Wednesday, October 19, 2016

தேவ வார்த்தையை தியானிப்பதில் ஏற்படும் நன்மை

தேவ வார்த்தையை தியானிப்பதில் ஏற்படும் நன்மையைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு சங்கீதத்தின் இன்னொரு பகுதியை எடுத்துக்கூற விரும்புகிறோம். சங்கீதம் 19.7-8ஐ எடுத்துக் கொள்ளுங்கள். சங்கீதக் காரன், தேவ வசனத்தால் கிடைக்கும் எண்ணிலடங்கா நன்மைகைளைப் பட்டியலிட்டுள்ளான். பின்வரும் நன்மைகள் தேவ வசனத்தைத் தியானிப்பதால் கிடைக்கின்றன:
1.             வசனம் 7: ஆத்துமாவைப் புதுப்பிக்கிறது. (உங்கள் உள்ளார்ந்த மனிதம் பெலப்படுத்தப்பட்டு, உங்கள் ஆத்துமா புதுப்பிக்கப்படுகிறது. – நீங்கள் தீர்க்கதரிசனம் கூறத் தொடங்குகிறீர்கள்!)
2.             வசனம் 7b: உங்களை ஞானவானாக மாற்றுகிறது (ஞானம் என்பது, எந்த பிரச்சனைகளையும் எல்லாவிதமான பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது. நீங்கள் பிரச்சனையைத் தீர்ப்பவராக மாறுகிறீர்கள். – ஞானத்தின் வசனங்கள் உங்களில் செயல்படத் தொடங்குகிறது.
3.             வசனம் 8: உங்கள் உள்ளத்தை மகிழச் செய்கிறது. (நமது உணர்வுகள் சந்தோஷத்தைத் தரும் ஆரோக்கியமான ஔடதமாக மாறுகிறது. – கவலைகளையும் அச்சங்களையும் ஜெயங்கொள்கிறீர்கள். – புத்தாக்கம் மூலம் நீங்கள் ஆராதிப்பதற்கு விடுதலை பெறுகிறீர்கள்)
4.             வசனம் 8b: நமது பார்வையை பிரகாசிக்கச் செய்கிறது. (தெய்வீகப் பார்வையைப் பெற்றவராக நீங்கள் மாறுகிறீர்கள் – சராசரி தீர்மானங்களை மாற்றும் அளவுக்கு வல்லமை மிகுந்தவராக நீங்கள் மாறுகிறீர்கள். – வெளிப்படுத்தலின் வரம் உங்களில் செயல்படுகிறது.)

ஆகவே, நண்பர்களே, தியானம் என்பது வல்லமாயன ஆவிக்குரிய கருவியாகும். இந்த ஒழுக்கத்தைக் கடைபிடித்த இயேசுவின் உண்மைத்துவத்தை நம்மைச் சூழ்ந்துள்ளவர்களிடம் பரப்புவோமாக.


உங்கள் தியானம் சந்தோஷகரமாக அமையட்டும்!

Monday, October 17, 2016

உள்ளார்ந்த ஊழியம்


செய்தி: மறைதிரு ரூபன் கனகலிங்கம்

·         அனுதின அமைதி நேரம்
கிறிஸ்தவர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளர வேண்டும். 2 பேதுரு 3:18. தாவரங்கள் வளர்வதற்கு நீரும், சூரிய வெளிச்சமும், காற்றும் தேவை. நமது சரீர வளர்ச்சிக்கு உணவும், நீரும், காற்றும் சூரிய  வெளிச்சமும் தேகப்பியாசமும் தேவை. நமது ஆவிக்குரிய ஜீவிய வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

சவால்கள்:
இந்த உலகின் பரபரப்பான ஜீவியத்தில் தேவனுடனான தொடர்ப் துண்டித்துப் போவது எளிது. நமது சரீரம் ஊட்டச்சத்தை இழந்து பெலவீனமடையும் சூழ்நிலையில் நாம் உலகப்பிரகாரமான காரியங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறோம்.

