Thursday, December 29, 2016

தேவ ஜனங்கள்: 5ல் 5வது பகுதி ‘அவரை மகிமைப்படுத்த ஜீவிப்போம்’

தேவ ஜனங்கள்

5ல் 5வது பகுதி
‘அவரை மகிமைப்படுத்த ஜீவிப்போம்’

முன்னுரை
கிறிஸ்துவில் நமது உண்மையான தோற்றம் என்ன?
இது நமது ஜீவிய நோக்கத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறதா?
வர்ணனை: ‘கழுகும் கோழிக்குஞ்சும்’
நமது மெய்யான ஜீவிய அடையாளத்தை அறிந்து கொள்வது  நோக்கத்திற்கும் அதன் முறைக்கும் வழிகாட்டும்.



1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


1. தேவன் கொடுத்த அடையாளம்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

  • தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி
  • ராஜரீக ஆசாரியர்கள்
  • பரிசுத்த ஜாதி
  • தேவனுக்குச் சொந்தமான ஜனங்கள்


கிதியோன் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அடையாளம் மாற்றப்பட்டதற்கு அடையாளமாய் இருக்கிறான்.


நியா. 6:11 
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.
நியா. 6:12 
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.


  • கிதியோன் தேவனுக்கு முன்பாக தன் அடையாளத்தைப் புரிந்து கொண்டு பராக்கிரமசாலியானான்.
  • எனவே, கிறிஸ்துவில் நம் அடையாளத்தை புரிந்து கொண்டு அதற்குரிய ஜீவியத்தில் ஈடுபட வேண்டும்.
  • நாம் கிறிஸ்துவில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், பரிசுத்தமானவர்கள், ராஜரீகமானவர்கள், ஆசாரியர்கள், தேவனுக்கு உரியவர்கள். 



1பேதுரு 2:9 
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


  • நாம் அந்தகாரத்தினின்று ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டவர்கள்.
  • ஆகவே, நாம் அந்த ‘ஒளி’யை வெளிப்படுத்த வேண்டும்.



எபேசியர் 5:8 முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். (கொலோசேயர் 1.13யும் வாசிக்கவும்)


2. அவர் மகிமைக்காக ஜிவித்தல்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

2.1. அவர் மகிமையும் நம் ஜீவியமும்
எபேசியர் 1:12
 …நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.


  • இயேசு கிறிஸ்துவில் நமது ஜீவிய நோக்கம், அவருக்காகவும், அவருக்கு மாத்திரமாகவும் ஜீவிப்பதே ஆகும்.
  • நமது ஜிவிய நோக்கத்தை செம்மையாகச் செதுக்கிக் கொள்வதன் மூலம் நாம் சுதந்தரவாளிகளாயிருக்கிறோம்.


மத்தேயு 5:16 
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


  • தேவனை ஆராதிப்பதன் மூலம் அவரைத் துதிக்கும் மற்றும் மகிமைப்படுத்தும் ஜீவியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.
  • நமது ஜீவியத்தைக் கவனிப்பவர்களைப் பார்க்கிலும் அதிகமான தேவ துதியையும் மகிமையையும் கொண்டு வரும் ஜீவிப்பது அவசியம்.



1பேதுரு 2:12 
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

முடிவுரை
நாம் அவர் மகிமையை நாடுவதற்கு மாத்திரமே அழைக்கப்பட்டிருக்கிறோம்.


சுய பரிசோதனைக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி
அவர் மகிமைக்காக ஜீவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றால், நான் செய்யவேண்டிய மாற்றங்கள் யாவை?




Friday, December 23, 2016





தேவ ஜனங்கள்
5ல் 4வது பகுதி

‘தேவனின் உடைமை’

முன்னுரை
 ஆட்டு மந்தை பெரிதாக இருக்கும்போது அவை யாருக்குச் சொந்தம் என்பது தெரியாமல் போகலாம்.
 ஆனால், மேய்ப்பர்கள் அவற்றின் காதுகளில் கீறி அடையாளம் வைப்பதன் மூலம் அவற்றை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
 அடையாளம் இடும் முறை மாறுபட்டிருந்தாலும் நோக்கம் ஒன்றே – அடையாளம் கண்டு கொள்வது

1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

தேவனின் உடைமை - இஸ்ரவேலர்கள்
யாத். 19:5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

 இஸ்ரவேலர்கள் தேவனின் உடைமையாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
  •  அவர்களுடைய அடைவுநிலை அல்லது அந்தஸ்தின் நிமித்தம் அவர்கள் தேவனின் உடைமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை
  •  அவருடைய கிருபையால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டனர்.


