Friday, July 29, 2016

லவோதிக்கேயா


லவோதிக்கேயா  (வெளிப்படுத்தல்  3:14-22) -
வெதுவெதுப்பான விசுவாசத்தைக் கொண்ட சபை (3:16)

முன்னுரை:
லவோதிக்கேயா ஒரு செழிப்பான நாடு. இங்கே மென்மையான கருப்புக் கம்பளியும், கண் இமைக்குப் பூசும் சாயமும் கிடைக்கிறது.
இதற்கு நீர் வளம் பல மைல் தூரத்தில் இருந்து கால்வாயிலில் இருந்து வருகிறது. எனவே, அந்நீர், அழுக்கடைந்தும், துர்நாற்றம் கொண்டும், இளஞ்சூடாகவும் (வெதுவெதுப்பு) இருக்கும்.
இது பவுல் கொலோசே சபைக்கு எழுதிய நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (கொலோசேயர் 4:16).

1. கிறிஸ்துவின் வர்ணனை:

வெளிப்படுத்தல்  3:14
உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;


இயேசு தம்மை ‘ஆமென்’ (ஏசாயா 65.16) குறிப்பிடுகிறது. அப்படியென்றால் உண்மையுள்ளவர் என்று பொருள்.
அவர் ‘உண்மையுள்ள சாட்சியும்’ கூட (எரேமியா 42:5 & வெளிப்படுத்தல்  1:5) - ‘தியாகி’.
இதன் அடிப்படையில் அவர் சிருஷ்டிப்பின் ஆரம்பமானவர்’ (கொலேசேயர் 1:15).


2. சபையைப் பற்றிய வர்ணனை:

வெளிப்படுத்தல்  3:15, 17
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

இச்சபை வெதுவெதுப்பானது என்று வர்ணிக்கப்படுகிறது – குளிரும் அல்ல, அனலுமல்ல.
செல்வம், செழுமை, சுய திருப்தி ஆகியவற்றால் இச்சபை தற்பெருமை பொண்டிருந்தது.
தேவனின் பார்வையில் இது உண்மையில் பரிதாபத்துக்குரியதும், பரிகாசத்துக்குரியதும், வறுமையும், நிர்வாணமும் கொண்ட சபையாகும்.


3. சபை புறக்கணிக்கப்படுதல்:

வெளிப்படுத்தல்  3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

அவர்களின் வெதுவெதுப்பான தன்மையின் நிமித்தம் இயேசுவானவர் அவக்களைத் தம் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன் என்று மிரட்டுகிறார்.
ஒரு காலம் இச்சபை சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது பயனற்றதும் சாரமற்றதுமாகிவிட்டது.

4. சபைக்கான வழிகாட்டி:

வெளிப்படுத்தல்  3:18-20
நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்


இயேசுவானவர் அவர்களைப் புடமிட்ட தங்கத்தையும் (ஏசாயா 55.1-2) (தெய்வ சமூகத்தில் செல்வச் செழிப்பாக மாறுதல்), வெண்மையான வஸ்திரத்தையும் (தேவனுடைய நீதி) கண்களுக்குக் கலிக்கமாகவும் மாற்றுவார் (ஆவிக்குரிய கண் திறக்கப்படுதல்).
தேவனின் நோக்கம் மறு உறுதிப்படுத்துவதும், தம் அன்பின் பாதையில் வழிநடத்துவதுமாயிருக்கிறது. (எபிரேயர் 12:5-7)
துரதிர்ஷ்டமாக இயேசு சபையின் வாசலில் நின்று நமது உள்ளம் திறக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்.

5. சபைக்கு வாக்குத்தத்தம்:

வெளிப்படுத்தல்  3:21-22
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

ஆண்டவர் அவருடைய சிங்காசனத்தில் அருகில் அமரும் ஆசீர்வாதத்தை வாக்குக் கொடுக்கிறார். – அதிகாரமும் நெருக்கமான நட்பும் (எபேசியர் 2:6-7)

முடிவுரை:
நாம் கவனமாக இல்லையென்றால் லவோதிக்கேயா சபையைப் போன்று நாமும் சுய திருப்தியும் தற்பெருமையும் கொண்ட சபையாக மாறக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறோம்.

இந்த ஏழு சபைகளைப் பற்றிய சத்தியத்தைக் கற்றுக் கொள்வோமாக.


Monday, July 25, 2016

இளம் வாலிபர்களுக்கான செய்தி

எபேசியர் 2ம் அதிகாரம் 10ம் வசனத்தில் அப்போஸ்தலர் பவுல் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.”

மூன்று காரியங்களைக் குறிப்பாக நம் வாலிபர் மத்தியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

1.                    உன் மூலம் தேவனுடைய கனவு நிதரிசனமாகியுள்ளது – நீ தேவனுடைய திட்டமும் கனவுமாய் இருக்கிறாய். இது மற்ற படைப்புகளைக் காட்டிலும் முந்தியது.

2.                    தேவ சிருஷ்டிப்பில் நீ சிறந்தவன். – ஒவ்வொரு வாலிபரும் இதை நினைவுகூற வேண்டும்.

