Thursday, August 18, 2016

ஜெபத்திற்குப் பதில்கள்





முன்னுரை

1. மனதின் வரைபடம்

ஜெபத்திற்குப் பதில்
- ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கப்படும் என்ற நிச்சயம் (1-5)
தேவன் எப்போதும் நமது ஜெங்களுக்குப் பதிலளிக்கிறார் என்ற நிச்சயம் (1-2)
தேவன் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த பதிலை அளிக்கிறார் என்ற நிச்சயம் (3)
ஜெபத்தின் மீது வாஞ்சை (4, 5)
- நமது ஜெபங்களுக்கு உத்தரவு அளிக்கப்படுவதிலுள்ள தடைகள் (6)
- ஜெபத்திற்குத் துரிதமான உத்தரவுகள் கிடைப்பதின் இரகசியம் (7-10)
மோசேயின் ஜெபம் (7)
தேவனுடைய துரிதமான உத்தரவு (8)
வாக்குத் தத்தங்களான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் (10)
- பதிலளிக்கப்பட நீண்ட காலமாகும் ஜெபங்கள் (11)
- ஒருவர் தனது ஜெப ஜீவியத்தைப் பரிசீலனை செய்தல் (12)


2. நோக்கங்கள்
- தேவன் எப்போதும் நமது ஜெபங்களுக்கு மிகச் சிறந்த பதில்களையே கொடுக்கிறார் என்பதை உணர்ந்து கொள்வது.
- நமது ஜெபங்களுக்குப் பதிலளிக்கக் கூடாதபடி தடை செய்கிற இடையூறுகளை அடையாளம் காண்பது.
- தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு ஜெபிப்ப்து.
- ஜெபத்திற்குப் பதில் கிகைடக்காத வேளைகளிலும் கூட விடா முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து ஜெபம் செய்வது.

3. துதி

4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்காக
- உலகெங்குமுள்ள ஊழியங்களுக்காக, உன்னுடைய தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காக,
- உன்னுடைய குறிப்பிட்ட சபைக்காக
- உன்னுடைய சபையிலுள்ள குருமாருக்காக
- சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காக.

5. வீட்டுப் பாட பயிற்சியை சரிபார்த்தல்
வீட்டுப் பாடப் பயிற்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரமும் முறையும் ஒவ்வொரு தலைவரின் அனுமானத்தின்படி செய்யப்படலாம்.

1) தியான நேரம்
எலியாவின் பதிலளிக்கப்பட்ட ஜெபம். 1 இராஜாக்கள் 18:41-46
2) மனப்பாட வசனங்கள்
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7:11
நீங்கள் என்னிலும், என் வார்த்கைள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:7
3) அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி
4) வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்ட பகுதி


6. முன்னுரை
‘எத்தனை தடவைகள் உன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்திருக்கிறது?’ இது போன்று உன்னிடம் கேட்கப்பட்டால், பதிலளிக்கப்பட்ட ஜெபத்திற்கு எத்தனை எடுத்துக்காட்டுகளைத் தன்னம்பிக்கையுடன் உறுதியாக எடுத்துக் கூற முடியும்? பெரும்பாலானோர் அடிக்கடி ஜெபம் செய்தாலும் கூடத் தங்கள் ஜெபங்களுக்கு பதில்களைப் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. உங்கள் ஜெபத்திற்குப் பதிலளிக்கப்படும் என்று இயேசு திரும்பத் திரும்ப வேதாகமத்தில் வாக்குறுதியளித்திருக்கிறார். இந்த வாக்குறுதி பல தடவைகள் திரும்பக் கூறப்பட்டிருக்கிறது என்ற உண்மை இதை நாம் அலட்சியம் செய்ய முடியாது என்பதைத் தெரிவிக்கிறது. நாம் சரியான காரியங்களுக்காக ஜெபிக்கும்போது கூட நமது ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால், அது தேவனுடைய மகிமைக்குப் பங்கம் விளைவிக்கிறது என்பதாகும். எனவே, ஒரு ஜெபத்திற்குப் பதில் கிடைக்காவிட்டால், பிரச்சனை நமக்குள்ளேதான் இருக்கிறது என்று அர்த்தமாகும். தேவனுடைய வாக்குறுதிகள் வல்லமையற்றதல்ல. தேவன் நமது ஜெபங்களு;க்குப் பதிலளிக்கிறார். இருந்த போதிலும், நமக்குத் திருப்திகரமாக இல்லாவிட்டாலும் கூட, தேவன் சில நேரங்களில் நாம் கொடுக்க விரும்புவதையே நமக்குக் கொடுக்கிறார்.


7. முன்னுரையின் சுருக்கம்
- சில விசுவாசிகளின் ஜெபங்கள் பதிலளிக்கப்படாமலிருப்பது போல் காணப்படுகின்றன.
- நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காத போது, அது தேவனால் கூடாத காரியம் என்பதல்ல. மாறாக பிரச்சனை நம்மில் தான் இருக்கிறது என்று அர்த்தம்.

8. நுழைவு கேள்வி
ஜெபத்திற்குக் கிடைக்கும் பதில்கள் பற்றி சவாலாக இருக்கும் ஒரு வேத வசனத்தை உங்களில் யாராவது நினைவு படுத்தக் கூடுமா?

ஜெபத்தைக் குறித்த மிகப் பெரிய சவாலாக இருக்கும் வசனங்களில் ஒன்று, மத்தேயு 5ம் அதிகாரத்pல் உள்ளது. நாம் எல்லோரும் சேர்ந்து அதைக் கவனித்துப் பார்ப்போமாக.


மையப் பகுதி

(ஜெபத்திற்கு உத்தரவு கொடுக்கப்படும் என்ற உறுதி)

1. மத்தேயு 7:7-11 வசனங்களை வாசித்து ஜெபம் கேட்கப்படுவதைப் பற்றி இயேசு விளக்கிக் கூறினார் என்பதைக் கண்டு பிடி. மத்தேயு 7:7-11ல் எத்தனை வசனங்களை நீ மனப்பாடமாக அறிந்திருக்கிறாய்?

(குறிப்பு)
பயிற்சி பெறுவாரின் மனதில் பதிய வைக்க வேண்டிய கேள்வியின் சிறப்பான நோக்கத்தைத் தலைவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். பயிற்சி பெறுவோர் கேள்வி 2ல் ஜெபங்களுக்கு எப்போதும் உத்தரவு கொடுக்கப்படும் எனப்தையும் கேள்வி 3ல் தேவன் எப்பொழுதும் எல்லாவற்றைக் காட்டிலும் மிகச் சிறந்த விடைகளையே கொடுக்கிறார் என்பதையும் இந்தப் பாடத்தில் கற்றுணர்ந்து தங்கள் உள்ளத்தில் விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தலைவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

2. ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் நிச்சயத்தை நிலை நிறுத்த, எத்தனை வெவ்வேறான உவமானங்களை இயேசு உபயோகித்தார் என்பதை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள் (வசனங்கள் 7-8)
- ‘அது உங்களுக்குக் கொடுக்கப்படும்’, ‘கண்டடைவீர்கள்’, ‘உங்களுக்குக் கதவு திறக்கப்படும்’ என்ற மூன்று வெவ்வேறு சொற்றொடர்களை உபயோகிப்பதின் மூலமாகத் தமது வாக்குறுதியின் நிச்சயத்தைக் கோடிட்டுக் காட்டுவது போல் வலியுறுத்திக் காண்பிக்கிறார்.

இவ்வாறு நம்முடன் பேசுவதில் தேவன் நமக்காக விரும்புவது என்ன?
- நான் நிச்சயமாக உனக்கு உத்தரவு கொடுப்பேன். ஆனால், நீ ஏன் ஜெபிக்காமல் இருக்கிறாய்?’ என்று கூறிக் கர்த்தராகிய இயேசு நமக்காகப் பரிதபிக்கிறது போலக் காணப்படுகிறது. ‘அது உனக்குக் கொடுக்கப்படும்’. ’நீ கண்டடைவாய்’, ‘உனக்காகக் காதவு திறக்கப்படும்’ ‘நிச்சயமாகவே‘ என்ற வார்த்தையைச் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.
‘கேளுங்கள்’, ‘தேடுங்கள்’, ‘தட்டுங்கள்’ என்பது மூன்று வகைகளான ஜெபம் என்று சுட்டிக் காட்டுவதாக யாராவது எப்போதாவது கற்பிக்கப்பட்டிருக்கிறார்களா?

இவ்வாறு கற்பிக்கப்பட்ட பயிற்சி பெறுவோர் இருந்தாலும் கூட, இந்தப் போதனையைக் குறித்து, இது ஒரு மறைபொருளான அர்த்தத்தைக் கொண்டது என்று கண்டனம் செய்வதோ அல்லது குறை கூறுவதோ கூடாது. ஆனால், இதற்குப் பதிலாக, இந்த வெவ்வேறான சொற்றொடர்கள் ஜெபத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது என்பதையும், நமது ஜெபங்களுக்கு நிச்சயமாகவே உத்தரவு கொடுக்கப்படும் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளப் பயிற்சி பெறுவோருக்கு உதவி செய்ய வேண்டும்.


(தேவன் நமக்கு மிகச் சிறந்த பதில்களைக் கொடுக்கிறார் என்ற உறுதி)

3. வசனங்கள் 9-11ல் தேவன் தம்மை உலகப் பிரகாரமான தகப்பனுக்கு ஒப்பிடுகிறார். இரண்டு உவமானங்களை உதாரணங்களாக உபயோகித்து தேவன் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தும் ஒரு வாக்குறுதி உள்ளது. அந்த வாக்குறுதி எது?

- தேவன் நிச்சயமாக நமக்கு ஒரு நல்ல உத்தரவு கொடுப்பார். இயேசு தமது பிதாவை உலகப்பிரகாரமான தகப்பனுக்கு ஒப்பிட்டுக் கற்களும், அப்பமும், பாம்பும் மீனும் இவை போன்ற சின்னங்களை உபயோகித்து விவரிக்கிறார்.

அப்பமும் மீனும், கல்லும் பாம்பும் எதைக் குறிக்கின்றன?
- அப்பமும் மீனும் நல்ல உத்தரவுகளையும், கல்லும் பாம்பும் தீமையான அல்லது கெட்ட உத்தரவுகளையும குறிக்கின்றன.
உன்னுடைய ஜெபங்களுக்கான உத்தரவுகள் கல்லாக இல்லாமல் அப்பமாக இருக்கும் என்ற திட நம்பிக்கை உனக்குள்ளதா? உனக்குக் கிடைக்கும் உத்தரவுகள் பாம்பாக இல்லாமல் மீனாக இருக்கும் என்று விசுவாசிக்கிறாயா?

தேவன் ஏன் தம்மை ஒரு உலகப் பிரகாரமான தகப்பனுடன் ஒப்பிடுகிறார்?
- குறைபாடுகளுள்ள, நேர்மையற்ற, உலகப் பிரகாரமான பிதாக்களும் கூடத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது நமது தேவன், அளவற்ற அன்புள்ளவரும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமாகிய நமது பரலோக தந்தையும் நமக்கு நன்மையானவவைகளைத் தந்தருள மாட்டாரா? இந்தச் செய்தியை அறிவிக்கவே இவ்வாறு ஒப்பிட்டுப் பேசினார்.
4. இத்தனை நிச்சயமான வாக்குறுதிகள் இருந்த போதிலும் நமக்குத் தேவன் பேரில் சந்தேகம் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்த வாக்குறுதி பற்றி உன் உள்ளத்தில் நீ எவ்வாறு உணருகிறாய்?
- நீ வாக்குக் கொடுத்திருந்த போதிலும், உன்னுடைய வாக்குறுதியைப் பலமுறை திரும்பத் திரும்பக் கூறியிருந்த போதிலும், உன்னுடைய பிள்ளைகள் உன் வாக்குறுதியில் சந்தேகப்பட்டுத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பார்களானால் நீ உன் உள்ளத்தில் எவ்வாறு உணருவாய்?

சீஷத்துப் பயிற்சியும் கல் அல்ல,, அப்பம் என்று நீ நம்புகிறாயா?


5. வசனம் 11ல் உள்ள வாக்குறுதியை எவ்வித தயக்கமுமின்றி நீ ஏற்றுக் கொண்டிருந்தால், நீ தேவனிடம் ஓடிச்சென்று உன் இருதயத்திலுள்ள எல்லாவற்றையும் அவருக்கு முன்பாக இறக்கி வைத்துவிட வேண்டுமென்ற உந்துதலை நீ உணர வேண்டும். இப்படிப்பட்ட தூண்டுதல் எந்த அளவுக்கு உன் உள்ளத்தில் எழுவதை நீ உணர்கிறாய்?

தேவன் நிச்யமாக உன் ஜெபங்களுக்கு உத்தரவு கொடுப்பார் என்ற உண்மையையும், அவருடைய உத்தரவுகள் எப்போதும் நன்மையும் மிகச் சிறந்தவைகளாகவும் இருக்கும் என்பதையும் நீ ஒப்புக் கொள்ளுகிறாயா?
- அப்படி ஒப்புக் கொள்வாயானால் இப்பொழுது, உடனே ஜெபிக்க வேண்டும் என்ற ஏவுதலை நீ உணரவில்லையா?

(நமது ஜெபங்களுக்கு உத்தரவு அளிக்கப்படுவதிலுள்ள தடைகள்)

6. பின்வரும் பகுதிகளை ஆiராய்ந்து பார்த்து ஜெபங்கள் கேட்கப்படுவதைத் தடுக்கும் தடைகள் எவை என்று கண்டு பிடி.

ஏசாயா 1:15
- ‘இரத்தத்தினால் நிறைந்த கைகள்’ - இது மற்றவர்களைக் காயப்படுத்தும் பாவங்கள்
நாம் பாவம் செய்யும் போது தேவன் ஏன் நம் ஜெபங்களைக் கேட்பதில்லை?
- நாம் மற்றவர்களுக்குத் தீங்கு செய்திருக்கும்போது, ‘தயவு செய்து என்னைக் காப்பாற்றும்’ என்று தேவனை நோக்கி நாம் செய்யும் ஜெபத்திற்குத் தேவன் செவி கொடுப்பாரா?

(குறிப்பு)
ஒரு பகுதியின் அர்த்தத்தை விளக்கிக் கூறுவது முக்கியமான போதிலும் அந்த அர்த்தத்தைக் கொண்டு நோக்கும் போது நமது ஜீவியம் எப்படி இருக்கிறது என்று பரிசோதித்துப் பார்ப்பது அதிக முக்கியம். எனவே, உதாரணமாக, ‘இரத்தத்தினால் நிறைந்த கைகள்’ என்பதின் அர்த்தத்தை நுணுக்கமாக அறிவதில் இழுப்புண்டு சிக்கிக் கொள்ள வேண்டாம். ‘இரத்ததினால் நிறைந்த கைகள்’ என்பது மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களைக் குறிக்கிறது என்ற உண்மையே முக்கியமானது. இந்த மாதிரியான விளக்கம் கூறுவதே போதுமானது.

மத்தேயு 6:14-15
- மற்றவர்களை மன்னிக்கத் தவறுதல் (மன்னியாதிருத்தல்)
யாக்கோபு 1:6-7 (மத்தேயு 11:24ஐயும் பார்க்கவும்)
- சந்தேகம்: தேவன் நமது ஜெபங்களுக்கு உத்தரவு கொடுப்பார் என்ற உண்மையை சந்தேகித்தல்.
யாக்கோபு 4:3
- நமக்குக் கிடைப்பதை நமது மாமிச இச்சைகளை நிறைவேற்றும்படி தவறான உள்ளெண்ணங்களுடன் கேட்பது
சுகபோகம் (மற்ற மொழிபெயர்ப்பில் கூறப்படும் ஆசை அல்லது இச்சை) என்றால் இங்கு என்ன பொருள்படும்?

1 யோவான் 2:16ல் கூறியுள்ளது போல், பாவமுள்ள மனிதனின் மாம்ச இச்சை, கண்களின் இச்சை, தனக்குள்ளவைகள் மற்றும் தான் என்ன செய்திருக்கிறான் என்பது பற்றிப் பெருமையாகப் பேசுதல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. (ஜீவனத்தின் பெருமை) 1 யோவான் 2:16

நாம் தவறான உள்ளெண்ணங்களுடன் ஜெபிக்கிறோமா இல்லையா என்பதை நாம் எவ்வாறு பகுத்தறியலாம்?
- உதாரணமாக, நம்முடைய ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட வேண்டுமென்று நாம் ஏன் விரும்புகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். வேறு வார்த்கைகளில் இதைக் கூறுவோமானால், நம்முடைய ஜெபங்களின் நோக்கம் என்ன உத்தரவு அளிக்கப்படும் ஜெபங்களின் மூலமாக நாம் என்ன பெற்றுக் கொள்ள அல்லது சாதிக்க விரும்புகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நமது நோக்கம் தேவனுடைய மகிமைக்கு முதலிடம் கொடுக்காவிட்டால், நாம் தவறான உள்ளெண்ணத்துடன் ஜெபிக்கிறவர்களாக இருப்போம். நமது பிள்ளைகளுக்காக நாம் ஜெபிப்பதும் இது போன்றதுதான். நமது பள்ளியில் பிள்ளைகள் எல்லாவற்றிலும் நன்றாகச் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறோமா? அவர்கள் அதைப் போலவே பள்ளியில் எல்லாவற்றிலும் தேறினவர்களாக இருந்தால் அதன் பின்பு அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் என்றும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் தவறான உள்ளெண்ணங்களுடன் ஜெபிக்கிறோமா என்பதைப் பகுத்தறிந்து கொள்வதற்கு இக்கேள்வியின் விடை நமக்கு உதவி செய்யும்.
நாம் இப்போது விவாதித்து, அறிந்து கொண்ட மேற்கூறிய தடைகளில், உன்னுடைய ஜெபங்களுக்கு உத்தரவு பெற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பது எதுவென்று நீ எண்ணுகிறாய்?


(குறிப்பு)
7வது கேள்விக்குப் போகுமுன்பாகப் பின்வரும் கேள்விகளைக் கேட்பது தலைவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.

மேலே குறிப்பிடப்பட்ட நான்கு தடைகளைத் தவிர வேறு தடைகள் இருக்கின்றனவா?
- விவாக சம்பந்தமான பிரச்சனை, உடன் பிறந்தோருக்கிடையே சண்டை இது போன்று பயிற்சி பெறுவோர் கூறும் பலவகையான தடைகளையும் கவனமாகக் கேட்க வேண்டும்.
நமது ஜெபங்களுக்கு உத்தரவு கிடைப்பதைத் தடை செய்யும் சிலவற்றைப் பற்றி இப்போது விவாதித்தோம். அப்படியென்றால், நமது ஜெபங்தகளுக்குத் துரிதமான அல்லது உடடினயான உத்தரவு கிடைப்பதற்கு உதவியாக இரக்கக்கூடிய சில காரியங்கள் யாவை?

- தடைகளை, அவற்றுக்கு முற்றிலும் எதிராகக் திசை திருப்புதல் நமது ஜெபங்களுக்குத் துரிதமான உத்தரவு கிடைக்கும் படியான திறவுகோலாக இருக்கக் கூடும். அதன் பின்பு 7வது கேள்விக்கு நேராகச் செல்லலாம்.

(ஜெபத்திற்குத் துரிதமான உத்தரவு கிடைப்பதின் இரகசியம்: தேவனுடைய வாக்குத் தத்தங்களில் நம்பிக்கை வைக்கும் ஜெபம்)


7. நமது ஜெபங்களுக்குத் துரிதமான உத்தரவு பெற்றுக் கொள்ளம் வழியை மோசே நமக்குக் கற்றுக் கொடுத்தான். முதலாவது, யாத்திராகமம் 32:7-8ஐ வாசிக்கவும். தேவன் ஏன் கோபமாயிருந்தார்? பின்பு வசனங்கள் 11-13 வரை வாசித்து இஸ்ரவேலரின் சார்பாக மோசே செய்த ஊக்கமான வேண்டுதலை ஆராய்ந்து பாருங்கள்.

பாவம் செய்திருந்த இஸ்ரவேலரை மன்னிக்கும்படி மோசே தேவனை நோக்கி ஜெபித்தான். விசேஷமாக 13ம் வசனத்தில் ஆபிரகாம் ஈசாக்கு, யாக்கோபுக்கு தேவன் கொடுத்திருந்த வாக்குறுதியை (தேசமும், சந்ததியாரும்) நினைவு படுத்தில் இஸ்ரவேல் புத்திரரை மன்னிக்கும்படி கெஞ்சிப் பிரார்த்தித்தான். இந்த வேத பகுதியின் பின்னணி (இதற்குக் காரணமாக இருந்தது) என்ன?

