Saturday, December 17, 2016

தேவ ஜனங்கள் 5ல் 3வது பகுதி: ‘பரிசுத்த ஜனங்கள்’

முன்னுரை:
  •   ஆரோக்கியம் மற்றும் தூய்மையைப் பற்றிக் கவலைப்படும் உலகில் நாம் ஜீவிக்கிறோம்.
  •   ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நாம் குளியல், பல் துலக்குதல், கை கழுவுதல், துணி துவைத்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறோம்.
  •   துரதிர்ஷ்டமாக, புற ஆரோக்கியத்திற்குக் காட்டப்படும் அக்கறை ‘ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்குக்’ காட்டப்படுவதில்லை.


1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1. பரிசுத்த கடவுள்:

லேவியராகமம் 11:44

நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

  •   நமது தேவன் அன்பும், கனிவும், கருணையும் உடையவர் என்பதை அறிவோம். ஆனால், ஆதியில் அவர் தம்மைப் பரிசுத்தமானவராக இஸ்ரவேலர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
  •   வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ள பரிசுத்தம், ஆலயத்திற்குச் செல்லுதல், வேதம் வாசித்தல் போன்ற நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட பரிசுத்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  •   ‘பரிசுத்தம் என்ற எபிரேய (காடோஸ்) மற்றும் கிரேக்க (ஹாகியோஸ்) பதம் ‘பிரித்தெடுக்கப்படல்’, ‘தெரிந்து கொள்ளப்படல்’ என்ற பொருளைக் கொண்டு வருகிறது.
  •   எனவே, கர்த்தருடைய பரிசுத்தத்தை பூமியில் உள்ள சகல படைப்புகளிலும் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்ட்டவர் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் தேவ தூதர்களைப் போல் பரிசுத்தமானவர்.


ஏசாயா 6:3

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

 

2. பரிசுத்த ஜனங்கள்:

யாத்திராகமம் 19:5-6
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.

  •   தமது ஜனங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்த கர்த்தர்,அவர்களைப் பரிசுத்தமாய் இருக்கும்படி அழைத்தார்.
  •   தமது ஜனங்கள் பரிசுத்தமாய் இருக்கும்படி அவர்களைக் கர்த்தர் தெரிவு செய்து கொண்டார்.
  •   ஆயினும் இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், அதைப்பற்றி செயற்பூர்வமாக போதிக்கும்படி கர்த்தரிடத்தில் கேட்டுக் கொண்டனர்.


யாத்திராகமம் 22:31
நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.

  •   கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமாய் வாழும் பொருட்டு அவர்களுக்குத் தேவ கற்பனைகள் கொடுக்கப்பட்டன.


யாத்திராகமம் 26:19
நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

  •   தேசத்திற்குக் கர்த்தரை அறிவிக்கும் பொருட்டு அவர் தேவ ஜனங்களை அபிஷேகித்தார்.
  •   ஆனால், அவர்கள் பரிசுத்த ஜனங்களாய் ஜீவிப்பத்தில் திரும்பத் திரும்ப தோல்வியடைந்து போனார்கள்.


3. பரிசுத்தமாயிருங்கள்

1 பேதுரு 1:15-16
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

  •   ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாமும் பரிசுத்தஜனங்களாக ஜீவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
  •   புற ஊந்துதல் அல்லாமல், கர்த்தர் நம்மை பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு இரட்சித்துக் கொண்டதால் நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.
  •   கிறிஸ்துவில் நாம் உரிமையாக்கிக் கொள்ளப்பட்டதால் பரிசுத்தமாகும்பொருட்டு நாம் தெய்வீக அழைப்பைப் பெற்றிருக்கிறோம்.


2 கொரிந்தியர் 7:1

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.


முடிவுரை:
  •   அவரில் நாம் பரிசுத்தாக ஜீவிக்கும் கர்த்தருடைய பரிசுத்த ஜனமாய் இருக்கிறோம்.

———————————————————–————————————
சுய மதிப்பீட்டுக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி:

தேவ சித்தத்திற்காக நீ தெரிந்து கொள்ளப்பட்ட நோக்கம் பரிசுத்தமாக வாழும் நோக்கத்திற்கு உனக்கு எவ்வாறு சவாலைத் தருகிறது?



Monday, December 12, 2016

ராஜரீக ஆசாரியக்கூட்டம்

முன்னுரை:

 தாய்லாந்தில் பூமிபால் அடுல்யதெஜ் 70 ஆண்டுகள் 126 நாள் என்ற கணக்கில் நீண்ட காலம் ஆட்சி ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
 ஆனாலும், அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய புதல்வரான மஹா வஜிராலோக்கோர்ன் அரியணை அமர்ந்தார்
 தேவன் நம்மைக் கையாண்ட விதத்தை அறியும் போது எப்படிப்பட்ட மாற்றம் உண்டாகிறது.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1. லேவிய ஆசாரியக்கூட்டம்:
 தொடர்ந்து செல்வதற்கு முன்பு, பழைய ஏற்பாட்டில் லேவிய ஆசாரியக்கூட்டத்தைப் பற்றி ஆராய்வோம்.

யாத்திராகமம் 19:5-6
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.

 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரால் ராஜரீக ஆசாரியக்கூட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ததன் வழி அவர்கள் கர்த்தரின் அழைப்புக்குச் செவிசாய்த்தனர்:
(i) கர்த்தரின் குரலுக்குக் கீழ்ப்படுதல்
(ii) அவருடைய கற்பனைக்குக் கீழ்ப்படிதல்

 ஆயினும் லேவியர்கனை இந்த அழைப்புக்குச் செவிசாய்க்க கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம்.

