்.5:3.

வடிவம்:

1.        ஜெபம்

2.        வேதத்தில் இருந்து ஒரு பகுதியை வாசி

3.        தேவன் வேதத்தின் மூலம் உன்னிடம் பேசியதை தியானம் செய். தேவன் உன்னிடம் பேச இடம் கொடு. உம். அநுதின அப்பம், இயேசுவோடு ஒவ்வொரு நாளும் வாசம் செய்தல், போன்றவை

4.        தேவனைத் துதித்து, பிரார்த்தனை சென்

5.        உன் தினசரி ஜீவிய நடவடிக்கையைக் கர்த்தரிடத்தில் ஒப்படை

·         பரிசுத்தம் (Sanctification)
நமது மறு உருவாக்கத்தில் நமது சுபாவம் மாறுகிறது; நீதியாக்கத்தில் நமது நிலைப்பாடு மாறுகிறது; பரிசுத்தமாகுதலில் நமது குணாதிசயம் மாறுகிறது. பரிசுத்தமாகுதல் மறு உருவாக்கம் மற்றும் நீதியாக்க ஜீவியத்தின் கனி வெளிப்படுகிறது. இக்காரியம் 1066 முறை வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தமாகுதல் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவ சித்தமாய் உள்ளது.


பரிசுத்தமாகுதலின் அர்த்தம்
பரிசுத்தம் மற்றும் பரிசுத்தமாகுதல் பொருளளவில் ஒன்றே. ‘சுத்திகரிக்கப்படுதல், ‘ஒதுங்கிக் கொள்ளுதல்போன்ற பொருளைக் கொண்டு வருகிறது. விசுவாசி பாவத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு தேவனால் பரிசுத்த ஜீவியத்திற்குள் கொண்டு வரப்படுகிறார். 2 தீமோ.2:21: ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.

 யாத்.40:9-11, லேவி.27:14, எண்.8:17: கூடாரமும் அதன் உடமைகளும் சுத்திகரிக்கப்பட்டன. 2 நாளா. 29:5, 15-19: சுத்திகரிக்கப்படுதல் என்றால் தூய்மையாக்கப்பட்டு கர்த்தருடைய பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்படுதல் என்று பொருள்.

சுத்திகரிக்கப்படுதலின் ஆசான்:

1.        பிதாவாகிய கர்த்தர். 1 தெச.5:23,24, யூதா 1

2.        குமாரனாகிய கர்த்தர். எபே.5:26, 1 கொரி.1:2,30

3.        பரிசுத்த ஆவியாகிய கர்த்தர். 2 தெச. 2:13, ரோமர் 15:16, 1 கொரி. 6:11, 1 பேதுரு 1:2

சுத்திகரிக்கப்படுதலின் மூலம்:
1.        கர்த்தருடைய வார்த்தையினால். யோவான் 17:17, 19, 1 தீமோ.4:5

2.        இயேசுவின் இரத்தத்தினால். எபி.10:10-14; 13:12

3.        வேதனை அனுபவித்தல். எபி.12: 10,11

4.        கர்த்தரிடத்தில் கீழ்ப்படிதல். ரோமர் 6:19

5.        சுய சுத்திகரிப்பு. 2 கொரி.7:1

6.        விசுவாசம் கொள்ளுதல். அப். 26:18, எபே.2:8,9

சுத்திகரிப்பின் வளர்ச்சிப் படிவங்கள்
1.       மனம் (மதம்) மாறியவுடன் உடனடியாக சுத்திரிக்கப்படுகிறோம். 1கொரி.6:11. நாம் பரிசுத்தமாக்கப்பட்டோம்

2.       சுத்திகரிப்பின் வளர்ச்சி. யாக்கோபு 1:22-25. நாம் சுத்திகரிக்கப்படுகிறோம்.

3.       பூரணமும் இறுதியுமாய் இருக்கிறது. 1 தெச.5:23. நாம் சுத்திகரிக்கப்படுவோம். கிறிஸ்து வரும்போது நாம் அவரைப் போல் இருப்போம். 1 யோவான் 3:2. அது வரைக்கும் நாம் அந்தச் சுத்திகரிப்பில் ஈடுபடுவோம். பிலிப்.3:12-14

சுத்திகரிப்பைப் பராமரித்தல்
1.        கர்த்தர் மீது உள்ள ச்சத்தில் அவருக்குக் கீழ்ப்படிந்து உள்ளார்த்தமாக ஜீவித்தல்.

2.        பின்வாங்கிப் போனால், உடனடியாக மனஸ்தாபப்பட்டு சுதாகரித்துக் கொள்.

3.        பிசாசினிடத்தில் இருந்து விலகி நின்று சோதனைகளை ஜெயங் கொள்.

4.        அன்றாம் வேத வாசிப்பு, ஜெபம், ஆராதனை, ஐக்கியம், சாட்சி பகர்தல், பிறருக்காக ஜீவித்தல் போன்ற காரியங்களில் உண்மையுள்ளவனாய் இரு.

·         ஜெபமும் உபவாசமும்
ஜெபம் என்பது தேவனோடு பேசுவது ஆகும். இதன் மூலம் மனித ஆத்துமா தேவனோடு பேசுகிறது. தேவனுக்காக காத்திருத்தல்; தேவனிடத்தில் நமது ஆத்துமாவை உயர்த்துதல்; தேவனிடத்தில் நமது உள்ளத்தை ஊற்றுதல்; தேவனுக்கு முன்பாக கண்ணீர் சிந்துதல் போன்ற பொருளை ஜெபம் கொண்டு வருகிறது. சங்.5:3; 25:1; 34:6; 62:8. தேவனைத் துதிப்பதும் ஜெபமாகும். சங்.141:2; 50:14; அப்.10:4, வெளி.5:8; 8:3,4.