- சீனாய் மலையில் 40 நாள் தேவன் மோசேயுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆரோனுடன் சேர்ந்து இஸ்ரவேல் புத்திரர் ஒரு பொன் கன்றுக் குட்டியை வார்ப்பித்து அதைப் பணிந்து கொண்டார்கள். அவர்கள் செய்ததற்காக இஸ்ரவேல் புத்திரர் பேரில் தேவன் கோபங்கொண்டபோது, தேவன், தாம் அவர்களை அழிக்கப் போவதாகக் கூறினார். அப்போது மோசே இஸ்ரவேலருக்காக தேவனிடம் விண்ணப்பம் பண்ணினான்.
8. அடுத்தாற் போல், எவ்வளவு சீக்கிரமாக தேவன் அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார் என்பதை நன்கு கவனித்துப் பார் (வச.14)

- தேவன் மனமிரங்கி மோசேயின் ஜெபத்தை உடனே ஏற்றுக் கொண்டு தமது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தீங்கு செய்யவில்லை.
வசனங்கள் 13, 14-க்கிடையே எவ்வளவு நேரம் கடந்து போயிருக்கும் என்று நீ எண்ணுகிறாய்?

இந்த வசனங்களுக்கிடையே நேரம் கடந்து போனதைக் காண்பிக்க எந்த அறிகுறியும் இல்லை என்பதை கவனிக்கும்போது, உத்தரவு உடனே கொடுக்கப்பட்டது என்று தெரிகிறது.

9. தேவன், தன் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மோசே பற்றிப் பிடித்துக் கொண்டு விண்ணப்பித்ததால் அவனுடைய ஜெபத்திற்கு உடனே பதில் கிடைக்கப் பெற்றான். ‘உம்மைக் கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே’ (வசனம் 13) என்றான். நாம் தேவனுடைய வாக்குறுதிகளைப் பற்றிக் கொண்டு உறுதியுடன் ஜெபிக்கும் போது, தேவன் ஏன் சீக்கிரமாக நமது ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கிறார்?

- ஏனென்றால் தேவன் உண்மையுள்ளவர். தம்முடைய வாக்குத் தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுகிறவர்.
எந்தொந்த சந்தர்ப்பங்களில் தங்கள் பிள்ளைகள் உரிமையோடு கேட்பவை சிறிது அதிகமாக இருந்த போதிலும், பெற்றோர் பிள்ளைகள் கேட்டுக் கொள்வதையே செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்?

- இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருந்த போதிலும் அதில் ஒன்று, முன்பு பெற்றோர் செய்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து பிள்ளைகள் அதைக் கேட்டுக் கொள்வதாகும். மோசேயும் கூட தேவன் கொடுத்திருந்த வாக்குத் தத்தத்தை நினைவு கூர்ந்து அதை உறுதியுடன் பற்றிக் கொண்டு ஜெபித்தான். அதாவது, ‘தேவனே நீர் கடந்த காலத்தில் ஆபிரகாமுக்கு வாக்குத் தத்தம் செய்திருந்தீர். நீர் கொடுத்த அந்த வாக்கைக் காப்பாற்றி நிறைவேற்ற வேண்டும் என்று மோசே தேவனிடம் கூறினான். நாம் தேவனுடைய உண்மையை உறுதியாகப் பற்றிக் கொண்டு அவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்கும்போது, தேவன் நமது ஜெபத்தைக் கேட்டும் அசைக்கப்படாமல், அதாவது நம் மீது பரிதபிக்காமல் இருக்க முடியுமா?
10. தேவனுடைய உத்தரவைப் பெற்றுக் கொள்ளும்படியாக, அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டு எவ்வளவு அடிக்கடி, நீ ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக் செல்வாய்?
நீ பற்றிப் பிடித்துக் கொண்ட தேவனுடைய வாக்குத் தத்தங்களுக்கு ஒரு உதாரணமும், நீ பெற்றுக் கொண்ட பதிலையும் பற்றிக் கூறு.

பயி;ற்சி பெறுவோர் தங்களுடைய ஜெபங்கில் உபயோகிக்கப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்யவும்.

நாம் ஜெபிக்கும் போது தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்கு நமக்குத் தேவையானவை எவை?
- முதலாவது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் நன்கு அறிந்திருப்பது மிகவும் அவசியம். அதற்காக, நாம் வேதாகமத்தை வாசித்து தேவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொள்வது அவசியம்.
- இரண்டாவதாக, நாம் வாசிப்பதையும், ஜெபிக்கும் போது தேவனுடைய வார்த்தையில் நம்பிக்கை வைப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

(குறிப்பு)
பயிற்சி பெறுவோர் தாங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டு சார்ந்திருக்க விரும்பும் வேதாகம வாக்குத் தத்தங்களின் வசனங்களை எழுதி, அவற்றைத் தங்கள் வேதாகமத்திலோ அல்லது தங்களுக்கு அருகிலோ வைக்கும்படி அவர்களுக்கு யோசனை கூறுவது மிகவும் நல்லது. இத்தகைய பழக்கம் அவர்கள் வாக்குத்தத்தமான வார்த்தைகளை நினைவு கூரவும், அவற்றில் நம்பிக்கை வைத்துத் தங்கள் வாழ்க்கையில் உபயோகிக்கவும் உதவியாக இருக்கும்.


(பதில் கிடைப்பதற்கு நீண்ட காலமாகும் ஜெபம்)

11. ஜெபத்துக்கான பதில் எப்போதும் ஒரே நாளில் கிடைத்து விடாது. ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலேயே பதில் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை. இருந்த போதிலும் நாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஜெபிக்கத் தக்கதாகவும், பொதுவான ஒரு கால வரைக்குள் நம்முடைய ஜெபம் கேட்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஜெபித்த பின்பு, உன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்த அனுபவத்தை விளக்கமாகக் கூறு.

ஆதியாகமம் 28:20-33ல் யாக்கோபு செய்த ஜெபத்திற்கு இருபது ஆண்டுகளுக்குப் பின்பு தான் பதில் கிடைத்தது. (ஆதியாகமம் 31:13)

நீண்ட காலமாக ஜெபித்த பின்னரே, பதில்களைப் பெற்றுக்கொண்ட அனுபவங்களையுடைய பயிற்சி பெறுவோர் இருக்கலாம். ஆனால், நீண்ட காலமாகவே தாங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பவற்றுக்கு பதில் கிடைக்கும்படி இன்னமும் காத்துக் கொண்டிருக்கிற பயிற்சி பெறுவோரும் இருக்கலாம். எனவே, தங்கள் ஜெபங்களில் விடா முயற்சியுடன் பதிலுக்காக காத்துக் கொண்டு தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருப்பவர்களுக்காக யாவரும் ஒன்று சேர்ந்து ஜெபிப்பது அவசியமாக இருக்கிறது.

தேவன் சில நேரங்களில் நீண்ட காலம் கடந்து சென்ற பின்னரே நமது ஜெபங்களுக்கு உத்தரவு அருளிச் செய்கிறார் இது ஏன்?
- நமது வாழ்க்கையின் சரியான நேரத்தில் நமக்கு உத்தரவு அருளும்படி, நம்மைப் பழக்கப்படுத்திப் பயிற்சியளிக்க, உத்தரவை ஏற்றுக் கொள்ளும்படி நம்மை ஆயத்தப்படுத்த  இது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
உன்னுடைய ஜெபத்திற்குப் பதிலளிக்க தேவன் தெரிந்து கொள்ளும் நேரமே உனக்கு ஏற்ற மிகச் சிறந்த நேரம் என்பதை நீ ஒப்புக் கொள்ளுகிறாயா?

- தேவனுடைய பதில்கள் நமக்கு மிகவும் சிறப்பானவைகள் என்பதை மட்டுமல்ல, அவர் தெரிந்து கொள்ளும் நேரமும் சிறப்பானது என்பதையும் பயிற்சி பெறுவோர் எற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நீண்ட காலமாக நீ ஜெபித்துக் கொண்டிருந்தும் இன்னமும் பதில் கிடைக்காமலிருக்கும் ஜெபம் இருக்கிறதா? அப்படி ஒரு ஜெபம் இருக்குமானால், அதை உன்னுடைய குழுவினரோடு நீ பகிர்ந்து கொள்ள முடியுமா?


(குறிப்பு)
11வது கேள்வி மிக முக்கியமானது. ஏனென்றால், இது பயிற்சி பெறுவோருக்குத் தங்கள் வாழ்க்கையில் வேதனையான சூழ்நிலைகள் இருக்குமானால், அவைகளைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்காக ஒருவர் மன்றாடி ஜெபிக்கக் கூடிய நேரமாக இருக்கிறது. ஆகையால், தலைவர்கள் 11வது கேள்விக்குப் போதுமான நேரத்தை அனுமதித்துப் பயிற்சி பெறுவோர் நம்பிக்கையை விட்டு விடாமல், விடா முயற்சியுடன் தொடர்ந்து ஜெபிக்கும்படி அவர்களைப் பெலப்படுத்த வேண்டும்.


(ஒருவரது ஜெப ஜீவியத்தைப் பரிசோதனை செய்தல்)

உன்னுடைய ஜெப ஜீவியத்தைக் குழுவிலுள்ள மற்றவர்களின் ஜெப ஜீவியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, உன்னுடைய ஜெப ஜீவியத்திலுள்ள எந்த அம்சமும் (தன்மையும்) மாற்றப்பட வேண்டியதாக இருக்கிறதா என்று பார்.

- பாடம் 5, பாடம் 6 ஆகிய இரண்டு பாடங்களில் ஜெபத்தைப் பற்றிப் படித்ததை இந்தப் பாடம் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதினால், பயிற்சி பெறுவாருடன் தலைவரும் சேர்ந்து, ‘ஜெப பரிசீலனைப் பட்டியல்’ தயாரிப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம். பின் வருவது ஒரு பரிசீலனைப் பட்டியலின் மாதிரியாக இருக்கிறது.

1. நீ திட்டவட்டமாக ஜெபிக்கிறாயா?
2. உன்னுடைய ஜெபத்தில் நீ தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஜெபிக்கிறாயா?
3. சரியான நோக்கங்களுடன் ஜெபிக்கிறாயா?
4. உன்னுடைய ஜெபத்தில் தெளிவாக சரியானவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறாயா?
5. நீ காலந் தவறாமல் ஒழுங்காக ஜெபிக்கிறாயா?
6. நீ ‘உன் அறை வீட்டில்’ இரகசியமாக ஜெபிக்கப் பழகுகிறாயா?
7. உன்னுடைய ஜெபத்தில் தெளிவின்றி வீண் வார்த்தைகளை அலப்பும் குற்ற உணர்ச்சி உனக்கிருக்கிறதா?


முடிவுரை

1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தைச் சுருக்கமாக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதயங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும்படி உதவி செய்ய வேண்டும்.

2. தீர்மானங்களும் செயல்படுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும் படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்;து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றைச் செய்லபடுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப்படி பகிர்ந்;து கொள்ள வேண்டும்,.

4. முடிவில் துதி செலுத்துதல்.



5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டி, தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
- அவர்களுடைய குணமும் வாழ்க்கையிம் முற்றிலும் மாற்றம் அடைவதற்கு செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்க்கையையும் பரிசுத்த ஆவியானவர் மாற்றும்படி ஜெபிக்கவும்.

6. வீட்டுப் பாடப் பயிற்சி
வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டுப் பாடப் பயிற்சிகள் யாவும் உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொரு தலைவரின் குறிக்கோள்கள் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலை குழுவிலுள்ள பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தக்கதாக வீட்டுப்பாட பயிற்சியின் அளவை நிர்ணயிக்கலாம். ஒவ்வொருவரின் ஆற்றல் திறன் குடும்ப சூழ்நிலை ஆகியவை வேறுபட்டவையாக இருக்கும். விவேகமுள்ள தலைவர் தமது அறிவாற்றலை உபயோகித்து வீட்டுப்பாட பய்றிசியின் அளவைத் திட்டம் பண்ணலாம்.

அ) தினசரி வாழ்க்கையின் வீட்டுப்பாடப் பயிற்சி
தினசரி வாழ்க்கையின் பயிற்சியானது பயிற்சி பெறுவோர் தாங்கள் கற்ற உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த உதவி செய்யும் படி ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே இருக்கிறது. தலைவரின் வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாட பயிற்சி ஒவ்வொரு பாடத்தின் மையமான கருத்தை மனதில் கொண்டு தெளிவாக முறைப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவரும் தமது சிறிய குழுவின் தனிப்பட்ட சூழ்நிலைகள் தேவைகளுக்குப் பொருத்தமான வேறு வீட்டுப்பாட பயிற்சியையும் கொடுக்கலாம். வீட்டுப்பாட பயிற்சியானது ஒவ்வொது பாடத்தின் கருப்பொருளையும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆ) வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட வேலை.
வாசிப்புக்கான பகுதிகளைக் கொடுக்கும் போது தலைவர்கள் 3 விதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாசிக்கும் படியாகப் பயிற்சி கொடுப்பது வழிகாட்டியிலுள்ள பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொளவ்தற்குக் கூடுதலான ஒரு கருவி மட்டுமே. வழிகாட்டியிலுள்ள பாடல்களை விவரித்துக் கூறும் போது போதுமான அளவு சொல்லாமல் விட்டுவிடும் தவறைத் தலைவர்கள் செய்யக் கூடாது. முக்கியமாகப் பாடத்திற்குப் பதிலாக வாசிப்புப் பயிற்சியைக் கொடுத்து விடலாமே எனும் ஒரு சோதனையான எண்ணம் பல தலைவர்களுக்கு ஏற்படலாம்.
அதிகப்படியாக வாசிக்கும் பகுதியைக் கொடுப்பது எப்போதும் ஒரு நல்ல யோசனை அல்ல. வாசிக்க வேண்டிய அளவானது பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும். அத்துடன் வாராவாரம் செய்வதற்காகக் கொடுக்கப்படும் வீட்டுப் பாடப் பயிற்சியே போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தலைவர்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
கொடுக்கப்பட்ட வாசிப்புப் பகுதி ஒவ்வொரு பாடத்தின் கருப்பொருளுக்கு ஒத்ததாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த வழிகாட்டி சிபாரிசு செய்யப்பட்ட வாசிப்புப் பாகங்களுக்காக ஒரு சிறிய கைப்புத்தகம் வெளியிட்ருக்கிறது. இவைகளும் சிபாரிசு செய்யப்பட்வைகளே தவிர கட்டாயமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைவரும் தன்னுடைய குழுவிற்கு வாசிககக் கொடுக்க வேண்டிய புத்தகங்களின் படியலை அவசியம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
மனப்பாட வசனம்  ஒவ்வொரு வாரத்திற்கும் வரப்போகும் வாரத்திற்குரிய பாடத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட இரண்டு மனப்பாட வசனங்களை வழிகாட்டி குறிப்பிட்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலைகளையும் பயிற்சி பெறுவோரின் திறமையையும் பொருத்து மனப்பாட வசனத்தை ஒன்று ஆகக் குறைக்கலாம். மனப்பாட வசனங்கள் கொடுக்கும் போது சில ஆலோசனைகள் பின்வருமாறு:-
மனப்பாட வசனங்களைத் தியான நேரத்தில் உபயோகிக்கலாம். அதே சமயம் தியான நேரத்தில் அதிகமான வேலை கொடுக்காதபடியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பயிற்சி பெறுவோர் மனப்பாட வசனங்களைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்கிக் கூறும்படி சொல்வதும் உதவியாக இருக்கும். பயிற்சி பெறுவோர் எவ்வளவு நன்றாக மனப்பாட வசனங்களைக் கொண்டு தியானம் செய்திருக்கிறார்கள் என்பதை சோதித்தறியவும் இது உதவியாக இருக்கும். தங்கள் குடும்பத்தாருடன் தினசரி உரையாடலின் போது இந்த மனப்பாட வசனங்களையும் எடுத்துக் கூறும்படி ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வது இந்த வசனங்களை மறந்து போகாமல் எப்போதும் மனதில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.
தியான நேரம்  ஒவ்வொரு வாரத்தின் தியான நேரத்திற்காக அடுத்த வாரத்திற்குரிய பாடம் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியை இந்த வழிகாட்டி தெரிந்தெடுத்திருக்கிறது. பயிற்சி பெறுவோர் அந்தப் பகுதியிலுள்ளவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவது பற்றி தியானம் செய்யும்படி கூற வேண்டும். தியானத்துக்கான பகுதி வேதாகமத்தின் எந்தப் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்படலாம் என்ற போதிலும் சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்தில் கதைகள் போன்ற பகுதிகளைத் (சரித்திரங்களைக் கூறும் புத்தகங்கள் சுவிசேஷங்களிலிருந்து) தெரிந்தெடுக்க சிபாரிசு செய்யப்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால் பயிற்சி பெறுவோரில் பலருக்கு இந்த வேளையில் தீர்க்கதரிசனப் புத்தங்கள் அல்லது நிரூபங்களை வாசித்துப் புரிந்துணருவது கடினமாக இருக்கும். ஒரு வாரத்தில் எத்தனை தியான நேரங்கள் கொடுக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு தலைவரையும பொருத்ததாக இருந்த போதிலும் வாரத்திற்கு 4-5 தியான நேரங்களை வைத்துக் கொள்வதுடன் அதில் ஒன்று 4வது வகையைச் சார்ந்ததாக இருப்பது பொருத்தமாக இருக்கும். கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தியானத்திற்குப் பதிலாக பயிற்சி பெறுவோர் ஞாயிறு அல்லது புதன் (வார நடுவில் ஆராதனை இருக்குமானால்) கிழமைகளில் ஆராதனையின் போது செய்யப்பட்ட பிரசங்கத்தின் சுருக்கத்தை தியானம் செய்யும் படி சொல்வது மற்றொரு ஆலோசனையாக இருக்கிறது. பயிற்சி பெறுவோர் தியானப் பகுதியை அவசரமாக வாசிப்பதுடன் முடித்து விடாமல் அந்த பகுதியைக் கொண்டு தாங்கள் செய்யும் தீர்மானங்களையும் அவற்றை செயல்படுத்தும் விதத்தையும் குறித்து கவனமாகச் சிந்திக்கவும் அவற்றைத் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் சரியானபடி செயல்படுத்தவும் அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தியானத்திற்குரிய பகுதியை அவர்கள் வாசித்து இந்த 4வது வகையான வாழ்க்கையில் செய்லபடுத்துதல் என்ற தியானத்தைச் செய்யும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
7. தலைவர்கள் தற்பரிசோதனை செய்வதற்கான பட்டியல்
தலைவர்கள் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளைக் குறிக்கோள் கண்காணிப்பு முறையில் மதிப்பீடு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பின்வரும் பட்டியல் சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களையும் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளையும் மதிப்பீடு செய்வதற்கு உதவியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீஷத்துவப் பயிற்சி பாடத்தையும் முடித்த பின்பு பின்வரும் பட்டியலின் படி தலைவர்கள் சுயமதிப்பீடு செய்தபின் தங்கள் பெலவீனங்களை அறிந்து அதற்கு ஈடு செய்வது சுய மேம்படுத்துதலுக்கு உதவியாக இருக்கும்.

(ப.22) தலைவரின் தற்பரிசோதனை பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுயமதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

1. மனத்தின் வரைபடத்தின் உபயோகம்
. இந்தப் பாடம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?
. பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் புரிந்துணந்திருந்தேனா?
. ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையேயும் கடந்து செல்லும்போது சுமூகமாக இருந்ததா?
2. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
. அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்) பொருத்தமானதாக இருந்ததா?
. நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?
3. கேள்வி
. நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
. பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
. (   ) தெளிவாக விபரமாக பதில் கூற வேண்டிய கேள்விகளையும் ஆம்-இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
. கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த கேள்விகளை நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
4. கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
. பயிற்சி பெறுவோர் விடையளிக்கும்போது நான் அனுதாபத்துடன் கேட்டு பொருத்தமான பாவனை சைகை குரலில் ஏற்றத் தாழ்வு  நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா?
. பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக ஒழுங்கு படித்தினேனா?
5. திறந்த மனப்பான்மை
. பயிற்சி பெறுவோரிடம் மனம் விட்டுப் பேசினேனா?
. பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை குணாதிசயம்  பற்றி வெளிப்படையாகப் பகிர்நது கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
. மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பீத்தேனா?
. பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களைப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?
6. ஊக்குவிப்பு
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
. பகிர்நது கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?
7. நேரத்தை நிர்வாகித்தல்
. ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தை ஒதுக்கினேனா? கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல்.
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?
8. பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்
. பரிசுத்த ஆவியானவரின் ஒயியூட்டித் தெளிவு படுத்துவதை நான் நாடித் தேடினேனா?
. பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையம் உள்ளத்தில் உணர்து அதின் படி செய்லபட்டேனா?
9. கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும் . பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
. பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டிறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம் செய்து சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?
10. பயிற்சி பெறுவரைப் புரிந்துணர்ந்து கொள்தல்
. பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
. இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும் ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?

1. அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி.
பயிற்சி பெறுவோர், தங்கள் ஜெப வாழ்க்கையில் கண்டு பிடிக்கும் ஏதாவது பிரச்சனைகளையும், இந்த வாரத்தில் தங்கள் ஜெப வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது மாற்றங்களையும் குறிப்பிட்டு எழுதி வைக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
2. வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்ட வேலைப் பகதி.
3. மனப்பாட வசனங்கள்
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:7
ஆகையால், பொல்லாதவர்களாகயி நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு, நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7:11
4. தியான நேரம்
எலியாவின் உத்தரவு அருளப்பட்ட ஜெபம். 1 இரலாஜாக்கள் 18:41-46

முறையான ஜெபம் எது?





முன்னுரை

1. மனதின் வரைபடம்
ஜெபம் ஒரு விசேஷமான சலுகை (1-4)

முறையான ஜெபம் எது? எப்படி ஜெபிப்பது (5-9)
- ஜெபத்தில் தவிர்க்க வேண்டிய இடற்குழிகள் - மாய்மாலமான ஜெபம் (5)
- தேவனை மகிழ்;விக்கும் ஜெபம்
- அந்தரங்கத்தில் ஜெபித்தல் (6, 7)
- உளராமல் தெளிவுடன் ஜெபித்தல் (8, 9)
ஜெபத்தில் அடங்கியுள்ளது (10-13)
- கர்த்தருடைய ஜெபம் (10)
- ஜெபத்தில் முதலிடம் (அல்லது முதன்மை) (11, 12)
- ஒருவருடைய ஜெபத்திற்கான விஷயங்களில் மாற்றம் செய்யத் தீர்மானம் (13)

2. நோக்கங்கள்
- ஜெபம், தேவனுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள் விசேஷமான சலுகை என்பதை உணர்ந்து கொள்வதற்கு
- ஜெபத்தில் ஒருவர் எளிதாக விழுந்து விடக் கூடிய ஆபத்தான இடற்குழிகள்.
- ஜெபத்தில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டியவற்றை முன் வைத்தல்
- தங்களுடைய ஜெப ஜீவியத்தின் மையமாகக் கொண்டதில் தேவையான திருத்தங்கள் செய்வதற்கு
3. துதி
4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்க்hக
- உலக முழுவதிலுமுள்ள ஊழியங்களுக்காக, உங்கள் தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காக, உங்களுடைய குறிப்பிட்ட சபைக்காக ஜெபிக்கவும்
- உங்கள் சபையின் குருவானவர்களுக்காக
- பயிற்சி பெறுவோருக்காக
- சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காக.
5. வீட்டுப் பாடப் பயிற்சியை சரிபார்த்தல்
வீட்டுப்பாடப் பயிற்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரமும், முறையும் ஒவ்வொரு தலைவரின் அனுமானத்தின்படி செய்யப்படலாம்.

1) தியான நேரம்
முயைhன ஜெபம் எது?
மத்தேயு 20:17-28

2) மனப்பாட வசனங்கள்
3) நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன்  பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத்தேயு 6:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரர்ததோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். பிலிப்பியர் 4:6-7


3) அன்றாடக வாழ்க்கை வீட்டுப்பாடப் பயிற்சி

4) வாசிக்கும்படியாகக் கொடுக்கப்பட்ட பகுதி


6. முன்னுரை
தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அவருடைய கிருபாசனத்தண்டை சேரக்கூடிய ஒரு சீரான ஜெப ஜீவியத்தைக் காட்டிலும் வேறே முக்கியத்துவம் வாய்ந்தது எதுவுமில்லை. ஜெபம் என்பது ஆத்துமாவுக்காக ‘சுவாசித்தல்’ என்று ஒருவர் கூறினார். இது ஜெபத்தின் முக்கியத்துவத்தை உளமுருக உணர்த்திக் கூறுகிறது. நாம் சுவாசிக்காமல் எப்படி ஜீவிக்க முடியாதோ, அது போல், ஜெபம் இல்லாமல் நமது ஆன்மீக வாழ்க்கையும் தொடர்ந்து நிலை நிறுத்த முடியாது. பின்வரும் வார்த்தைகளில் ‘கார்டன்’ என்பவர் நமது இருதயத்தில் நன்கு பதியத்தக்கதான புத்திமதி சொல்வதாவது: ‘இன்றைய உலகிலுள்ள மாமனிதர்கள் யாவரும் ஜெபிக்கிற மக்களாகவே இருக்கின்றனர். ஜெபத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் அல்லது ஜெபத்தில் நம்பிக்கை வைக்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் அல்லது ஜெபத்தைப் பற்றி விளக்கம் கூறுகிறவர்கள், இவர்களை நான் குறிப்பிடவில்லை. ஆனால், ஜெபிக்கும்படி நேரம் எடுத்துக் கொள்ளும் மக்களையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இவர்களுக்கும் நேரம் இல்லை. அந்த நேரம் வேறு எதிலிருந்தாவது எடுக்கப்பட வேண்டும். அந்த ‘வேறு எதிலிருந்து என்பது முக்கியம். அது ஜெபத்தைக் காட்டிலும் கூட முக்கியமானதாக இருக்கலாம். இருப்பினும், வாழ்க்கையில் உள்ள மற்ற செய்லதிட்டங்களைத் தொகுத்து, ஜெபத்தோடே அல்லது ஜெபத்திற்குப் பிறகோ அவற்றை செய்;து, இவ்வாறு ஜெபத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்களும் உள்ளனர்’ என்று கூறுகிறார்.


7. முன்னுரையின் சுருக்கம்
- ஜெபம் முக்கியமானதாக இருப்பதினால், அது சில நேரங்களி;ல், ’ஆத்துமாவுக்காக சுவாசித்தல் என்று குறிப்பிடப் படுகிறது.
- மிகச் சிறந்த கிறிஸ்தவர்கள், ஜெபிக்கும் மக்களாக இருக்கின்றனர்.
 ஜெபத்தைக் காட்டிலும் அதிக முக்கியமானதும் உடனடித் தேவையானதும் (மிக அவசரமானதும்) வேறு எதுவுமில்லை.

8. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
அளவில்லாத நேரமும், உதவியாளர்களும், பண உதவியும் உனக்குக் கொடுக்கப்பட்டால் அவற்றைக் கொண்டு நீ என்ன சாதிக்க விரும்புவாய்?
- இந்தக் கேள்வி, பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரின் தரிசனம் (தூர நோக்கு) குறித்து சற்றே அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கலாம். சிலர் எதிர்பாராத விடைகள் கூறலாம். பயிற்சி பெறுவோரில் சிலர் இந்தக் கேள்வி சிறிது கடினமாக இருப்பதாக உணரலாம். தலைவர்கள் தங்கள் உள்ளத்தி;ல் நிதானத்துடன், அமைதியாகப் பயிற்சி பெறுவோரை வழி நடத்த வேண்டும். ஒருவருடைய வாழ்வில் கொண்டுள்ள மிகப் பெரிய விருப்பம், எதுவாக இருந்தாலும், அது இயல்பாகவே அவருடைய ஜெபத்திலுள்ள மிகப் பெரிய விருப்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். பயிற்சி பெறுவோரின் விடைகளை முன்னுரையுடன் இயல்பாக இணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

9. நுழைவு கேள்வி.
ஒரு சரியான (முறையான) ஜெபம் எவற்றை அடக்கியுள்ளதாக இருக்கும் என்று நீ எண்ணுகிறாய்?
- ஜெபம் சரியானதாக இருப்பதற்கு தேவனை சரியானபடி அறிய வேண்டியது அவசியம். ஏனென்றால், நாம் ஜெபிப்பது தேவனிடம். நாம் அனைவரும் சேர்ந்து முதலாவது கேள்வியைப் பார்பப்போம்.

மையப் பகுதி

(குறிப்பு)
கேள்விகள் 1- 3 ஜெபத்தின் அவசியம் பற்றினதாக இருக்கிறது. ஜெபம் ஒரு விசேஷமான சலுகை என்பதை விசுவாசிகள் உணர்ந்திருப்பது குறித்து 4வது கேள்வி பேசுகிறது. எனினும் இந்தப் பிரிவின் மையம் 4-வது கேள்வியாக இருக்கிறது. கேள்விகள் 1-3 அல்ல. பயிற்சி பெறுவோரை வழி நடத்தும்போது, தலைவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.


(ஜெபம் ஒரு விசேஷமான சலுகை)

1. எபிரேயர் 4:14-16 - வசனங்களைக் குறைந்த பட்சம் 5 தடவைகளாவது வாசி. 16வது வசனத்தை மனப்பாடம் செய். இந்தப் பகுதியை சுருக்கமாக எழுது.

- பகுதியின் சுருக்கம்
வசனம் 14 - நமக்கு ஒரு மகா பிரதான ஆசாரியர் இருக்கிறார்.
வசனம் 15 - மகா பிரதான ஆசாரியர் நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிறார்.
வசனம் 16 - மகா பிரதான ஆசாரியரைக் குறித்து நமது மனப்பான்மை.

2. இயேசு நம்முடைய ‘மகா பிரதான ஆசாரியர், தற்சமயம் அவர் எங்கே வாசம் பண்ணுகிறார் (வச. 16)
- தேவன் கிருபாசனத்தில் அமர்ந்து கொண்டிருப்பதால் இயேசு கிருபாசனத்தைண்டை, கிருபாசனத்தின் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்று நாம் சொல்லலாம். எபிரெயர் 8:1
- நாம் கிருபாசனத்தண்டையில் கிட்டிச் சேரும் போது, ஜெபத்தின் மூலமாக நாம் என்னென்ன ஆசீர்வாதங்களையும் கிருபையையும் பெற்றுக் கொள்ள முடியும்?
- நாம் இரண்டு விதமான ஆசீர்வாதங்கள் அல்லது கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். ஒன்று, நாம் ஜெபித்த பின் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்கள், மற்றது ஜெபிக்கும் போது நாம் அனுபவித்து உணரும் தேவனுடைய கிருபை. முந்தினது பதிலளிக்கப்பட்ட ஜெபங்களுடன் தொடர்புள்ளது. பிந்தினது, நாம் ஜெபிக்கும் போது நமது மனப்பான்மைகள், எண்ணங்கள் அல்லது குணாதிசயத்தில் நாம் அனுபவித்தது உணரும் மாற்றங்களுடன் தொடர்புள்ளது.


3. வசனம் 16ல் உள்ள ‘ஆதலால் என்ற வார்த்தையைக் கவனிப்போம். ஜெபத்தில் நாம் இயேசுவையே பற்றிப் பிடித்துக் கொள்வதற்கு இது நமக்கு நல்ல அடித்தளமாக இருக்கிறது. வசனம் 15, 16ஐ இணைத்து ஆய்வு செய்து, ஏன் இவ்வாறு அமைந்துள்ளது என்று விளக்கிக் கூறு.

- இது நமது மகா பிரதான ஆசாரியராக இயேசுவினிமித்தமே.
- அவர் பிரதான ஆசாரியர் மட்டுமல்ல, மகா பிரதான ஆசாரியர்.
- அவர் நமது ஜெப விண்ணப்பங்களை அறிந்திருப்பது மட்டுமல்ல, நமது பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிறார்.
- எல்லா விதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் அவர் அதை மேற்கொண்டு பாவமில்லாதவராக இருக்கிறார். இப்படிப்பட்ட இயேசு நம்மை ஏற்றுக் கொண்டு அணைத்துக் கொண்டு எப்போதும் நமக்காக கிருபாசனத்தண்டையில் பேசிக் கொண்டு இருக்கும் போது நாம் எப்படி ஜெபிப்பதற்குத் தயங்கலாம்?
4. நமது ‘மகா பிரதான ஆசாரியர்’ அண்டையில் செல்வதற்கு ஜெபம் உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய சிலாக்கியம். எப்போதாவது நீ இந்த அரிய இலக்கியத்தை அசட்டை பண்ணி, உதாசீனம் செய்து, ஏனோ தானோவென்று ஒதுக்கி, அதினிமித்தமாக அறிவீனனாகவும், வறியவனாகவும் இருந்ததுண்டா?


என் ஜெபம் ஒரு விசேஷமான சலுகையாக இருக்கிறது?
- ராஜகுமாரர்கள் எப்படி எப்போதும் ராஜாவின் சமூகத்திற்கு முன் செல்ல முடியுமோ, அது போல் நாமும், இயேசு கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாக எந்த சமயத்திலும் தைரியமாகக் கிருபாசனத்தைண்டை கிட்டிச் சேர முடியும்.
ஜெபம் ஒரு விசேஷமான சலுகை என்ற உண்மை எப்படி நமக்கு உதவுகிறது?
- கடமைக்காகவோ அல்லது கட்டாயத்திற்காகவோ ஜெபிக்காமல், நாம் ஜெபத்தைக் குறித்து பெருமிதம் கொள்ளவும், சந்தோஷத்துடன் ஜெபிக்கவும் இந்த உண்மை நமக்கு உதவி செய்கிறது.

(ஜெபத்தில் தவிர்க்க வேண்டிய இடற்குழிகள்)

6. ஜெபிக்கும் போது நாம் பல இடற்குpழகளைத் தவிர்க்க வேண்டும். முதலாவதாகப் பரிசேயனின் ஜெபத்தை உதாரணமாகக் கொண்டு இயேசு என்ன எச்சரிப்புக் கொடுத்தார்? (மத்தேயு 6.5)
- மாயக்காரரைப் போல் மனுஷர் காணும் படியாக ஜெபம் பண்ண வேண்டாம். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், ‘நான் ஜெபிக்கும் மனிதன் என்று சொல்லித் தற்பெருமையடித்துக் கொள்ளக் கூடாது.
மாயக்காரன் என்பதின் பொருள் என்ன?
- இது முகமூடி அணிந்து கொண்டு நடிப்பது என்று பொருள்படும். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், இது, மாயக்காரர் உள்ளிருப்பதை ஒளித்து வைத்து, வெளிப்புறத்தில் தாங்கள் காண்பிக்க விரும்புவதைத் திட்டம் செய்து கொள்ளுகிறார்கள்.
- நம்மைப் பார்ப்பதற்கு யாரும் இல்லாத நேரத்திலும் கூட நாம் மாய்மாலக்காரராகப் போலி நடிப்பைக் காண்பிக்க முடியும் என்பதும் கவனத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி யாரும் இல்லாவிட்டாலும் கூட நாம் தற்பெருமையை நோக்கமாகக் கொண்டு ஜெபிப்போமானால், நாம் அவ்வாறு ஜெபிக்கிறோம் என்ற உண்மையினால், நாம் நமக்குள்ளாகவே ஜெபித்தாலும், மாய்மாலக்காரர் ஆகிறோம்.
நமது ஆன்மிக பயணத்தில் ஜெபம் தெய்வ பக்தியுள்ள காரியங்களுள் ஒன்றாக இருக்கிறது.
இருந்த போதிலும் ஜெபம் கூட மாய்மாலத்தினால் கறைப்படுத்தப்படக் கூடும் என்பதை இயேசு குறிப்பிடுகிறார். இதைக் குறித்து நீ எப்படி உணருகிறாய்?
மிகவும் பரிசுத்தமான செயல்கூட மிகவும் பரிசுத்தமற்ற செயலாகி விடலாம். இது நாம் எவ்வளவு எளிதாக மாய்மாலத்திற்குள் விழுந்து விடலாம் என்பதையும், தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமும் உண்மையுமாக இருக்க வேண்டியதை நாம் எவ்வளவு சீக்கிரமாக அசுத்தப்படுத்தக் கூடும் என்பதையும் காண்பிக்கிறது.

எந்ததெந்த குறிப்பிட்ட விதங்களில் பரிசேயர், மாயக்காரராக  இருந்தார்கள்?
- பரிசேயர் ஒரு நாளில் 3 தடவை முன்குறி;க்கப்பட்ட அதே நேரத்தில் ஜெபிப்பது வழக்கம். ஜெபத்துக்காகக் குறிக்கப்பட்டுள்ள ;ஒரு நேரத்தில் - அவர்கள் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்தாலும் அல்லது சந்தையில் பொருட்களைவ வாங்கி விற்றுக் கொண்டிருந்தாலும், பரிசேயர்  தாங்கள் செய்து கொண்டிருப்பது எதுவானாலும் அதை நிறுத்தி விட்டு, மக்கள் காணத்தக்க விதமாக ஜெபி;த்தார்ள். இவ்விதமாகப் பரிசேயர; தெய்வ பக்தியுள்ள மனிராக அறியப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தார்கள். எனினும், கடைசியில் மக்களிடமிருந்து வந்த இந்தப் பாராட்டு, மக்களால் காணப்படும் படியாகவும் தற்பெருமைக்காகவும் ஜெபிக்கும் மாய்மாலகாராக இவர்களை ஆக்கிவிட்டது.

(தேவனை மகிழ்விக்கும் ஜெபம்)

7. எப்படிப்பட்ட ஜெபத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்? (மத்தேயு 6:6-7)
-அந்தரங்கத்தில் ஜெபித்தல்: மனதில் தேவனை மட்டுமே நினைத்து ஜெபித்தல்.
- வீணான வார்த்தைகளை அலப்பாமல் ஜெபித்தல்: அதாவது உள்ளத்திலிருந்து உண்மையாக வராத வார்த்தைகளை அக்கறையின்றி சொல்லாமல், செய்கிற் ஜெபம்:

(குறிப்பு)
7வது கேள்வியைப் பின்வரும் இரண்டு துணைக் கேள்விகளாகப் பிரிப்பது நல்லது.
உன்னுடைய அறைவீடு என்பது எதைக் குறிக்கிறது, உன்னுடைய அறை வீடு எங்கே இருக்கிறது? கேள்வியை மேற்கண்டவாறு பிரிப்பது வழி முறையை எளிதாக்க உதவி செய்கிறது.


7. ‘அறை வீடு’ எதைக் குறிப்பிடுகிறது? உன்னுடைய அறை வீட்டை நீ விவரிக்க முடியுமா?

- அறை வீடு என்பது ஒரு உண்மையான அறை என்பது அல்ல. அது, ஒருவர் தேவனோடு ஏகாந்தமாய் தொடர்பு கொள்ளக் கூடிய சூழ்நிலையையே குறிக்கறது. தேவனை மையமாகக் கொண்டு மற்றவர்களால் உங்கள் கவனம் சிதறாமலும் பிறர் இருப்பதைப் பொருட்படுத்தாமலும் ஜெபிக்கக் கூடுமானால், ஒரு மக்கள் கூட்டம் நிறைந்த இடம் கூட உங்களுடைய அறை வீடாகலாம்.
அறை வீட்டில் அந்தரங்க ஜெபத்தின் ஆசீர்வ்hதங்களை நீ அறிந்து அனுபவித்திருக்கிறாயா?
- பயிற்சி பெறுவோர் அறை வீட்டில் அந்தரங்கமாக தேவனை நோக்கி ஜெபிப்பதின் மகிழ்ச்சையை அறிந்து கொள்ள வேண்டுமென்று பயிற்சிபெறுவோருடன் சேர்ந்து ஜெபிக்கவும்.

8. அஞ்ஞானிகளைப்; போல வீண் வார்த்தைகளை அலப்புவது’ அல்லது ‘அதிக வசனிப்பு இவைகளின் அர்த்தம் என்ன என்று நீ நினைக்கிறாய்?
இது அர்த்தமற்ற வெறும் வார்த்தைகளை அக்கறையின்றி யோசிக்காமல் கூறுவது.


