Monday, December 12, 2016

ராஜரீக ஆசாரியக்கூட்டம்

முன்னுரை:

 தாய்லாந்தில் பூமிபால் அடுல்யதெஜ் 70 ஆண்டுகள் 126 நாள் என்ற கணக்கில் நீண்ட காலம் ஆட்சி ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
 ஆனாலும், அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய புதல்வரான மஹா வஜிராலோக்கோர்ன் அரியணை அமர்ந்தார்
 தேவன் நம்மைக் கையாண்ட விதத்தை அறியும் போது எப்படிப்பட்ட மாற்றம் உண்டாகிறது.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1. லேவிய ஆசாரியக்கூட்டம்:
 தொடர்ந்து செல்வதற்கு முன்பு, பழைய ஏற்பாட்டில் லேவிய ஆசாரியக்கூட்டத்தைப் பற்றி ஆராய்வோம்.

யாத்திராகமம் 19:5-6
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.

 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரால் ராஜரீக ஆசாரியக்கூட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ததன் வழி அவர்கள் கர்த்தரின் அழைப்புக்குச் செவிசாய்த்தனர்:
(i) கர்த்தரின் குரலுக்குக் கீழ்ப்படுதல்
(ii) அவருடைய கற்பனைக்குக் கீழ்ப்படிதல்

 ஆயினும் லேவியர்கனை இந்த அழைப்புக்குச் செவிசாய்க்க கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம்.

எண்ணாகமம் 8:14-18
இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,

 ஆனால், ஏன் இஸ்ரவேல் புத்திரர்களில் முதற்பேறுவிற்குப் பதில் லேவியர் தெரிந்து கொள்ளப்பட்டனர்?

யாத்திராகமம் 32:26-28
 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
 லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

2. புதிய ராஜரீக ஆசாரியக்கூட்டம்:

வெளிப்படுத்தல் 1:5-6
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

 பேதுரு கிறிஸ்தவர்களை ராஜரீக ஆசாரியக்கூட்டமாக முகமண் கூறுகிறார்.

1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

 அவர் அவர்களை கட்டப்பட்டு வருகிற மாளிகையாக அடையாளப்படுத்துகிறார்
2.1 கிறிஸ்து நமது பிரதான ஆசாரியராய் இருக்கிறார்
எபிரேயர் 4:14-16 (எபிரேயர் 8:1-2யும் வாசிக்கவும்)
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

2.2 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துதல்
1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 12:1)
 இது தேவனுடைய பார்வைக்கு உகந்த பலிகளாக இருக்க வேண்டும்.

வர்ணனை: காயின் மற்றும் ஆபேலின் பலிகள்

எபிரேயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

முடிவுரை:
 கர்த்தருக்குக் கிறிஸ்துவில் ஆவிக்குரிய பலிகளைச் செலுத்தும் ராஜரீக ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறோம்.
———————————————————–————————————
சுய மதிப்பீட்டுக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி:
கிறிஸ்துவில் ராஜரீக ஆசாரியக்கூட்டத்தில் உருவனாய் இருப்பது உன்னை எப்படி மாற்றியமைத்துள்ளது?


Tuesday, December 6, 2016

நமது பிள்ளைகள்

சிறுவர்கள் நமது சிறந்த எதிர்காலத்திற்கு நம்பிக்கையைத் தருகின்றனர். வேதாகமம் சிறுவர்களைப் பற்றிய அறுமையான தகவல்களைத் தருகின்றது:

சங்கீதம் 127:3 - இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். (அவர்களால் சந்தோஷப்படுவோம்)

சங்கீதம் 127:4 - வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். (பிள்ளைகள் சிறந்த பயனைத் தருமளவும் பெற்றோர்கள் அவர்களைச் சரியான முறையில் வளர்க்க வேண்டும்)

நீதிமொழிகள் 22:6 - பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (ஞானத்தின் வழியில் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்).


பெற்றோர்களாகிய நாம் குழந்தைகள் மூலம் கிடைக்கும் இன்பதை அனுபவிக்க கர்த்தர் அருள் புரிவாராக.

நமது குழந்தைகள் ஜீவியத்தின் நோக்கத்தை உணரும் பொருட்டு பொறுத்தமான முறையில் வளர்க்கப்படும் வகையில் நமக்குக் கர்த்தர் ஆழமான ஞானத்தை அருள்வாராக.

நமது குழந்தைகளைத் தனிச் சிறப்பு வாய்ந்த ஆளுமையைப் பெற்றவர்களாக வளர்க்க கர்த்தர் ஞானத்தை அருள்வாராக.

நமது குழந்தைகளைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

Thursday, December 1, 2016

கிறிஸ்மஸ் நம்பிக்கை

நம்பிக்கைக்காப் போராடும் ஜனங்களால் நமது சமூகம் சூழ்ந்துள்ளது.  இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான மாண்புமிகு கைரி ஜமாலுடின், மலேசியா ‘நம்பிக்கை பற்றாக்குறை’ சூழ்நிலையை எதிர்நோக்குகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்த அவநம்பிக்கையின் இயற்கை நீட்டிப்பு ஆன்மீக விஷயங்களை நோக்கி, அதை வெளிப்படுத்த வேண்டும். எனவே, நாம் தேவனிலும் அவருடைய வாக்குத்தத்தத்திலும் நாம் சார்ந்திருப்பதற்கு சிரமப்படச் செய்கிறது. உண்மையில் இந்த அவநம்பிக்கை நம்மைத் தோல்வியாளர்களாக்கச் செய்கிறது. இது சோகம் நிறைந்த காரியமாகும்.