தீர்வு:
அனுதின அமைதி நேரம் நமது ஆவிக்குரிய ஜீவியத்தை உயிர்ப்பிக்கச்செய்து துடிப்பாகச் செயல்படத் தூண்டும். சங்கீதம் 27:14, ஏசாயா 40:29-31

இடமும் நேரமும்:
இடம்: ஓசையும் இடையூறும் இல்லாத அமைதியான இடம். மத்தேயு 6:6. அமைதியின் மத்தியில் தேவன் பேசுகிறார். புற சப்தத்திற்கு உன் செவிகளையும் சிந்தையையும் மூடிக் கொள்.
நேரம்: அது உன் சரீரத்திற்குத் தேவையான பொறுத்தமான மற்றும் வழக்கமான நேரமாக இருக்க வேண்டும். இந்நாள் கலை நேரமே தொடங்குவதற்குப் பொறுத்தமானது. ஆதி.18:27, சங்.5:3.

வடிவம்:

1.        ஜெபம்

2.        வேதத்தில் இருந்து ஒரு பகுதியை வாசி

3.        தேவன் வேதத்தின் மூலம் உன்னிடம் பேசியதை தியானம் செய். தேவன் உன்னிடம் பேச இடம் கொடு. உம். அநுதின அப்பம், இயேசுவோடு ஒவ்வொரு நாளும் வாசம் செய்தல், போன்றவை

4.        தேவனைத் துதித்து, பிரார்த்தனை சென்

5.        உன் தினசரி ஜீவிய நடவடிக்கையைக் கர்த்தரிடத்தில் ஒப்படை

·         பரிசுத்தம் (Sanctification)
நமது மறு உருவாக்கத்தில் நமது சுபாவம் மாறுகிறது; நீதியாக்கத்தில் நமது நிலைப்பாடு மாறுகிறது; பரிசுத்தமாகுதலில் நமது குணாதிசயம் மாறுகிறது. பரிசுத்தமாகுதல் மறு உருவாக்கம் மற்றும் நீதியாக்க ஜீவியத்தின் கனி வெளிப்படுகிறது. இக்காரியம் 1066 முறை வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தமாகுதல் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவ சித்தமாய் உள்ளது.


பரிசுத்தமாகுதலின் அர்த்தம்
பரிசுத்தம் மற்றும் பரிசுத்தமாகுதல் பொருளளவில் ஒன்றே. ‘சுத்திகரிக்கப்படுதல், ‘ஒதுங்கிக் கொள்ளுதல்போன்ற பொருளைக் கொண்டு வருகிறது. விசுவாசி பாவத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு தேவனால் பரிசுத்த ஜீவியத்திற்குள் கொண்டு வரப்படுகிறார். 2 தீமோ.2:21: ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.

 யாத்.40:9-11, லேவி.27:14, எண்.8:17: கூடாரமும் அதன் உடமைகளும் சுத்திகரிக்கப்பட்டன. 2 நாளா. 29:5, 15-19: சுத்திகரிக்கப்படுதல் என்றால் தூய்மையாக்கப்பட்டு கர்த்தருடைய பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்படுதல் என்று பொருள்.

சுத்திகரிக்கப்படுதலின் ஆசான்:

1.        பிதாவாகிய கர்த்தர். 1 தெச.5:23,24, யூதா 1

2.        குமாரனாகிய கர்த்தர். எபே.5:26, 1 கொரி.1:2,30

3.        பரிசுத்த ஆவியாகிய கர்த்தர். 2 தெச. 2:13, ரோமர் 15:16, 1 கொரி. 6:11, 1 பேதுரு 1:2

சுத்திகரிக்கப்படுதலின் மூலம்:
1.        கர்த்தருடைய வார்த்தையினால். யோவான் 17:17, 19, 1 தீமோ.4:5

2.        இயேசுவின் இரத்தத்தினால். எபி.10:10-14; 13:12

3.        வேதனை அனுபவித்தல். எபி.12: 10,11

4.        கர்த்தரிடத்தில் கீழ்ப்படிதல். ரோமர் 6:19

5.        சுய சுத்திகரிப்பு. 2 கொரி.7:1

6.        விசுவாசம் கொள்ளுதல். அப். 26:18, எபே.2:8,9

சுத்திகரிப்பின் வளர்ச்சிப் படிவங்கள்
1.       மனம் (மதம்) மாறியவுடன் உடனடியாக சுத்திரிக்கப்படுகிறோம். 1கொரி.6:11. நாம் பரிசுத்தமாக்கப்பட்டோம்

2.       சுத்திகரிப்பின் வளர்ச்சி. யாக்கோபு 1:22-25. நாம் சுத்திகரிக்கப்படுகிறோம்.

