Monday, March 13, 2017

ஆராதனையின் அடிப்படைக்குத் திரும்புவோம் – நான், அவர், பிறர்





ஊழியம்
  1. கிரேக்க மொழியில் ‘மினிஸ்திரி’ என்றால் ‘ஊழியம் செய்தல்’ என்று பொருள். (அல்லது பணிவிடை செய்தல்.
1 பேதுரு 4:10 -  அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
  1. தேவன் எனக்கு அருளிய காரியங்களைக் கொண்டு அவர் நிமித்தம் பிறருக்கு பணிவிடை செய்வது ஊழியம் ஆகும்.
  2. ஊழியத்தின் 3 அடிப்படைக் கூறுகள் – நான், அவர், பிறர்.


கூறு 1 – நான்: ஆராதனை ஊழியர்

(I)            தேவனுடைய ஊழியர் யார்? நம்மில் பெரும்பாலோர், குருவானவர், பாஸ்டர், பிரசங்கியார், சபை மூப்பர், ஆராதனை நடத்துநர், சபைப் பள்ளி ஆசிரியர், ஜெப வீரர், பிணியாளிகளைச் சந்தித்து ஜெபிப்பவர்கள், சபை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சுட்டிக் காட்டுவர். இவர்கள் சந்தேகமில்லாமல் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்றாலும், இவர்கள் மட்டுமா கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள்?

(II)           கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் அனைவரும் தேவனுடைய ஊழியக்காரர்கள்!
·         எபேசியர் 4:13 -அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.

·         எபேசியர் 4:11-12, சபை மூப்பர்கள் (அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், பாஸ்டர், உபதேசகர்) கிறிஸ்துவின் ஜனங்களை (அவருடைய ஜனங்கள்) ஊழியத்திற்கு ஆயத்தமாக்குகிறவர்கள் (ஊழியப் பணிகள்) என்று சொல்கிறது. ஆகவே, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஊழியர்கள் என்று வேதம் சொல்கிறது!

·         1 பேதுரு 2:9 - நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

·         நீங்கள் ஆராதனைத் தலைவராகவோ, பாடகராகவோ, பாடகர் குழு உறுப்பினராகவோ, இசைக் கருவி வாசிப்பாளராகவோ, ஒலிப் பெருக்கி இயக்குநராகவோ, ஒளிக் கருவி இயக்குநராகவோ, வரவேற்பாளராகவோ, செய்தியேடு பொறுப்பாளராகவோ, மாத்திராமக மட்டும்  செயல்படவில்லை. – நீங்கள் ஒரு ஆராதனை ஊழியர்!

(III)         உங்களை நீங்கள் இப்படிப் பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் ஜீவியம் எப்படி மாறுபடும்?

·         நீங்கள் சபையில், அதுவும் ஆராதனை நேரத்தில் உங்களை ஆராதனைத் தலைவர், பாடகர், பாடகர் குழு உறுப்பினர், இசை மீட்பவர், ஒலிக் கருவி இயக்குநர், ஒளிக் கருவி இயக்குநர், வரவேற்பாளர், சபை செய்தியேட்டுப் பொறுப்பாளர், என்று மட்டுமே கருதக்கூடும்.

·         ஆனால், ஆராதனை ஊழியர் என்ற முறையில் பின்வரும் ஜீவிய பாணியை நீங்கள் பின்பற்ற வேண்டும்:

(a)       ஆராதனை என்பது ஞாயிற்றுக் கிழமை மட்டும் அல்ல
Ø   அப்17:28a - ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.
Ø   நமது ஜீவியத்தில் தேவன் ஒருங்கிணைந்தவராய் இருக்கிறார் – நமது சுவாசம், ஜீவியம், சஞ்சாரம், இருப்பு அவரிலும் அவர் மூலமாயும் இருக்கிறது.
Ø   ஆகவே, நமது ஆராதனையை எங்ஙனம் சபையின் ஞாயிற்றுக் கிழமை ஆராதனையில் மட்டும் வைத்துக் கொள்ள முடியும்? மற்ற நாட்களில் நமக்கு சுவாசம், ஜீவியம், சஞ்சாரம், இருப்பு என்று எதுவும் கிடையாதா?