உபா. 7:7 சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.
  •  எல்லா ஜனங்களிலும் அவர்கள் தேவனின் விசேஷ பொக்கீஷமாகவும் உடைமையாகவும் பிரித்தெடுக்கப்பட்டார்கள்
  •  தேவனே சர்வ சிருஷ்டிப்புக்கும் ஜனங்களுக்கும் உரிமையாளர் – அவரே அவற்றைத் தெரிந்து கொண்டார் (சங்கிதம் 24.1)


லேவி. 20:26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
  •  ஆனால், தேவன் இருவழி உறவாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் என்பது தெளிவு.


லேவி. 26:12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். (எரேமியா 30.22ஐயும் வாசிக்கவும்)
  •  பழைய ஏற்பாட்டின் இறுதி புஸ்தகம் அவருக்கு உரிமையானவற்றை ஆயத்தப்படுத்தும் வாக்குத்தத்த த்தோடு நிறைவடைகிறது.



மல்கியா 3:17 என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்;

2. தேவனுடைய உடைமை - கிறிஸ்தவர்கள்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
  •  கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவில் தேவனுக்கு உரியவர்கள் என்பதை உணர வேண்டும்.
  •  நமது இயல்பான சிந்தனாமுறையில் இருந்து அப்பால் சென்றால்தான் இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

2.1. கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயஞ் செலுத்தப்பட்டோம்
  •  நாம் நமக்குரியவர்கள் அல்லர். ஆனால் கிறிஸ்துவிக்கு நூறு சதம் உரியவர்கள் என்பதை உணர்வோம்.

 அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நாம் கிரயஞ் செலுத்தப்பட்டோம்

1கொரி. 6:19 நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
1கொரி. 6:20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; (அப்.20.28ஐயும் வாசிக்கவும்

2.2. பரிசுத்த ஆவியால் முத்திரிக்கப்பட்டோம்
  •  நாம் தேவனின் உடைமையாய் இருப்பதால் பரிசுத்த ஆவியால் முத்திரிக்கப்பட்டிருக்கிறோம்.


எபே.1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
எபே. 1:14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

2.3. நற்கிரியை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்
  •  ஆகவே, நற்கிரியை செய்யும் பொருட்டு நாம் மீட்கப்பட்டு தேவனுக்கு உரியவர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறோம்.


தீத்து 2:14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

முடிவுரை
  •  அவருடைய மகிமைக்காக நாம் விலையேறப்பெற்ற முத்திரையிடப்பட்டு ஜீவிக்கிறோம்.


சுய பரிசோதனைக்காகவும் கலந்துரையாடலுக்காகவும் கேள்வி
நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்ற அறிவு நமது அன்பின் ஜீவியத்தை எவ்வாறு மாற்றுகிறது?


Tuesday, December 20, 2016

கிறிஸ்மஸ் புத்தாண்டு செய்தி

கிறிஸ்மஸ் மூலம் நாம் பெறக்கூடிய மிகவும் அற்புதமான செய்தி இது: தேவன் மனிதனாக வந்தார்! இது ஓர் அருமையான விஷயம். மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தி. தேவன் எந்த ரூபத்திலும் பிறக்கும் சித்தத்தைத் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் காணலாம்: மனித குரங்காகவோ, அடர்த்தியான மரமாகவே, அதிசயமான மலையாகவோ, வேறு எந்த உருவத்திலோ அவர் தோன்ற முடியும்.

அவர் மனிதனாக வருவதைத் தேர்ந்தெடுத்தார். அது குறிப்பிடத் தகுந்த மூன்று ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது:
-       மனுகுலத்திற்கு மரியாதை;
-       ஜீவனுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் மகிமை;
-       தியாக பலியாக நாம் பிறரை நேசிக்கலாம்.

தேவ குடும்ப உறுப்பினர்களே, பின்வருவன ஒவ்வொரு விசுவாசிக்கும் மெய்யான சவால்:
-       மனிதர்கள் யாவருக்கும் மகிமையளிப்பது;
-       அவர்களை மதிக்கக் கற்றுக் கொள்வது;
-       பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் தியாக பலியாக ஜீவிப்பது.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி ஜீவிக்கிறோம் என்பதற்கு என்ன பொருள்? இதுதான் கிறிஸ்மஸின் அர்த்தம்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் சந்தோஷம் உண்டாவதாக!

