Thursday, June 23, 2016

காணும் தேவன்

பின்வரும் காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். – நான் சங்கீதம் 139ஐ வாசித்ததில் ஆச்சரியப்பட்டேன். வேதத்தில் காணப்படும் தேவனைப் பற்றிய குறிப்புகள் வருமாறு:

1.              அவர் நம்மைத் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்கிறார். வசனம் 1, 2, 3 இதற்கு சாட்சியாக இருக்கின்றன. எனது அன்றாட கடமையைப் பற்றி தேவன் அறிந்து வைத்திருப்பதை அறிய முடிகிறது! என் நோக்கத்தையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார்! ‘அறிந்து வைத்திருக்கிறார்’ என்றால் ‘புரிந்து வைத்திருக்கிறார்’ என்பது கவனத்தை ஈர்க்கும் வசனமாகும். என்னைச் சூழ்ந்துள்ள சூழ்நிலையையும் அது எப்படி என்னைப் பாதிக்கிறது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். இது குதூகலமான காரியம். ஆனால், இது எதைக் காட்டுகிறது? அவர் என்னை அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறார் என்றால் ஆலோசனைகளுக்காக அவரைச் சார்ந்திருக்கலாம்.
                                                                  
2.              13ம் 17ம் வசனங்கள் இன்னும் பெரிதும் மகத்துவமுமான காரியங்களை வெளிப்படுத்துகிறது. அவர் என்னை அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பது மட்டுமல்லாமல் என்னைக் காணவும் செய்கிறார். அவர் உண்மையிலேயே என்னைக் கவனிக்கிறார். நான் என் தாயின் வயிற்றில் கர்ப்பந் தரிக்கும் முன்பே அவர் என்னை முழுமையாகக் காண்கிறார் என்பது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் தகவலாகும். அவர் என்னை அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதும் கவனித்து வருவதும் அற்புதமான காரியம். ஆகவே, நமது சிந்தனையையும் சரீரத்தையும் தேவன் அறிந்து வைத்திருக்கிறார்.

3.              23, 24ம் வசனங்கள் சின்னஞ் சிறிய பிரார்த்தனை. தேவன் என்னோடு இருப்பதின் நிமித்தம் அவரிடம் பிரார்த்தனையை ஏரெடுக்கலாம். தேவனுடைய ஆழமான அன்பைப் புரிந்து வைத்திருக்கிற சங்கீதக் காரன் இப்படி எழுதி வைத்திருக்கிறார். நம் அந்தரங்க ஜீவியத்தின் பெலவீனத்தினால் தேவன் துக்கப்படக்கூடாது என்பதைச் சங்கீதக் காரன் உறுதி செய்ய நினைக்கிறார்.

நண்பர்களே, ஊக்கம்  பெறுங்கள். உங்கள் தேவன் உங்களைப் புரிந்து வைத்திருப்பதோடு காணவும் செய்கிறார். ஆகவே, நாம் பரிசுத்தம் காத்து அவரைப் பிரியப்படுத்துவோம்.


கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

Friday, June 17, 2016

வெளிப்படுத்தலில் காணப்படும் 7 சபைகள் (9ல் 3வது பகுதி)





சிம்ரினா (வெளிப்படுத்தல் 2:8-11) - ஒடுக்கப்படுதலைச் சந்திக்கும் சபை  (2:10)

முன்னுரை
 சிம்ரினா - சிறிய ஆசியாவில் முக்கியமான பட்டணம் - மருத்துவம் மற்றும் அறிவியல் கல்விக்குப் பிரபலமானது.
 பரி. பவுல் தமது 3வது சுவிசேஷப் பயணத்தின் போது நிறுவியிருக்கலாம் (அப்போஸ்தலர் 19:10).

1. சபையைப் பற்றிய வர்ணனை
வெளிப்படுத்தல் 2:8
சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

வெளிப்படுத்தல் 1:17b-18
பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;  மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
 இயேசுவானவர் ஆதியும் (அல்பா) அந்தமுமாய் (ஒமேகா) இருக்கிறார். அவர் சிருஷ்டிகளின் ஆண்டவர் (யோவான் 8:58; கொலேசேயர் 1:15-17).
 அவர் மரித்தாலும் உயிரோடிருக்கிறார் – ஜீவிக்கிறவர் (1 கொரிந்தியர் 15:3-4)
 அவர் பிறப்புக்கும் இறப்புக்கும் கர்த்தாவாய் இருக்கிறார் – ஜீவனுக்கும் மரிப்புக்கும் அவரிடத்தில் அதிகாரம் உண்டு. (மத்தேயு 10:28)
 எனவே, உயிர்த்தெழுந்த கிறிஸ்து படைப்புக்கும் நித்தியத்திற்கும் ஆண்டவராய் இருக்கிறார்.

2. சபையைக் குறித்த வர்ணனை:
வெளிப்படுத்தல் 2:9
 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

 சிம்ரினா கிறிஸ்தவர்கள் பல பாடுகளையும் உபத்திரவங்களையும் அனுபவித்தார்கள்.
 சாத்தியப்பூர்வமான ஜீவியத்திற்காக அவர்கள் ஏழ்மையாய் இருந்தாலும் தேவனுடைய பார்வையில் அவர்கள் ஐசுவரியவான்களே.
 இந்தச் சபையைம் யூதர்கள் மத்தியில் தேவனை நிந்திக்கிறவர்களாய் காணப்பட்டார்கள்.

