Wednesday, August 30, 2017

குடும்ப நிறுவனம் முன்னேற்றம் காண்கிறதா?

மலேசிய இந்தியக் குடும்பங்களுக்கு ஷலோம்

குடும்ப நிறுவனம் முன்னேற்றம் காண்கிறதா? சிதைவுறுகிறதா? பழமைவாதிகள் ஒருவேளை முன்னேற்றம் காண்கிறது என்று சொன்னாலும், தீவிரவாதப் போக்குடையவர்கள், ஆதி நோக்கத்தில் இருந்து வெகு தொலைவு சென்றுவிட்டதால், இன்றைய குடும்ப நிறுவனத்திற்கு எதிர்காலம் இல்லை என்று வாதிடுவர். அற்ப காரணங்களுக்காக விவாகங்கள் முறிகின்றன. இல்லங்களில் பாதுகாப்பும் சமாதானமும் இல்லாததாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நேரத்தை ஒதுக்க முடியாததாலும், அவர்கள் வெளியே சென்று நண்பர்களிடமும் சகாக்களிடமும் பாதுகாப்பை நாடுகின்றனர். தங்கள் பாடுகளுக்கு காரணம் மற்றவர் என்று ஒருவரை மற்றவர் குறைகூறுவதால், வெறுப்பில் மூழ்குகின்றனர். தாங்கள் வறுமையில் வாடினால், அரசாங்கத்தையும், கல்வி முறையையும், இந்திய சமுதாயம் ஓரங்கட்டப்படுவதையும் வேறு பல காரணங்களையும் பட்டியல் போடுவர். எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், நம் குடும்ப நிறுவனம் ஓர் இக்கட்டான பயணச் சந்திப்பில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வருவோம். குடும்ப உறுப்பினர்கள் மிக அணுக்கமாக பிணையப்பட்டிருந்த முத்தான பழைய காலத்தை நாடுகிறோம். அந்தக் காலத்திற்கு நாம் திரும்பச் செல்ல முடியுமா? அதற்குப் பின்வரும் ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

1.     கலந்துரையாடலுக்கான தேவைகள் – ஒருவரை மற்றவர் புரிந்து கொள்வதற்கும் பிரச்சனையைச் சமாளிப்பதற்கும் இது வழிவகுக்கும். தேவனோடு உரையாடி (இதை ஜெபம் என்று அழைக்கிறோம்) வாழ்க்கைப் பிரச்சனையை அவரிடத்தில் வைப்போம்.

2.     பெலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் – தோல்வி மற்றும் நம்பிக்கையற்ற நிலையை ஏற்றுக் கொள்வதற்கு இந்த முயற்சி அவசியம். நம்மை நாமே ஆராய்ந்து, தோல்வியடைந்த சூழ்நிலைக்கு நானும் காரணம் என்று ஒப்புக்கொள்ளுவோம்.

3.     நம்பிக்கையில் ஜீவிக்க வேண்டிய அவசியம் – இயேசு கிறிஸ்துவை நம் வாழ்க்கைக் கணக்கில் சேர்த்துக் கொண்டால், எப்படிப்பட்ட நம்பிக்கையற்ற சூழ்நிலையாய் இருந்தாலும், புது நம்பிக்கையால் பற்றிக் கொள்வோம்.

4.     விடாமுயற்சியின் அவசியம் – முயற்சிக்கு அளவே இல்லை என்று புரிந்து கொள்வோம்.

5.     நண்பர்களுக்காக அவசியம் – சமுதாய மூலதனங்கள் யாவற்றையும் சமுதாய ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வோம்.

6.     மத ரீதியான தேவை – சபைகள் தன்னில் பிளவுபடாமலும் சமுதாய நலனில் சுய மகிமை தேடாமலும் உழைக்க வேண்டும். 


7.     நேசிக்க வேண்டிய அவசியம் – எந்தத் தொடக்கத்திற்கும் நிச்சயமாக இது முக்கியம். தேவன் நம்மை நேசித்ததால் தம் பரிசுத்த குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பினார். ஆகவே, மலேசிய இந்திய சமுதாயத்தை மேம்படுத்த நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் அன்பால் அணிவிக்கப்பட வேண்டும். 

Sunday, August 20, 2017

தனி நபர் சுவிசேஷ ஊழிய வழிகாட்டி



தனி நபர் சுவிசேஷ
ஊழிய வழிகாட்டி

1. முன்னுரை – தனி நபர் சுவிசேஷ ஊழியம்:

தற்பரிசோதனைக் கேள்வி: இந்த ஊழியத்தில் நீ ஈடுபடுவதன் காரணம் யாது?

1.1 மனுகுல இரட்சிப்புக்கான தேவ திட்டம்:

V மனிர்கள் யாவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற தேவ திட்டத்தை நாம் வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்:



யோவான் 3:16

தேவன்தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்குஅவரைத் தந்தருளிஇவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

தீமோத்தேயு 2:4

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

பேதுரு 3:9
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடிகர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பிநம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

V கிறிஸ்தவர் என்ற முறையில் நம் அனுதின ஜீவியத்தில் தேவன் நம்மை இரட்சிக்கும் திட்டத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

1.2 தனி நபர் சுவிசேஷத்திற்கான அழைப்பு:

கொரிந்தியர் 9:16-17
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும்மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லைஅது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறதுசுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால்எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டுஉற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும்உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.


V சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஊழியம் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொதுவானது என்று அப்போஸ்தலர் பவுல் தெளிவு படுத்துகிறார்:

  அவர் பின்வரும் பதங்களைப் பயன்படுத்துகிறார்:
(a) கடமை               (b) உக்கிராணம்                 (c) உத்தியோகம்
V இயேசு கிறிஸ்துவின் வழி கிடைக்கும் இரட்சிப்பின் பலனைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து யாரும் விலக முடியாது (தீமோத்தேயு 2:10).


V கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்குச் சிறப்பு அழைப்பு தேவையில்லை.

2. தனி நபர் சுவிசேஷத்தின் யதார்த்தங்கள்:

V இந்த ஊழியத்தில் முழுமூச்சாக ஈடுபடுவதற்கு முன் சுய ஆயத்தங்கள் செய்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

2.1 ஆவிக்குரிய யுத்தத்தில் தனி நபர் சுவிசேஷம் சம்பந்தப்படுகிறது:

V சுவிசேஷத்தை அறியாதவர்கள் அல்லது அதற்குத் துலங்காதவர்கள் ஆவிக்குரிய குருட்டுத்தனத்தில் உள்ளனர் என்று வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது.

கொரிந்தியர் 4:4

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளிஅவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்குஇப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

V பரிசுத்த ஆவியில் சார்ந்திருந்து, நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட சுவிசேஷத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

V சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதான கடமை பின்வரும் காரியங்களைக் கொண்டிருப்பதாக வேதாகமம் போதிக்கிறது:

அப்போஸ்தலர் 26:17-18

உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாகஅவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும்சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டுஇப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.


(a) அவர்கள் கண்கள் திறக்கப்படும் பொருட்டு
(b) இருளில் இருந்து ஒளியினிடத்திற்கு வருகை
(c) தேவனைப் பற்றும் விசுவாசத்தில் இருந்து விலகி சாத்தானின் அதிகாரத்திற்கு உட்படுதல்
(d) பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுதல்
(e) தேவ வாரிசுரிமையைப் பெறுதல்
(f) தேவனால் பரிசுத்தமாக்கப்படுதல்
(g) தேவனிடத்தில் விசுவாசம்

V பரிசுத்த ஆவியின் பணியில் சார்ந்திருந்து தேவனுடைய கிரயத்திற்காக ஆயத்தம் பெற வேண்டும். (எபேசியர் 6:10-17)

2.2 இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கப்பெறும் இரட்சிப்புக்கான சுவிசேஷத்தை அறிதலும் பகிர்தலும்

V சுவிசேஷத்தின் ஒட்டுமொத்த செய்தியை அறிந்து கொள்வதோடு, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு ஆயத்தமாக இருப்பது மிகவும் இன்றியமையாதது:

இயேசுவின் ஜீவியம்:
(a)பிறப்பு
(b)ஜீவியமும் ஊழியமும்
(c)இறப்பு
(d)உயிர்த்தெழுதல்
(e)பரமேறுதல்
(f)
2ம்வருகை





சுவிசேஷம்( 4 ஆவிக்குரிய விதி)
ஆவிக்குரிய விதி 1
ஆவிக்குரிய விதி 2
ஆவிக்குரிய விதி 3
ஆவிக்குரிய விதி 4
தேவன் உன்னை நேசிக்கிறார். உனக்காக அருமையான திட்டத்தை வகுத்துள்ளார்.
பாவத்தால் கலங்கப்பட்ட நாம் தேவனிடத்தில் இருந்து பிரிந்திருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து மாத்திரமே பாவ விமோஷனத்திற்கான ஒரே தீர்வு.
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம் விசுவாசத்தை வைக்க வேண்டும்..

V பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு முழு கடமையுணர்வோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நாம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

2.3. தனி நபர் சுவிசேஷத்திற்கான மண்டலங்கள்:

V ஜெபத்தோடு நோக்கும் போது, தனி நபர் சுவிசேஷத்திற்கான பல்வேறு மண்டலங்களை (அ. வாய்ப்புகளை) காணலாம்:

குடும்பம்
உறவினர்
நண்பர்
சக மாணவர்
அந்நியர்
அயலார்
சபை
V இவை யாவும் தேவனால் தனி நபர் சுவிசேஷத்திற்காக அருளப்பட்ட மண்டலங்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2.4 சுவிசேஷத்திற்குச் சாத்தியப்படும் ஆலோசனைகள்

(a) அவர்களை அறிந்து கொள்ளுங்கள்
(b) அவர்களிடம் மெய்யன்பையும் அக்கறையையும் காட்டுங்கள்.
(c) அவர்களிடம் மெய்யான நட்புறவைப் பேணுங்கள்
(d) அவர்களோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

V உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பு தகுதியான கேள்விகள் கேட்பது தனிநபர் சுவிசேஷத்தில் முக்கியமான அணுகுமுறை.

V தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்வதே நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அவர்களைக் குறை கூறுவது அல்லது, புண்படுத்திப் பேசுவது நம் கடமையல்ல.

V தனிநபர் சுவிசேஷம் தேவனுடைய வழிநடத்துதலால் அமையும் தொடர்ச்சியான செயற்பாங்கு ஆகும். அவருடைய ஞானத்திற்கும் பணிக்கும் நம்மை நாம் ஒப்புக் கொடுக்க வேண்டும.

3. கேள்வி பதில் அங்கத்தோடு முடிவுரை:

V தனிநபர் சுவிசேஷம் விசுவாசிகள் யாவர் மேலும் விழுந்த கடமையும் தயவுமாய் இருக்கிறது. (மத்தேயு 28:18-20)