இன்னும் 6 நாட்களில் நாம் 2016ஐ விட்டு 2017ம் ஆண்டுக்குச் செல்லவுளோம். இந்த ஆண்டு எப்படி அமைந்திருந்தது? ஆச்சரியத்தாலும் அதிர்ச்சியாலும் அல்லவா! முன்னேற்றத்திற்குத் தடையான ஆண்டு என்று யாரோ ஒருவர் சொன்னார். அர்த்தம்: இதுவரை உள்ள நிலைமையைப் புரட்டிப் போட்டது… இயல் நிலையைத் திருப்பிப் போட்டு, முன் அறிவிப்பாளர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களின் கணிப்பைப் பொய்யாக்கிப் போட்டது:
-       ஆங்கிலேயே பிரிமியர் போட்டியில் லைசிஸ்டர் முடி சூட்டப்படுவார் என்று யார் எதிர்ப்பார்த்தது!
-       டேவிட் கேமரூன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க வாக்கெடுப்புக்கு அழைத்த போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை! இந்த வரலாற்றுப்பூர்வமான சம்பவத்திற்கு ‘பிரிஎக்ஸிட்’ (பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவிட்டது) என்று பெயர் சூடப்பட்டப்பட வேண்டியதாயிற்று.
-       ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி, ஹிலேரி கிளிண்டனை வருங்காலப் பிரதமராக தேர்வு செய்த போது, உலகமே அவர்மீது பந்தயம் கட்டியது. தேசிய செயலாளர் பொறுப்பை விட்டு விலகும் அவருக்கு அரசியல் பலம் பேரளவில் இருந்தது. ஆனால், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தினரும் மத்திய வர்க்கத்தினரும் வேறு விதமாக சிந்தித்து, அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர்.

இவை யாவும் நம்மைக் குழப்பக்கூடும். இச்சம்பவங்கள் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி விசுவாசத்தை இழக்கச் செய்யுக்கூடும். ஆனால், கர்த்தர் அனைத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் அவர் மாட்சிமை நிறைந்தவர் என்றும் நான் கூற அனுமதியளியுங்கள்!


எனவே, உங்கள் உள்ளத்தை இயேசுவுக்குக் கொடுத்து அவரை விசுவாசியுங்கள். 2017ம் ஆண்டு ஆசீர்வாதமாய் அமையட்டும்!

Saturday, December 17, 2016

தேவ ஜனங்கள் 5ல் 3வது பகுதி: ‘பரிசுத்த ஜனங்கள்’

முன்னுரை:
  •   ஆரோக்கியம் மற்றும் தூய்மையைப் பற்றிக் கவலைப்படும் உலகில் நாம் ஜீவிக்கிறோம்.
  •   ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நாம் குளியல், பல் துலக்குதல், கை கழுவுதல், துணி துவைத்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறோம்.
  •   துரதிர்ஷ்டமாக, புற ஆரோக்கியத்திற்குக் காட்டப்படும் அக்கறை ‘ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்குக்’ காட்டப்படுவதில்லை.


1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1. பரிசுத்த கடவுள்:

லேவியராகமம் 11:44

நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

  •   நமது தேவன் அன்பும், கனிவும், கருணையும் உடையவர் என்பதை அறிவோம். ஆனால், ஆதியில் அவர் தம்மைப் பரிசுத்தமானவராக இஸ்ரவேலர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
  •   வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ள பரிசுத்தம், ஆலயத்திற்குச் செல்லுதல், வேதம் வாசித்தல் போன்ற நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட பரிசுத்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  •   ‘பரிசுத்தம் என்ற எபிரேய (காடோஸ்) மற்றும் கிரேக்க (ஹாகியோஸ்) பதம் ‘பிரித்தெடுக்கப்படல்’, ‘தெரிந்து கொள்ளப்படல்’ என்ற பொருளைக் கொண்டு வருகிறது.
  •   எனவே, கர்த்தருடைய பரிசுத்தத்தை பூமியில் உள்ள சகல படைப்புகளிலும் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்ட்டவர் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் தேவ தூதர்களைப் போல் பரிசுத்தமானவர்.


ஏசாயா 6:3

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

 

2. பரிசுத்த ஜனங்கள்:

யாத்திராகமம் 19:5-6
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.

  •   தமது ஜனங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்த கர்த்தர்,அவர்களைப் பரிசுத்தமாய் இருக்கும்படி அழைத்தார்.
  •   தமது ஜனங்கள் பரிசுத்தமாய் இருக்கும்படி அவர்களைக் கர்த்தர் தெரிவு செய்து கொண்டார்.
  •   ஆயினும் இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், அதைப்பற்றி செயற்பூர்வமாக போதிக்கும்படி கர்த்தரிடத்தில் கேட்டுக் கொண்டனர்.


யாத்திராகமம் 22:31
நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.

  •   கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமாய் வாழும் பொருட்டு அவர்களுக்குத் தேவ கற்பனைகள் கொடுக்கப்பட்டன.


