Tuesday, August 23, 2016

கீர்த்தனை வரலாறு 2

இரண்டு வாரத்திற்கு முன்பாக, தமிழ் திருச்சபைகளுக்குக் கீர்த்தனை என்ற பாடல்கள் மூலம் தொண்டு செய்தவர்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன்.

இன்று வேதநாயகம் சாஸ்திரியாரைப் பற்றி அறிவோம். முதலாவது சாஸ்திரியார் அரண்மனைக் கவிஞராக இருந்தார். அவருடைய முக்கியமான பணி அரசரைப் பற்றிப் பாடுவதாகும். செர்ஃபோறு என்ற தஞ்சாவூர் அரசருக்கு அவர் கவிஞராக இருந்தார். 6 வயதாக இருக்கும்போது அவருடைய தாயார் மரித்துப் போனார். 10 வயதாக இருக்கும் போது சிலுவை மற்றும் கிறிஸ்துவைப் பற்றிய தரிசணத்தைத் தெளிவாகக் கண்டார். அரண்மனையில் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு ராஜாதி ராஜனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டும் பாடித் துதிக்க அவர் முடிவு செய்தார். அந்த முடிவினால் அவர் பல அவஸ்தைக்கு ஆளானார். ஆனால், தன் தீர்மானத்தில் அவர் உறுதியாக இருந்ததோடு தேவனும் அற்புதமான சாட்சிகள் தரும் அளவுக்கு அவருக்கு கிருபையாய் இருந்தார்.

நாம் இன்னும் ஆலயத்தில் பாடிக் கொண்டிருக்கிற அவருடைய சில பிரபலமான பாடல்கள்:
-       தந்தானைத் துதிப்போமே;
-       ஆமென் அல்லேலூயா, மகத்துவ தம்பராபரா;
-       இயேசுவையே துதிசெய் நீ மனமே.

ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்து தேவனுடைய அற்புதமான கிருபையால் மீண்ட அவர் பாடிய பாடல் எனக்கு இன்னும் பிடித்தமான பாடலாக அமைகிறது. அந்தப் பாடலின் தலைப்பு தேவ இரக்கம் இல்லையோ, இயேசு தேவ இரக்கம் இல்லையோ.


ஒப்பு நிகரற்ற பாடல்கள் மூலம் மொழிக்கும் இறையியலுக்கும் தொண்டாற்றிய இத்தகைய மனிதர்களுக்காக நாம் தேவனை அவசியம் ஸ்தோத்தரிக்க வேண்டும். அடுத்த முறை இப்பாடல்களைப் பாடும் போது, இவை உண்மையான சூழ்நிலையில் பிறந்தவை என்று உணர்ந்தவர்களாகப் பாடுவோமாக. தேவனுக்கே ஸ்தோத்திரம். 

Thursday, August 18, 2016

சபை மக்களுக்கு விழிப்பூட்ட அழைப்பு






சீஷத்துவப் பயிற்சி

தலைவரின் வழிகாட்டி 1

ஜான் எச். ஓக்

வாழ்வதும், வாழ்க்கையும், அன்பும்

சீஷத்துவப் பயிற்சியின் அஸ்திபாரங்கள்



பொருளடக்கம்

முகவுரை: இந்தப் புதிய தலைவரின் வழிகாட்டியை நாம் வெளியிடுகிறோம்
சீஷத்துவப் பயிற்சிப் பாட வழிகாட்டியின் அமைப்பு
தலைவரின் வழிகாட்டியை எப்படி உபயோகிப்பது?

புத்தகம் 1: சீஷத்துவப் பயிற்சியின் அஸ்திபாரம்
பாடம் 1: என் சாட்சியமும் என் விசுவாசத்தின் அறிக்கையும்
பாடம் 2: தேவனுடன் அனுதின சந்திப்பு
பாடம் 3: தியான நேரம்
பாடம் 4: ஜீவனுள்ளதும் தீவிரமாக செயல்படுகிறதுமான தேவனுடைய வார்த்தை
பாடம் 5: சரியான ஜெபம் என்பது எது?
பாடம் 6: ஜெபத்திற்கு விடைகள்

பிற்சேர்க்கை
வேத வாசிப்பு வழிகாட்டி
வேதாகம மனப்பாட வசனங்கள்
தற்பரிசோதனை வீட்டுப்பாட அட்டவணை