3.       பூரணமும் இறுதியுமாய் இருக்கிறது. 1 தெச.5:23. நாம் சுத்திகரிக்கப்படுவோம். கிறிஸ்து வரும்போது நாம் அவரைப் போல் இருப்போம். 1 யோவான் 3:2. அது வரைக்கும் நாம் அந்தச் சுத்திகரிப்பில் ஈடுபடுவோம். பிலிப்.3:12-14

சுத்திகரிப்பைப் பராமரித்தல்
1.        கர்த்தர் மீது உள்ள ச்சத்தில் அவருக்குக் கீழ்ப்படிந்து உள்ளார்த்தமாக ஜீவித்தல்.

2.        பின்வாங்கிப் போனால், உடனடியாக மனஸ்தாபப்பட்டு சுதாகரித்துக் கொள்.

3.        பிசாசினிடத்தில் இருந்து விலகி நின்று சோதனைகளை ஜெயங் கொள்.

4.        அன்றாம் வேத வாசிப்பு, ஜெபம், ஆராதனை, ஐக்கியம், சாட்சி பகர்தல், பிறருக்காக ஜீவித்தல் போன்ற காரியங்களில் உண்மையுள்ளவனாய் இரு.

·         ஜெபமும் உபவாசமும்
ஜெபம் என்பது தேவனோடு பேசுவது ஆகும். இதன் மூலம் மனித ஆத்துமா தேவனோடு பேசுகிறது. தேவனுக்காக காத்திருத்தல்; தேவனிடத்தில் நமது ஆத்துமாவை உயர்த்துதல்; தேவனிடத்தில் நமது உள்ளத்தை ஊற்றுதல்; தேவனுக்கு முன்பாக கண்ணீர் சிந்துதல் போன்ற பொருளை ஜெபம் கொண்டு வருகிறது. சங்.5:3; 25:1; 34:6; 62:8. தேவனைத் துதிப்பதும் ஜெபமாகும். சங்.141:2; 50:14; அப்.10:4, வெளி.5:8; 8:3,4.

ஜெபத்திற்கான இடங்கள்
1.        எல்லா இடங்களும் பொருத்தமானவை. 1 தீமோ.2:8; சங்கீதம் 139:6-10. தேவன் எங்கும் இருக்கிறார்.
2.        ஒதுக்குப்புறமான இடம். மத்.6:6. இவ்விடத்தில் தேவனோடு தனிமையில் நேரத்தைச் செலவிட முடியும்.
3.        ஆலயத்தில். லூக்கா 18:10, சங்.26:12, 1 ராஜா 8:22-53

ஜெப நேரம்:

1.        எல்லா நேரமும் பொருத்தமானவை. லூக்கா 18:1, 1 தெச.5:17

2.        காலை, நண்பகல், மாலை. சங்.5:3; 55:17, தானி. 6:10

3.        அனுதினமும் இரவும் பகலும். சங்.88:1; 86:3

ஜெப விண்ணப்பம்:

A.       மத்.6:9-13: துதித்தல்; 2வது வருகை; தேவ சித்தம்; அநுதின அப்பம்; மன்னிப்பு; வழிகாட்டல்; சோதனை மற்றும் பாவங்களில் இருந்து வெற்றி

B.       யாக்.5:13-16: நோயில் இருந்து சுகம் பெற

C.       1 தீமோ.2:1-4: ராஜாக்கள், அதிகாரிகள் உட்பட அனைவருக்கும்

D.       தானி.6:18-23: சுய பாதுகாப்புக்காக

E.       1 ராஜா 3:5-9: ஞானத்துக்காகவும் புரிதலுக்காகவும்

F.       எபே.6:19, ரோமர்.15:32, 2 கொரி.1:11, 1 தீமோ.5:17: தேவ ஊழியக்கார்களுக்காக

G.       மத்.5:38-48: பகைவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்தியவர்களுக்காகவும்

H.       லூக்கா11:9-13: பரிசுத்த ஆவிக்காக

I.         மத். 9:37,38: ஆத்தும அறுவடைக்காக

J.        எபே.3:14-19, பிலிப். 1:9-11, கொலோ.1:9-12: ஆவிக்குரிய தேவைகளுக்காக

ஜெபத்தின் வழிகள்

1.        பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுதல். ரோமர் 8:26, எபே.6:18, யூதா 20