ஏதோ ஒன்றுக்காகத் திரும்பத் திரும்ப ஜெபிப்பது வீண் வார்த்தைகளை அலப்புவதாகுமா?
- ஏதோ ஒன்றுக்காகத் திரும்பத் திரும்ப ஜெபிப்பது, ஜெபிப்பதில் வீண் வார்த்தைகளை அலப்புவதல்ல. உதாரணமாக கெத்செமனே தோட்டத்தில் இயேசு மறுமபடியும் மறுபடியும் ஜெபம் பண்ணினார். பிரச்சனை என்னவென்றால், ஒருவர் ஜெபம் செய்வதை தேவனுடன் தனிப்பட்ட ஐக்கியம் கொள்வதென்று கருதாமல், ஏதோ மந்திரம் ஓதுவது போல் ஜெபிக்கும் போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது.
ஒரு நீண்ட ஜெபம் வீணான வார்த்தைகளை அலப்புகிற ஜெபமா?
- அதிக நீளமான ஜெபங்கள் எப்பொழுதுமே வீண் வார்த்தைகளை அலப்புகிற ஜெபமாக இருக்கத் தேவையில்லை. உதாரணமாக வனாந்திரத்தில் 40 நாள் உபவாசத்தின்போது இயேசுவின் ஜெபங்கள் பெரும்பாலும் நிச்சயமாக நீண்ட ஜெபங்களாகவே இருந்திருக்கும். ஆனால், அவை வீண் வார்த்தைகளை அலம்பபுகிற ஜெபமாக இல்லை. ஆனால் ஒருவர், தாம் செய்யும் நீண்ட ஜெபம், தாம் விரும்புவதைத் தேவன் செய்யும்படி அவரைத் தூண்டலாம் என்ற எண்ணத்துடன் செய்யும் போது அந்த நீண்ட ஜெபம் வீண் வார்த்தைகளால் அலப்பும் ஜெபமாகி விடும்.

(குறிப்பு)
முன்பு பார்த்தது போல், வீணான வார்த்தைகளை அலப்பி, தெளிவின்றி செய்யப்படும் ஜெபத்தைக் குறித்து நீண்ட விவாதம் அல்லது தர்க்கம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடாமல் இருக்கும்படி கவனமாக இருக்க வேண்டும். அன்று செய்யப்பட்ட அலப்புகிற ஜெபம் முக்கியம் அல்ல. ஆனால் இன்று தெளிவின்றி வீணான வார்த்தைகளை அலப்புகிற ஜெபம் என்பது என்ன என்பதுதான் முக்கியம். இது போன்ற எந்தெந்த வகையான ஜெபத்தை நாம் இன்று தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வண்டும்.

9. உன்னுடைய ஜெபத்தில் நீ எப்போதாவது, சற்றும் சிந்தியாமல் அர்த்தமற்ற வீணான வார்த்தைகளைக் கூறியிருக்கிறாயா?
- வீணான வார்த்தைகள் அல்லது அர்த்தமற்ற வார்த்தைகளை எளிதாகக் கூறி ஜெபி;;;;க்கக்கூடிய ஜெபத்திற்கு உதாரணங்கள் கொடு.
- நாம் அடிக்கடி, ‘தேவனே நாங்கள் உம்மில் அன்பு கூறுகிறோம், ’நாங்கள் பாவிகள்’ என்று ஜெபிக்கிறோம். இது போன்று நாம் தனி ஜெபத்திலும், பொதுவான ஜெபத்திலும் உபயோகிக்கும் மற்றும் பல சொற்றொடர்கள் உள்ளன. இந்த வார்த்தைகளை ஏதோ வழக்கமாகக் கூறுவது போல் உபயோகிக்காதபடி நாம் கவனமாக இருக்க வேண்டு;ம்.
- பிரசங்கி 5:2-இருந்து வீண் வார்த்கைளை அலப்பாமல் ஜெபிப்பது பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
- நமது இருதயங்களிலிருந்து ஜெபிக்க வேண்டும்.
- நாம் ஜெபிக்கும் போது கூறும் வார்த்தைகளைக் கவனத்துடன தெரிந்தெடுக்க வேண்டும்.

(ஜெபத்தின் பொருளடக்கம்: கர்த்தருடைய ஜெபம்)

10. ஜெபிக்கும் போது நாம் எதைத் தேட வேண்டும் என்பதைக் கர்த்தருடைய ஜெபம் நமக்குக் கற்பிக்கிறது. மத்தேயு 6:9-14 வசனங்களை வாசித்து, ஜெபத்தில் முதன்மையானவைகள் எவை என்பதைக் கவனிப்போம்.

தேவனடைய மகிமைக்காக நாம் முதலில் தேட வேண்டிய மூனறு காரியங்கள்
- தேவனுடைய ராஜ்யத்தைத் தேட வேண்டும்.
- தேவனுடைய நாமம் பரிசுத்தப் படுவதைத் தேட வேண்டும்.
- தேவனுடைய சித்தம் நிறைவேறுவதைத் தேட வேண்டும்.
நமது தேவைகளுக்காக ஜெபிப்பதற்கு முன்பாக தேவனுடைய மகிமைக்கான ஜெபம் வருகிறது என்ற உண்மை எதைத் தெரிவிக்கிறது,
 நமது தேவைகளுக்கான ஜெபத்தைக் காட்டிலும் தேவனுடைய மகிமைக்காக ஜெபிப்பது அதிக பட்சமான முதன்மையுடையதாக இருக்கிறது.
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்பதின் அர்த்தம் என்ன?
தேவனுடைய நாமம் அவருடைய குணாதிசயத்தையும், அவர் யார் என்பதையும் குறிக்கிறது. பரிசுத்தப்படுவதாக’ என்பது பிரித்தலைக் குறிக்கிறது (தனித்திருத்தல்)
எனவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்பது, மனித அறிவுக்கு அப்பாற்பட்டவராக, சிருஷ்டி;க்கப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து தனித்து நிற்பவராக இருக்கும் தேவனை ஆராதனை செய்யவும், சேவிக்கவும் வாஞ்சிக்கிற ஜெபமாக இருக்கிறது. அவருடைய நாமத்துக்கு உரியதான மகிமை அவருக்குக் கொடுக்கப் படவேண்டுமென்று ஜெபிப்பதாக இருக்கிறது.

(குறிப்பு)
இந்தப் பகுதி ஜெபத்தில் அடங்கியுள்ளவற்றையும், முதன்மையானவைகளையும் பற்றிக் கூறுகிறது. இருந்த போதிலும் இந்தப் பகுதியின் ஜெபத்தில் உள்ள முதன்மையானவைகளைப் பற்றிப் பார்ப்பதே, ஜெபத்தில் அடங்கியுள்ளவற்றைப் பற்றிப் பார்ப்பதைக் காட்டிலும் அதிக முக்கியமானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜெபத்தில் அடங்கியுள்ள ஏழு குறிப்புகளையும் பற்றி கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் ஆராய்ந்து அறிந்து கொள்வ்து கடினமாக இருக்கலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

’உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்பதின் அர்த்தம் என்ன?
 ராஜ்யம் என்பது ஒரு பிரதேசம் அல்லது அரசாட்சியைக் குறிக்கிறது. அது போலவே, கர்த்தருடைய ஜெபமும் இந்த உலகில் பரவ வேண்டிய தேவனுடைய ஆளுகையின் கீழ் அடங்கும் பிரதேசத்தைக் குறிக்கலாம். அல்லது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையின் மேலும் செலுத்தப்படும் தேவனுடைய ஆளுகை என்பதைக் குறிக்கலாம். சுருக்கமாகக் கூறுவோமானால் இது தேவனுடைய ஆட்சியும் அரசாங்கமும் வருவதைத் தேடும் ஒரு ஜெபமாக இருக்கிறது.

‘உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதாக’ என்பதின் அர்த்தம் என்ன?
 தேவனுடைய சித்தம் தேவனுடைய திட்டங்களையும் அவர் கிருபையாய் அருளுவதையும் குறிக்கிறது. எனவே, தேவனுடைய சித்தம் நிறைவேறுவதற்காக ஜெபிப்பது, தேவனுடைய சித்தத்திற்கு முரண்பட்டதாக இருக்கும் மனிதனின் சித்தம் நிறைவேற வேண்டாம் என்று ஜெபிப்பதற்கவும் பொருள்படும். இதன்படியாக தேவனுடைய சித்தம் நிறைவேறும்படி ஜெபிப்பது என்பது தேவனுடைய திட்டமும் எண்ணங்களும், தேவனுடைய முறைகளும் வழிகளும், தேவன் குறிக்கும் நேரமும் சகலத்தையும் மேற்கொண்டு வெற்றி பெறும் என்று பொருள்படும். இந்த மூன்று ஜெபங்களும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை என்பதை மனதில் வைத்துக் கொள். தேவனுடைய ராஜ்யம் எங்கே வருகிறதோ அங்கே அவருடைய நாமம் பரிசுத்தப்படுகிறது. அவருடைய சித்தம் செய்யப்படுகிறது.

அடுத்து, நமது தேவைகளுக்காகத் தேட வேண்டிய நான்கு காரியங்கள்.
- நமது அன்றாடக அப்பத்துக்காக
- மன்னிப்புக்காக
- சோதனைக்குள் பிரவேசிக்கப்படாமலிருக்க
- தீமையிலிருந்து நம்மை; இரட்சி;த்துக் கொள்ள்

நமது தேவைகளுக்கான நான்கு ஜெபங்களில் ஒரு ஜெபம் பொருள் அல்லது சரீரப் பிரகாரமான தேவைகளுக்காகவும், மூன்று ஜெபங்கள் நமது ஆன்மீகத் தேவைகளுக்காகவும் உள்ளன என்பதன் பொருள் என்ன? நமது சரீரப் பிரகாரமான தேவைளுக்கு மேலாக, நமது ஆத்துமப் பிரகாரமான தேவைகளுக்கு நமது ஜெபத்தில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இது சிறப்பித்துக் காட்டுகிறது.

அன்றன்றுள்ள அப்பத்துக்காக நாம் ஜெபிப்பது உணவுக்காக மட்டுமா?
- மூல பாஷையான கிரேக்க மொழியில் அப்பம் என்பது உணவை மட்டும் குறிக்கவில்லை. நமது அன்றாடக அப்பத்துக்காக ஜெபிப்பது, தேவனிடம் நமது அன்றாடகத் தேவைகள் அனைத்தையும் கொடுத்தருளுமாறு வேண்டிக் கொள்வதாகும்.
அன்றாடக அப்பத்துக்காக நாம் ஜெபிப்பதின் காரணம் என்ன?
- அன்றாடம் என்பது ‘ஒரு நாளுக்கு’ தேவைப்படுபவைகள் எல்லாம் என்று பொருள் படும். வேறு வார்த்தைகளில் கூறினால், அந்தந்த நாளுக்கு நமக்குத் தேவையானவற்றை நாம் கேட்க வேண்டும். ஆகையால், இந்த ஜெபம் சுய கட்டொழுங்கு, பேராசையின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுகிறது. ஏனென்றால், நம்மில் அநேகர் நம்முடைய அன்றாடகத் தேவைகளுக்கு அதிகமாகவே விரும்பிக் கேட்கிறோம்.
’எங்கள் கடன்களை (எங்கள் குற்றங்களை)எங்களுக்கு மன்னியும்’ என்பதன் அர்த்தம் என்ன?
- இந்த ஜெபம், நாம் இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தாலும் கூட, இன்னமும் தினந்தோறும் பாவம் செய்கிறோம் என்பதை முன்னதாகவே யூகித்து ஏற்றுக் கொள்ளுகிறது. வேறு வார்த்தைகளில் கூறப் போனால், இது நமக்குத் தொடர்ந்து அனுதினமும் தேவனுடைய மன்னிப்பு தேவைப்படுகிறது என்று பொருள்படுகிறது.
’எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாதேயும்’ என்பதின் அர்த்தம் என்ன?
- இது எந்த சோதனையும் இல்லாமலிருக்க வேண்டும் என்றோ அல்லது நாம் ஒரு போதும் சோதிக்கப்படக் கூடாது என்றோ கேட்டுக் கொள்ளும் ஜெபம் அல்ல. இதற்குப் பதிலாக, நமக்குள்ளாக இருக்கும் இயல்பான பாவ சுபாவம் நம்மைச் சோதனைக்குள் பிரவேசிக்கும்படி வழி நடத்தவோ அல்லது சோதனைக்குள் விழச் செய்யவோ கூடாது என்று வேண்டிக் கொள்ளும் ஜெபமாக இருக்கிறது.
’எங்களைத் தீமையினின்று (சாத்தானிடமிருந்து) இரட்சித்துக் கொள்ளும்’ என்பதின் அர்த்தம் என்ன?
 பொல்லாங்கன் என்பது சாத்தானைக் குறிக்கும். இவ்வாறு பொல்லாங்கனிடமிருந்து இரட்சிக்கும்படி ஜெபிப்பது, சாத்தான் நம்மை வசப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்படும்படி ஜெபிப்பதாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் அது ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் வெற்றி கொள்ளும்படி வேண்டிக் கொள்ளும் ஜெபமாகும்.


11 உன்னுடைய ஜெபத்தில் நீ அதிகப்பட்சமான அக்கறை காண்பிப்பது எதில்? வேறு வார்த்தைகளில் கூறப்போனால், இது நீ ஜெபிக்கும் போது நாடித் தேடுகிற மிக முக்கியமான காரியம் எது?
 கர்த்தருடைய ஜெபத்தில் இரண்டு முதன்மையான காரியங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
முதலாவது, நமது தேவைகளைக் காட்டிலும் அதிகமாக நாம் தேவனுடைய மகிமையைத் தேட வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய சரீரப் பிரகாரமான தேவைகளுக்கு மேலாக நமது ஆவிக்குரிய பிரகாரமான தேவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.


12. உன்னுடைய ஜெபத்தில் நீ அக்கறை காட்டும் காரியங்களை இயேசு கற்பித்த காரியங்களுடன் ஒப்பிட்டுப் பார்.
- ஜெபத்தில் நாம் தேடும் நமக்கு முதன்மையானவற்றை கார்த்தருடைய ஜெபத்திலுள்ள முதன்மையானவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நம்மில் அநேகர், தேவனுடைய மகிமைக்கு மேலாக நமது தேவைகளுக்கு முதலிடம் கொடுத்திருக்கிறோம் என்பதை கண்டு கொள்வோம். மேலும், நமக்காக ஜெபிப்பதிலும் கூட நமது ஆன்மீகத் தேவைகளுக்கு மேலாக சரீரதத்திற்கான தேவைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கிறோம்.


13. இயேசு கற்பித்த ஜெபத்தைக் கற்றுக் கொண்டபின், இப்போது உன்னுடைய ஜெபத்தைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை நீ உணருகிறாயா? அவ்வாறு உணருவாயானால், அவைகளை எவ்விதத்திமாகத் திருத்திக் கொள்வாய்?
 நீண்ட ஜெபம் செய்வது முக்கியமல்ல. ஆனால், சரியான முறையில் நன்றாக ஜெபிப்பதே முக்கியம் என்று ஒரு முறை குறிப்பிடு. வேறு வார்த்தைகளில் கூறப்போனால், ஜெபத்தின் நீளம் முக்கியம் அல்ல. ஆனால், ஜெபத்தில் அடங்கியுள்ள பொருளே முக்கியமாகும்.


முடிவுரை

1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தைச் சுருக்கமாக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதயங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும்படி உதவி செய்ய வேண்டும்.

2. தீர்மானங்களும் செய்லபடுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும் படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. செய்லபடுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்;து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றைச் செய்லபடுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப்படி பகிர்ந்;து கொள்ள வேண்டும்,.

4. முடிவில் துதி செலுத்துதல்.



5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டி, தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
- அவர்களுடைய குணமும் வாழ்க்கையிம் முற்றிலும் மாற்றம் அடைவதற்கு செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்க்கையையும் பரிசுத்த ஆவியானவர் மாற்றும்படி ஜெபிக்கவும்.

6. வீட்டுப் பாடப் பயிற்சி
வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டுப் பாடப் பயிற்சிகள் யாவும் உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொரு தலைவரின் குறிக்கோள்கள் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலை குழுவிலுள்ள பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தக்கதாக வீட்டுப்பாட பயிற்சியின் அளவை நிர்ணயிக்கலாம். ஒவ்வொருவரின் ஆற்றல் திறன் குடும்ப சூழ்நிலை ஆகியவை வேறுபட்டவையாக இருக்கும். விவேகமுள்ள தலைவர் தமது அறிவாற்றலை உபயோகித்து வீட்டுப்பாட பய்றிசியின் அளவைத் திட்டம் பண்ணலாம்.

அ) தினசரி வாழ்க்கையின் வீட்டுப்பாடம் பயிற்சி
தினசரி வாழ்க்கையின் பயிற்சியானது பயிற்சி பெறுவோர் தாங்கள் கற்ற உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த உதவி செய்யும் படி ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே இருக்கிறது. தலைவரின் வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாட பயிற்சி ஒவ்வொரு பாடத்தின் மையமான கருத்தை மனதில் கொண்டு தெளிவாக முறைப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவரும் தமது சிறிய குழுவின் தனிப்பட் சூழ்நிலைகள் தேவைகளுக்குப் பொருத்தமான வேறு வீட்டுப்பாட பயிற்சியையும் கொடுக்கலாம். வீட்டுப்பாட பயிற்சியானது ஒவ்வொது பாடத்தின் கருப்பொருளையும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆ) வாசிக்கும்படி கொடுக்கப்பட்டிடி வேலை.
வாசிப்புக்கான பகுதிகளைக் கொடுக்கும் போது தலைவர்கள் 3 விதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாசிக்கும் படியாகப் பயிற்சி கொடுப்பது வழிகாட்டியிலுள்ள பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொளவ்தற்குக் கூடுதலான ஒரு கருவி மட்டுமே. வழிகாட்டியிலுள்ள பாடல்களை விவரித்துக் கூறும் போது போதுமான அளவு சொல்லாமல் விட்டுவிடும் தவறைத் தலைவர்கள் செய்யக் கூடாது. முக்கியமாகப் பாடத்திற்குப் பதிலாக வாசிப்புப் பயிற்சியைக் கொடுத்து விடலாமே எனும் ஒரு சோதனையான எண்ணம் பல தலைவர்களுக்கு ஏற்படலாம்.
அதிகப்படியாக வாசிக்கும் பகுதியைக் கொடுப்பது எப்போதும் ஒரு நல்ல யோசனை அல்ல. வாசிக்க வேண்டிய அளவானது பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும். அத்துடன் வாராவாரம் செய்வதற்காகக் கொடுக்கப்படும் வீட்டுப் பாடப் பயிற்சியே போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தலைவர்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
கொடுக்கப்பட்ட வாசிப்புப் பகுதி ஒவ்வொரு பாடத்தின் கருப்பொருளுக்கு ஒத்ததாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த வழிகாட்டி சிபாரிசு செய்யப்பட்ட வாசிப்புப் பாகங்களுக்காக ஒரு சிறிய கைப்புத்தகம் வெளியிட்ருக்கிறது. இவைகளும் சிபாரிசு செய்யப்பட்வைகளே தவிர கட்டாயமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைவரும் தன்னுடைய குழுவிற்கு வாசிககக் கொடுக்க வேண்டிய புத்தகங்களின் படியலை அவசியம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
மனப்பாட வசனம்  ஒவ்வொரு வாரத்திற்கும் வரப்போகும் வாரத்திற்குரிய பாடத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட இரண்டு மனப்பாட வசனங்களை வழிகாட்டி குறிப்பிட்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலைகளையும் பயிற்சி பெறுவோரின் திறமையையும் பொருத்து மனப்பாட வசனத்தை ஒன்று ஆகக் குறைக்கலாம். மனப்பாட வசனங்கள் கொடுக்கும் போது சில ஆலோசனைகள் பின்வருமாறு:-
மனப்பாட வசனங்களைத் தியான நேரத்தில் உபயோகிக்கலாம். அதே சமயம் தியான நேரத்தில் அதிகமான வேலை கொடுக்காதபடியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பயிற்சி பெறுவோர் மனப்பாட வசனங்களைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்கிக் கூறும்படி சொல்வதும் உதவியாக இருக்கும். பயிற்சி பெறுவோர் எவ்வளவு நன்றாக மனப்பாட வசனங்களைக் கொண்டு தியானம் செய்திருக்கிறார்கள் என்பதை சோதித்தறியவும் இது உதவியாக இருக்கும். தங்கள் குடும்பத்தாருடன் தினசரி உரையாடலின் போது இந்த மனப்பாட வசனங்களையும் எடுத்துக் கூறும்படி ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வது இந்த வசனங்களை மறந்து போகாமல் எப்போதும் மனதில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.
தியான நேரம்  ஒவ்வொரு வாரத்தின் தியான நேரத்திற்காக அடுத்த வாரத்திற்குரிய பாடம் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியை இந்தத் வழிகாட்டி தெரிந்தெடுத்திருக்கிறது. பயிற்சி பெறுவோர் அந்தப் பகுதியிலுள்ளவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவது பற்றி தியானம் செய்யும்படி கூற வேண்டும். தியானத்திதுக்கான பகுதி வேதாகமத்தின் எந்தப் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்படலாம் என்ற போதிலும் சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்தில் கதைகள் போன்ற பகுதிகளைத் (சரித்திரங்களைக் கூறும் புத்தகங்கள் சுவிசேஷங்களிலிருந்து) தெரிந்தெடுக்க சிபாரிசு செய்யப்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால் பயிற்சி வெறுவோரில் பலருக்கு இந்த வேளையில் தீர்க்கதரிசனப் புத்தங்கள் அல்லது நிரூபங்களை வாசித்துப் புரிந்துணருவது கடினமாக இருக்கும். ஒரு வாரத்தில் எத்தனை தியான நேரங்கள் கொடுக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு தலைவரையும பொருத்ததாக இருந்த போதிலும் வாரத்திற்கு 4-5 தியான நேரங்களை வைத்துக் கொள்வதுடன் அதில் ஒன்று 4வது வகையைச் சார்ந்ததாக இருப்பது பொருத்தமாக இருக்கும். கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தியானத்திற்குப் பதிலாக பயிற்சி பெறுவோர் ஞாயிறு அல்லது புதன் (வார நடுவில் ஆராதனை இருக்குமானால்) கிழமைகளில் ஆராதனையின் போது செய்யப்ட்ட பிரசங்கத்தின் சுருக்கத்தை தியானம் செய்யும் படி சொல்வது மற்றொரு ஆலோசனையாக இருக்கிறது. பயிற்சி பெறுவோர் தியானப் பகுதியை அவசரமாக வாசிப்பதுடன் முடித்து விடாமல் அந்த பகுதியைக் கொண்டு தாங்கள் செய்யும் தீர்மானங்களையும் அவற்றை செயல்படுத்தும் விதத்தையும் குறித்து கவனமாகச் சிந்திக்கவும் அவற்றைத் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் சரியானபடி செயல்படுத்தவும் அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தியானத்திற்குரிய பகுதியை அவர்கள் வாசித்து இந்த 4வது வகையான வாழ்க்கையில் செய்லபடுத்துதல் என்ற தியானத்தைச் செய்யும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
7. தலைவர்கள் தற்பரிசோதனை செய்வதற்கான பட்டியல்
தலைவர்கள் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளைக் குறிக்கோள் கண்காணிப்பு முறையில் மதிப்பீடு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பின்வரும் பட்டியல் சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களையும் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளையும் மதிப்பீடு செய்வதற்கு உதவியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீஷத்துவப் பயிற்சி பாடத்தையும் முடித்த பின்பு பின்வரும் பட்டியலின் படி தலைவர்கள் சுயமதிப்பீடு செய்தபின் தங்கள் பெலவீனங்களை அறிந்து அதற்கு ஈடு செய்வது சுய மேம்படுத்துதலுக்கு உதவியாக இருக்கும்.