ஜெபத்திற்கான இடங்கள்
1.        எல்லா இடங்களும் பொருத்தமானவை. 1 தீமோ.2:8; சங்கீதம் 139:6-10. தேவன் எங்கும் இருக்கிறார்.
2.        ஒதுக்குப்புறமான இடம். மத்.6:6. இவ்விடத்தில் தேவனோடு தனிமையில் நேரத்தைச் செலவிட முடியும்.
3.        ஆலயத்தில். லூக்கா 18:10, சங்.26:12, 1 ராஜா 8:22-53

ஜெப நேரம்:

1.        எல்லா நேரமும் பொருத்தமானவை. லூக்கா 18:1, 1 தெச.5:17

2.        காலை, நண்பகல், மாலை. சங்.5:3; 55:17, தானி. 6:10

3.        அனுதினமும் இரவும் பகலும். சங்.88:1; 86:3

ஜெப விண்ணப்பம்:

A.       மத்.6:9-13: துதித்தல்; 2வது வருகை; தேவ சித்தம்; அநுதின அப்பம்; மன்னிப்பு; வழிகாட்டல்; சோதனை மற்றும் பாவங்களில் இருந்து வெற்றி

B.       யாக்.5:13-16: நோயில் இருந்து சுகம் பெற

C.       1 தீமோ.2:1-4: ராஜாக்கள், அதிகாரிகள் உட்பட அனைவருக்கும்

D.       தானி.6:18-23: சுய பாதுகாப்புக்காக

E.       1 ராஜா 3:5-9: ஞானத்துக்காகவும் புரிதலுக்காகவும்

F.       எபே.6:19, ரோமர்.15:32, 2 கொரி.1:11, 1 தீமோ.5:17: தேவ ஊழியக்கார்களுக்காக

G.       மத்.5:38-48: பகைவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்தியவர்களுக்காகவும்

H.       லூக்கா11:9-13: பரிசுத்த ஆவிக்காக

I.         மத். 9:37,38: ஆத்தும அறுவடைக்காக

J.        எபே.3:14-19, பிலிப். 1:9-11, கொலோ.1:9-12: ஆவிக்குரிய தேவைகளுக்காக

ஜெபத்தின் வழிகள்

1.        பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுதல். ரோமர் 8:26, எபே.6:18, யூதா 20

2.        விசுவாசத்தில் ஜெபித்தல். எபி.4:16, 10:22; 11:6, மாற்கு 11:22-24

3.        கனம் பண்ணுவதற்கு. சங்.95:6, 1 ராஜா 18:42, தானி.6:10, லூக்கா 22:41

4.        புத்தி சுயாதீனத்தோடு. 1 கொரி.14:14-15, மத்.6:5-8, பிர.5:2

5.        உரக்க ஜெபித்தல். சங்.66:17

6.        ஆர்வத்தோடு ஜெபித்தல். யாக்.5:16, 1 தெச.3:10, அப். 12:5

7.        பணிவோடு ஜெபித்தல். லூக்கா 18:11-14, 2 நாளா.7:14

8.        நிறுத்தாமல் ஜெபித்தல். 1 தெச.5:17, எபே.6:18

9.        இயேசுவின் நாமத்தில். யோவான் 14:14

10.     கர்த்தருடைய ஜெபத்தைப் பயன்படுத்தி ஜெபித்தல்

ஜெபங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமென்றால் அணுசரிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்:

1.        அவரில் நிலைத்திருக்க வேண்டும். யோவான் 15:7, 16:24, சங்.91:14,15

2.        தேவனிடத்தில் விசுவாசங் கொள்ள வேண்டும். எபி.11:6, மாற்கு 11:22-24, ரோமர் 4:17-21

3.        உங்கள் தேவைகளை உரக்க விண்ணப்பியுங்கள். யாக்.4:2, பிலிப்.4:6

4.        கர்த்தருடைய சித்தத்தின்படி ஜெபியுங்கள். 1 யோவான் 5:14-15, ரோமர் 8:26-27, யாக். 4:3

5.        பரிசுத்த உள்ளத்தோடும் ஜீவியத்தோடும் கேளுங்கள். சங்.145:19; 66:18, நீதி.15:8, 29, 1 யோவான் 3:21

6.        இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும். லூக்கா 11:5-8; 18:1-8

7.        ஒருவருக்கு மற்றவர் மன்னியுங்கள். மாற்கு 11:25, மத். 5:23,24

8.        அவருடைய ராஜ்யத்தைத் முதலில் தேடுங்கள். மத். 6:33

9.        இயேசுவின் நாமத்தில் ஜெபியுங்கள். யோவான் 16:24, 1 ராஜா 3

உபவாசம்

உபவாசித்தல் கிறிஸ்தவ ஜீவியத்தில் ஒரு பகுதி. மோசே, தானியேல், எஸ்ரா, நெகேமியா, கொர்நேலியு, ஆதி சபைகள், நமது ஆண்டவர் உபவாசித்தனர். யாத்.34:28, தானி.9:3, எஸ்ரா 8:23, நெகே.9:1,2, அப். 10:1, 14:23, மத்.4:2. ஜெபிப்பதில் விசுவாசம் கொள்வது போல், உபவாசித்து ஜெபித்தலிலும் விசுவாசம் கொள்க. சரீர அன்ன ஆகாரத்தை அடக்கிக் கொள்வதன் மூலம் ஆவிக்குரிய ஞானத்தையும் வல்லமையையும் அதிகரிக்கச் செய்யும். மத்.4:1-11



உபவாசத்திற்காகன வழி வகைகள்

1.        ஆத்தும அக்கறையைக் காட்டுவதற்கு அன்ன ஆகாரத்தில் இருந்து விலகியிரு. மத்.4:2

2.        பாவங்களை அறிக்கையிடுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். நெகே.9:1-2, 1 சாமு.7:6. எஸ்ரா 8:21

3.        ஆர்வத்தோடு கர்த்ரைத் தேடுக. தானி.9:3. ‘சாம்பலும் சாக்குத் துணியும்’ சுய மறுப்பைக் காட்டுகிறது. எஸ்ரா 8:23

4.        பிரார்த்தனையும் விண்ணப்பமும். எஸ்றா 8:23, தானி. 9:3, மாற்கு 9:29

5.        நன்மை செய்க. ஏசா.58:6-9

6.        வேத வசனத்தைத் தியானம் செய்க. நெகே.9:1-4

7.        சரீர தேவைகளுக்காக ஜெபிக்கவும். லேவி.16:29-31; 23:27-32, சங். 35:13

உபவாசிப்பதின் நோக்கம்

1.        பாவத்தில் இருந்து மனந்திரும்புதலையும் வேதனைப்படுவதையும் வெளிப்படுத்த. யோனா 3:7

2.        தெய்வ கோபாக்கினையைத் தவிர்க்க. 2 சாமு. 12:16,17

3.        தேவை ஏற்படும்போது. எஸ்றா 8:21, நெகே.9:1

4.        ஆபத்தை எதிர்நோக்கும் போது. எஸ்தர் 4:15-17, 2 நாளா.20:3-4

5.        ஆவிக்குரிய பெலன் தேவைப்படும்போது. மத்.17:21

6.        ஆவிக்குரிய போராட்டத்தின்போது. தானி.10:2, 13, 14

7.        தேவனுடைய வழிகாட்டலை நாடும்போது. அப். 10:30, 31; 14:21-23; 13:1-3, லூக்கா 2:36-38

உபவாசத்தின் சரியான அணுகுமுறை

1.        பாவத்தில் இருந்து விலகிக் கொள்ளுதல். ஏசா.58:6,9

2.        ஜனங்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் அவர்களை விடுவித்தல். ஏசா.58:6,

