Monday, July 24, 2017

வெளிப்படுத்தலில் காணப்படும் 7 சபைகள் (8ல் 8வது பாகம்)

பரி. யாக்கோபின் ஆலயம்
வேத ஆராய்ச்சி

வெளிப்படுத்தலில் காணப்படும் 7 சபைகள் (8ல் 8வது பாகம்)
—————————————————————————————————————–——————————————

லவோதிக்கேயா  (வெளிப்படுத்தல்  3:14-22) -
வெதுவெதுப்பான விசுவாசத்தைக் கொண்ட சபை (3:16)

முன்னுரை:
லவோதிக்கேயா ஒரு செழிப்பான நாடு. இங்கே மென்மையான கருப்புக் கம்பளியும், கண் இமைக்குப் பூசும் சாயமும் கிடைக்கிறது.
இதற்கு நீர் வளம் பல மைல் தூரத்தில் இருந்து கால்வாயிலில் இருந்து வருகிறது. எனவே, அந்நீர், அழுக்கடைந்தும், துர்நாற்றம் கொண்டும், இளஞ்சூடாகவும் (வெதுவெதுப்பு) இருக்கும்.
இது பவுல் கொலோசே சபைக்கு எழுதிய நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (கொலோசேயர் 4:16).

1. கிறிஸ்துவின் வர்ணனை:

வெளிப்படுத்தல்  3:14
உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;


இயேசு தம்மை ‘ஆமென்’ (ஏசாயா 65.16) குறிப்பிடுகிறது. அப்படியென்றால் உண்மையுள்ளவர் என்று பொருள்.
அவர் ‘உண்மையுள்ள சாட்சியும்’ கூட (எரேமியா 42:5 & வெளிப்படுத்தல்  1:5) - ‘தியாகி’.
இதன் அடிப்படையில் அவர் சிருஷ்டிப்பின் ஆரம்பமானவர்’ (கொலேசேயர் 1:15).


2. சபையைப் பற்றிய வர்ணனை:

வெளிப்படுத்தல்  3:15, 17
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

இச்சபை வெதுவெதுப்பானது என்று வர்ணிக்கப்படுகிறது – குளிரும் அல்ல, அனலுமல்ல.
செல்வம், செழுமை, சுய திருப்தி ஆகியவற்றால் இச்சபை தற்பெருமை பொண்டிருந்தது.
தேவனின் பார்வையில் இது உண்மையில் பரிதாபத்துக்குரியதும், பரிகாசத்துக்குரியதும், வறுமையும், நிர்வாணமும் கொண்ட சபையாகும்.


3. சபை புறக்கணிக்கப்படுதல்:

வெளிப்படுத்தல்  3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

அவர்களின் வெதுவெதுப்பான தன்மையின் நிமித்தம் இயேசுவானவர் அவக்களைத் தம் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன் என்று மிரட்டுகிறார்.
ஒரு காலம் இச்சபை சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது பயனற்றதும் சாரமற்றதுமாகிவிட்டது.

4. சபைக்கான வழிகாட்டி:

வெளிப்படுத்தல்  3:18-20
நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்


இயேசுவானவர் அவர்களைப் புடமிட்ட தங்கத்தையும் (ஏசாயா 55.1-2) (தெய்வ சமூகத்தில் செல்வச் செழிப்பாக மாறுதல்), வெண்மையான வஸ்திரத்தையும் (தேவனுடைய நீதி) கண்களுக்குக் கலிக்கமாகவும் மாற்றுவார் (ஆவிக்குரிய கண் திறக்கப்படுதல்).
தேவனின் நோக்கம் மறு உறுதிப்படுத்துவதும், தம் அன்பின் பாதையில் வழிநடத்துவதுமாயிருக்கிறது. (எபிரேயர் 12:5-7)
துரதிர்ஷ்டமாக இயேசு சபையின் வாசலில் நின்று நமது உள்ளம் திறக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்.

5. சபைக்கு வாக்குத்தத்தம்:

வெளிப்படுத்தல்  3:21-22
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

ஆண்டவர் அவருடைய சிங்காசனத்தில் அருகில் அமரும் ஆசீர்வாதத்தை வாக்குக் கொடுக்கிறார். – அதிகாரமும் நெருக்கமான நட்பும் (எபேசியர் 2:6-7)

முடிவுரை:
நாம் கவனமாக இல்லையென்றால் லவோதிக்கேயா சபையைப் போன்று நாமும் சுய திருப்தியும் தற்பெருமையும் கொண்ட சபையாக மாறக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறோம்.

இந்த ஏழு சபைகளைப் பற்றிய சத்தியத்தைக் கற்றுக் கொள்வோமாக.