எண்ணாகமம் 8:14-18
இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,

 ஆனால், ஏன் இஸ்ரவேல் புத்திரர்களில் முதற்பேறுவிற்குப் பதில் லேவியர் தெரிந்து கொள்ளப்பட்டனர்?

யாத்திராகமம் 32:26-28
 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
 லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

2. புதிய ராஜரீக ஆசாரியக்கூட்டம்:

வெளிப்படுத்தல் 1:5-6
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

 பேதுரு கிறிஸ்தவர்களை ராஜரீக ஆசாரியக்கூட்டமாக முகமண் கூறுகிறார்.

1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

 அவர் அவர்களை கட்டப்பட்டு வருகிற மாளிகையாக அடையாளப்படுத்துகிறார்
2.1 கிறிஸ்து நமது பிரதான ஆசாரியராய் இருக்கிறார்
எபிரேயர் 4:14-16 (எபிரேயர் 8:1-2யும் வாசிக்கவும்)
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

2.2 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துதல்
1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 12:1)
 இது தேவனுடைய பார்வைக்கு உகந்த பலிகளாக இருக்க வேண்டும்.

வர்ணனை: காயின் மற்றும் ஆபேலின் பலிகள்

எபிரேயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

முடிவுரை:
 கர்த்தருக்குக் கிறிஸ்துவில் ஆவிக்குரிய பலிகளைச் செலுத்தும் ராஜரீக ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறோம்.
———————————————————–————————————
சுய மதிப்பீட்டுக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி:
கிறிஸ்துவில் ராஜரீக ஆசாரியக்கூட்டத்தில் உருவனாய் இருப்பது உன்னை எப்படி மாற்றியமைத்துள்ளது?


Tuesday, December 6, 2016

நமது பிள்ளைகள்

சிறுவர்கள் நமது சிறந்த எதிர்காலத்திற்கு நம்பிக்கையைத் தருகின்றனர். வேதாகமம் சிறுவர்களைப் பற்றிய அறுமையான தகவல்களைத் தருகின்றது:

சங்கீதம் 127:3 - இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். (அவர்களால் சந்தோஷப்படுவோம்)

சங்கீதம் 127:4 - வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். (பிள்ளைகள் சிறந்த பயனைத் தருமளவும் பெற்றோர்கள் அவர்களைச் சரியான முறையில் வளர்க்க வேண்டும்)

நீதிமொழிகள் 22:6 - பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (ஞானத்தின் வழியில் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்).


பெற்றோர்களாகிய நாம் குழந்தைகள் மூலம் கிடைக்கும் இன்பதை அனுபவிக்க கர்த்தர் அருள் புரிவாராக.

நமது குழந்தைகள் ஜீவியத்தின் நோக்கத்தை உணரும் பொருட்டு பொறுத்தமான முறையில் வளர்க்கப்படும் வகையில் நமக்குக் கர்த்தர் ஆழமான ஞானத்தை அருள்வாராக.

நமது குழந்தைகளைத் தனிச் சிறப்பு வாய்ந்த ஆளுமையைப் பெற்றவர்களாக வளர்க்க கர்த்தர் ஞானத்தை அருள்வாராக.

நமது குழந்தைகளைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

Thursday, December 1, 2016

கிறிஸ்மஸ் நம்பிக்கை

நம்பிக்கைக்காப் போராடும் ஜனங்களால் நமது சமூகம் சூழ்ந்துள்ளது.  இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான மாண்புமிகு கைரி ஜமாலுடின், மலேசியா ‘நம்பிக்கை பற்றாக்குறை’ சூழ்நிலையை எதிர்நோக்குகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்த அவநம்பிக்கையின் இயற்கை நீட்டிப்பு ஆன்மீக விஷயங்களை நோக்கி, அதை வெளிப்படுத்த வேண்டும். எனவே, நாம் தேவனிலும் அவருடைய வாக்குத்தத்தத்திலும் நாம் சார்ந்திருப்பதற்கு சிரமப்படச் செய்கிறது. உண்மையில் இந்த அவநம்பிக்கை நம்மைத் தோல்வியாளர்களாக்கச் செய்கிறது. இது சோகம் நிறைந்த காரியமாகும்.

இந்த கிறிஸ்மஸ் காலத்திலாவது நாம் உணர்வுடன் தேவனை விசுவாசிக்கக்கூடியவர்களாக  வளர்வோமாக. தேவனை நாம் நிச்சயம் நம்ப முடியும். இந்த உண்மையை வேதாகமம் முழுவதும் உணர்த்துகிறது. இவ்விதமாய் நமது ஜீவியத்தில் தேவனின் நிதர்சணத்தை வெளிப்படுத்த முடியும். அவருடைய வாக்குத்தத்தத்தில் நாம் களிகூறலாம். இது நற்செய்தியைச் சுமந்து செல்லக்கூடியவர்களாக உயர்த்துகிறது.

கிறிஸ்மஸ் கதையையும் இவ்வுலகத்துக்குத் தேவனுடைய அன்பையும் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த சமுதாயத்திற்கு சுகத்தைக் கொண்டு வருவதில் அவருக்குப் பங்காளியாகிறோம். அதுதான் உண்மையான கிறிஸ்மஸ் உணர்வு.


உங்கள் கிறிஸ்மஸ் ஆயத்தங்கள் சந்தோஷத்தையும் இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.