தேவ வார்த்தையை
தியானிப்பதில் ஏற்படும் நன்மையைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு சங்கீதத்தின் இன்னொரு
பகுதியை எடுத்துக்கூற விரும்புகிறோம். சங்கீதம் 19.7-8ஐ எடுத்துக் கொள்ளுங்கள். சங்கீதக்
காரன், தேவ வசனத்தால் கிடைக்கும் எண்ணிலடங்கா நன்மைகைளைப் பட்டியலிட்டுள்ளான். பின்வரும்
நன்மைகள் தேவ வசனத்தைத் தியானிப்பதால் கிடைக்கின்றன:
1. வசனம் 7: ஆத்துமாவைப்
புதுப்பிக்கிறது. (உங்கள் உள்ளார்ந்த மனிதம் பெலப்படுத்தப்பட்டு, உங்கள் ஆத்துமா
புதுப்பிக்கப்படுகிறது. – நீங்கள் தீர்க்கதரிசனம் கூறத் தொடங்குகிறீர்கள்!)
2. வசனம் 7b: உங்களை
ஞானவானாக மாற்றுகிறது (ஞானம் என்பது, எந்த பிரச்சனைகளையும் எல்லாவிதமான
பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது. நீங்கள் பிரச்சனையைத் தீர்ப்பவராக மாறுகிறீர்கள். –
ஞானத்தின் வசனங்கள் உங்களில் செயல்படத் தொடங்குகிறது.
3. வசனம் 8: உங்கள்
உள்ளத்தை மகிழச் செய்கிறது. (நமது உணர்வுகள் சந்தோஷத்தைத் தரும் ஆரோக்கியமான
ஔடதமாக மாறுகிறது. – கவலைகளையும் அச்சங்களையும் ஜெயங்கொள்கிறீர்கள். – புத்தாக்கம்
மூலம் நீங்கள் ஆராதிப்பதற்கு விடுதலை பெறுகிறீர்கள்)
4. வசனம் 8b: நமது பார்வையை
பிரகாசிக்கச் செய்கிறது. (தெய்வீகப் பார்வையைப் பெற்றவராக நீங்கள் மாறுகிறீர்கள் –
சராசரி தீர்மானங்களை மாற்றும் அளவுக்கு வல்லமை மிகுந்தவராக நீங்கள் மாறுகிறீர்கள்.
– வெளிப்படுத்தலின் வரம் உங்களில் செயல்படுகிறது.)
ஆகவே,
நண்பர்களே, தியானம் என்பது வல்லமாயன ஆவிக்குரிய கருவியாகும். இந்த ஒழுக்கத்தைக்
கடைபிடித்த இயேசுவின் உண்மைத்துவத்தை நம்மைச் சூழ்ந்துள்ளவர்களிடம் பரப்புவோமாக.
உங்கள் தியானம்
சந்தோஷகரமாக அமையட்டும்!
No comments:
Post a Comment