(ப.22) தலைவரின் தற்பரிசோதனை பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுயமதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

1. மனத்தின் வரைபடத்தின் உபயோகம்
. இந்தப் பாடம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?
. பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் புரிந்துணந்திருந்தேனா?
. ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையேயும் கடந்து செல்லும்போது சுமூகமாக இருந்ததா?
2. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
. அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்) பொருத்தமானதாக இருந்ததா?
. நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?
3. கேள்வி
. நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
. பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
. (   ) தெளிவாக விபரமாக பதில் கூற வேண்டிய கேள்விகளையும் ஆம்-இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
. கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த கேள்விகளை நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
4. கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
. பயிற்சி பெறுவோர் விடையளிக்கும்போது நான் அனுதாபத்துடன் கேட்டு பொருத்தமான பாவனை சைகை குரலில் ஏற்றத் தாழ்வு  நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா?
. பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக ஒழுங்கு படித்தினேனா?
5. திறந்த மனப்பான்மை
. பயிற்சி பெறுவோரிடம் மனம் விட்டுப் பேசினேனா?
. பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை குணாதிசயம்  பற்றி வெளிப்படையாகப் பகிர்நது கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
. மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பீத்தேனா?
. பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களைப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?
6. ஊக்குவிப்பு
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
. பகிர்நது கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?
7. நேரத்தை நிர்வாகித்தல்
. ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தை ஒதுக்கினேனா? கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல்.
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?
8. பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்
. பரிசுத்த ஆவியானவரின் ஒயியூட்டித் தெளிவு படுத்துவதை நான் நாடித் தேடினேனா?
. பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையம் உள்ளத்தில் உணர்து அதின் படி செய்லபட்டேனா?
9. கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும் . பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
. பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டிறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம் செய்து சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?
10. பயிற்சி பெறுவரைப் புரிந்துணர்ந்து கொள்தல்
. பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
. இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும் ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?

1. அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி.
பயிற்சி பெறுவோர், தங்கள் ஜெப வாழ்க்கையில் கண்டு பிடிக்கும் ஏதாவது பிரச்சனைகளையும், இந்த வாரத்தில் தங்கள் ஜெப வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது மாற்றங்களையும் குறிப்பிட்டு எழுதி வைக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
2. வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்ட வேலைப் பகதி.
3. மனப்பாட வசனங்கள்
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:7
ஆகையால், பொல்லாதவர்களாகயி நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு, நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7:11
4. தியான நேரம்
எலியாவின் உத்தரவு அருளப்பட்ட ஜெபம். 1 இரலாஜாக்கள் 18:41-46

பாடம் 4: ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமான தேவனுடைய வார்த்தை





முன்னுரை

1. மனதின் வரைபடம்


ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமான தேவனுடைய வார்த்தை
- வேதாகமம் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை (1)
- வேதாகமத்தை நமக்குக் கொடுப்பதில் தேவனுடைய இரண்டு நோக்கங்கள் (2-8)
- இரண்டு நோக்கங்கள் முழுமையாக்கப்படுதல் (2-6)
- பூரணப்படுத்தப்படுதல் - இவற்றின் அர்த்தம் (7-8)
தேவதாகமத்தின் நான்கு கிரியைகள் (9-11)
- நான்கு கிரியைகள் (9)
- அதிகமாக அனுபவத்தில் அறியப்படும் கிரியை (10)
- வார்த்தையினால் கடிந்து கொள்ளப்படும்போது நீ சரியான முறையில் செயலளவில் பிரதியுத்தரம் கொடுக்கிறாயா? (11)

2. நோக்கங்கள்
- வேதாகமம் ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமானது என்பதைப் புரிந்துணர்ந்து கொள்வதற்கு
- வேதாகமத்தின் நோக்கங்களையும் கிரியைகளையும் புரிந்து கொள்வதற்கு.
- வேதத்தை வாசிப்பதில் உறுதியாய் இருக்க அதின் போதனைகள், கடிந்து கொள்ளும், சீர்திருத்தல், நீதியைப் படிப்பிக்குதல் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருக்க.

3. துதி
4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்காக
- உலக முழுவதிலுமுள்ள ஊழியங்களுக்காக, உங்கள் தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காக, உங்களுடைய குறிப்பிட்ட சபைக்காக ஜெபிக்கவும்
- உங்கள் சபையின் குருவானவர்களுக்காக
- பயிற்சி பெறுவோருக்காக
- சீஷத்துவப் பயிற்சியின் பாட நேரத்திற்காக

5. வீட்டுப பாடப் பயிற்சியை சரி பார்த்தல்
வீட்டுப்பாடப் பயிற்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரமும் முறையும் ஒவ்வொரு தலைவரின் அனுமானத்தின்படி செய்யப்படலாம்.


1) தியான நேரம்
விதைக்கிறவனின் உவமை
மத்தேயு 13:1-13


2) மனப்பாட வசனங்கள்
‘வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும், பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” 2 தீமோத்தேயு 3:16,17

‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது”. ரோமர் 1:16

3) அன்றாடக வாழ்க்கை வீட்டுப்பாடப் பயிற்சி

4) வாசிக்கும் படியாகக் கொடுக்கப்ட்ட பகுதி



6. முன்னுரை
உலகத்திலுள்ள புத்தகங்கள் எல்லாமே, காலப் போக்கில் உயிரற்றதாகி விடுகின்றன. முதல் தரமான தலை சிறந்த படைப்பும் கூட அதனுடைய உன்னத காலத்தில் மட்டுமே ஓரளவிற்கு உண்மையாகவும், சிறிதளவே உள்ளத்தைக் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டுப பார்க்கும் போது, வேதாகமம், காலத்தையும் கடந்து உயிருள்ள வார்த்தையாக நிலைத்திருக்கிறது. இந்த உண்மைக்கு வேதாகமம் தன்னில் தானே சாட்சியாக இருப்பது மட்டுமல்லல,, இந்த நிஜனமான உலகத்திலுள்ள எண்ணற்ற நிகழ்வுகளும் இவ்வுண்மைக்கு சாட்சிகளாக இருக்கின்றன. வேதாகமத்தின் அழியாத சத்தியத்தை நாம் முற்றிலுமாக கிரகித்துக் கொள்ளாவிட்டால், புதிய ஏற்பாட்டுக் காலத்திலிருந்த சதுசேயர், பரிசேயரைப் போல் நாமும் தேவனுடைய வார்த்தையையும் அதின் வல்லமையையும் தவறாகப் புரிந்து கொள்ளுவோம் என்பது வருந்தத் தக்கது. தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ள கிரியை செய்கிறதுமானது என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்துவோமாக. இது எப்படிப்பட்ட அதிசயமான கண்டுபிடிப்பும் ஆசீர்வாதமுமாக இருக்கிறது.


7. முன்னுரையின் சுருக்கம்
- உலகத்திலுள்ள மற்ற எல்லாப் புததகங்களிலிமிருந்து வேதாகமம் வேறுபட்டதாக இருக்கிறது.
- வேதாகமம் ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமானது.
- வேதாகமம் ஜீவிக்கிறதும் கிரியை செய்கிறதுமாக இருக்கிறது என்ற உண்மையைக் குறித்து கிறிஸ்தவர்கள் திட நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.


8. நுழைவுக் கேள்வி
கேள்வி 1க்கு நேராகச் செல்லவும்

மையப் பகுதி
(வேதாகமம் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை)

1. எபிரெயர் 4:12-13 வேதாகமத்தை எப்படி விவரிக்கிறது?
- தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

- வேதாகமம் ஜீவனும் வல்லமையும் உள்ளது என்று சொல்வதின் அர்த்தம் என்ன?
வேதாகமம் மக்களுக்கு ஜீவனைக் கொடுத்து அவர்களை முற்றிலும் மாற்றுகிறது என்பதினால், வேதாகமம் மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபட்டது என்று பொருள்படும். வேதாகமம் ஜீவனுள்ளதாக இருப்பதால் அது மக்களுக்கு ஜீவனைக் கொடுக்க முடியும். வேதாகமம் வல்லமையுடையதாக இருப்பதினால் அது மக்களை பலப்படுத்த முடியும்.

- ஆத்துமாவும் ஆவியும், கணுக்களும் ஊனும் என்பது எதைக் குறிப்பிடுகிறது?
ஆத்துமாவும் ஆவியும் புறப்பொருள் அல்ல. அதனால் காணப்பட முடியாது. கணுக்களும் ஊனும் வெளிப்புறமிருந்து காணப்பட முடியாத நமது சரீரரத்தின் பாகங்கள். எனவே, ஆத்துமா, ஆவி, கனுக்கள், ஊன் இவை யாவும் நமது சரீரத்தின் இரகசியமானதும் மறைக்கப்பட்டதுமான பாகங்களாக இருக்கின்றன. வேறு வகையான உதவியின்றி நமது சரீரக் கண்களினால் இவற்றைப் பார்க்க இயலாது.

- ஆத்துமாவையும ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறது என்பதின் கருத்து என்ன?
வசனங்கள் 12-13ன் கடைசி பகுதி, இருதயத்தின் மறைவான நினைவுகளையும் யோசனைகளையும் வெளிப்படுத்தி, வெளிச்சத்தில் கொண்டுவந்து காண்பிப்பது என்று விளக்கிக் கூறுகிறது. அத்துடன், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் தெரியப்படுத்துவதுடன் அவற்றை முற்றிலும் மாற்றுவதையும் குறிப்பிடுகிறது.

- உன்னுடைய ஆத்துமாவை உருவக் குத்திப் பிரிக்கிற வேதாகமத்தின் வல்லமையை நீ எப்போதாவது உன்னுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறாயா?
உதாரணமாக, அப்போஸ்தலருடைய நடவடிக்கள் 5ம் அதிகாரத்தில், அனனியா, சப்பீராளைப்பற்றி வாசிக்கும்போது நமது இருதயங்களிலுள்ள வஞ்சகமான, நேர்மையற்ற எண்ணங்கள் ஏதாவது வெளியே காண்பிக்கப்பட்டு நாம் மனந்திருப்புதலுக்கும் மாற்றத்துக்கும் வழிநடத்தப்பட்டிருக்கலாம்? நல்ல சமாரியனின் உவமையை நாம் வாசிக்கும்போது, நமது இருதயங்களில் அன்பில்லாமையை நாம் உணர்ந்து, பிறரிடம் அன்பு கூரும்படி நமது உணர்வில் தூண்டப்படலாம்? கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து தியானிக்கும் போது, அவருடைய அன்பினால் நெருக்கப்பட்டு, நாம் கொடிய பாவிகள் என்று உணர்ந்து நன்றியுள்ளவர்களாயிருக்கலாம்.

(குறிப்பு)
வேதாகமம் ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமாக இருக்கிறது என்ற உண்மை எவ்வாறு நம்முடன் சம்பந்தப்படுகிறது? வேதாகமம் ஜீவனுள்ளதாக இருப்பதினால் நமக்கு ஜீவனை அளிக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால் ஆத்துமாவையும் ஜீவியத்தையும்  சீர்படுத்ததவும், பலப்படுத்தவும் வேதாகமம் வல்லமையுள்ளதாக இருக்கிறது. முதலாவது கேள்வியானது வேதாகமத்தின் இந்த வல்லமையில் நம்பிக்கை வைப்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது என்பதைத் தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

(நமக்கு வேதாகமம் கொடுப்பதற்கான இரண்டு நோக்கங்கள்)

2. தேவன் நமது ஜீவனுள்ள வார்த்தையை எழுத்து வடிவில் நமக்குக் கொடுத்ததில் இரண்டு நோக்கங்கள் உள்ளன. அவை யாவை?
2 தீமோத்தேயு 3:15

- நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குவது. வேதம் எப்படி நம்மை இரட்சிப்புக்கேடற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது?
- இரட்சிப்பின் வழி வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16
- நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குவது வேதம் எப்படி நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது?
- இரட்சிப்பின் வழி வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16
- ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாக இருக்கும் படி” வசனம் 16 இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்.
முதலாவது பகுதி, வேதாகமத்தின் நோக்கத்தின்படி, புதிதாக வந்த விசுவாசிகளை முதிர்ச்சி பெற்ற கிறி;ஸ்தவர்களாகக்குவதில் கவனம் செலுத்துகிறது. (அதாவது தகுதியுள்ளவர்கள், தேவையான பயிற்சியுடன் ஆயத்தமாயிருப்பவர்கள்)
பிற்பகுதி, வேதாகமத்தின் நோக்கத்தின்படி, கிறிஸ்தவர்கள் நற்கிரியை செய்யத் தகுதியுள்ளவர்களாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. (அதாவது, பணிவிடை செய்து, ஊழியம் செய்யத் தகுதியுள்ளவர்காளும் படி).
இதற்கேற்றபடி வேதாகமத்தின் நோக்கத்தை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.

3. உண்மையாகவே வேதாகமம் தேவனுடைய ஜீவ வர்த்தையா அல்லது இல்லையா என்பதைப் பாவிகளை இரட்சிக்கும் சுவிசேஷத்தின் வல்லமையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ரோமர் 1:16 இதற்கு எவ்வாறு விளக்கம் கொடுக்கிறது?
- விசுவாசிக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் சுவிசேஷம் இரட்சிப்பைக் கொடுக்கும் தேவனுடைய வல்லமையாக இருக்கிறது.
- பாவிகளை இரட்சிக்க வேதாகமம் தேவனுடைய வல்லமையாக இருக்கிறது என்பதை நிரூபிக்கக் கூடிய சரியான உதாரணம் எது?
- இது நாம்தான் இரட்சிக்கப்பட்ட நாமேதான். என்னைப் போன்ற ஒரு பாவி இயேசுவில் விசுவாசம் வைத்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள, சுவிசேஷம் வழிநடத்தினது என்ற உண்மைக்கு மேலாக, வேறு எந்த உதாரணம் சுவிசேஷத்தின் வல்லமைக்கு சாட்சி பகரக்கூடும்?

4. இரட்சிப்புக்கு வேதாகமம் தேவனுடைய வல்லமையாக இருக்கிறது என்பதை எப்போது நீ உணர்ந்து கொண்டாய்?
- இந்தக் கேள்வி பயிற்சி பெறுவோர் எப்பொழுது இரட்சிக்கப்படடார்கள் என்பதைப் பற்றியதல்ல. ஆனால், வார்த்தையின் மூலமாக எப்பொழுது அவர்களுக்கு சுவிசேஷத்தைக் குறித்த ஆழ்ந்த புரிந்துணர்வு ஏற்பட்டது என்பதே கேள்வி.


(குறிப்பு)
தேவன் நமது வார்த்தையை நமக்குக் கொடுத்ததின் முதலாவது காரணம் ஏற்கெனவே கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் அடையப் பெற்று விட்டது. இரண்டாவது காரணம் நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் முற்றிலுமாக செய்து முடிக்கப்படவில்லை. இரண்டாவது நோக்கத்தைத் தலைவர்கள் அதிகம் வற்புறுத்த வேண்டும் என்பதற்கு இதுவே காரணம். பயிற்சி பெறுவோர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, ஆன்மீக வளர்ச்சி பெற்று, தேவனுக்கு ஊழியம் செய்பவர்களாகும் படி தீர்மானிக்கச் செய்வதையே தலைவர்கள் மையமாகக் கொள்ள வேண்டும்.

5. நம் ஒவ்வொருவருடைய குணாதியசமும் வாழ்க்கையும் தேவன் நமக்காக வைத்துள்ள திட்டத்தைப் பிரதிபலித்து, நாம் முழுமையானவராகும் படிச்செய்வதே வேதாகமத்தை நமக்குக் கொடுத்ததின் இரண்டாவது நோக்கம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் முழுமையாக்கப்படுவது (தகுதியுள்ளவனாக இருப்பது) என்பதின் அர்த்தம் என்ன? (எபேசியர் 4:14-16)
இது ஒருவரது குணத்தில் முழு மாற்றம் பெறுவதைக் குறிப்பிடுகிறது.

6. நற்கிரியைகளைச் செய்வதற்கு முழுமையானவது (தகுதியுள்ளவனாவது) என்பதின் அர்த்தம் என்ன? (எபேசியர் 4:19-24)
- நற்கிரியைகளைச் செய்வதற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆயத்தமானவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது அப்போதுதான் ஒருவருடைய வாழ்க்கையில் முழு மாற்றம் ஏற்படுகிறது.

- நாம் முழுமையாக மாற்றப்பட்டு தேவனுடைய ராஜ்யத்தைதிறக்hக உபயோகிப்படுவதற்காகவே வேதாகமம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற்து. வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், நாம் ஊழியம் செய்யும் பணிவிடைக்காரராகவும், அல்லது குறிப்பாக, சுவிஷத்துவப் பயிற்சி சம்பந்தப்பட்ட முறையில் சபை மக்கள் சார்ந்த) தலைவர்களாகவும் ஆக வேண்டும் என்ற நோக்கத்திற்காக வேதாகமம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.