(b)       ஆலயம் மட்டும் ஆராதனைக்குரிய இடமல்ல
Ø   யாத்திராகம் 3:5ல் தேவன் மோசேயிடம், அவன் நிற்கும் நிலம் பரிசுத்தமானது என்று சொல்லி ஈர்த்தார். அந்த நிலம் பரிசுத்தமானதல்ல. ஆனால், தேவனுடைய பிரசன்னம் அந்நிலத்தைப் பரிசுத்தமாக்கிற்று.
Ø   தேவன் எங்கும் நிறைந்தவராய் இருக்கிறார் – அவர் பரலோகத்தையும் பூமியையும் நிரப்புகிறார் (எரேமியா 23:24). எங்கும் நிறைந்திருக்கிறார். ஒரு சிறிய இடத்தையும் அவர் நிறப்புவார். (ODB, ஜனவரி 8, 2013).
Ø   எனவே, தேவாலயத்தில் மட்டும் பரிசுத்த நிலம் இருக்கிறது என்று கண்ணோட்டத்தில் ஒருவன் ஆலயத்தில் மட்டும் தேவனை ஆராதிக்கத் தேவையில்லை!

(c)       ஆலயத்தில் ஆராதனை நேரத்தில் மட்டுமோ, துதி ஸ்தோத்திர நேரத்தில் மட்டுமோ ஆராதனை சுறுக்கப்படவில்லை
Ø   எல்லா நேரத்திலும் எல்லா காரியத்தில் நாம் ஆராதிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்:
-       இடைவிடாமல் தேவனை ஆராதி – எபிரேயர் 13:15 / சங்கீதம் 105:4
-       சூரியன் உதித்து அஸ்தமிக்கும் நேரம் வரை தேவனை ஆராதி – சங்கீதம் 113:3
-       எல்லா நேரத்திலும் தேவனை ஆராதி – சங்கீதம் 34:1 / 2 சாமுவேல் 12:20
-       எதைச் செய்தாலும் அது தேவ காரியம் என்று கருதிச் செய் – கொலோசேயர் 3:23
-       எதைச் செய்தாலும தேவ மகிமைக்காகவே செய் – 1 கொரிந்தியர் 10:31

(IV)         ஆராதனை ஊழியர் என்ற முறையில் அது உன் ஜீவியத்தில் ஒரு பகுதி மாத்திரமல்ல; அது உன் ஜீவன்! அது ஒரு ஜீவிய முறை!



(V)           எனவே, இன்று ஆராதனை ஜீவிய முறையில் நாம் எப்படி ஈடுபடுகிறோம்?

                ஆராதனையின் செங்குத்து ஜீவிய முறை (தேவனுடன் உறவு)
 


               
                                         ஆராதனையின் கிடை  ஜீவிய முறை (பிறரோடு உறவு)

கூறு 2 – தேவன்: செங்குத்து ஆராதனை முறை ஜீவியம்

(I)            ஜீவியத்தின் அனைத்தையும், அனுதினமும் எடுத்து அதனை தேவனுக்கு ஒப்படை

·         ரோமர் 12:1 –அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
Ø  ஜீவ பலி  - அர்ப்பணிப்பு: அனுதின ஜீவியத்தை இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்படைத்து, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். (கொலோசேயர் 3:23 / 1 கொரிந்தியர் 10:31).

Ø  பரிசுத்தம் – பரிசுத்தத் தன்மை : இயேசு செய்ததைப் போல் / ஜீவித்ததைப் போல் செய்வது பரிசுத்தம் ஆகும். (பிலிப்பியர் 2:1-16 / 1 பேதுரு 1:15-16 / 1 யோவான் 2:6). குறிப்பு: பரிசுத்தம் என்பது ‘பிறனை விடப் பரிசுத்தமானவன்’ என்று பொருள் அல்ல. இது தற்பெருமையை வேராகக் கொண்டுள்ளது. கிறிஸ்துவின் பரிசுத்தம் மனத் தாழ்மையில் வேறூன்றியுள்ளது (பிலிப்பியர் 2:3, 6-8).