3.        எளியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம். ஏசா.58:7,10

4.        கர்த்தர் மட்டும் பார்க்கும் வகையில் இரகசியமாக உபவாசித்தல். மத்.6:17,18

உபவாசத்திற்குக் கிடைக்கும் ஆவீர்வாதங்கள்

1.        கிறிஸ்தவக் கதிரொளியாகிய பிரகாசம், சுகம், நீதி மகிமை கிடைக்கும். ஏசா. 58:8

2.        கர்த்தர் உங்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பார். ஏசா. 58:9

3.        கர்த்தருடைய வழிகாட்டலும் பெலனும் கிட்டும். ஏசா.58:11

4.        செல்வமும் வளர்ச்சியும் கிட்டும். ஏசா.58:11
5.        தேவன் தம் பணியைச் செய்ய உன்னைப் பயன்படுத்துவார். ஏசா.58:12

·         துதியும் ஆராதனையும்

துதி:
கர்த்தம் தம் மகிமைக்காக நம்மைப் படைத்தார். ஏசா.43:7. நம் ஜீவியம் அவருடைய மகிமையைப் பாட வேண்டும். 1 கொரி.10:31.

பழைய ஏற்பாட்டில் துதியைக் குறிக்க மூன்று பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
1.        ‘ஹலால்’- இதன் வேர்ச்சொல் சப்தத்தை உண்டாக்குதல் என்பதைக் குறிக்கிறது
2.        ‘யாடா’- கரங்களை அசைத்தல்
3.        ‘ஷாமார்’-வாத்தியக் கருவிகளை மீட்டுதல்
புதிய ஏற்பாட்டில் இரண்டு பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
1.        ‘விசுவாசப் பிரமாணம் (eucharistein)’- ஸ்தோத்திரம் செலுத்துவதற்காக
2.        புகழுரை (eulogein)’ – ஆசீர்வதிப்பதற்காக
ஆராதிப்பது போல, துதிப்பதும் நமது உள்ளத்தில் இருந்து புறப்படவேண்டிய அப்பியாசம் ஆகும்.
துதிப்பது கடமையாகும்
1.        வான தூதர்களைத் துதிப்பது. சங்.103:20, 148:2
2.        பரிசுத்தவான்களைத் துதிப்பது. சங்.30:4; 149:5
3.        தேசங்களைத் துதிப்பது. சங்.117:1
4.        சிறுவர்களைத் துதிப்பது. சங்.8:2, மத்.21:16
5.        உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் துதிப்பது. சங்.148.11
6.        இளையோரையும் முதியோரையும் துதிப்பது. சங்.148:12
7.        படைப்புகள் அனைத்தையும் துதிப்பது. சங்.150:6; 148:1-10
துதிப்பதின் நோக்கம்
1.        அவர் மாட்சிமை நிறைந்தவர். ஏசா.24:14
2.        அவர் மகிமை நிறைந்தவர். சங்.138:5
3.        அவர் மேன்மையானவர். சங்.148:13
4.        அவர் மகத்துவமானவர். சங்.145:3
5.        அவர் பரிசுத்தமானவர். யாத்.15:11
6.        அவர் ஞானம் நிறைந்தவர். தானி.2:20
7.        அவர் வல்லமை நிறைந்தவர். சங்.21:13
8.        அவர் நல்லவர். சங்.107:8,15, 21, 31
9.        அவர் கிருபை நிறைந்தவர். 2 நாளா.20:21
10.     அவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவர். சங்.138:2
11.     அவர் உண்மையுள்ளவர். ஏசா.25:1
12.     அவர் இரட்சிப்பு அருளுபவர். லூக்கா 1:68,69
13.     அவர் மகத்துவமானவற்றைச் செய்பவர். சங்.150:2

துதிப்பதின் வழிமுறைகள்:
1.        புரிதலோடு. சங்.47:7, 1 கொரி.14:15
2.        பாடல் மற்றும் வாத்தியக் கருவிகளோடு. சங்.33:1-3; 47:6; 150:1-5
3.        முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும். சங்.9:1; 103:1
4.        வாயில் இருந்தும் உதட்டில் இருந்து புறப்பட வேண்டும். சங்.51:15, 63:3, 66:8
5.        சந்தோஷத்தோடும் பெருமையோடும். சங்.63:5, 2 நாளா.29:30, சங்.100:1,2
6.        ஸ்தோத்திரத்தோடு. சங்.147:7
7.        தொடர்ச்சியாக. சங்.34:1; 71:6
8.        இன்னும் அதிகமதிகமாக. சங்.71:14, 104:33, 2 நாளா.30:21
ஆராதனை:
ஆராதனை நன்றி நிறைந்த உள்ளத்தில் இருந்து பொங்கி எழுகிறது. கர்த்தருடைய சமூகத்தில் நமது ஆத்துமா நிரம்பி வளியும்போது. “ஆண்டவரே, நீரே என் இரட்சகரும் ராஜாவுமானவர்” என்பது ஆராதனை.
ஆராதனையின் முக்கியத்துவம்
1.        10 கட்டளைகளில் 1வது  கட்டளை ஓய்வுநாளை ஆசரிக்கக் கட்ளையிடுகிறது. யாத்.20:1,2; 34:14, அப். 20:7
2.        ஆசரிப்புக் கூடாரம், தேவாலயம், லேவியர் ஆசரிப்பு ஆகியவற்றைக் கட்டும் முறைக்கு கர்த்தர் வேதாகமத்தில் தெட்டத் தெளிவான விதிமுறைகளை அருளியுள்ளார்.
3.        நமது கர்த்தர் ஆராதிக்கத் தகுந்தவர். நாம் அவரை ஆராதிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். வெளி.4:11, யோவான் 4:24
4.        ஆராதிப்பது நமது நித்திய பணியாகும். வெளி. 4 & 5
5.        ஆராதனையின் மத்தியில் தேவன் வாசம் செய்கிறார். சங்.22:3; 100:4
6.        அவரின் மகிமைக்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். நமது ஆராதனை அவரைப் புகழ்கிறது. சங்.50:23, ஏசா.43:7,21
7.        அவரை ஆராதிப்பதன் மூலம் நாம் அவரைப்போல் மாற்றம் காண்கிறோம். 2 கொரி.3:18
ஆராதிக்கப்பட வேண்டியது….
1.        கர்த்தர் மாத்திரமே. லூக்கா 4:8, சங்.45:11, உபா.5:7
2.        விக்கிரகங்களை ஆராதிக்கலாகாது. யாத்.20:3
3.        மனிதர்களை ஆராதிக்கலாகாது. அப்.10:25,26
4.        வான தூதர்களை ஆராதிக்கலாகாது. வெளி.19:10; 22:8,9