3. சபைக்கு வரவிருக்கும் ஆபத்து:
வெளிப்படுத்தல் 2:10a
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

 எனவே, சபைக்கு இன்னும் பெரிய உபத்திரவம் வரவிருக்கிறது.
 ஆனால், அவர்களை அஞ்ச வேண்டாம் என்று இயேசு நினைவு படுத்துகிறார்.
 விசுவாசிகளைச் சிறையில் போடுவதில் பிசாசு உண்மையான எதிரி என்று அவர் வெளிப்படுத்துகிறார். (1 பேதுரு5:8)
 ‘பத்து நாள்’ என்பது தெய்வீக அடையாளமாய் இருக்கிறது. இது ஆண்டவரே அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று காட்டுகிறது.
 ஆயினும் விசுவாசிகளை சிறைப்படுத்துவது அவர்களைச் சோதிப்பது ஆகும்.

4. சபையின் செயலாக்க திசை
வெளிப்படுத்தல் 2:10
ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்

 மரணபரியந்தம் உண்மையாயிருக்கும்படி தேவன் சபையை உண்மையாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறர்.
 ஜீவ கிரிடம் அவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதி – கிரிடம் நித்திய ஆட்சியைக் காட்டுகிறது.

5. சபைக்கு வாக்குத் தத்தம்:
வெளிப்படுத்தல் 2:11
காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

 அவர்கள் இரண்டாவது மரணத்தை அனுபவிப்பதில்லை என்பது வெற்றிபெறும் விசுவாசிகளுக்குக் கிடைக்கும் வாக்குத் தத்தம்

முடிவுரை:
 உபத்திரவமான காலத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று சிம்ரினா சபை உபதேசிக்கிறது.
—————————————————————————————————————–———————
கலந்துரையாடல் கேள்வி: ஒடுக்கப்படும் காலத்துக்காக நாம் எப்படி சிறந்த முறையில் ஆயத்தமாகலாம்?


Friday, June 10, 2016

வெளிப்படுத்தலில் உள்ள 7 திருச்சபைகள் (9ல் 2வது பாகம்)



எபேசு (வெளிப்படுத்தல் 2:1-7) – முதற் பங்கான அன்பை நிராகரித்த சபை (2:4).
முன்னுரை:
V எபேசு – சிறிய ஆசியாவிலேயே மிகப் பெரிய நகரம்வர்த்தக மற்றும் சமய மையம்
V எபேசு சபையின் வரலாற்றை வேதாகமத்தில் வாசிக்கிறோம் (எபேசு 1; அப்போஸ்தலர் 18 & 19).
V 30 வருடங்களுக்குப் பின்னர் எபேசு சபை புத்தாக்கம் பெற்றது

1. சபையைப் பற்றிய வர்ணனை:
வெளிப்படுத்தல் 2:1
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;


V V ஒருவர் = மனித குமாரன் (ஆண்டவரலகிய இயேசு கிறிஸ்து)
V V ஏழு நட்சத்திரங்கள் = ஏழு சபைகளின் ஏழு தேவ தூதர்கள்
V V ஏழு பொன் குத்துவிளக்குகள் = ஏழு சபைகள்

2. சபைகள் பற்றிய வர்ணனை: 
வெளிப்படுத்தல் 2:2-3, 6
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
V கிரியைகள், பிரயாசம் மற்றும் விடா முயற்சி – அவர் நலனுக்காக பொறுமையாய் இருத்தல் – வளர்ச்சியினிமித்தம் சோர்வடையவில்லை.
V துன்மார்க்கரைச் சகித்துக் கொள்ள முடியாமை – தங்கள் அப்போஸ்தலர்கள் என்று கூறிக்கொள்கிறவர்களைச் சோதித்துப் பார்த்தல்.

3. சபைகளை நிராகரித்தல்: 
வெளிப்படுத்தல் 2:5
V ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. 

V V முதற்பங்கான அன்பை விட்டுவிட்டதால் இயேசு இச்சபையைக் கடிந்து கொள்கிறார்.

4. சபைக்கான திசை: 
வெளிப்படுத்தல் 2:5
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

V ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக – மனந் திரும்பினால் ஒழிய
V உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்

5. சபைக்கு வாக்குத்தத்தம்: 
வெளிப்படுத்தல் 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.


V செவிமடுத்துக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் வாக்குத் தத்தமாக தேவ வார்த்தை வருகிறது.
V ஜெயங்கொள்ளுகிறவர்கள் – தேவனுடைய பரதீசின் மத்தியிலிருந்து ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கும் உரிமை கிடைக்கும்

முடிவுரை:  
V தம்மை மீண்டும் நேசிக்கத் திரும்பும் சபைகளைக் குறித்து ஆண்டவராகிய இயேசு அக்கறை காட்டுகிறார்.

—————————————————————————————————————–——————————
சிறு குழு கலந்துரையாடல்: 
1. நான் தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திலும் அவரின் முதற் பங்கான அன்பை எப்படி நிராகரித்தேன்? 
2. தேவனுடைய முதற்பங்கான அன்பிற்கு நாம் எப்படி மனந்திரும்பி ஏற்றுக் கொள்வது?

V இந்தப் பயணத்தைத் தொடங்கும் நாம் ஜெபத்தோடு இயேசுவானவருடைய குரலை இன்று கேட்போமாக