-       1 யோவான் 2:6 – பரிசுத்தம் என்பது ‘பிறனை விடப் பரிசுத்தமானவன்’ என்று பொருளல்ல; இது தற்பெருமையில் வேறூன்றியிருக்கிறது. கிறிஸ்துவினுடைய பரிசுத்தம் மனத்தாழ்மையில் வேறூன்றியிருக்கிறது! (பிலிப்பியர் 2: 3, 6-8)
-       யோவான் 2:6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

Ø  தேவனைப் பிரியப்படத்துதல் – அன்பு: முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
Ø  உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. (மாற்கு 12: 30 & 33).
-       எபிரேயர் 6:10 - ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.
-       1 யோவான் 5:3: அவருடைய பிரமாணங்களைக் கைகொள்வதே அவர் மீது காட்டும் அன்பாய் இருக்கிறது. (யோவான் 14:15, 21 & 23, 1 யோவான் 2:5 ஆகிய வசனங்களையும் காண்க).

(II)           தேவனுக்கு உத்தமமான காரியங்களைப் பேணுதல் – பாவம் ஆராதனைக்குத் தடையாக இருக்கிறது! 

·         ஏசாயா 59:2 - உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது..  



(III)         ஆராதனையின் செங்குத்தான முறை கடைபிடிக்கப்படுவதற்கான செயல்பூர்வமான உதாரணங்கள்:

·         அனுதினமும் தேவனுடன் சஞ்சரித்தல் – தியானம் (அமைதி நேரம்)
Ø  வேத வாசிப்பும் அவர் சத்தத்தைக் கேட்டலும்: வெளிப்படுத்தல் 1:3 – அவருடைய தீர்க்கதரிசன வசனங்களை உரக்க வாசிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அதைக் கேட்டு தங்கள் உள்ளத்தில் பதியச்செய்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் சமீபமாயிருக்கிறது.
Ø  புரிந்து கொள்ளுதல்: மத்தேயு 13:23 - நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
Ø  ஏற்றுக்கொள்ளுதல் (பெறுதல்): மாற்கு 4:20 - வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.
Ø  கீழ்ப்படிதல்: லூக்கா 8:15 - நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
Ø  நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் உன்னதமான மற்றும் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது. அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு, அதில், நிலைத்திருந்து விடா முயற்சியுடன் நல்ல தானியங்களைத் தருகிறார்கள்.

·         ஜெபம்
Ø  1 தெசலோனிக்கேயர் 5:16-18எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

·         தேவனைத் துதித்தலும் ஸ்தோத்தரித்தலும் (ஸ்தோத்திர ஆவியைப் பெருக்குவதோடு, எல்லா நேரத்திலும் எல்லா காரியத்திலும் தேவனுக்கு நன்றி செலுத்தச் செய்கிறது)
Ø  பிலிப்பியர் 4:6 - நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

·         சிந்தையும் சரீரமும்
Ø  1 கொரிந்தியர் 6:18 - கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.


·         ஈகை – நேரம், ஆற்றல், உடைமை
Ø  2 கொரிந்தியர் 8:3-5 -மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன். உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
Ø  2 கொரிந்தியர் 9:6-7 - பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

·         தேவனை ஆராதிக்க உண்மையான உள்ளம் வேண்டும்
Ø  எபிரேயர் 10:22 - துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

·         சரணடைதல் / தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்தல்
Ø  மாற்கு 14:36 - அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.


·         பாவத்தை அறிக்கை செய்து, மன்னிப்பு நாடி, மனந்திரும்புதல்
Ø  1 யோவான் 1:9 - நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

Ø  2 நாளாகம்ம 7:14 - என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

Ø  அப்போஸ்தலர் 3:20 - உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.