2.        விசுவாசத்தில் ஜெபித்தல். எபி.4:16, 10:22; 11:6, மாற்கு 11:22-24

3.        கனம் பண்ணுவதற்கு. சங்.95:6, 1 ராஜா 18:42, தானி.6:10, லூக்கா 22:41

4.        புத்தி சுயாதீனத்தோடு. 1 கொரி.14:14-15, மத்.6:5-8, பிர.5:2

5.        உரக்க ஜெபித்தல். சங்.66:17

6.        ஆர்வத்தோடு ஜெபித்தல். யாக்.5:16, 1 தெச.3:10, அப். 12:5

7.        பணிவோடு ஜெபித்தல். லூக்கா 18:11-14, 2 நாளா.7:14

8.        நிறுத்தாமல் ஜெபித்தல். 1 தெச.5:17, எபே.6:18

9.        இயேசுவின் நாமத்தில். யோவான் 14:14

10.     கர்த்தருடைய ஜெபத்தைப் பயன்படுத்தி ஜெபித்தல்

ஜெபங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமென்றால் அணுசரிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்:

1.        அவரில் நிலைத்திருக்க வேண்டும். யோவான் 15:7, 16:24, சங்.91:14,15

2.        தேவனிடத்தில் விசுவாசங் கொள்ள வேண்டும். எபி.11:6, மாற்கு 11:22-24, ரோமர் 4:17-21

3.        உங்கள் தேவைகளை உரக்க விண்ணப்பியுங்கள். யாக்.4:2, பிலிப்.4:6

4.        கர்த்தருடைய சித்தத்தின்படி ஜெபியுங்கள். 1 யோவான் 5:14-15, ரோமர் 8:26-27, யாக். 4:3

5.        பரிசுத்த உள்ளத்தோடும் ஜீவியத்தோடும் கேளுங்கள். சங்.145:19; 66:18, நீதி.15:8, 29, 1 யோவான் 3:21

6.        இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும். லூக்கா 11:5-8; 18:1-8

7.        ஒருவருக்கு மற்றவர் மன்னியுங்கள். மாற்கு 11:25, மத். 5:23,24

8.        அவருடைய ராஜ்யத்தைத் முதலில் தேடுங்கள். மத். 6:33

9.        இயேசுவின் நாமத்தில் ஜெபியுங்கள். யோவான் 16:24, 1 ராஜா 3

உபவாசம்

உபவாசித்தல் கிறிஸ்தவ ஜீவியத்தில் ஒரு பகுதி. மோசே, தானியேல், எஸ்ரா, நெகேமியா, கொர்நேலியு, ஆதி சபைகள், நமது ஆண்டவர் உபவாசித்தனர். யாத்.34:28, தானி.9:3, எஸ்ரா 8:23, நெகே.9:1,2, அப். 10:1, 14:23, மத்.4:2. ஜெபிப்பதில் விசுவாசம் கொள்வது போல், உபவாசித்து ஜெபித்தலிலும் விசுவாசம் கொள்க. சரீர அன்ன ஆகாரத்தை அடக்கிக் கொள்வதன் மூலம் ஆவிக்குரிய ஞானத்தையும் வல்லமையையும் அதிகரிக்கச் செய்யும். மத்.4:1-11



உபவாசத்திற்காகன வழி வகைகள்

1.        ஆத்தும அக்கறையைக் காட்டுவதற்கு அன்ன ஆகாரத்தில் இருந்து விலகியிரு. மத்.4:2

2.        பாவங்களை அறிக்கையிடுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். நெகே.9:1-2, 1 சாமு.7:6. எஸ்ரா 8:21

3.        ஆர்வத்தோடு கர்த்ரைத் தேடுக. தானி.9:3. ‘சாம்பலும் சாக்குத் துணியும்’ சுய மறுப்பைக் காட்டுகிறது. எஸ்ரா 8:23