இந்த கிறிஸ்மஸ் காலத்திலாவது நாம் உணர்வுடன் தேவனை விசுவாசிக்கக்கூடியவர்களாக  வளர்வோமாக. தேவனை நாம் நிச்சயம் நம்ப முடியும். இந்த உண்மையை வேதாகமம் முழுவதும் உணர்த்துகிறது. இவ்விதமாய் நமது ஜீவியத்தில் தேவனின் நிதர்சணத்தை வெளிப்படுத்த முடியும். அவருடைய வாக்குத்தத்தத்தில் நாம் களிகூறலாம். இது நற்செய்தியைச் சுமந்து செல்லக்கூடியவர்களாக உயர்த்துகிறது.

கிறிஸ்மஸ் கதையையும் இவ்வுலகத்துக்குத் தேவனுடைய அன்பையும் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த சமுதாயத்திற்கு சுகத்தைக் கொண்டு வருவதில் அவருக்குப் பங்காளியாகிறோம். அதுதான் உண்மையான கிறிஸ்மஸ் உணர்வு.


உங்கள் கிறிஸ்மஸ் ஆயத்தங்கள் சந்தோஷத்தையும் இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். 

Tuesday, November 8, 2016

பாதுகாப்பான கோட்டை

2 சாமுவேல் 5ம் அதிகாரத்தைச் சார்ந்த்து இது.

1.             பாதுகாப்பான கோட்டை அல்லது மறைந்திருக்கும் இடம்.
நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பான இடத்தை அடையாளம் காண வேண்டும். – தேவ சமூகத்தில் நிம்மதியாக மறைந்திருப்பதற்கான பாதுகாப்பான இடம். மறைந்திருப்பதற்கு பாதுகாப்பான இடத்தை அடையாளம் காண்பதற்கு 3 முக்கிய காரணங்கள் இருக்கின்றன:
-     நமது ஆவி புதுப்பிக்கப்படுகிறது.
-     பிரச்சனை அல்லது நமது சூழ்நிலையைக் குறித்து தெளிந்த புத்தி உண்டாகும்.
-     தேவ சித்தத்திற்கு ஏற்ப நாம் நாடும் முக்கியத்துவம் மாற்றமடையும்.
இது வெற்றிக்கு முக்கியம்.

2.             மீண்டுவரும் அனுபவம் அல்லது நிலை.
தாவீது, தான் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியாகி தேவனின் விசாரனைக்கு வந்தான். தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் வல்லமை வாய்ந்த பிலிஸ்திய போர் வீரர்களை ஜெயங் கொண்டான். தேவன் வெற்றியைத் தேடித் தந்ததாக தாவீது அறிக்கையிடுகிறான். பின்வரும் நிலைமைகளில் வெற்றி தேவை என்று ஜெபித்துக் கொள்ளுங்கள்:
-       ஆகக்கூடாத காரியம் கைகூடவேண்டுமென்று.
-       கற்பனைக்கு எட்டாத காரியமும் நிறைவேறவேண்டுமென்று.

3.             உங்கள் ஜெபம் கேட்கப்பட்டாலும் கூட தொடர்ந்து ஜெபித்துத் தேவனைத் தேடுங்கள். – சில பாதகங்களும் எதிர்ப்புகளும் நிலவினாலும் கூட!
-       தேவன் ஆழமான வெளிப்படுத்தலைத் தந்திருக்கிறார்.
-       தேவன் நமது ஜீவியத்தில் நெருங்கிய பங்காளியானார்.
ஒட்டுமொத்த வெற்றியையும் நாம் கொண்டாடுவோம்.


தேவன் உங்கள் ஜெப ஜீவியத்தை ஆசீர்வதிப்பாராக

Thursday, November 3, 2016

நமது பாவமும் கிருபையும்

தவறான இடத்தில் என் காரை நிறுத்தி வைத்ததற்கு, பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக அலுவலகத்தில் அபராதம் செலுத்தக் காத்திருக்கும் தருவாயில் இதனை எழுதுகிறேன். நூறு ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்! ஆனால், முகப்பில் உள்ள நபர் 30 ரிங்கிட் மாத்திரமே அபராதப் பணம் வாங்கினார். ஒரு சிறிய கவனக்குறைவுக்கு அத்தொகை பெரிய தண்டனை!

நாம் தேவனுடைய கற்பனைகளை மீறும்போது இதுபோன்றே தண்டனை அனுபவிக்கிறோம். ஆம்! கூடவே கிருபையும் வருகிறது. அந்தக் கிருபைக்குக் கிரயம் தேவையில்லை. ஆனால், நம்மை ஒழுக்கப்படுத்தாத கிருபை அற்பமானது.

நாம் கற்பனைகளை மீறும்போது, உடனடியாக பாவ மன்னிப்பு கேட்கிறோம். கிருபையுள்ள தேவனோ, 1யோவான் 1.9ல் எழுதப்பட்டதுபோல், நம்மிடத்தில் கிருபையாய் இருக்கிறார். ஆனால், பாவத்திற்கான பின் விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்!

தேவன் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக்கவும் கிருபை அருளவும் நமது ஜீவியங்களில் காணப்படும் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்போமாக. பரலோகத்தில் இருக்கும் நமது பிதா நல்லவர்.


தேவனுக்கே ஸ்தோத்திரம்.