3.                    உனக்கு ஒரு தெய்வீகப் இலக்கு உண்டு – சாலச் சிறந்தவனாய் இருந்து சாலச் சிறந்த காரியத்தைச் செய்ய வேண்டியது உன் கடமையாய் இருக்கிறது. இந்த இலக்கை அடைவதற்குப் பிறவியிலேயே உனக்கு தேவன் அபிஷேகித்து விட்டார்.

அன்பார்ந்த இளம் வாலிபர்களே, வாலிபர் தினத்தைக் கொண்டாடும் இவ்வோளையில் இந்தச் சத்தியங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். சிறப்பாக வாழுங்கள். இயேசு கிறிஸ்து உனக்காக மாண்டதால் இது சத்தியம்.


கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக

வாலிபர்களுக்கான செய்தி

எபேசியர் 2ம் அதிகாரம் 10ம் வசனத்தில் அப்போஸ்தலர் பவுல் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.”

மூன்று காரியங்களைக் குறிப்பாக நம் வாலிபர் மத்தியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

1.                    உன் மூலம் தேவனுடைய கனவு நிதரிசனமாகியுள்ளது – நீ தேவனுடைய திட்டமும் கனவுமாய் இருக்கிறாய். இது மற்ற படைப்புகளைக் காட்டிலும் முந்தியது.

2.                    தேவ சிருஷ்டிப்பில் நீ சிறந்தவன். – ஒவ்வொரு வாலிபரும் இதை நினைவுகூற வேண்டும்.

3.                    உனக்கு ஒரு தெய்வீகப் இலக்கு உண்டு – சாலச் சிறந்தவனாய் இருந்து சாலச் சிறந்த காரியத்தைச் செய்ய வேண்டியது உன் கடமையாய் இருக்கிறது. இந்த இலக்கை அடைவதற்குப் பிறவியிலேயே உனக்கு தேவன் அபிஷேகித்து விட்டார்.

அன்பார்ந்த இளம் வாலிபர்களே, வாலிபர் தினத்தைக் கொண்டாடும் இவ்வோளையில் இந்தச் சத்தியங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். சிறப்பாக வாழுங்கள். இயேசு கிறிஸ்து உனக்காக மாண்டதால் இது சத்தியம்.


கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக

Thursday, July 21, 2016

சர்த்தை



வெளிப்படுத்தலில் காணப்படும் 7 சபைகள் (9ல் 6வது பகுதி)
—————————————————————————————————————–—————————————————————————————————————–———————————————————————————————————————————————————————————————————–—————————————————————————————————————–————————————

சர்த்தை (வெளிப்படுத்தல் 3:1-6)
- உறக்கத்தில் ஆழ்ந்த (செத்த) சபை (3:2).

முன்னுரை:

சர்த்தை – லீடியா என்ற பண்டைய கால ராஜ்யத்தின் தலைநகரம்
இந்த நகரம் கம்பளி, ஜவுளி, மற்றும் நகை வியாபாரத்திற்கும் பிரபலம் பெற்றது.
அது ஒரு குன்றின் அறணான கோட்டையாகத் திகழ்ந்தது. அது விழிப்புடன் இல்லாததால் இரண்டு முறை தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.


1. கிறிஸ்துவின் வர்ணனை:

வெளிப்படுத்தல் 3:1a
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது...

தேவனுடைய ஏழு ஆவிகளையும் கொண்ட சபை’ பரிசுத்த ஆவியை உவமானப்படுத்துகிறது (ஏசாயா 11:2-5).
ஏழு நட்சத்திரங்கள்’ சபைகளின் ஏழு தேவ தூதர்கள்’ (வெளி.1:20; யோவான் 10:28).

2. சபையைப் பற்றிய வர்ணனை:

வெளிப்படுத்தல் 3:1b, 4
... நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.

வெளித் தோற்றத்தில் அவர்களுக்கு நற்பெயர் உண்டு.
ஆனால், இயேசுவின் கண்களுக்கு அவர்கள் ஆவியின் பிரகாரம் ‘செத்தவர்களாய்’ இருக்கிறார்கள்.

2 தீமோத்தேயு 3:5 (2 தீமோத்தேயு 3:1-7-உம் வாசிக்கவும்)
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.


ஆயினும் தேவன் தமக்காக பரிசுத்தமும் புனிதமுமாகவும் ஜீவிக்கிறவர்களை அடையாளங் கண்டு கொண்டுள்ளார்.

3. வெறுப்பும் சபைக்கான வழிகாட்டலும்:

வெளிப்படுத்தல் 3:2
நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

தேவன் அச்சபையை, ‘விழித்துக் கொண்டு சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்தும்படி’ கண்டிக்கிறார்.

 

எபேசியர் 5:14-18

ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
 ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,

இதற்குக் காரணம் தேவனுடைய பார்வையில் அவர்களுடைய கிரியை தேவனைப் பிரியப்படுத்துபவைகளாகக் காணப்படவில்லை.