4.        பிரார்த்தனையும் விண்ணப்பமும். எஸ்றா 8:23, தானி. 9:3, மாற்கு 9:29

5.        நன்மை செய்க. ஏசா.58:6-9

6.        வேத வசனத்தைத் தியானம் செய்க. நெகே.9:1-4

7.        சரீர தேவைகளுக்காக ஜெபிக்கவும். லேவி.16:29-31; 23:27-32, சங். 35:13

உபவாசிப்பதின் நோக்கம்

1.        பாவத்தில் இருந்து மனந்திரும்புதலையும் வேதனைப்படுவதையும் வெளிப்படுத்த. யோனா 3:7

2.        தெய்வ கோபாக்கினையைத் தவிர்க்க. 2 சாமு. 12:16,17

3.        தேவை ஏற்படும்போது. எஸ்றா 8:21, நெகே.9:1

4.        ஆபத்தை எதிர்நோக்கும் போது. எஸ்தர் 4:15-17, 2 நாளா.20:3-4

5.        ஆவிக்குரிய பெலன் தேவைப்படும்போது. மத்.17:21

6.        ஆவிக்குரிய போராட்டத்தின்போது. தானி.10:2, 13, 14

7.        தேவனுடைய வழிகாட்டலை நாடும்போது. அப். 10:30, 31; 14:21-23; 13:1-3, லூக்கா 2:36-38

உபவாசத்தின் சரியான அணுகுமுறை

1.        பாவத்தில் இருந்து விலகிக் கொள்ளுதல். ஏசா.58:6,9

2.        ஜனங்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் அவர்களை விடுவித்தல். ஏசா.58:6,

3.        எளியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம். ஏசா.58:7,10

4.        கர்த்தர் மட்டும் பார்க்கும் வகையில் இரகசியமாக உபவாசித்தல். மத்.6:17,18

உபவாசத்திற்குக் கிடைக்கும் ஆவீர்வாதங்கள்

1.        கிறிஸ்தவக் கதிரொளியாகிய பிரகாசம், சுகம், நீதி மகிமை கிடைக்கும். ஏசா. 58:8

2.        கர்த்தர் உங்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பார். ஏசா. 58:9

3.        கர்த்தருடைய வழிகாட்டலும் பெலனும் கிட்டும். ஏசா.58:11

4.        செல்வமும் வளர்ச்சியும் கிட்டும். ஏசா.58:11
5.        தேவன் தம் பணியைச் செய்ய உன்னைப் பயன்படுத்துவார். ஏசா.58:12

·         துதியும் ஆராதனையும்

துதி:
கர்த்தம் தம் மகிமைக்காக நம்மைப் படைத்தார். ஏசா.43:7. நம் ஜீவியம் அவருடைய மகிமையைப் பாட வேண்டும். 1 கொரி.10:31.

பழைய ஏற்பாட்டில் துதியைக் குறிக்க மூன்று பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
1.        ‘ஹலால்’- இதன் வேர்ச்சொல் சப்தத்தை உண்டாக்குதல் என்பதைக் குறிக்கிறது
2.        ‘யாடா’- கரங்களை அசைத்தல்
3.        ‘ஷாமார்’-வாத்தியக் கருவிகளை மீட்டுதல்
புதிய ஏற்பாட்டில் இரண்டு பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
1.        ‘விசுவாசப் பிரமாணம் (eucharistein)’- ஸ்தோத்திரம் செலுத்துவதற்காக
2.        புகழுரை (eulogein)’ – ஆசீர்வதிப்பதற்காக
ஆராதிப்பது போல, துதிப்பதும் நமது உள்ளத்தில் இருந்து புறப்படவேண்டிய அப்பியாசம் ஆகும்.
துதிப்பது கடமையாகும்
1.        வான தூதர்களைத் துதிப்பது. சங்.103:20, 148:2
2.        பரிசுத்தவான்களைத் துதிப்பது. சங்.30:4; 149:5
3.        தேசங்களைத் துதிப்பது. சங்.117:1
4.        சிறுவர்களைத் துதிப்பது. சங்.8:2, மத்.21:16
5.        உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் துதிப்பது. சங்.148.11
6.        இளையோரையும் முதியோரையும் துதிப்பது. சங்.148:12
7.        படைப்புகள் அனைத்தையும் துதிப்பது. சங்.150:6; 148:1-10
துதிப்பதின் நோக்கம்
1.        அவர் மாட்சிமை நிறைந்தவர். ஏசா.24:14
2.        அவர் மகிமை நிறைந்தவர். சங்.138:5
3.        அவர் மேன்மையானவர். சங்.148:13
4.        அவர் மகத்துவமானவர். சங்.145:3
5.        அவர் பரிசுத்தமானவர். யாத்.15:11
6.        அவர் ஞானம் நிறைந்தவர். தானி.2:20
7.        அவர் வல்லமை நிறைந்தவர். சங்.21:13
8.        அவர் நல்லவர். சங்.107:8,15, 21, 31
9.        அவர் கிருபை நிறைந்தவர். 2 நாளா.20:21
10.     அவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவர். சங்.138:2
11.     அவர் உண்மையுள்ளவர். ஏசா.25:1
12.     அவர் இரட்சிப்பு அருளுபவர். லூக்கா 1:68,69
13.     அவர் மகத்துவமானவற்றைச் செய்பவர். சங்.150:2