5.     இயற்கையை ஆராதிக்கலாகாது. உபா.4:14-20, யோபு 31:24-28, ரோமர்1:21-25

Thursday, October 13, 2016

வெளிப்படையான ஊழியம்


செய்தி: மறைதிரு ரூபன் கனகலிங்கம்

·         ஜீவனுள்ள சாட்சி: ஆவியின் கனி

பரிசுத்த ஆவியானவரின் கனி, அது நம்மில் வாசம் செய்வதாலும் நாம் அவரிடத்தில் வாசம்செய்வதாலும் ஏற்படும் நேரடி விளைவு ஆகும். கலா.5:17-23 மாம்சத்தின் கனிக்கும் ஆவியின் கனிக்கும் உள்ள தெட்டத் தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. மாம்சத்தின் கனிகள் (மொத்தம் 17) ஆதாமின் ஜென்ம சுபாவத்தை உடையது. ஆவியின் கனிகள் (மொத்தம் 9) புதிய ஜீவியத்தில் செயல்படுவதற்கான வெளிப்படையான ஆதாரம் ஆகும். ரோமர்8:5-9

பரிசுத்த ஆவியின் கனி (கலா.5:22-23)

1.        அன்பு: இது தெய்வீக அன்பின் ஆச்சரியமான வெளிப்பாடு. ரோமர் 5:5
இது கிறிஸ்து வெளிப்படுத்தும் அன்பைப் போன்றது. எப்போதும் கர்த்தரிடத்தில் காணப்படுகிறது. இந்த அன்பு செயலில் வெளிப்படுகிறது. 1 யோவான் 3:16-18; 4:16, 1 கொரி. 13:1-7

2.        சந்தோஷம்: இது லோகத்தின் சந்தோஷமல்லாமல் ஆவிக்குரிய சந்தோஷம் ஆகும். மேலும் போலியான உணர்ச்சியல்லாமல் ஜீவியத்தின் தரமாய் இருக்கிறது. பிலி.4:4. இந்த அன்பின் அஸ்திபாரம் தேவனாவார். புற சூழ்நிலையால் இது சார்ந்திருக்கவில்லை. 2 கொரி.11: 24-28, 7;4

3.        சமாதானம்: இது ஆத்துமத்தை நிறைவு செய்யும் சமாதானம். நமது சிந்தை முழுவதும் தேவனிடத்தில் சார்ந்திருந்து எல்லா அச்சமும் குற்ற உணர்வும் நீங்கி விடும். உங்களின் ஒவ்வொரு நொடியும் ஜீவனும் தேவனுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வைத் தரும். கடுமையான பிரச்சனை வந்தாலும் நீங்கள் அமைதியாய் இருப்பீர்கள். இந்த மூன்று கிருபைகளையும் கர்த்தர் அஸ்திபாரமாக வைத்திருக்கிறார். இது ஆவிக்குரிய தெய்வீக அன்பும், சந்தோஷமும் சமாதானமும் ஆகும்.

4.        நீடிய பொறுமை. இது நீண்டகால சகிப்புத் தன்மை அல்லது தாங்கிக் கொள்ளுதலைக் குறிக்கிறது. பிறர் நமக்கு விரோதமாக குற்றஞ்செய்யும் பட்சத்தில் அதைச் சகித்துக் கொள்ளுதலையும் பொருட்படுத்தாமல் விடுவதையும் காட்டுகிறது. இது கோபத்தைக் கட்டுப்படுத்துகிறது. கர்த்தரும் இத்தகையே போக்கைய நம்மிடத்தில் கடைபிடிக்கிறார்.

5.        தயவு: இது இரக்கத்தையும் இனிமையையும் குறிக்கிறது. இது உங்களை இனிமையாக்குவரோடு விரும்பத் தகுந்தவராகவும் அன்பானவராகவும் மாற்றுகிறது.

6.        நற்குணம்: இது உங்களை நற்கிரியை செய்யத் தூண்டுகிறது. அறமும் தயாளமும் உதவும் போக்கும் ஏற்படச் செய்கிறது. அனைத்தையும் நன்றாகவும், சரியாகவும், உண்மையாகவும் செய்யத் தூண்டுகிறது. இந்த மூன்று நற்கீர்த்திகளும் சமூக உறவுகளில் வெளிப்படுகிறது. பிறரோடு தொடர்பு கொள்ளும்போது நம்மை பொறுமையானவர்களாகவும், மென்மையானவர்களாகவும், நல்வர்களாகவும் மாற்றுகிறது

7.        விசுவாசம்: இது உங்களைப் பிறர் சார்ந்திருக்கவும், நம்பவும், விசுவாசிக்கவும் வகை செய்கிறது. இத்தகைய நபர்கள் எல்லா விஷயங்களிலும் நம்பத் தகுந்தவர். இத்தகையவர் எந்தப் பிரச்சனை வந்தாலும் உண்மையுள்ளவராக இருப்பார்.

8.        சாந்தம். இது தாழ்மை, புத்திமதியைக் கேட்கச் செய்தல்பணிவு ஆகிய குணங்களைத் தருவிக்கும். இந்நபர் எல்லா விதமான உணர்வுகளைம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கர்த்தரையே சார்ந்திருப்பார்.

9.        இச்சையடக்கம்: இக்கிருபை சுய அடக்கத்தைத் தருகிறது. சரீரத்தின் எல்லா அங்கங்களும் இச்சைகளும் இதனால் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. உலகின் எந்த துர் இச்சைகளுக்கும் வயப்படாதவராகவும், மயங்காதவராகவும், அடிமைப்படாதவராகவும் சுய மரியாதையுடன் இருப்பார். இந்த மூன்று கிருபைகளும் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையில் வெளிப்படும். உங்கள் அந்தரங்கத்தில் நம்பகத்தன்மையும், சாந்தமும், சுய கட்டுப்பாடுடையவராகவும் இருப்பீர்கள்.

முடிவுரை:
இந்த ஒன்பது நயங்களும் ஒருமையில் ஆவியின் கனி என்றழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நயங்களும் ஒருவரிடத்தில் காணப்பட்டால்தான் அது முழுமையானதாய் இருக்கும். யோவான் 12:24, மத்தேயு 12:33, யோவான் 15:2, லூக்கா 13:6-9

·         சுவிசேஷம்: சாட்சி பகர்தலும் ஆத்தும ஆதாயமும்
சாட்சி பகர்தல்:
இரட்சிப்பைப் பெறுவதற்கு இரண்டு பகுதிகள் இருக்கின்றன:

1. இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக் கொள்ளுதல்

2. இயேசுவே ஆண்டவர் என்று வார்த்தையால் அறிக்கை செய்தல்

ரோமர் 10:9 – விசுவாசமும் அறிக்கையிடுதலும்

மத்தேயு 10:32, 33 – ஒரு இரகசிய விசுவாசியாக இருப்பது கூடாத காரியமாகும். எந்த வகையிலாவது உன் விசுவாசம் வெளிப்பட்டு சோதிக்கப்படுவாய். அல்லது கிறிஸ்துவில் உன் விசுவாசம் நிமித்தம் பிரச்சனைகளை எதிர்நோக்குவாய்.