4. சபைக்கு ஆலோசனை:

வெளிப்படுத்தல் 3:3
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

தேவன் அச்சபையை மனந்திரும்பி ‘அவருடைய வார்த்தைக்கு’ கீழ்ப்படியும்படி அழைக்கிறார்.
அவர்கள் ’விழித்துக்கொள்ளாவிட்டால்’ தேவனின் எதிர்ப்பாராத வருகையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

5. சபைக்கு வாக்குத்தத்தம்:
வெளிப்படுத்தல் 3:5-6
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.


ஆகவே, ஆண்டவராகிய இயேசு விழித்துக் கொண்டு வெற்றிக் கொள்கிறவர்களுக்குப் பின்வருபவற்றை வாக்கு கொடுக்கிறார்:
5.1). வெண்ணாடை போர்த்தப்படும் (வெளிப்படுத்தல் 7:13-16)
5.2). ஜீவ புஸ்தகத்தில் பெயர் கிறுக்கிப்போடப் படாது (பிலிப். 4:3 & வெளி. 20:15)
5.3). பிதாவாகிய தேவனிடத்தில் பெயர் அறிவிக்கப்படும் (மத்தேயு 10:32-33)

முடிவுரை:

ஆவியின் பிரகாரம் செத்த சபையாகிய சர்த்தை சபை ஆண்டவருக்காக விழித்திருந்து ஜீவிக்க அழைக்கப்படுகிறது.
ஆனாலும், இந்த அழைப்பு புரக்கணிக்கப்பட்டதால் அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.



தியத்தீரா (வெளிப்படுத்தல் 2:18-29)
- கள்ளத் தீர்க்கதரிசிகளைக் கொண்ட சபை (2:20) -

முன்னுரை:

  தியத்தீரா ஆசியிவின் ரோமாபுதி மாகாணத்தில் உள்ள லைகாஸ் நதியோரம் அமைந்திருள்ள செல்வச் செழிப்பான நகரம்.
  இது மற்ற நகரங்களை விட சிறிய பட்டணமாய் இருந்தாலும் மிக நீண்ட நிரூபத்தைப் பெற்றது.
  ஜவுளி, ஊதா நிறச் சாயம், வணிகர்கள் போன்றவற்றால் பிரபலமானது. (அப்போஸ்தலர் 16:14-15).

1. சபையைப் பற்றிய வர்ணனை:

வெளிப்படுத்தல் 2:18
தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

  இயேசுவானவர் அக்கினி ஜூவாலையைப் போன்ற கண்களையும் பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களையும் உடையவராய் தோற்றமளிக்கிறார். (வெளிப்படுத்தல் 1:14-15 & தானியேல் 10:6).

2. சபையைப் பற்றிய வர்ணனை:

வெளிப்படுத்தல் 2:19
உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.


   ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் ஆறு தகுதிகளுடன் வளர்ச்சியையும் பெற்ற சபை என்று அடையாளம் காணப்படுகிறது.:  
2.
1). கிரியைகள்:
            2.2). அன்பு:
            2.3). விசுவாசம்:
                2.4). ஊழியம்:
                2.5). நிலைத் தன்மை:
                2.6). இன்னும் அதிக கிரியை

3. சபையைக் குறித்த மறுப்பு:

வெளிப்படுத்தல்  2:20-23
ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

  ஆயினும் அச்சபை கள்ளத் தீர்க்கதரியான யேசபேல் என்ற தீர்க்கதரியோடு இணங்கிபோனது. இவள் ஒழுக்கக் கேடுகளை உபதேசித்ததோடு சபையை வழிதப்பச் செய்தவள். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சபையாரை உண்ண வைத்தவள்.
  ஆகவே, அவளுக்கும் அவளைப் பின்பற்றுகிறவகளுக்கும் விழப்போகிற ஆக்கினையைக் குறித்து எச்சரிக்கிறார்.

4. சபைக்கு வழிகாட்டல்:

வெளிப்படுத்தல்  2:24-25
தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.

  ஆண்டவர் உண்மையான விசுவாசிகளை வேறுபடுத்திப் பார்ப்பதோடு அவர்களைத் தொடர்ந்து நிலைத்திருக்கும்படியும் ஊக்குவிக்கிறார்.

5. சபைக்கு வாக்குத்தத்ம்:

வெளிப்படுத்தல்  2:26-29
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். 28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

  முடிவுபரியந்தம் நிலைத்திருந்து தம் சித்தத்தின்படி கிரியை செய்கிறவர்களுக்குக் கீழ்க்கண்ட வாக்குத் தத்ங்களை வழங்குகிறார்.:
                5.1). தேசத்தை ஆளும் அதிகாரம் (பார்க்க சங்கீதம் 2:8-9)
                5.2). விடி நட்சத்திரம் (பார்க்க வெளிப்படுத்தல்  22:16)

முடிவுரை:

  இச்சபை உள்ளே இருந்து அழிக்கும் பிரச்சனையை எதிர்நோக்குகிறது.
  இச்சபை அவற்றுக்கு இணங்கிப் போனதால் தேவன் அவர்களைக் கண்டிக்கிறார்.