Friday, August 4, 2017

பயிற்சி நோட்டமும் பாடத்திட்டமும்

தொகுதி:
சுவிசேஷமும் வட்டாரச் சபையும்

அமர்வு 1: பயிற்சி நோட்டமும் பாடத்திட்டமும் (நேரம்: 30 நிமிடம்)

1. அறிமுகம் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல்:

முழுப் பெயர்:




சபையின் பெயர்
& சபையின் அமைவிடம்:



இந்த AIM பயிற்சியிலும் அமர்விலும் கலந்து கொள்வதற்கான காரணம்:


தற்போதைய ஊழிய ஈடுபாடு:




உன் ஜீவியம் மற்றும் சுவிஷேத்தைப் பற்றிய சிறிய அறிமுகம்:




2. இந்தத் தொகுதியின் நோக்கம்:
1. வேதாகம அடிப்படையில் தரிசனம் மற்றும் சுவிசேஷத்தைப் புரிந்து கொள்ளுதல்.
2. தேவ தரிசனத்தில் சபையின் நோக்கத்தையும் கடமையையும் புரிந்து கொள்ளுதல்.
3. வட்டாரச் சபையில் தரிசனத்தையும் சுவிசேஷத்தையும் கற்றுச் செயல்படுத்துதல்.

3. பயிற்சிக்கான தேவைகள்:
3.1. எழுத்துப்பூர்வமான இடுபணி (40%):
இந்தப் பயிற்சியின் மூலம் நீ கற்றவை அடிப்படையில் உன் வட்டாரச் சபைக்கான தரிசனம் மற்றும் சுவிசேஷத்திற்குத் தேவையான செயல்திட்டத்தைத் தயார் செய். உன் வட்டாரச் சபையில் மற்றும் சமுதாயத்தில் நீ கவனம் செலுத்த விரும்பும் பகுதிகளை மேற்கோள் காட்டு. உன் கட்டுரை இரண்டு பக்கத்திற்கு மேற்போகாமல் டைப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  

3.2. வகுப்பில் கலந்து கொள்ளுதல் (10%) 
இப்பயிற்சி தொடர்பாக நடத்தப்படும் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ள       வேண்டும்.

3.3. குழு நடவடிக்கை சம்பவ ஆய்வு / செயல்திட்ட அறிக்கை (50%)

குழு நடவடிக்கையின் மூலமும் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள்

சுவிசேஷத்தில் சபையின் பங்கு

தொகுதி:
சுவிசேஷமும் வட்டாரச் சபையும்

அமர்வு 6: சுவிசேஷத்தில் சபையின் பங்கு (நேரம்: 90 நிமிடம்)

1. சபை ஆய்வு வினாக்கள்:

1.1 வழிநடத்துனர் உதவியோடு கொடுக்கப்பட்ட கேள்வித் தொடருக்கு தனி நபராகப் பதிலளிக்கவும்.

1.2 வட்டார சபையின் இதர உறுப்பினர்களோடு சேர்ந்து உன் பதில்களை மதிப்பீடு செய்க.

1.3 குறிப்பாக உன் வட்டாரச் சபையைப் பற்றிய கண்டறிவுகளைப் பகிர்ந்து கொள்.

2. ‘Lost at Sea’ (கடலில் காணாமற் போகுதல்) வீடியோ காட்சி:

தரிசனத்திலும் சுவிசேஷத்திலும் உன் வட்டாரச் சபையின் பங்கைப் பற்றி மேற்கண்ட வீடியோ உணர்த்தும் பாடத்தை வேதாகம புரிதுணர்தலின் அடிப்படையில் கலந்துரையாடு.


3. என் சபையும் சுவிசேஷமும்:

பகுதி 1, 2ன் மூலம் நீ கண்டுகொண்டவை மற்றும் கலந்துரையாடிவை அடிப்படையில் உன் வட்டாரச் சபையில் மேற்கொள்ளவிருக்கும் தரிசனம் மற்றும் அருட்பணிக்கான முயற்சியைத்  திட்டமிடு.


Thursday, August 3, 2017

ஓர் அஞ்சலி – வில்லியம் கேரி (WILLIAM CAREY)


ஒரு காலை ஆராதனையில், பிரான்சிஸ் என்ற ரோமாபுரி போப் ஐயர், தங்கள் விசுவாசத்திற்காக சகலத்தையும் காணிக்கையாய் கொடுத்த சபையாரைப் பாராட்டிப் பேசினார். அவர்களைசுவிசேஷ வீர்கள்என்று புகழ்ந்தார். பவுல் அப்போஸ்தலரோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், “இந்த சாட்சிக்காக தேவனை ஸ்தோத்தரிப்பது நன்று என்று கூறினார். இந்த மெய்யான சாட்சிகளுக்காக களிகூறுவது நலம். சுவிசேஷத்திற்காக தங்கள் ஜீவனை இழக்கும் தியாகிகள் இவர்கள்; நமது பெருமைக்குரியவர்கள்! சபையின் புகழுக்குரியவர்கள்."

செருப்புத் தயாரிப்பாளராக பயிற்சி பெற்ற வில்லியம் கேரி, இந்தியாவில் மேற்கொண்ட சுவிசேத்தின் நிமித்தம்சுவிசேஷத்தின் தந்தைஎன்று புகழடைந்தார். 1787ல் அவருடைய கீர்த்தி தொடங்கியது. கிறிஸ்தவர்கள் யாவரும் உலகம் முழுவதும் சுவிசேஷம் பகர கடமைப்பட்டவர்கள் என்று உற்சாகப்படுத்தினார். “வாலிபனே, நில். தேவன் உள்ளத்தை மாற்றச் சித்தம் கொண்டிருக்கும் போது, நீயும் நானும் உதவாமலேயே அதைச் செய்து முடிப்பார்", என்றார்.  கொஞ்சமும் கலக்கமின்றி, ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், 1792ல், ‘பெப்டிஸ்ட் மிஷனரிசங்கத்தை அமைத்து, ‘‘தேவனிடமிருந்து பெரிய காரியங்களை நாடு; தேவனுக்காக பெரிய காரிங்கள் செய்என்ற அவர் பிரபலமான சுலோகத்தை முழங்கினார்.

மறு ஆண்டில் அவர் குடும்பத்தோடு இந்தியாவிற்குப் புறப்பட்டார். அங்கு ஏழு ஆண்டுகளுக்கு அவரின் பணிப் போராட்டம் முடங்கிப் போனது. பீட்டர் என்ற அவருடைய மகன் வயிற்றுக் கடுப்பால் (இரத்தபேதி) மரித்துப் போனான். மனைவியின் மனநிலையோ படுமோசமாக பாதிக்கப்பட்டது. "இது மெய்யாக எனக்கு மரன நிழல்கள், ஆனாலும் நான் பின்வாங்கிப் போகாததற்காக மகிழ்கிறேன்; தேவன் நம் மத்தியில் வாசம் செய்கிறார்" என்று கேரி எழுதினார்.

ஆனால் 1800ல், அவர் முதல் கிறிஸ்தவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். 20 வருடங்களில் பல இந்திய மொழிகளிலும் மொழி வழக்குகளிலும் மாற்றி எழுதினார். பின்னர் செரம்பூர் கல்லூரியை அமைத்து, பல ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.  

கேரி லாட்ஸ் (Carey Lodge)

இன்றைய கிறிஸ்தவர்பத்திரிக்கை எழுத்தாளர்