லூக்கா 12:8 – கிறிஸ்தவர்கள் மனிதர்கள் முன் கிறிஸ்துவை அறிக்கையிட வேண்டும். லூக்கா 24:48

யோவான் 1:7, 8, 15 – யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகர்ந்தார்.

யோவான் 16:26, 27 – பரிசுத்த ஆவியானவர் நம் மூலம் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகர்கிறார்.

                                                                   
சாட்சி பகர வேண்டிய அவசியம்

1. நாம் சாட்சி பகர அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்போஸ்தலர் 1:18, 2:32; 3:15, 5:32; 13:31

2. நாம் கிறிஸ்துவின் தூதர்களாக இருக்கிறோம். ஏசாயா 43:10-12; 49:6, 1 கொரி.5:20

3. நாம் உலகின் ஒளியாய் இருக்கிறோம். மத்.5:14-16, பிலிப்.2:15, 1 பேதுரு 2:9


சாட்சி பகரும் முறைகள்

1. சபை கூடுகையில் அல்லது சாட்சி பகரும் சந்திப்பில் அதைச் செய்யலாம்.

2. நண்பர்கள், அயலார், சமூகத் தொடர்புகள், உறவினர்கள் போன்ற தரப்போடு தொடர்பு கொள்ளும்போது தனிப்பட்ட முறையில் இதைச் செய்யலாம். யோவான் 18:37, 1 யோவான் 1:1-3

3. துடிப்பான கிறிஸ்தவனாக இருந்து, ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொண்டு, நற்கருணையிலும் பங்கு கொண்டு கிறிஸ்துவை அறிக்கை செய்யலாம். அப்போஸ்தலர் 2:46, 46, 1 கொரி.11:26

4. பரிசுத்தத்தோடும் நற்கீர்த்தியோடும் முன்னுதாரன ஜீவியத்தில் ஈடுபட்டு கிறிஸ்தவ விசுவாசத்தை அறிக்கை செய்யலாம். கொலோ.4:5, 6


எப்படி சாட்சி பகர்வது

1. நீ கிறிஸ்தவன் என்பதை அறிக்கை செய். நீ மீட்கப்பட்ட அனுபவத்தை சாட்சியாகப் பகிர்ந்து கொள்.

2. நீ அறிந்தத்தையும் அனுபவித்ததையும் கூறு. மாற்கு 5:18-20. சாட்சி பகர்வது என்பது உபதேசத்திற்குச் சமமாகாது. அப்போஸ்தலர் 22:15

3. உன் ஜெபத்திற்குக் கிடைத்த பலனைப் பற்றி கூறு.

4.  கிறிஸ்து உனக்கு யார் என்பதையும் அவர் உன் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்கிறாய் என்பதையும் கூறு.

5. பாவத்தையும் சோதனைகளையும் நீ எப்படி ஜெயங்கொண்டாய் என்ற சுய அனுபவத்தைக் கூறு.

6. வேதத்தின் மூலம் கர்த்தர் உன்னிடத்தில் பேசியதைப் பகிர்ந்து கொள்.

7. நண்பர்களுக்கு சுவிசேஷத்தைப் பற்றிய துண்டுப் பிரசூரங்கள், தியான புஸ்தகம், கிறிஸ்தவரின் சுய சரிதை போன்றவற்றைப் பகிர்ந்து கொள்.


வெற்றிகரமான சாட்சிக்குப் படிநிலைகள்

1. உனது இரட்சிப்பின் அனுபவத்தில் நம்பிக்கையாய் இரு.

2. ஜனங்களுக்கு முன் உன் கிறிஸ்தவ சாட்சிகளை நிறுத்து.

3. வழிகாட்டலுக்கும் வாய்ப்புக்கும் பரிசுத்த ஆவியைச் சார்ந்திரு.

4. உன் விசுவாசத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதில் உற்சாகத்தோடும் உறுதியோடும் இரு.

5. சாட்சி பகரப்போகும் நபர்களிடத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வேண்டி ஜெபித்துக் கொள்.

6. ஜனங்கள் இருக்கும் இடத்திற்குச் செல்.

7. இயேசவைக் குறித்துப் பேசு. வாக்குவாதம் செய்யாதேபிற மதங்கை ஒப்பிட்டுப் பேசாதே.

8. வேதம் மற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்து.



சாட்சி பகர்வதில் தடைகள்

1. மனித அச்சம். I தீமோ.1:7, 1 யோவான் 4:18

2. வெட்கப்படுதல். 2 தீமோ.1:8, மாற்கு 8:38

3. உதாரத்துவமற்ற ஜீவியம்


முடிவுரை

ஒவ்வொரு கிறிஸ்தவரும் சாட்சி பகர அழைக்கப்பட்டிருக்கிறார்கள். “கிறிஸ்தவர்கள் வேதத்தை வாசிக்கிறார்கள்; கிறிஸ்தவர் அல்லாதோர் கிறிஸ்தவர்களை வாசிக்கிறார்கள் “1 கொரி. 2:14-3:3. சாட்சி பகர்ந்தல் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்துவதோடு ஆவிக்குரிய ஜீவியத்தையும் வளப்படுத்துகிறது. சாட்சி பகர்ந்தல் ஒரு முடிவில்லாத செயற்பாங்கு.
நம்மைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் நாம் சாட்சியாளர்களே.


·         பரிசுத்த ஆவியின் வரங்கள்:
1 கொரி.12:7-10: பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள்

எபே.4;7-12: பரிசுத்த ஆவியின் ஐந்து வித ஊழியங்கள்

1 கொரி.12:28-30, ரோமர் 12:7-10: பரிசுத்த ஆவியின் பிற வரங்கள்.




பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள் (1 கொரி.12:7-10)

1.        ஞான திருஷ்டி: ஒரு நபரின் நிலைமை (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்). தேவனைப் போலவே நீ காண முடியும்யோவான்.4:18, 19, 1 ராஜா. 5: 24-26

2.        ஞான உரை: பரிசுத்த ஆவியால் வழங்கப்பட்ட இந்த ஆற்றல், ஒரு வெளிப்படுத்தல் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு எப்படிப் பொருந்தும் என்று விளக்க உதவுகிறது. ஞான உரையின் மூலம் இந்த வரம் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகளை வெளிப்படுத்தும். ஆதி.41:28-41.