(குறிப்பு)
7-வது கேள்வியில் அதற்கான விடையும் கேள்வியிலேயே, ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைவர்கள் கேள்வியைப் பலவகையாகப் பாகுபடுத்தி அதைப் பயிற்சி பெறுவோருக்கு விளக்கிக் கூற வேண்டும் என்று யோசனை கூறப்படுகிறது.

7. ‘முழுமையாக்கப்படுதல்’ என்பதை நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அது நாம் பாவம் செய்யாமல் குற்றமற்ற, குறைபாடு இல்லாத வாழ்வு வாழ்கிறோம் என்ற அர்த்தம் அல்ல. மாறாக தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைப் போல் வளரும்படி பரிசுத்தமாக்கப்படும் செய் முறையே முழுமையாக்கப்படுதல் எனப்படும். ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்துப் படிப்பதினால் நாம் எந்த அளவுக்கு முழுமையாக்கப்படுகிறோம் என்பதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 1 யோவான் 3:3 இதைக் குறித்து நமக்கு என்ன போதிக்கிறது?

- ‘அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாமும் இருப்போம்” என்று 1 யோவான் 3:2 கூறுகிறது.
நாம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் இயேசு திரும்ப வரும் போதுதான் நாம் பூரணப்படுத்தப்படுவோம். இதைப் போலவே, நாம் இன்னும் பூரணராகாவிட்டாலும் நாம் சுத்திகரிக்கப்படும் நிலைமையில் இயேசு வெளிப்படும் போது (அவரைப் போல்) முழுமையும் பூரணத்துவமும் அடைவோம் என்ற நம்பிக்கையுடனிருக்கிறோம் என்று 1 யோவன் 3:3 போதிக்கிறது.
‘தேறினவனாகவும், தகுதியுள்ளவனாகவும்’ என்று 2 தீமோத்தேயு 3:16 கூறுவதின்படி, நாம் பூரணராக்கப்படுவோம் என்று பொருள் படுகிறதா அல்லது முதிர்ச்சியடைவோம் என்று பொருள் படுகிறதா?
- ஆங்கில மொழி பெயர்ப்பில் இது கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். ஆனால் மூல பாஷையான கிரேக்க மொழியில் இது, ‘வளர்ச்சியடைய’ என்று மட்டுமே பொருள் படுகிறது.
நம்மை முழுமையானவராக்கும்படி தேவன் என்ன கொடுத்தார;? - வேதாகமம்.


(குறிப்பு)
8-வது கேள்வி, ஒருவர் எவ்வளவு முதிர்;ச்சியடைந்திருக்கிறார் என்று கேட்கவில்லை. வேதாகமம், நாம் வளர்ந்து தகுதியுள்ளவர்களாகும்படி தேவன் நமக்குக் கிருபையாகக் கொடுத்திருக்கும் ஒரு சாதனம் (கருவி) என்ற உண்மையைப் பயிற்சி பெறுவோர் நிச்சயப் படுத்திக் கொள்ள உதவி செய்வதே இந்தக் கேள்வியின் நோக்கம். இநத் நோக்கத்தை மனதில் கொண்டு, பயிற்சி பெறுவோர் தங்கள் விடைகளைப் பகிர்ந்து கொள்ளும்படி வழிநடத்தவும்.


8. ஒரு வருடத்திற்கு முன்பு நீ எப்படிப்பட்ட நபராக இருந்தாய் என்பதுடன் ஒப்பிடும்போது, இன்று எவ்வளவாக ‘முழுமையாக்கப்பட்டிருக்கிறாய்’? தயவு செய்து இதற்கு ஓரிரு குறிப்பிட்ட உதாரணங்களை கொடுக்கவும்.

- பயிற்சி பெறுவோர் நேர்மையுடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவி.
- நீ வளர்ச்சியடைவதற்கு உனக்கு உதவியாக இருந்தது எது? அந்த நேரத்தில் தாங்கள் போதிய அளவு வளர்ச்சியடையவில்லை என்று நினைக்கிறவர்களுக்கு உங்களுக்குப் போதிய வளர்ச்சி இல்லாததின் காரணம் எதுவாக இருக்கலாம்? நம்மை முழுமையானவர்களாக்கும் படியாகவே தேவன் நமக்கு வேதாகமத்தைக் கொடுத்திருக்கிறார். (அதாவது நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கும்படி) ஆகையால் நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து, தியானம் செய்து, அதன் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கும்போது நாம் (ஆன்மீக) வளச்சியடைந்து, தகுதியுள்ளர்களாகலாம்.


(குறிப்பு)
வேதாகம்த்தின் நான்கு கிரியைகளுக்கும் பயிற்சி பெறுவோர் விசுவாசத்திலும் கீழ்ப்படிதலிலும், தங்கள் செயலளவில் பதிலளிக்கும்படி ஊக்குவிப்பதை 9வது 10வது கேள்விகள் மையமாகக் கொண்டிருக்கின்றன. வேதாகமத்தின் போதனை, கடிந்து கொள்ளுதல், சீர்திருத்துதல், நீதியைப் படிப்பிக்குதல் ஆகியவற்றை நாம் ஏற்றுக் கொள்ளும் போதுதான் நமது வாழ்க்கை குணாதிசயம் இவற்றில் மாற்றம் ஏற்படுகிறது என்ற உண்மையை வற்புறுத்திக் கூற வேண்டும். வார்த்தையை நாம் புரிந்துணர்ந்;து கொள்வதால் மட்டும் நமது வார்த்தையை நாம் புரிந்துணர்ந்து கொள்வதால் மட்டும் நமது வாழ்க்கையை மாற்ற முடியாது. ஆனால் மனந்திரும்புதலும் வார்த்தைக்குக் கீழ்ப்படிதலுமே வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடும்.


வேதாகமத்தின் நான்கு கிரியைகள்

நம்மை முழுமைப்படுத்த வேதாகமத்திலுள்ள அற்புதமான நான்கு செயல்பாடுகள் யாவை?
2 தீமோத்தேயு 3:17
உபதேசம் செய்தல், கடிந்து கொள்ளுதல், சீர்திருத்தல், நீதியைப் படிப்பிக்குதல்
- வேதாகமத்தின் இந்த நான்கு கிரியைகளும் தேவனுடைய வார்த்தையில் வளர்ந்தேறச் செய்யும் வழி முறைகளாக இருக்கின்றன. நாம் நமது பிள்ளைகளை வளர்க்கும் விதத்துடன் இவைகளை ஒப்பிடலாமா?
- நன்மை செய்வதற்கு நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம்.
- அவர்கள் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டி அவர்களைக் கடிந்து கொள்கிறோம்.
- அவர்களைத் திருத்துகிறோம்.
- தேவையான நேரங்களில் அவர்களைக் கட்டொழுங்கு படுத்துகிறோம்.

10. ‘போதனை’ அல்லது உபதேசம், நன்மை, தீமையைக் குறித்து நமக்குக் கற்பிக்கிறது.
‘கடிந்து கொள்ளுதல்’, நமது பாவங்களை, நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறது. ‘திருத்துதல்’, நாம் மனந் திரும்புதலுக்குக் காரணமாகிறது. ‘நீதியைப் படிப்பிக்குதல்’, சத்தியத்தின் படி நாம் நடக்க நம்மை வழி நடத்துகிறது.
- வேதாகமத்தை வாசிக்கும்போது? இந்த நான்கு கிரியைகளில் எதை நீ அதிகமாக அனுபவத்தில் காண்கிறாய்?
- தங்களது ஆன்மீக வளர்ச்சியைப் பொறுத்து, ஒவ்வொருவரும் வெவ்வேறான அளவில் இந்த நான்கு கிரியைகளையும் தங்கள் அனுபவத்தில் அ;றிந்து கொள்வார்கள்.
- வேதாகமத்தின் இரண்டு நோக்கங்களும் (இவற்றை நாம் பாடத்தின் ஆரம்பத்தில் படித்திருக்கிறோம்). நம்மில் நிறைவேற்றப் படத்தக்கதாக, நாம் இந்த நான்கு கிரியைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், நற்கிரியைகளைச் செய்யத் தகுதியுள்ள முதிர்ச்சி பெற்ற விசுவாசிகளாக் ஆவதற்கு நாம் விரும்பினால், வேதாகமம் நமக்குப் போதனை செய்து, கடிந்து கொண்டு, சீர் திருத்தி நீதியைப் படிப்பிக்கும் போது நாம் அதற்கு உணர்வுள்ளவர்களாகக் கீழ்ப்படிய வேண்டும். நீ அவ்விதம் செய்ய முடியுமா?
- வேதத்தை வாசிப்பது மாத்திரம் சுயமாக நம்மை மாற்றிவிட முடியாபது. ஆனால், வேதாகமத்தின் நான் கிரியைகளுக்கும் நாம் செயலளவில் பதிலளிக்கும்போது மட்டுமே இது நடைபெறும்.

11. நம்மைச் சுற்றி பலர் பக்தி சிரத்தையோடு தங்கள் வேதாகமத்தைத் தூக்கிக் கொண்டு சென்றாலும் அவர்களின் வாழ்வில் மாறுதலின் அனுபவம் என்பது இல்லை. வேதத்தை வாசிக்கும் போது கூட அவர்களால் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப விரும்புவதில்லை. சத்தியத்தை பகுத்தறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும் இதை ஒரு அற்புமான காரியமாகக் கருதுகிறார்கள். என்னை ஒரு அடக்குமுறையான எண்ணம். கண்களை மூடிக்கொண்டு, உன்னையும் உன் சொந்த வாழ்க்கையையும் தற்பரிசோதித்துப் பார்.
- இந்தப் பாடத்தின் பொருளடக்கமும், பயிற்சி பெறுவோரை நற்கிரியை செய்யத் தகுதியுள்ளவர்களாக்குவதற்கு தேவன் உபயோகிக்கும் வேதாகம போதனையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தப் பாடத்தின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்ட உபதேசம், கடிந்து கொள்ளுதல், சீர் திருத்துதல், நீதியைப் படிப்பித்தல் ஆகியவற்றைப் பயிற்சி பெறுவோர் பகிர்ந்து கொள்ளும்படி ஊக்குவியுங்கள்.

பரிசுத்த ஆயிhனவர் அவர்களுடைய இருதயங்களைத் தொடும்படியாக, ஆழ்ந்த சிந்தனையிலும் ஜெபத்திலும் சிறிது நேரம் செலவிடும்படி பயிற்சி பெறுவோரைக் கேட்டுக் கொள்ளலாம்.

முடிவுரை

1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தை சுருக்கமாகக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதயங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும்படி உதவி செய்ய வேண்டும்.

2. தீர்மானங்களும் செயல்படுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றைச் செயல்படுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப் படி பகிர்ந்து கொள்ள வேண்டும்.

4. முடிவில் துதி செலுத்துதல்


5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டித் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
அவர்களுடைய குணமும் வாழ்ககையும் முற்றிலும் மாற்றம் அடைவதற்கு செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்ககையையும் பரிசுத்த ஆவியானவர் மாற்றும்படி ஜெபிக்கவும்:

6. வீட்டுப் பாடப் பயிற்சி
1) அன்றாடக வாழ்க்கை வீட்டுப்பாடப் பயிற்சி:
இந்த வாரத்தில், வேதாகமத்திலிருந்து தாங்கள் பெற்றுக் கொள்ளும் எந்த ஒரு போதனை, கடிந்து கொள்ளுதல், திருத்துதல், அல்லது நீதியைப் படிப்பித்தல் ஆகியவை இருக்குமானால், பயிற்சி பெறுவோர் அதைக் குறித்தும், தேவனுடைய வார்த்தைக்கு அவர்கள், குறிப்பாகத் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் எவ்விதம் செயளவில் பதிலளித்தனர் என்பதையும் குறித்து எழுதி வைக்கும் படி சொல்லுங்கள்.

2) வாசிக்கும் படியாகக் கொடுக்கப்படும் பகுதி

3) மனப்பாட வசனங்கள்
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். பிலிப்பியர் 4:6-7
நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத்தேயு 6:6

4) தியான நேரம்
சரியான ஜெபம் எது?
மத்தேயு 20:17-28



தலைவரின் தற்பரிசோதனைப் பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுய மதிப்பீடு செய்தவற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
5 4 3 2 1

மனதின் வரைபடத்தின் உபயோகம்:
இந்தப் படம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?

பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் சரிவரப் புரிந்திருந்தேனா?

ஒவ்வொரு கேள்விக்கு இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கு இடையேயும் கடந்து செல்லும்போது சுமூகமாக இருந்ததா?


அறிமுக நடவடிக்கை: (ஐஸ் பிரேக்கர்)

அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை பொருத்தமானதாக இந்ததா?

நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?


கேள்வி:
நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
(திறந்த மூடிய கேள்விகள்) தெளிவாகவும் விபரமாகவும் பதில் கூற வேண்டிய கேள்விகளையும், ’ஆம்-இல்லை’ என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும், சரியான விதத்திலும் உபயோகித்தேனா?

கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்:
பயிற்சி பெறுவோர் விடையளிக்கும்போது நான் அனுதாபத்துடன் கேட்டு, பொருத்தமான பாவனை, சைகை, குரலில் ஏற்றத் தாழ்வு, நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா?
பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்திலும் சுருக்கமாக ஒழுங்கு படுத்தினேனா?

திறந்த மனப்பான்மை:
பயிற்சி பெறுவோரிடம் நான் மனம் விட்டுப் பேசினேனா?
பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை, குணாதிசயம் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பித்தேனா?
பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களையுப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?

ஊக்குவிப்பு:
பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
பகிர்ந்து கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?

நேரத்தை நிர்வகித்தல்:
ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தையும் ஒதுக்கினேனா? - கூர்ந்து நோக்குதல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்ககையில் செயல்படுத்துதல் ஆகியவை. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?

பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்:
பரிசுத்த ஆவியானவர் ஒளியூட்டித் தெளிவுபடுத்துவதை நான் நாடித் தேடினேனா?
பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையும் உள்ளத்தில் உணர்ந்து அதின்படி செயல்பட்டேனா?

கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும்:
பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம்செய்து, சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?


பயிற்சி பெறுவோரைப் புரிந்துணர்ந்து கொள்தல்:
பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்ககளையும் ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?


தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பாh;க்கிலும், கடிந்து கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். (நீதிமொழிகள் 28:23)

தியான நேரம்



பாடம் 3
தியான நேரம்

1. மனவோட்ட வரை
தியான நேரம் பகிர்ந்;து கொள்தல் (1)

தியான நேரம்
கூர்ந்து கவனித்தல்
விளக்கம் சொல்லுதல்
ஆய்வு செய்தல் மற்றும் தியானித்தல்
ஆழ்ந்த சுய சிந்தனை
வாழ்க்கையில் செயல்படுத்துதல்

வார்த்தையின்; பேரில் தியானம் செய்வதில் நான்கு நிலைகள் (2, 3)

நான்கு வகையான தியன நேரக் குறிப்புப் புத்தகம் (4, 5)

ஏ வகை (1)
பி வகை (2)
சி வகை (3)
டி வகை (4)

தியான நேரப் பயிற்சி (6)


2. நோக்கங்கள்
- தியான நேரத்தின் குறிப்பிட்ட நான்கு நிலைகளையும் புரிந்துணர்ந்;து கொள்வதற்கு (அதாவது, கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல்).
- வெவ்வேறு வகையான தியான நேரக் குறிப்புகள் எழுதுவது பற்றி (ஏ வகை - டி வகை) நல்ல பரிச்சயம் ஏற்படும்படி தாங்கள் சொந்தமாகச் செய்து கொள்வதற்கு ஏதுவாக தியான நேரத்தை எல்லோரும் சேர்ந்;து பயிற்சி செய்ய
- தியான நேரத்தைக் குறித்து மனக் கிளர்ச்சியடைந்து, ஊக்கத்துடன் அதைக் கிரமமாகச் செய்வதற்குத் தேவையான தீர்மானங்கள் எடுக்க.
3. துதி
4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்காக
- உலகபமெங்குமுள்ள ஊழியங்களுக்காகவும் உனது தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காகவும், உன்னுடைய குறிப்பிட்ட திருச் சபைக்காகவும்.
- உன்னுடைய சபையிலுள்ள குருவானவர்களுக்காக
- பயிற்சி பெறுவோருக்காக
- சீஷத்துவப் பயிற்சியின் பாட நேரத்திற்காக

5. வீட்டுப் பாடப் பயிற்சியை சரிபார்த்தல்
வீட்டுப் பாடப் பயிற்சியில் ஒவ்வான்றையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரம், முறை இவற்றைத் தலைவர் தனக்கு நலமாகத் தோன்றும் விதத்தில் செய்து கொள்ளலாம்,.

1) தியான நேரம்
ஏசாயாவின் தியான நேரம்
ஏசாயா 6:1-13

2) மனப்பாட வசனம்
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119.105
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தஐடடய வேதத்தில்பிரியமாயிருந்துஇ இரவும் பகலும் அவர்களுடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:1-2

அ) அன்றாட வாழ்க்கை வீட்டுப்பாட பயிற்சி

4) வாசிக்கும் படியாக கொடுக்கப்பட்ட வேலை


6. முன்னுரை
வெற்றிகரமாக கிறிஸ்தவ ஜீவியத்திற்கு அனுதினமும் தேவனைச் சந்திப்பது அவசியம் என்று கடந்த வாரத்தில் நாம் கற்றுக் கொண்டோம். தியான நேரம் என்பது, ஜெபத்தின் மூலமாகவும் வேத வாசிப்பின் மூலமாகவும் தேவனோடு ஐக்கியம் கொள்வதாகும். இந்த தினசரி தியான நேரத்தை நாம் எப்படி கடைப்பிடிப்பது அல்லது நடத்துவது என்பது பற்றி இன்னமும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமாக இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் கொரியாவிலுள்ள திருச்சபைகளில் அதிகாலை ஜெப ஆராதனை நடத்திய பின், மக்கள் தனிப்பட்ட முறையில் ஜெப நேரத்துடன் வேதம் வாசித்தனர். இந்த விதத்தில் ஒருவர் தேவனோடு ஆச்சரியகரமான ஐக்கியம் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் சமிப காலத்தில் குருவானரால் நடத்தப்படும் ஆராதனையில் அமைதியாகக் கலந்து கொள்வதைக் காட்டிலும் சபை மக்களுக்குத் தாங்களாகவே ஜெபித்து வேதம் வாசிப்பதின் மூலமாக தேவனோடு நேரடியான தொடர்பு கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நாட்களில் பயனுள்ள தியான நேரத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பற்பல விதமான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடத்தில் அறிமுகம் செய்து வைப்போம். இவற்றில் உங்கள் தலைவரால் பரிந்தரைக்கப்படும் ஏதாவது ஒரு முறையைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.


7. முன்னுரையின் சுருக்கம்
- தியான நேரம் என்பது ஜெபம், வேத வாசிப்பின் மூலமாக தேவனோடு ஆவிக்குரிய ஐக்கியம் கொள்வதாகும்.
- தியான நேரம் என்பது செயல்படும் ஐக்கியத்தில் ஈடுபடுவதாகும்.
- பயனுள்ள தியான நேரத்திற்கு ஏற்ற வழிமுறைகளைக் கண்டறிவோமாக.

8. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
ஒரு நாளின் 24 மணி நேரத்துடன் 3 மணி நேரம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டால், அந்தக் கூடுதலான 3 மணி நேரத்தை நீ எவ்விதம் உபயோகம் படுத்துவாய்?
எந்த விதமான விடைகளையும் எற்றுக் கொள்ளத் தக்க சூழ்நிலையை உருவாக்கு. பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கையில் வாஞ்சிப்பது என்ன என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்தக் கேள்வி உதவியாக இருக்கும். பயிற்சி பெறுவோர் ஒருவர் மற்றவிரன் விடைகளைக் குறித்து தீர்ப்புக் கூறாதபடிக்குக் கவனமாக இருக்க வேண்டும். இயேசு இந்தக் கூடுதலான 3 மணி நேரத்தை எவ்வாறு உபயோகித்திருப்பார் என்று சிந்திக்கும்படி பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்க்வும்.


9. நுழைவுக் கேள்வி
முதலாவது கேள்விக்கு நேராகச் செல்லலாம்.