·         கீழ்ப்படிதல்
Ø  1 சாமுவேல் 15:22 - கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
Ø  யோவான்14:23 - இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

கூறு 3 – பிறர்: ஆராதனையின் கிடைமட்ட ஜீவிய முறை

(I)            நமது அயலாரோடும் சிறியவர் பெரியவரோடும் கொண்டுள்ள உறவு தேவ உறவில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது. தேவனிடத்தில் அன்பு காட்டுதலும் அயலாரிடத்தில் (பிறனிடத்தில்) அன்பு காட்டுவதும் ஒரே அழைப்பின் இரண்டு காரியங்களாகும்.
Ø  மாற்கு 12:30-31 - உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.


  • யோவான் 13:34-35 – நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.


(II)           ஆராதிப்பதற்கு முன்பு பிறரோடு ஒப்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
·         மத்தேயு 5:23-24 –ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

(III)         பிறர் நட்பைப் பேணுவதில் பொது விதி. இயேசுவைப் போல் ஒத்த சிந்தை கொண்டிருததல்!
·         பிலிப்பியர் 2:3-5 - ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

(IV)         ஆராதனையின் கிடைமட்ட நட்புறவை வளர்த்தலுக்கு சில அனுபவப்பூர்வமான உதாரணங்கள்:
·         பிறரை மன்னித்தல்
Ø  மத்தேயு 6:14-15 - மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
Ø  மாற்கு 11:25 - நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
Ø  யாக்கோபு 5:16 - நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

·         வெறுப்பையும் மனக்கசப்பையும் காட்டாதே
Ø  லேவியராகமம் 19:17 - உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்துகொள்ளவேண்டும்.
Ø  மத்தேயு 5:44 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
Ø  1 யோவான் 2:9-11 - ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
Ø  லேவியராகம்ம 19:18 - பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.


·         குறை காணுதலை நிறுத்து
Ø  கலாத்தியர் 5:15 - நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
Ø   “விசுவாசிகள் அயலானிடத்தில் குறைகண்டு பிடிக்கும் குணத்தை வளர்ப்பது ஆராதனைக்கு விரோதமானது.”

·         அன்பும் பொறுமையும் கொள்
Ø  எபேசியர் 4:31-32 - சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
Ø  1 பேதுரு 4:9 - முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Ø  எபேசியர் 4:2-3 - மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.

·         பிறரை உற்சாகப்படுத்து
Ø  எபிரேயர் 10:24-25 - மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.
Ø  ரோமர் 15:2 - நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
Ø  1 தெசலோனிக்கேயர் 5:11 - ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

·         அயலானை மதி
Ø  ரோமர் 12:10 - சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.


ஓர் ஆராதனை ஊழியரின் பணியில் அசைவாடும் தேவ வல்லமை

(I)                  சுகம் பெறுதல்
·         யாத்திராகமம் 23:25-26 - உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.
·         ஆராதனை ஊழியரின் பணி சுகத்தைக் கொண்டு வருகிறது.


(II)                வெற்றி
·         2 நாகாகமம் 20: 1-29 (யோசபாத் கரத்தில் மோவாபியர்களும் அம்மோனியர்களையும் தோற்றுப் போகுதல்)
·         வசனம் 17: இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;
·         வசனம் 21-23 -  பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக் குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.
·         1 சாமுவேல் 17:47 - கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
·         ஓர் ஆராதனை ஊழியரின் பணி பகைஞன் (பிசாசு), பாவம், பணத் தொல்லை, குடும்ப பிரச்சனை ஆகிய எல்லா போராட்டங்களிலும் வெற்றியைக் கொண்டு வரும்.


(III)              திருப்புமுனை
·         அப்போஸ்தலர் 16:16-40 (சிறையில் பவுலும் சீலாவும்)
·         வசனம் 22 – 26 -  அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

·         ஓர் ஆராதனை ஊழியரின் ஆராதனை, கட்டுகளை முறிக்கும், கலக்கம், கவலை, அச்சம், வேதனை, பாவம், அழிவு, ஒடுக்கம், அநீதி என்று யாவற்றையும் போக்கும் வல்லமை கொண்டுள்ளது.