3.        விசுவாசத்தின் வரம்: தேவனே செயல்படுவார் என்று தெய்வாதீனமான நம்பிக்கை. இந்த வரம் செயல்படும் போது, நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொள்வதோடு அற்புதமான மனிதராக மாறுகிறீர்கள். நீங்கள் சொல்வதெதுவோ, அது நடக்கும். அப்போஸ்தலர்14:9,10

4.        சுகமளிக்கும் வரம்: நோய் நொடி மற்றும் பெலவீனங்களை அற்புதமான முறையில் சுகமளிக்கும் வரம்.

5.        பணி முறை வரம்: ஒரு மனிதனின் சராவரி ஜீவியத்தில் இயற்கை விதிகளை மீறும் அளவுக்கு அசாத்தியமான தலையீடு ஏற்படுதல்.

6.        தீர்க்கதரிசன வரம்: தேவனோடு உரவாடி அவருடைய செய்தியை ஜனங்களுக்கு அறிவிக்கும் வரம். அப்போஸ்தலர் 13:1-14

7.        ஆவிகளை வேறுபடுத்துதல்: ஒருவரின் வார்த்தை அல்லது செயலில் காணப்படும் ஆவியை இன்னதென்று வேறுபடுத்திப் பார்க்கும் வரம்.

8.        பல பாஷை பேசுதல்: இது வரைக்கும் கற்றிராத ஒரு மொழியில் சுயமாகப் பேசுதல்.

9.        பல பாஷை வியாக்கியானம்: அறியப்படாத மொழியில் பேசும் ஒருவரின் செய்தியை, பார்வையாளர்கள் புரியும்படி வியாக்கியானம் செய்தல்


ஊழிய வரத்தின் ஐந்து படிவங்கள் (எபேசியர் 4:7-11)
1.        அப்போஸ்தலர்: பிரத்தியேகமாக அனுப்பபட்ட செய்தியாளர். அதிகாரத்தோடும் வல்லமையோடும் தேவனால் அனுப்பப்பட்ட தூதர்.

2.        தீர்கதரிசி : தேவனுடய செய்தியைக் கொண்டு வரும் ஊக்கமுடைய செய்தியாளர். கர்த்தர் ஜனங்களோடு இவர்களைப் பயன்படுத்திப் பேசுகிறார்.

3.        சுவிசேஷகர்: நற்செய்தி அறிவிப்பாளர். இவர் சமாதானத்தையும் இரட்சிப்பையும் கொண்டு வருகிறார். நற்செய்தியை அறிவிப்பதோடு தேவ ராஜ்யத்தின் வல்லமையைப் பறை சாற்றுகிறார்.

4.        குருவானவர்: நல்ல மேய்ப்பரை பிரதிநிதிக்கிறார். இவர் தம் மந்தைகளைக் காத்து, உணவூட்டி, பாதுகாக்கிறார்.

5.        போதகர்: தேவ ஆலோசனையைச் சேர்ப்பிக்கும் செய்தியாளர். இவர் ஜனங்களுக்கு உபதேசித்து, பயிற்சியளித்து ஆவிக்குரிய முதிர்ச்சியைத் தருவிக்கிறார்.

வேறு வகையான வரங்கள் (1 கொரி.12:28-30, ரோமர் 12:7-10)
1.        பணிவிடையாளர்: சபையில் நடக்கும் எல்லா ஊழியங்களையும் கணம் பண்ணுகிறார்.

2.        நிர்வாகங்கள்: சபையின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பவர். தீர்மானம் எடுப்பவர், நிதி நிர்வாகம், சபை நிர்வாகம் போன்ற பணிகளைக் கவனிப்பவர்.

3.        பணிவிடை: சரீர தேவைகளையுடைய ஜனங்களுக்குத் தேவையான பணிவிடை செய்பவர். அப். 6:3

4.        அறிவுறுத்தல்: நல்ல ஆலோசனையும் புத்திமதியும் வழங்குபவர். விசுவாசிகளுக்குத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துத் திருத்துபவர்.

5.        கொடையாளர்: சபை தேவைக்கு தசம பாகத்தை விட அதிகமாகக் கொடுப்பவர்.

6.        நிவாரண உதவியாளர்: தேவை ஏற்படும்போது ஜனங்களுக்கு உதவிகளை வழங்குபவர்.

7.        கிருபையின் செயல்: சமூக உதவிகளை வாஞ்சையோடு வழங்குதல்.


முடிவுரை

1. பொதுவான நன்மைகளுக்காக வரங்கள் வழங்கப்படுகின்றன. 1 கொரி. 12:7
2. வரங்கள் இறையாண்மையோடு வழங்கப்படுகின்றன. 1 கொரி. 12:1
3. வரங்கள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 1 கொரி. 12:31; 14:1
4. வரங்கள் பொருத்தமானவர்களுக்கு வழங்கப்படுகின்றன.  1 கொரி. 7:7
5. வரங்கள் பயன்படுத்தத் தகுந்தவை 1 தீமோத்தேயு 4:14

6. வரங்கள் சீர்படுத்தப்பட வேண்டியவை. 2 தீமோத்தேயு 1:6

Thursday, October 6, 2016

ஜெபம் நமது பிதாவோடு பேசுதல்



உன் ஜெப அனுபவம் எப்படிப்பட்டது?
நீ முதன் முதலில் எப்போது ஜெபித்தாய்?
ஜெபிப்பது எளிதான காரியம் என்பதை உணர்ந்தாயா?
ஜெபிப்பதில் கடினமான காரியம் எது?
ஏதாவது உனது ஜெபத்திற்குத் தேவன் பதில் கொடுத்துள்ளாரா?
ஜெபத்தைக் குறித்த உனது சந்தேகம் என்ன?