மையப் பகுதி
(தியான நேரம் பகிர்ந்;து கொள்ளுதல்)

1. கடந்த காலத்தில் நீ எவ்வாறு தேவனோhடு நேரம் செலவிட்டாய், அதனால் பெற்றுக் கொண்ட ஆசீர்வ்hதங்கள் இவற்றைக் குழுவினருடன் பகிர்ந்து கொள்.

- பயிற்சி பெறுவோர் வீட்டுப் பாடம் பயிற்சியாக தியான நேரம் செய்திருக்க வேண்டும். தங்கள் தியான நேரங்களில் தாங்கள் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்க வேண்டும்.

- எங்கு, எப்பொழுது, எவ்வளவு நேரம் நீ தியானத்தில் நேரம் செலவிட்டாய்,

- தியான நேரம் வைத்துக் கொள்வதற்கு இன்னும் புதிதாக இருக்கும் பயிற்சி பெறுவோர் தாங்கள் த்ர்ம சங்கடமான நிலைமைய உணராமலும், தங்களுடைய தியான நேர அனுபவத்தை மற்றவர்களின் அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்காமலும் இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்து.

(குறிப்பு)
3ம், 4ம் பாடங்கள் தேவனுடைய வார்த்தையைக் குறித்ததாகவும் 5ம், 6ம் பாடங்கள் ஜெப வாழ்க்கையைக் குறித்தாகவும் இருக்கிறது.

(வார்த்தையை தியானிப்பதிலுள்ள நான்கு நிலைகள்)

2. வார்த்தையின்; பேரில் தியானம் செய்வதைப் பின்வரும் நான்கு படிகளாகப் பிரிக்கலாம். பின்வரும் உதாரணம், சீஷத்துவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஒரு சகோதரியினால் எழுதப்பட்டது. தியான நேரக் குறிப்புகள், கவனமாக வாசித்து ஒவ்வொரு படிக்குமுள்ள வித்தியாசங்களை நன்கு கவனித்துப் பார்.

(குறிப்பு)
மனதில் உருவாகும் ஒரு எண்ணத்தைப் பழக்கப் படுத்திக் கொள்வதற்கு முன்பாக அதை முதலாவது நன்கு புரிந்து கொள்வது முக்கியமாக இருந்த போதிலும் அதை உடனே பழக்கத்தில் கொண்டு வருவதின் மூலமாகப் பயிற்சி பெறுவோர் அதை நன்கு புரிந்து கொள்வார்கள். எனவே, வார்த்தையைக் கற்றுக் கொள்வதிலுள்ள நான்கு படிகளை விளக்கிக் கூறுவதில் அதிக நேரம் செலவிடாமலிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, பயிற்சி பெறுவோர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட படிகளை அறிந்திருந்தார்களானால், அவர்கள் அதைப் பழக்கப்படுத்த ஆரம்பித்து விடலாம். ஒரு எண்ணம் அல்லது கருத்தை விளக்கிக் கூறும் போது மாதிரிகளும் உதாரணங்களும் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், இதைப் படிக்கிற நேரத்தில் அது பற்றிய தங்கள் கருத்தைக் கூறி விமர்சனம் செய்வதின் மக்கியத்துவத்தை மறந்;து விடக் கூடாது.


தலைப்பு: பணிவிடை செய்யும் ஒருவர். லூக்கா 22:24-27

கூர்ந்து நோக்குதல்
சீஷர்கள் தங்களில் யார் பெரியவன் என்று வாதாடிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களுடன் பேசி, ‘புற ஜாதிகளின் ரர்ஜாக்கள அவர்களை ஆளுகிறார்கள். அவர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் எனப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக் கூடாது. உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், அரசாளுகிறவன் பணிவிடைக்காரணைப் போலவும் இருக்கக் கடவன். எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவனோ அல்லது பணிவிடைக்காரனோ? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும் நான் உங்கள் நடுவிலே பணிவைடைக்காரனைப்போல் இருக்கிறேன் என்று கூறினார்.

விளக்கம் சொல்லுதல், ஆராய்தல், தியானித்தல்
1. இயேசுவின் இருதயத்தில் என்ன எண்ணம் இருந்ததென்று சீஷர்களுக்கு விளங்கவில்லை. இந்த வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன்புதான் இயேசு தாம் அனுபவிக்கப் போகும் பாடுகள், தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகும் ஒருவன், இவைப் பற்றித், தமது சீஷருடன் அவர் அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் பகிர்ந்து கொள்ளும் போது பேசிக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட துக்ககரமான சூழ்நிலைகளிலும், இயேசு தமது இருதயத்தில் என்ன நினைக்கிறார் என்பது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்களது சொந்தப் பதவியைப் பற்றி சீஷர்கள் தன்னலமான எண்ணங்களையே கொண்டிருந்தனர்.

2. தங்களில் யார் பெரியவன்? என்பது குறித்து சீஷர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஒன்றும் புதியதல்ல. இதற்கு ஒரு வருந்தத்தக்க உதாரணம் என்னவெனில், செபதேயுவின் இரண்டு குமாரரும் இயேசுவிடம் வந்து, தந்திரமான எதிர்ப்பார்ப்புடன் தாங்கள் இயேசுவின் வலது, இடது பாரிசத்தில் உட்காரும்படி உத்தரவு கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதுதான். (மாற்கு 10:37). இதைக் கேட்ட மற்ற சீஷர்கள் ஆத்திரமடைந்து எரிச்சலானார்கள் (மாற்கு 10:41)

3. அவர்கள் இயேசுவின் போதனையையும் மாதிரியையும் தங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்புதான் சீஷர்கள் இதுபோன்ற ஒரு பிரச்சனையை எழுப்பின போது, இயேசு அவர்களுக்கு ஒரு முக்கியமான போதனையை அளித்திருந்தார். ‘உங்களில் எவனாவது முதன்மையுள்ளவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக் காரனாயிருக்கக் கடவன் (மாற்கு 10:43-44) மேலும் இயேசு, அவர்களுடைய போதகராக இருந்த போதிலும், தாம் ஊழியம் செய்யும் படியாக வந்தார் என்று கூறினார் (மாற்கு 10:45 மற்றும் யோவான் 13:14) இந்தப் பாடத்தை சீஷர்கள் ஏன் இவ்வளவு சீக்கிரமாக மறந்த விட்டார்கள்,

ஆழ்ந்து சிந்தித்தல்
நான் பெரியவனாக இருக்க வேண்டும் என்ற ஆசையினால், என்னுடைய இருதயத்திலும் எப்போதும் ஒரு போராட்டம் இருந்து கொண்டே இருந்தது.

தனிப்பட்ட முறையில் நான் எப்போதும் சிறந்தவளாகவும், முதன்மையாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது மட்டுமல்ல, மற்றவர்கள் என் கணவன், பிள்ளைகள் மூலம் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலையும் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையிலேயே பெரியவளாக இருப்பது என்பது, உலகத்தினால் அங்கீகாரம் பெறுவதை;க் காட்டிலும் தேவனால் அங்கீகாரம் பெறுவதினால் மட்டுமேயாகும். ஆனால், தேவனிடமிருந்து மனிதனிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கு நான் எவ்வளவு முயற்சி செய்திருக்கிறேன்? தேவனுடைய ராஜ்யத்தின் கொள்கை - ஒருவன் உயர்த்தப்பட வேண்டுமானால் அவன் தன்னைத்தானே தாழ்த்த வேண்டும் என்பது, உலக நியதியிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. எனவே, என் தேவனுடைய ராஜ்யத்தின்; கொள்கையையும், அதே சமயத்தில் உலகத்தின் நியதியையும் கடை;ப்பிடித்து வெற்றி பெறலாம் என்னும் என் எண்ணம் சாத்தியப்படாது என்று உணர்ந்து காண்டேன்.

செயல் படுத்துதல்
நான் முதலாவது சீஷத்துவப் பயிற்சியை ஆரம்பித்போது, என்னுடைய நோக்கம் முதல் தரமாக செய்ய வேண்டும். சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான். இருந்த போதிலும் கடந்த சில மாதங்களில் என்னுடைய உடன் சகோதரிகளுடன் சேர்ந்து படித்த போது அந்தப் பெருமை சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்து விட்டது. என்னுடைய உடன் சகோதரிகள் தூய்மையானவர்களாகவும் மனவுருக்கமும் மன உறுதியுமுள்ளவர்களாக இருப்பதை நான் உணர்ந்தேன். கர்த்தருக்குள்ளாகத் தாங்கள் முற்றிலுமாக மாற்றப் பெற வேண்டும் என்னும் வாஞ்சை அவர்களுக்கு அதிகமாக இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் மூலமாக நான் என்னுடைய பெருமையையும் பேராவலையும் கண்டுணர்ந்;து கொள்ள முடிந்தது. அதற்காக நான் மனஸ்தாபப் பட்டேன். இப்போது அவர்களுடைய தூய்மையிலிருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். அவர்கள் மூலமாய் வரும் சவால்களை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். ஒரு பணிவிடைக்காரியாக வாழ்வதற்கு இந்த வாரத்தில் ஒரு சில விஷயங்களை நான் பழக்கத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

எனது சிறு குழுவின் தலைவருக்கு உதவி செய்ய விரும்புகிறேன். சரீரப் பிரகாரமாக பெலவீனமாக இருக்கும் நிலைமையில், அடுத்த வாரத்துக்குரிய பாடத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் என் குழுத் தலைவருக்கு ஏதாவது உணவு தயாரித்துக் கொடுப்பேன். அக்டோபர் மாதம் 1ம் தேதி நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்காக மதிய உணவு ஆயத்தம் செய்துதர எனது சிறு குழு தீர்மானித்திருக்கிறது. அச்சமயம் எனக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டு வேறு ஏதாவது இலகுவான பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்று நான் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்ததை எண்ணி இப்போது குற்ற உணர்வடைந்தேன். ஆனால் இப்போது நான் முழு மனதோடு உண்மையான சந்தோஷத்தோடும் உணவு ஆயத்தம் செய்வேன்.

கூர்ந்து நோக்குதல்
- பொருளடக்கத்தின் சுருக்கம் என்ற தலைப்பின் கீழ் வருகிறது
இது பொருளடக்கத்தை ஒருவர் தமது சொந்த வார்த்தைகளின் சுருக்கமாகக் கூறுவது.
- ஒரு பகுதியின் சுருக்கமான வரிவடிவம் என்றும் கூறலாம்.
கூர்ந்து கவனித்தால் ஒரு பகுதியின் முக்கியமான சிறப்புக் குறிப்புகளைத் தெரிவிக்கிறது.
- கூர்ந்து நோக்குதலில் பாடப் பகுதியைப் பலமுறை திரும்பத் திரும்ப வாசிப்பது அவசியமாகிறது.
பகுதியின் அர்த்தத்தைக் குறித்து யோசனை செய்து கொண்டு பகுதியைப் பலமுறை வாசிப்பது அவசியம்.
- ஆய்வு செய்வதற்கும் தியானம் செய்வதற்கும் பகுதியை நன்கு கவனித்து வாசிப்பது ஒரு முன் நிபந்தனை.
பகுதையைப் போதிய அளவு புரிந்துணர்ந்து கொள்வது. அதை நுணுக்கமாக ஆய்வு செய்து தியானிக்க அவசியமானதாக இருக்கிறது.
- கவனிக்கப்படும் குறிப்புகளை எப்பொழுதும் எழுதி வைக்கத் தேவையில்லை.
ஏற்கனவே, தேவனுடைய வார்த்தையைப் படித்து தியானம் செய்யப் பழகியுள்ளவர்களுக்குத் தங்கள் கவனத்தில் வருபவற்றை எழுதிவைப்பது தேவையில்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பயிற்சி பெறும் காலத்தில் கவனத்தில் வருபவற்றை எழுதிக் கொள்வது நல்லது என்று பரிந்துரைக்கப் படுகிறது.
விளக்கம் சொல்லுதல், ஆராய்தல் மற்றும் தியானித்தல்.
- கூர்ந்து கவனித்தலில் செய்ததைக் காட்டிலும் அதிகம் நுணுக்கமாகவும் திட்டவட்டமாகவும் வேதாகம பாகத்தைப் பார்க்க வேண்டும்;.
கூர்ந்து கவனித்தல் ஒரு பகுதியை முழுமையாகவும் விசாலமாகவும் மேலோட்டமாகவும் பார்ப்பதாக இருந்தால், விளக்கம் சொல்லுதல் அப்பகுpதயை சிறு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்து பார்ப்பதாக இருக்கிறது. கூர்ந்து கவனித்தலை, ஒரு மரமடர்ந்த காடு முழுவதையும் படம் பிடிப்பதற்கு ஒப்பிட்டால், ஆய்வு, தியானம் இவ்றைறைக் காட்லுள்ள ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒப்பிடலாம்.
- கடினமான வார்த்தைகளுக்கும் சொற்றொடர்களுக்கும் விளக்கம் கூறுதலில் அடங்கும்.
சில வேளைகளில் ஆய்வு செய்து தியானம் செய்யும் போது வேதாகம அகராதி, வேதாகம வியாக்கியானப் புத்தகம் (கம்மென்டரி) வேதாகமக் கைப்புத்ததகம் போன்றவற்றை உபயோகிக்க வேண்டியதாக இருக்கும். எளிதில் கையாளக் கூடிய சில குறிப்புரைகளைத் (ரெப்பரென்ஸ்) தலைவர் அறிமுகப்படுத்தி அவற்றை எப்படி உபயோகிப்பது என்றும் காண்பித்தால் அது பயிற்சி பெறுவோருக்கு அதிக உதவியாக இருக்கும்.
- அந்தப் பகுதியைப் பல பிரிவுகளாகப் பிரி.
பகுதியைச் சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்குத் துணைத் தலைப்புக் கொடு.
- ஒவ்வொரு பிரிவின் அர்த்தத்தையும் எடுத்தெழுது.
அந்தப் பகுதியில் கற்பிக்கப்பட்ட பாடங்களையும் அவற்றின் முக்ககியத்துவத்தையும் ஒன்று சேர்ப்பது சம்பந்தப்பட்டது.
- பயிற்சி பெறுவோரில் பலருக்குப் பொதுவாக மிகக் கடினமானதும் பழக்கமில்லாததுமான ஒரு முறையாகும்.
முன்பு ஒரு போதும் தேவனுடைய வார்த்தையைப் பகுதிகளாகப் பிரித்து வாசித்திராத பயிற்சி பெறுவோர், ஆய்வு செய்தலையும் தியானம் செய்தலையும் மற்ற படிகளிலிருந்து பேறுபடுத்துவதில் சிரமம் காணலாம். எனவே, ஒரு உதாரணத்தை உபயோகித்துத் தலைவர்கள் அவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டும்.
ஆழ்ந்து சிந்தித்தல்.
- ஆய்வு செய்தல், தியானம் செய்தல் ஆகியவற்றின்; போது கண்டுபிடிக்கப்பட்ட வெவ்வேறு அர்த்தங்களையும் பாடங்களையும் ஆழ்ந்து சுய சிந்தனை குறிப்பிடுகிறது.
ஏதாவது புதிதாக அறிந்தணர்ந்து கொண்டவவை சவால்கள், அறிக்கை செய்ய வேண்டிய பாவங்கள், போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பிடுகிறது.
- ஆழ்ந்த சுய சிந்தனை தனிப்பட்ட உள் உணர்வு சார்ந்தது.
கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல் ஆகியவை புற நோக்கு சார்ந்த நிலை. அதாவது உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஆழ்ந்த சுய சிந்தனை, உள் உணர்வு சார்ந்த நிலை. முதல் இரண்டு நிலைகளும் ‘வேத பகுதி என்ன சொல்லுகிறது? என்ற கேள்வியைப் பொறுத்ததாக இருக்கிறது. ஆனால், ஆழ்ந்த சுய சிந்தனையானது, ‘வேத பகுதியிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன், என்ன உணர்ந்து கொண்டேன்’ என்ற கேள்வியைப் பொறுத்தாக இருக்கிறது.
இருந்த போதிலும் ஆழ்ந்த சிந்தனை என்பதை ஒருவருடைய மனக் கிளச்சி, உணர்வுகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டது என்று நினைக்கக் கூடாது. ஆழ்ந்த சுய சிந்தனை ஒருவர் கண்டுபிடித்த உண்மையாகிய கண்ணாடியில் அவரைப் பிரதிபலித்துக் காட்டுவது சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதன் படி ஆழ்ந்த சிந்தனையானது வேத பகுதி எடுத்துக் காட்டுவதை ஆதாரமாகக் கொண்டு என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? நான் எப்படி தேவனுடைய வார்த்தையின்படி ஜீவிக்காமல் இருக்கிறேன் என்று கேட்கிற தற்பரிசோதனை அடங்கியுள்ளதர்க இருக்கிறது.

- ஆழ்ந்த சுய சிந்தனையில் பரிசுத்த ஆவயிhனவரின் கிரியை மிகத் தெளிவாக இருக்கிறது.
கூர்ந்து நோக்குதல், விளக்கம் சொல்லுதல் ஆகியவற்றிலும் ஆவியானவர் கிரியை செய்கிற் போதிலும், ஆழ்ந்த சுய சிந்தனயே ஆவியானவர் மிகவும் ஆழமாகக் கிரியை செய்கிற பகுதியாக இருக்கறி;து. இது ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் நம்மை முழுமையாக மாற்ற விரம்புகிறார். ஆழ்ந்த சுய சிந்தனையே, பயிற்சிக்கும், வார்த்தையின் சத்தியங்களை வாழ்க்கையில் செயல்படுத்துதலுக்கும் வழிநடத்தி முடிவாக ஒன்று சேர்க்கும் சங்கிலியைப் போல் இருக்கிறது,

செயல்படுத்துதல்
- செயல்படுத்துதலுக்கு ஒருவருடைய மனவுறுதி தேவை.
கூர்ந்து கவனித்தலும் விளக்கம் சொல்லுதலும் ஒருவருடைய அறிவு அல்லது புரிந்து கொள்ளும் திறனுடன் சம்பந்தப்பட்டதானால், ஆழ்ந்த சுய சிந்தனை ஒருவருடைய  இருதயத்துடனும் செயல்படுத்துதல் அவருடைய மனவுறுதியுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஒருவர் தனது ஆழ்ந்த சுய சிந்தனையில் தாம் உணர்ந்ததும் நினைத்ததுமானவற்றைச் செயல்படுத்தத் தீர்மானம் செய்;து அதைத் தன் தினசரி வாழ்க்கையில் உண்மையாகவே உபயோகிப்பதைச் செயல்படுத்துதல் குறிப்பிடுகிறது.
- செயல்படுத்துதல் திட்டவட்டமானதும் எளிதில் உணரக் கூடியதாகவும் இருப்பது அவசியம்.
- ஒருவரது மனப்பான்மை, குணாதிசயம் அல்லது செயல்பாட்டின் மூலமாக செயல்படுத்துதல் அவரது வாழ்க்கையில் எளிதாக உணரக்கூடிய ரூபமெடுக்கிறது.
- ஒருவர் தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ளத் தீர்மானம் செய்வதும் ஒரு செயல்படுத்துதல் என்பதை மனதில் கொள்ள் வேண்டும்.
செயல்படுத்துதல் என்பது எப்பொழுதும் ஒரு செய்கை அல்லது நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உதாரணமாக இன்னாருக்காக நான் இதைச் செய்வேன் என்று சொல்வதும், நான் ஒரு மனத்தாழ்மையுள்ள நபர் ஆகுவேன் என்பதுமாகிய இரண்டுக்கும் செயல்படுத்துதலேயாகும். யாருக்காகவாவது ஜெபிக்க வேண்டும் என்ற தீர்மானமும், யாராவது ஒருவரைப் பற்றிக் கொண்டிருந்த மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும் செயல்படுத்துதலைச் சார்ந்ததேயாகும் என்று பயிற்சி பெறுவோருக்கு நினைப்பூட்ட வேண்டும். ஆனாலும் மனப்பான்மையில் iமாற்றம் செய்வதும் ஒரு செய்லபடுத்துவதேயாகும் என்ற உண்மையைத் தகாத வழியில் உபயோகிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், செயல்களில் மாற்றம் கொண்டுவராத மனப்பான்மையாகக் கருத முடியாது.