யாத்திராகமம் 26:19
நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

  •   தேசத்திற்குக் கர்த்தரை அறிவிக்கும் பொருட்டு அவர் தேவ ஜனங்களை அபிஷேகித்தார்.
  •   ஆனால், அவர்கள் பரிசுத்த ஜனங்களாய் ஜீவிப்பத்தில் திரும்பத் திரும்ப தோல்வியடைந்து போனார்கள்.


3. பரிசுத்தமாயிருங்கள்

1 பேதுரு 1:15-16
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

  •   ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாமும் பரிசுத்தஜனங்களாக ஜீவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
  •   புற ஊந்துதல் அல்லாமல், கர்த்தர் நம்மை பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு இரட்சித்துக் கொண்டதால் நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.
  •   கிறிஸ்துவில் நாம் உரிமையாக்கிக் கொள்ளப்பட்டதால் பரிசுத்தமாகும்பொருட்டு நாம் தெய்வீக அழைப்பைப் பெற்றிருக்கிறோம்.


2 கொரிந்தியர் 7:1

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.


முடிவுரை:
  •   அவரில் நாம் பரிசுத்தாக ஜீவிக்கும் கர்த்தருடைய பரிசுத்த ஜனமாய் இருக்கிறோம்.

———————————————————–————————————
சுய மதிப்பீட்டுக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி:

தேவ சித்தத்திற்காக நீ தெரிந்து கொள்ளப்பட்ட நோக்கம் பரிசுத்தமாக வாழும் நோக்கத்திற்கு உனக்கு எவ்வாறு சவாலைத் தருகிறது?



Monday, December 12, 2016

ராஜரீக ஆசாரியக்கூட்டம்

முன்னுரை:

 தாய்லாந்தில் பூமிபால் அடுல்யதெஜ் 70 ஆண்டுகள் 126 நாள் என்ற கணக்கில் நீண்ட காலம் ஆட்சி ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
 ஆனாலும், அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய புதல்வரான மஹா வஜிராலோக்கோர்ன் அரியணை அமர்ந்தார்
 தேவன் நம்மைக் கையாண்ட விதத்தை அறியும் போது எப்படிப்பட்ட மாற்றம் உண்டாகிறது.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1. லேவிய ஆசாரியக்கூட்டம்:
 தொடர்ந்து செல்வதற்கு முன்பு, பழைய ஏற்பாட்டில் லேவிய ஆசாரியக்கூட்டத்தைப் பற்றி ஆராய்வோம்.

யாத்திராகமம் 19:5-6
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.

 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரால் ராஜரீக ஆசாரியக்கூட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ததன் வழி அவர்கள் கர்த்தரின் அழைப்புக்குச் செவிசாய்த்தனர்:
(i) கர்த்தரின் குரலுக்குக் கீழ்ப்படுதல்
(ii) அவருடைய கற்பனைக்குக் கீழ்ப்படிதல்

 ஆயினும் லேவியர்கனை இந்த அழைப்புக்குச் செவிசாய்க்க கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம்.

எண்ணாகமம் 8:14-18
இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,

 ஆனால், ஏன் இஸ்ரவேல் புத்திரர்களில் முதற்பேறுவிற்குப் பதில் லேவியர் தெரிந்து கொள்ளப்பட்டனர்?

யாத்திராகமம் 32:26-28
 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
 லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

2. புதிய ராஜரீக ஆசாரியக்கூட்டம்:

வெளிப்படுத்தல் 1:5-6
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

 பேதுரு கிறிஸ்தவர்களை ராஜரீக ஆசாரியக்கூட்டமாக முகமண் கூறுகிறார்.

1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

 அவர் அவர்களை கட்டப்பட்டு வருகிற மாளிகையாக அடையாளப்படுத்துகிறார்
2.1 கிறிஸ்து நமது பிரதான ஆசாரியராய் இருக்கிறார்
எபிரேயர் 4:14-16 (எபிரேயர் 8:1-2யும் வாசிக்கவும்)
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

2.2 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துதல்
1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 12:1)
 இது தேவனுடைய பார்வைக்கு உகந்த பலிகளாக இருக்க வேண்டும்.

வர்ணனை: காயின் மற்றும் ஆபேலின் பலிகள்

எபிரேயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

முடிவுரை:
 கர்த்தருக்குக் கிறிஸ்துவில் ஆவிக்குரிய பலிகளைச் செலுத்தும் ராஜரீக ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறோம்.
———————————————————–————————————
சுய மதிப்பீட்டுக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி:
கிறிஸ்துவில் ராஜரீக ஆசாரியக்கூட்டத்தில் உருவனாய் இருப்பது உன்னை எப்படி மாற்றியமைத்துள்ளது?