நாம் தேவனுக்குச் சொந்தமானவ ர்கள். பிதாவே நம்மைப் படைத்தார்; குமாரன் நம்மை மீட்டார்; பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மீது விசுவாசங் கொள்ளச் செய்து தேவ குடும்பத்தில் உறுப்பினராக்கினார். நேசமிகுந்த நமது பிதா, அவரோடு ஜெபத்தில் பேச நம்மை அழைக்கிறார். அவருடைய பிள்ளைகள் என்பதால் நாம் அவரிடத்தில் நம்பிக்கையோடு ஜெபிக்கலாம். நமது ஜெபத்திற்குச் செவி சாய்த்து, மிகச் சிறந்ததை அவர் நமக்குக் கொடுப்பார்.
கிறிஸ்தவ ஜெபம் என்பது என்ன?
ஜெபமானது:
ஆராதனையின் ஒரு செயல்பாடு
நாம் தேவனைத் துதித்து ஸ்தோத்தரிக்கிறோம்.
நமது பாவங்களை அறிக்கையிடுகிறோம்.
தேவனுடைய உதவியை நமக்காகவும் பிறருக்காகவும் விண்ணப்பிக்கிறோம்
தேவனோடு உறவாடுதல்
நமது வார்த்தையினாலும் சிந்தையாலும் நாம் தேவனோடு உறவாடுகிறோம்.
விசுவாசத்தின் ஓர் அனுபவம்
தேவன் சொன்னதற்கும் செய்ததத்ற்கும் நாம் துலங்குகிறோம்.
நாம் ஏன் ஜெபிக்கிறோம்?
காரணம்:
தேவனுடைய கட்டளை, அழைப்பு
தேவன் நமது சத்தத்தைக் கேட்பார் என்று வாக்கருளினார்.
சொந்த மற்றும் அயலாரின் தேவைகள்
தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

நாம் யாரிடம் ஜெபிக்க வேண்டும்?
நாம் ஒரே மெய்யான தேவனிடத்தில் மட்டும் ஜெபிக்க வேண்டும். நாம் பிதாவோடோ, குமாரனோடோ, பரிசுத்த ஆவியானவரோடோ அல்லது மூவொருவரோடோ பேசலாம்.
எப்படி நாம் ஜெபிக்க வேண்டும்?
இயேசுவின் நாமத்தில்
நமது இரட்சகர் பிதாவுக்கும் நமக்கும் இடையில் வழியைத் திறந்து வைத்துள்ளார். இயேசுவின் மூலமே நாம் பிதாவை அடைய முடியும்.
நம்பிக்கையோடு ஜெபிக்க வேண்டும்
‘இயேசுவின் நிமித்தம்’ தேவன் நமது ஜெபத்தைக் கேட்பார் என்று உறுதியாய் இருக்கலாம்.
தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும்
ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை அடையவேண்டும் என்று தேவன் வாஞ்சிக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், சரீர ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கும்போது, தேவன் தமது தீர்மானத்தின்படி செய்ய வேண்டும் என்று விட்டு விடுகிறோம். ‘உமக்குச் சித்தமானால்……’ என்று சொல்லி நாம் ஜெபிக்கிறோம்.
உண்மையோடு ஜெபிக்க வேண்டும்
ஜெபம் நமது உள்ளத்தில் இருந்து வரவேண்டும்.
எதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்?
நாம் ஜெபிக்க வேண்டிய காரியங்கள்:
தேவனுக்குப் பிரியமான யாவற்றுக்கும்
நமக்குத் தேவையான யாவற்றுக்கும்
அயலாருக்குத் தேவையான யாவற்றுக்கும்.

நாம் எப்போது ஜெபிக்கலாம்?
தேவன் பின்வரும் நேரங்களில் ஜெபிக்க அழைக்கிறார்:
எந்த நேரத்திலும்
நாமோ, அயலாரோ பிரச்சனை அல்லது தேவைகளை எதிர்நோக்கும்போ து
தனிமையில் இருக்கும்போது, அல்லது பிற கிறிஸ்தவர்களோடு இருக்கும்போது

தேவன் நமது ஜெபத்திற்குப் பதிலளிக்கிறாரா?
நாம் அவருடைய சித்தத்தின்படி விசுவாசத்தோடு ஜெபிக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் பதிலளிக்கிறார்:
கிறிஸ்துவுக்காக. நாம் பாத்திரர் என்பதற்காக அல்ல…. இயேசு நம்மை இரட்சித்ததற்காக
அவன் சித்தத்தின்படி. நமது ஜெபத்திற்குப் பதிலளிக்கும் சிறந்த முறையை அவர் அறிவார். அவரின் செயலின் மூலமாகவோ, சொல்லின் மூலமாகவோ அது அமையலாம். நாம் ஜெபிக்கும் காரியத்திற்காக நமக்கோ, பிறருக்கோ உதவுவதன் மூலம் தேவன் நமது ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார்.
அவரின் சொந்த நேரத்தில். நமக்கு நன்மையான காரியத்தை எப்போது வழங்குவது சிறந்தது என்று நமது பிதா அறிந்து வைத்திருக்கிறார். நம்மைச் சோதிக்கவோ, நமக்கு உபதேசிக்கவோ அவருடைய பதிலைத் தாமதப்படுத்தலாம்.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;

சப்தம் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். உண்மையில் ஒலி மாசு சராசரி மலேசியர்களைக் குறிப்பிட்ட அளவுக்கு செவிடாக்கியுள்ளது!
இந்த உலகமும் அவசரமயமாய் இருக்கிறது. நாம் நினைக்கிற காரியங்களையெல்லாம் முடிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை.
நமது வாழ்க்கை முறையும் சொந்த நலனையே மையமாக்கி விட்டது. தொடர்புநுட்ப வளர்ச்சியின் விளைவு இது. சமுதாயம் மற்றவர்களோடு எப்போதும் தொடர்புள்ளதாகவே இருக்கிறது.

இருக்கும் வண்ணமாகவே இருப்பது அல்லது மௌனம் சாதிப்பது மறைந்து போன கலையாகி விட்டது.
ஆனால், சங்கீதம் 46:10ல் சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதுகிறான்:
"நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;....."
இது தாவீதுக்கு தேவன் வெளிப்படுத்தின காரியம்.
இங்குச் செயல்படும் பதம் "அமர்ந்திருந்து..." என்பதாகும்.

நமது சவால் இதுதான்: நான் கவலைப்படும் எல்லா காரியங்களையும் அல்லது சூழ்ந்து கொள்ளும் அனைத்தையும் விரும்பிய நிலையில் ஒதுக்கி வைக்க வேண்டும்.
தேவனை ஓயாமல் தேட வேண்டும். இவ்விதமாய் தேவனையும் அவர் ஆற்றலையும் அறியத் தொடங்குவேன்.

இது உண்மையிலேய கடுமையான காரியம். நான் எப்போது தேவனை அறியத் தொடங்குகிறேனோ அப்போது எனது அடையாளமும் செயல்பாடும் அதற்கேற்றவாறு மாற்றம் காணும். சடுதியில் நான் அச்சமற்றவனாக மாறுவேன். நம்பிக்கை எனது ஆவியில் ஊற்றப்படும். எனது தரிசனம் தெளிவானதும் அடையக்கூடியதுமாகும்.

இந்த அமர்ந்திருக்கும் கலையைக் கற்றுக் கொள் பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுவோம்.