- செயல்படுத்துதல் நிதானமாக, படிப்படியாக செய்யப்படுவதாக இருக்கலாம்.
ஒருவருக்கொருவர் விரோதிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், உடனடியாக ஒப்புரவாக முடியாமல் இருக்கலாம். ஆவிக்குரிய வளர்ச்சியும் ஒரே நாளில் ஏற்பட்டுவிடாது. ஆவிக்குரிய வளர்ச்சியில் படிப்படியாக முன்னேறுவதை அசட்டை செய்யாதிருக்க்மைபடி பயிற்சி பெறுவோருக்கு புத்திமதி கூற வேண்டும். இக்கணமே உடனேயே, எல்லா உண்மைகளையும் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்ற அவசரத்துடன், அதிகமாக செய்லபடுத்துதலை முயற்சி செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டாம்.

(குறிப்பு)
தியான நேரம் வைத்துக் கொள்வதில் புதிதானவர்கள், தியான நேரம் திட்டவட்டமாகக இந்த விதத்தில் அல்லது அந்த விதத்தில்தான் செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொள்ளலாம். தியான நேரத்தின் மூலமாக தேவனைச் சந்திப்பதின் மகிழ்ச்சி மனதில் கிளர்ந்தெழச்; செய்யும்படி உதவி செய்வதும் இந்தப் பாடத்தின் நோக்கங்களுள் ஒன்று என்பதைத் தலைவர்கள் மறக்கக் கூடாது.

சுருக்கம்
கூர்ந்து நோக்குதல்
ஆய்வு செய்து ஒப்பிட்டுப் படிக்கும் வேதபாடத்தின் முதலாவது நிலை கூர்ந்து நோக்குதல். இது பாட பகுதியிலிருந்து உண்மைகளைக் கண்டுபிடிப்பதைக் குறிப்பிடுகிற்து. இதைச் செயல்படுத்துவதற்கு சுருக்கமாக் கூறுதல், மீண்டும் எடுத்துக் கூறுதல், வேறே சொந்த வார்த்தைகளில் சுருக்கி எழுதுதல், பாடப் பகுதிகளைச் சிறு பிரிவுகளாகப் பிரித்து துணைத் தலைப்புகள் கொடுத்தல் இவை போன்ற இன்னும் பல முறைகளும் உபயோகிக்கப்படுகின்றன. கூர்ந்து கவனித்தல், ஆய்வு செய்து ஒப்பிட்டு வேதத்தைப் படிக்கும் முறையின் நோக்கமாக இல்லாத போதிலும், இது ஒரு முக்கியமான நிலை. ஏனென்றால் கூர்ந்;து கவனித்தல் இந்த வேதபாட முறையின் மற்ற நிலைகளுக்கு அஸ்திபாரமாக இருக்கிறது.

விளக்கம் சொல்லுதல், ஆராய்தல் மற்றும் தியானித்தல்
ஆய்வு செய்து ஒப்பிட்டு வேதபாடம் கற்பதில் அடுத்த நிலை விளக்கம் சொல்லுதல். இது கூர்ந்து கவனித்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பகுதியின் அர்த்தத்தைதக் கண்டு பிடிப்பதைக் குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடப் பகுதியின் அர்த்தத்தைக் கண்டு பிடிப்பதற்கு ஆய்வும் தியானமும் தேவைப்படுகின்றன. கூர்ந்து கவனித்தலின் போது வெளிப்புறமாக உள்ள உதவி வாய்ப்புளான அகராதி, வேத வியாக்கியானப் புத்தகம் போன்றவை (கமென்ட்ரி) பயன்படுத்தப்படுகிறது. ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வேதபகுதியின் ஆழ்ந்த புரிந்துணர்வையும் விளக்கத்தையும் தேடுவதற்கு தியானம் பயன்படுகிறத.

ஆழ்ந்து சிந்தித்தல்
ஆய்வு செய்து ஒப்பிட்டு வேதபாடம் கற்பதின் மூன்றாவது நிலை ஆழ்ந்து சுய சிந்தனை, கூர்ந்து கவனித்தலும், விளக்கம் சொல்லுதலும் வேதாகமத்துடன் சம்பந்தப்பட்டிருந்தால், சுய தியானம் ஒரு நபரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறருது. அத்துடன் கூர்ந்து கவனித்தலும் விளக்கம் சொல்லுதலும் புற நோக்கு சார்ந்ததாக இருக்கும்போது, ஆழ்ந்த சுய சிந்தனை உள் உணர்வு சார்ந்ததாக இருக்கிறது. ஆழ்ந்த சுய சிந்தனை நமது இருதயங்களிலும் மனதிலும் நிகழ்கின்றவற்றைக் குறிப்பிடுகிறது. அதாவது சவால்கள், உணர்வுகள், தற்பரிசோதனை விளக்கம், கூறுதலின் மூலமாகக் கண்டு பிடிக்கப்பட்ட உண்மை, பாடங்கள் பற்றியதாக இருக்கிறது.

செய்லபடுத்துதல்
இந்த வேத பாடத்தின் கடைசி நிலை வாழ்க்கையில் செய்லபடுத்துதல், ஆழ்ந்த சுய சிந்தனை நமது இருதயங்களைப் பற்றியதாக இருந்தால் செயல்படுத்துதல் நமது செய்கைகளைப் பற்றியதாக ஆழ்ந்த சிந்தனையானது (விளக்கம் சொல்லுதலின்) மூலமாகக் கண்டு பிடிக்க உண்மை, பாடங்களை நாம் செய்லபடுத்த வேண்டும் என்று நினைக்கவும் உணரவும் செய்யும். வரம்புக்குட்பட்டது. மாறாக செயல்படுத்துதல் நாம் கண்டு கொண்ட உண்மை, பாடங்களை நமது வாழ்க்கையில் செய்லபடுத்தும் படி தீர்மானங்களும் திட்டங்களும் வகுக்கும் வரம்புக்குட்பட்டது.

3. இவ்வாறாக உங்களுடைய தியான நேரத்தை மேற்கூறிய முறையில் பதிவு செய்வீர்களானால் இந்த நான்கு நிலைகளில் எது அதிக கடினமானதாகவும் எது எளிதாகச் செய்யக்கூடியதாகவும் இருக்கும்?
- நீங்கள் அனைவரும் உங்கள் தியானத்தை முடிந்திருப்பீர்கள். அந்நேரத்தில் நீங்கள் எழுதி வைக்கக் கூடியதற்கும் அதிகமான விஷயங்களை உணர்ந்திருப்பீர்கள்” என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுவதின் மூலமாகப் பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்க வேண்டும். பயிற்சி பெறுவோர் தியான நேரத்தை ஏதோ சீஷத்துவப் பயிற்சி வகுப்புக்குரிய வீட்டுப்பாட பயிற்சி என்று மட்டுமே கருதாத படிக்குத் தலைவர்கள் அவர்களை ஊற்சாகப்படுத்த வேண்டும்.

(நான்கு விதங்களான தியான நேரக் குறிப்பு)
4. ஒரு தியான நேரக் குறிப்பு பொதுவாகப் பின்வரும் வடிவமைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். கீழ்க்கண்ட அட்டவணையை ஒப்பிட்டுப் பார்க்க உபயோகிக்கவும்.
- நான்கு விதமான தியான நேரக் குறிப்புகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் அறிக்கவும் வேண்டியது அவசியமாகும்.


1. வகை 1ஏ ஆழ்ந்த சுய சிந்தனையை மாத்திரம் பதிவு செய்கிறது. ஒருவருக்கு சவாலாக விளங்கும் பகுதி மனதைத் தொட்ட பகுதி அல்லது பாடப் பகுதியிலிருந்து புதிதாக உணரப்பட்டது போன்றவற்றை மாத்திரம் குறிப்பிட்டு எழுதி வைப்பது முதலாவது வகை. பயிற்சி பெறுவோரில் பலர் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
2. வகை 2பி - கூர்ந்து கவனித்தவற்றையும் ஆழ்ந்த சுய சிந்தனையையும் பதிவு செய்கிறது. ஆழ்ந்து விரிவாகக் கற்பதும், இதிலிருந்து கிடைக்கப்பெறும் சவால்களும், பாடப்பகுதியை நாம் எவ்வளவு நன்றாகக் கூர்ந்து கவனிக்கிறோமோ அதைப் பொறுத்ததாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள் பாடப் பகுதியை மூன்றுமுறை அல்லது அதற்கும் அதிகமாக வாசித்து, அந்தப் பகுதியை; தன் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாக எழுதி அதன்பின்பு தங்கள் சுய சிந்தனைகளைக் குறிப்பிட்டு எழுதி வைக்கிறார்கள்.
3. வகை 3சி - கூர்ந்து நோக்குதல், ஆழ்ந்த சுய சிந்தனை செயல்படுத்துதல் இவற்றைப் பதிவு செய்கிறது. வகை 3, வாழ்க்கையில் செய்லபடுத்துதலையும் சேர்த்துக் கொள்ளுகிறது. இதைச் சார்ந்தவர்கள் படித்துக் கொண்ட பாடங்களை எப்படித் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்வார்கள் என்பதைக் குறிப்பிட்டுத் திட்டமாக எழுதுவார்கள்.
4. வகை 4டி - கூர்ந்து நோக்குதல், விளக்கம் கூறுதல் ஆழ்ந்த சுய சிந்தனை செயல்படு;துதல் ஆகிய யாவற்றையும் குறிப்பிட்டுப் பதிவு செய்கிறார்கள். நான்கு வகைகளிலும் இது மிகக் கடினமானது. உண்மையில் விளக்கம் சொல்லுதலில் பழக்கப்பட்டுள்ள ஒருவர், ஆய்வு செய்து ஒப்பிடும் முறையான வேதபாட வகுப்பை நடத்துவதற்கு ஆயத்தமாக இருப்பவர் என்று கருதப்படலாம். தியான நேரத்தைப் பழக்கப் படுத்திக் கொள்வதின் ஒரு முக்கியமான குறிக்கோள் இது என்பதைப் பயிற்சி பெறுவோருக்கு நினைப்பூட்ட வேண்டும்.
(குறிப்பு)
மக்கள் ஒரே நாளில் மாறுவதில்லை. அது போலவே பயிற்சி பெறுவாரும் படிப்படியாக, மெதுவாக வளர்ச்சியும் மாற்றமும் அடைவார்கள் என்பதைத் தலைவர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இருந்த போதிலும் பயிற்சி பெறுவோருக்கு அதிகப்படியான வீட்டுப்பாட பயிற்சியும் தியான நேரமும் சேர்த்துக் கொடுப்பதின் மூலமாக அவர்களை உடனே, மாற்றும் படி அல்லது வளர்ச்சியடையும்படி வலுக்கட்டாயப்படுத்த முயற்சி செய்யும் சில தலைவர்கள் இருக்கின்றனர். செய்லபடுத்துதல் படிப்படியாகவே முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதைத் தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

5. மேற்குறிப்பிட்ட இந்த நான்கு வகைகளில் ஏ, பி, சி, டி (1-4) எந்த வகையை நீ விரும்புகிறாய்?
- பயிற்சி பெறுவாரில் யாராவது புரிந்து கொள்ளும் திறனில் குறைவுள்ளவர்களாக அல்லது இயல்பான விருப்பம் இல்லாதவர்கiளாகத் தங்கள் தியான நேரக் குறிப்பைப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பின் படி எழுதக் கஷ்டப்படுவார்களானால், அவர்கள் தங்கள் வேத வாசிப்பில் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்த வேத வசனங்களை மாத்திரம் எழுதும்படி அவர்களை ஊக்குவியுங்கள்.
(குறிப்பு)
6வது கேள்வி ஒரு விதத்தில் இந்தப் பாடத்திலுள்ள மிக முக்கியமான கேள்வியாகும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒதுக்கப்படும் நேரம், ‘அந்தக் கேள்வியின் முக்கியத்துவத்தைப் பொறுத்தது’ என்ற கொள்கையின்படி, இந்தக் கேள்விக்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். எனவே, இந்தப் பாடத்தில் 6-வது கேள்விக்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது கொடுக்கப்பட வேண்டும்.

(தியான நேரப் பழக்கம்)
6. உங்களுடைய தலைவர் தேந்தெடுத்த வேத பகுதியை உபயோகித்து, உங்களுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டு, உங்கள் தியான நேரத்தைப் பதிவு செய்யுங்கள். பின்பு உங்கள் குறிப்புகளைக் குழுவிலுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்;து கொள்ளுங்கள்.
- தலைவரினால் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதியைக் கொண்டு பயிற்சி பெறுவோர் ஒரு  தியான நேரக் குறிப்பை எழுதி வைக்கவும். தங்கள் குறிப்பைக் குழுவிலுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அவற்றைக் குறித்துத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் ஊக்குவியுங்கள்.
- பயிற்சி பெறுவோரில் அநேகருக்க வேதாகமத்தில் நன்கு தெரியாத, நிருபங்கள் அல்லது தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்து பகுதிகளை எடுக்காமல், கதை வடிவிலுள்ள சரித்திரம் சார்ந்த புத்தகங்களிலிருந்து தியான நேரத்திற்கான பகுதியைத் தெரிந்தெடுக்க முயற்சி செய்யுங்கள்.


முடிவுரை
1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தை சுருக்கமாகக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும் படி உதவி செய்ய வேண்டும்.

2. தீர்மானங்களும் செயல்படுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும் படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றை செயல்படுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப்படி பகிர்ந்து கொள்ள வேண்டம்.

4. முடிவில் துதி செலுத்துதல்

5. ஜெபம்

- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டித் தெளிவு படுத்திப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர;கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
- அவர்களுடைய குணமும் வாழ்க்கையும் முற்றிலும் மாற்றம் அடைவதற்குச் செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்க்கையையும் பரிசுத்த அவியானவர் முற்றிலும் மாற்றும்படி ஜெபிக்கவும்.

6. வீட்டுப்பாடப் பயிற்சி
1) அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பயிற்சி - பயிற்சி பெறுவோர் தியான நேரத்தில் ஈடுபடும் போது வாழ்க்கையில் தாங்கள் காணும் மாற்றங்களை (மாற்றங்கள் இருக்குமானால்) எழுதி வைக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.
2) வாசிக்கும்படி கொடுக்கப்படும் பகுதி
3) மனப்பாட வசனங்கள் - கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கராலும் விவாசிக்கிறவன் எவனோ, அவனுக்கு இரட்டிசிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது. ரோமர் 1:16
வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16-17.
4) தியான நேரம்
விதைக்கிறவன் உவமை மத்தேயு 13:1-13


சீஷத்துவப் பயிற்சித் தலைவரின் குணாதிசயம்
சீஷத்துவப் பயிற்சித் தலைவர் ஒரு சாதாரண தொழில் நுட்ப வல்லுனர் அல்ல. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையிலான சந்திப்பு - ஒரு தனிப்பட்ட சந்திப்பு - சிறு குழுவில் நடைபெறுகிறது. இதன் விளைவாக சீஷத்துவப் பயிற்சியில் வெற்றி பெற, தலைவர்களுக்குச் சிறு குழுக்களை வழி நடத்துவதற்கான திறன்கள் மட்டும் இருந்தால் போதாது. பயிற்சி பெறுவோர் தலைவருடைய திறமைகளைக் காட்டிலும் அதிகமாக, அவருடைய பண்பு, குணாதிசயத்தையே பார்க்க விரும்புகிறவார்கள். எனவே, சீஷத்துவப் பயிற்சித் தலைவரின் குணாதிசயம் அதிகமாக வற்புறுத்தப்பட வேண்டிய ஒரு நற்பண்பாக இருக்கிறது.
ஒரு சீஷத்துவப் பயிற்சித் தலைவரின் குணாதிசயத்தை இரு பாகங்களாக கவனிக்கலாம். முதலாவது அவருடைய ஆவிக்கரிய பிரகாரமான தன்மை உருவாக்கப்பட்டு தேவனோடுள்ள அவரது உறவு உறுதியாக்கப்படுவது.

இரண்டாவது, மற்றவர்களோடு தலைவருக்குள்ள உறவில் உருவாக்கப்பட்ட அவருடைய தனித் தன்மை (குணம்) நேர்மை ஆகியவை. குணாதிசயம் என்பது, ஒருவர் மக்களோடு கொள்ளும் உறவுகள், விவகாரங்களிலிருந்து சாதாரணமாக வெளிப்படும் ஒரு மனப்பான்மை என்று அநேகர் கருதுகிறார்கள். வேறு வார்த்தைகளி;ல் கூறுவோமானால், குணாதிசயத்தைப் பற்றிப் பேசும்போது, மக்கள் அநேகமாக இந்த இரண்டாவது பாகத்தைப் பற்றி மாத்திரம் நினைக்கிறார்கள். குணாதிசயம் என்பது மக்களுடன் உறவு கொள்வதற்கு முன்பாகவே அவர் தேவனோடு கொண்டுள்ள உறவிலிருந்தே வெளிப்படும் மனப்பான்மை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால், மக்கள்பால் நாம் கொண்டிருக்கும் மனப்பான்மையைக் காட்டிலும் தேவன் பால் நாம் கொண்டிருக்கும் மனப்பான்மையே உறுதியானதும் தீர்மானிக்கிறதுமான அடித்தளமாக அமைகிறது.

இந்த விதத்தில், சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள்; தங்கள் வாழ்க்கையில் தேவனோடு கொள்ளும் ஐக்கியத்திற்கு முதலிடம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய ஆயத்தமுள்ளவர்களாகவும் எல்லாக் காரியங்களிலும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புகிறவர்களாகவும் இருக்க வேண்டும். சீஷத்துவப் பயிற்சித் தலைவர்களின் குணாதிசயம் அவர்களுக்குத் தேவனோடுள்ள உறவினால் உருவாக்கப்படும்போது, பயிற்சி பெறுவோருடன் உறவு கொள்வதில் அவர்களுடைய குணாதிசயமும் மாற்றப்படும்.

சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் பிறரிடம் அன்பும் மனவுருக்கமும் உடையவர்களாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் சாந்தமும் இரக்கமும் உள்ளவராக இருப்பதுடன் மன்னித்து ஏற்றுக் கொள்பவராகவும் இருக்க வேண்டும். சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் மனத்தாழ்மையுடையவர்களாக மாற்றவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். ஒரு தலைவர் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனையும் மாற்ற முடியாது என்று நம்பிக்கையை இழந்து விடக் கூடாது. இருந்த போதிலும் மறந்து விட வேண்டாம் இந்த குணாதிசயம் ஒருவர் தேவனோடுள்ள உறவில் தன்னைத்தானே எவ்வாறு கூர்மையாக்கித் தகுதியுள்ளவராக்கிக் கொள்கிறார் என்பதையே பொறுத்திருக்கிறது.




தலைவரின் தற்பரிசோதனைப் பட்டியல்

தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுய மதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 5 4 3 2 1

மனவோட்ட வரை உபயோகம்: இந்தப் படம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திந்தேனா?

பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் சரிவரப் புரிந்திருந்தேனா?

ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கு இடையேயும் கடந்து செல்லும் போது சுமூகமாக இருந்ததா?


அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்):

அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை பொருத்தமானதாக இருந்ததா?

நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?


கேள்வி:
நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
(திறந்த, ஆம்-இல்லை கேள்விகள்) தெளிவாகவும் விபரமாகவும் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் ஆம் இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும், சரியான விதத்திலும் உபயோகித்தேனா?

கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
பயிற்சி பெறுவோர் விடையளிக்கும் போது நான் அனுதாபத்துடன் கேட்டு, பொருத்தமான பாவனை, சைகை, குரலில் ஏற்றத் தாழ்வு, நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா? பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக ஒழுங்கு படுத்தினேனா?

திறந்த மனப்பான்மை
பயிற்சி பெறுவோரிடம் நான் மனம் விட்டுப் பேசினேனா? பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்ககை, குணாதிசயம் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பித்தேனா?
பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களையுப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?

ஊக்குவிப்பு.
பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
பகிர்ந்து கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?

நேரத்தை நிர்வகித்தல்:
ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தை ஒதுக்கினேனா? - கூர்ந்து நோக்குதல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவை. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளி;ன் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?

பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்:
பரிசுத்த ஆவியானவர் ஒளியூட்டித் தெளிவு படுத்துவதை நான் நாடித் தேடினேனா?
பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையும் உள்ளத்தில் உணர்ந்து அதின்படி செயல்பட்டேனா?


கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும்:
பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம் செய்து, சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?

பயிற்சி பெறுவோரைப் புரிந்துணர்ந்து கொள்தல்:
பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?

இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும், ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?

அவரே வனாந்தரத்தில் தனித்துப போய் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். (லூக்கா 5:16)