துதிப்பதின் வழிமுறைகள்:
1.        புரிதலோடு. சங்.47:7, 1 கொரி.14:15
2.        பாடல் மற்றும் வாத்தியக் கருவிகளோடு. சங்.33:1-3; 47:6; 150:1-5
3.        முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும். சங்.9:1; 103:1
4.        வாயில் இருந்தும் உதட்டில் இருந்து புறப்பட வேண்டும். சங்.51:15, 63:3, 66:8
5.        சந்தோஷத்தோடும் பெருமையோடும். சங்.63:5, 2 நாளா.29:30, சங்.100:1,2
6.        ஸ்தோத்திரத்தோடு. சங்.147:7
7.        தொடர்ச்சியாக. சங்.34:1; 71:6
8.        இன்னும் அதிகமதிகமாக. சங்.71:14, 104:33, 2 நாளா.30:21
ஆராதனை:
ஆராதனை நன்றி நிறைந்த உள்ளத்தில் இருந்து பொங்கி எழுகிறது. கர்த்தருடைய சமூகத்தில் நமது ஆத்துமா நிரம்பி வளியும்போது. “ஆண்டவரே, நீரே என் இரட்சகரும் ராஜாவுமானவர்” என்பது ஆராதனை.
ஆராதனையின் முக்கியத்துவம்
1.        10 கட்டளைகளில் 1வது  கட்டளை ஓய்வுநாளை ஆசரிக்கக் கட்ளையிடுகிறது. யாத்.20:1,2; 34:14, அப். 20:7
2.        ஆசரிப்புக் கூடாரம், தேவாலயம், லேவியர் ஆசரிப்பு ஆகியவற்றைக் கட்டும் முறைக்கு கர்த்தர் வேதாகமத்தில் தெட்டத் தெளிவான விதிமுறைகளை அருளியுள்ளார்.
3.        நமது கர்த்தர் ஆராதிக்கத் தகுந்தவர். நாம் அவரை ஆராதிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். வெளி.4:11, யோவான் 4:24
4.        ஆராதிப்பது நமது நித்திய பணியாகும். வெளி. 4 & 5
5.        ஆராதனையின் மத்தியில் தேவன் வாசம் செய்கிறார். சங்.22:3; 100:4
6.        அவரின் மகிமைக்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். நமது ஆராதனை அவரைப் புகழ்கிறது. சங்.50:23, ஏசா.43:7,21
7.        அவரை ஆராதிப்பதன் மூலம் நாம் அவரைப்போல் மாற்றம் காண்கிறோம். 2 கொரி.3:18
ஆராதிக்கப்பட வேண்டியது….
1.        கர்த்தர் மாத்திரமே. லூக்கா 4:8, சங்.45:11, உபா.5:7
2.        விக்கிரகங்களை ஆராதிக்கலாகாது. யாத்.20:3
3.        மனிதர்களை ஆராதிக்கலாகாது. அப்.10:25,26
4.        வான தூதர்களை ஆராதிக்கலாகாது. வெளி.19:10; 22:8,9

5.     இயற்கையை ஆராதிக்கலாகாது. உபா.4:14-20, யோபு 31:24-28, ரோமர்1:21-25