தேவன் நாம் அனைவரையும் அசீர்வதிப்பாராக

Wednesday, September 21, 2016

ஸ்ரீலங்காவில் ஓர் இரத்த சாட்சி

ஒரு தமிழ்ப் பெண் சிங்கள பாஸ்டரை மணந்து கொண்டார். (சிறுபான்மை தமிழர்களுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் மிகப் பெரிய பேதம் நிலவி வருகிறது). பெரும்பான்மையான சிங்களவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்.

அந்த இளம் தம்பதியினர் தென் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு பகுதிக்கு ஊழியத்தின் நிமித்தம் சென்றார்கள். இது சிங்களவர்கள் வாழும் பகுதி. சிங்களவர்களில் பலர் வந்து, அவர்களை அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டினர். அவர்கள் இணங்கவில்லை என்றால் கொன்றுபோடப் போவதாக மிரட்டினர். அந்தப் பகுதியில்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று அவர் மிகத் தீர்மானமாக இருந்தனர். ஓர் இரவில் பாஸ்டரின் மனைவி முன்னிலையில் அவரைக் கொன்று போட்டார்கள்.

இதனால் அவர்களை ஊழியத்திற்கு அனுப்பிய திருச்சபை அந்த மனைவியில் உயிர் நலன் கருதி அவரை அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வரச் சொன்னார்கள். ஆனால், அவரின் பதில் அதிர்ச்சியில் உரையச் செய்தது. “என் கணவரின் மரணம் எனது பெரும்பணியை நிறுத்தவில்லை. எனவே நான் இங்கேயே நிலைத்திருக்கப் போகிறேன்."

அங்கு சபை நிறுவப்படும்போது 25 பேரே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், அந்த பாஸ்டர் இறந்து 5 வருடம் கழித்து மலைப்பூட்டும் வகையில் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 800 பேராக அதிகரித்தது. அந்த இளம் பெண் தம் தேவனையும் ஜனங்களையும் நேசிக்கும்படியாக எடுத்த எளிய முடிவு என் உள்ளத்தை மிகவும் தொட்டது.

தேவ ஜனங்களே, நமது இத்தேசத்தில் பல சவால்களை நாம் சந்திக்கக்கூடும் என்று நாம் நம்புகிறோம். நமது பிரதியுத்திரம் என்னவாக இருக்கப் போகிறது? விசுவாசத்தின் பயணத்தை நாம் எப்படி மேற்கொள்ளப் போகிறோம்?

பின்வரும் உண்மைத் தகவல்களை நாம் மறந்து போக வேண்டாம்:
-       தேவன் நம்மை ஆளும் உரிமை பெற்றவர்.
-       தேவன் அனைத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
-       தேவன் தம் ஜனங்களின் நலனில் அக்கறையுள்ளவர்.
-       தேவன் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார்.

ஆகவே, மன உறுதியுடன் சாட்சி நிறைவான ஜீவியத்தைப் பல மதங்களைக் கொண்ட இத்தேசத்தில் வாழ்வோமாக..


தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக

Wednesday, September 14, 2016

உற்சாகமான துலங்கும் ஆவி

கடந்த வாரம், ஆர்வமும் அதே நேரத்தில் அபாயமும் நிறைந்த ஒரு காரியத்தைப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஒரு விமான நிறுவனம், ‘இப்போது யார் வேண்டுமானாலும் பறக்கலாம்’ என்ற சுலோகத்தைக் காட்சிக்கு வைத்திருந்தது.

சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட ஒரு விமானம் 770 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெல்போர்னில் காணாமற்போனது! அது விமானியின் தவறு என்று புலனாய்வு கண்டு பிடித்தது. அவர் தவறான இலக்கத்தை விமானக் கணினியில் உள்ளீடு செய்ததால் இவ்வளவு பெரிய சங்கடமும் தடுமாற்றமும் ஏற்பட்டது. ஒரே ஒரு தவறான இலக்க உள்ளீடுதான்!

பிலிப்பியர் 2.12ல் அப்போஸ்தலர் பவுல் இவ்வாறு நம்மை ஊக்குவிக்கிறார் ", அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்". பாவமானது "இலக்கை விட்டு விலகுவது’ என்று அடையாளப்படுத்தப்படுகிறது"

ஒரேயொரு தவறான இலக்க உள்ளீடு கவனக்குறைவை ஏற்படுத்தி இலக்கை விட்டு விலகச் செய்கிறது!

பரிசுத்த ஆவியினவர், நாம் இலக்கை விட்டு விலகாதபடி ஒரு சிறு தவற்றைக் கூடச் செய்யக்கூடாது என்று தூண்டுகிறார் என்ற ஆழமான உபதேசத்தை நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும். ஆனால், நாம் எப்போதும் தோல்வியடைய மாட்டோம் என்பது அதன் அர்த்தமல்ல. சில சமயங்களில் நாம் வீழ்ந்து போவோம். நாம் எப்போதும் தோல்வியுற்றவர்களாகவே நிலைத்திருக்க வேண்டாம். விழித்து எழுந்தரிப்போமாக. நமது பாவங்களையும் பெலவீனங்களையும் அறிக்கையிட்டு விசுவாசப் பயணத்தை உண்மையோடு மேற்கொள்வோமாக.

உற்சாகமான துலங்கும் ஆவியினால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

Sunday, September 11, 2016

மலேசியாவில் அச்சுறுத்தல்கள்

பள்ளி தவணை விடுமுறை மீண்டும் தொடங்கி விட்டது. டெங்கி காய்ச்சலைத் தவிர்த்து அயல் நாடுகளில் இருந்து ஷீக்கா என்று நச்சுக் கிருமியும் நம்மை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன. நீரிழிவும்  வாய் சம்பந்தப்பட்ட நோயும் நம்மை வளம் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் சமீபத்தில் அறிவேன்.

இவை எல்லாம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று உணர்த்துகின்றன. குறிப்பாக பிள்ளைகளையுடையோர் மிகந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

நமது ஜெபத்தைக் கொண்டு அவர்களை வாதைகளில் இருந்து மீட்க வேண்டும். அதே வேளையில் நற்குடிமகனுக்குரிய பண்புகளும் இருக்க வேண்டும். உதாரணமாக குப்பைக் கூளங்களை முறையாக அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தைப் பேணுதல் போன்ற காரியங்களைக் கடைபிடிக்க வேண்டும்.
‘தெய்வத்துக்கு அடுத்து தூய்மை நிற்கிறது’ யாரோ சொல்லியிருக்கிறார்கள். உண்மைதான்!

தம் படைப்புகளைப் பேண தேவன் நமக்குப் பொறுப்பளித்திருப்பதால் நமது சுற்றுப்புறச் சூழலைப் பேண உபதேசிப்போமாக.


கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இந்த விடுமுறை காலத்தில் ஆசீர்வாதமான முறையில் உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவீர்களாக.