ஒர புதிய தலைவரின் வழிகாட்டியை வெளியிடுகிறோம்

ஒவ்வொரு சீஷத்துவப் பயிற்சிக்கு குழுவின் வெற்றியும் தோல்வியும் பாட வழிகாட்டியைச் சார்ந்த்து அல்ல; ஆனால், அதின் தலைவரைச் சார்ந்த்தாக இருக்கிறது. ஒப்பிட்டு ஆய்வு செய்யும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு பாட வழிகாட்டியும் ஒரு எளிதான மாதிரியை உதாரணமாகக் கொண்டிருக்கும். எனவே, அநேகமாக எல்லாமே கற்றுக் கொடுப்பவரைச் சார்ந்தே இருக்கும் என்று சொல்வது சரியானதாக இருக்கும். ஒரு தலைவரின் குணாதிசயம் (பண்பு) ஆவிக்குரிய ஜீவியம், திறமை ஆகியவையே சீஷத்துவப் பயிற்சியின் தன்மையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. சீஷத்துவப் பயிற்சியை மேலும் திறம்பட நடத்தத் தலைவர்களுக்கு உதவுவதற்கென, ‘சர்வதேச சீஷத்துவ ஊழியங்கள்’ என்னும் ஸ்தாபனம் பல வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருந்தது. அந்த முயற்சியின் பலனே இந்தத் தலைவரின் வழிகாட்டியாகும். இந்தப் புத்தகத்தில் பின்வரும் சிறப்பான அம்சங்கள் அடங்கியுள்ளன.

1.     முழுமையான சுஷத்துவப் பயிற்சி முறைக்கான உதாரணங்களைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒவ்வொரு பாடமும் முன்னுரை, மையப் பகுதி, முடிவுரை என்ற 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சீஷத்துவப் பயிற்சிக் கூட்டங்களை நடத்துவதற்கு வேண்டிய தேவைகள் அனைத்தையும் சந்திக்க, முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
2.     சீஷத்துவப் பயிற்சி பாட வழிகாட்டியின் பொருளடக்கத்தைப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது. இந்த வழிகாட்டிப் புத்தகம், ஒவ்வொரு பாடத்திலுமுள்ள கேள்விகளைத் துணை தலைப்புகளுடன் கூடிய பல பகுதிகளைகப் பிரித்து, இந்தக் கேள்விகளுக்கான விடைகளையும் தருகிறது. அத்துடன் சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் ஒவ்வொரு பாடத்தின் சுமூகமான  வழிமுறையையும் நன்கு புரிந்துணர உதவி செய்யும்படி, மனதளவில் வகுக்கும் திட்டத்தின் வரைபடம் (mind map) அல்லது தர்க்க ரீதியாக அறிவைப் பயன்படுத்த உதவும் மனதின் வரைபடம் அமைப்பைக் கொடுத்திருக்கிறது. (logical structure)
3.     சீஷத்துவப் பயிற்சியை நடத்துவதற்கத் தேவையான திறமைகளை மேம்படுத்த உதவி செய்கிறது. பாட வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துகளை, கேள்விகளை நன்கு விவரித்துச் சொல்லத் தலைவர்களுக்கு உதவி செய்யும்படி அவைகளுக்கு இணையாகக் கூடுதலான கேள்விகளைத் தருகிறது. கலந்துரையாடி விவாதம் செய்யும் நேரத்தைச் சரிவரக் கையாளுவதற்கு உதவி செய்யும் பொருட்டு சிறப்பான குறிப்புக்களையும் கூட புத்தகத்தில் செவ்வகமாக கோடு போட்டுள்ள பகுதிகளில் கொடுத்திருக்கிறது. தலைவர்கள் ஒவ்வொரு கேள்வியின் மையமான கருத்தைப் புரிந்துணர்ந்து அந்தக் கேள்விகளைப் பாட நேரத்தில் திறம்படக் கையாள உதவி செய்வது இதன் நோக்கமாக இருக்கிறது.

சீஷத்துவப் பயிற்சி விஞ்ஞானம் சார்ந்ததல்ல; ஆனால் அது ஒரு கலை. ஏனெற்ல் இது மக்களின் ஆத்துமாவுடன் சம்பந்தப்பட்டது. ஒரு தலை சிறந்த படைப்பின் நுட்பமும் தவறின்மையும் இதற்குத் தேவையாக இருக்கிறது. இந்த வழிகாட்டி விஞ்ஞான ரீதியான விடைகள் கொடுக்காது. சீஷத்துவப் பயிற்சிக்குப் புதிய அல்லது உதவி தேவைப்படும் தலைவர்களுக்கு உதவி சொய்யும் நோக்கத்தையே இது கொண்டிருக்கிறது. தலைவர்கள் இதை மாத்திரம் அதிகப்படியாகச் சார்ந்திராமல் இதை ஒரு தகவல் குறிப்பாக மட்டும் கருத வேண்டும்.




சீஷத்துவப் பயிற்சி பாட வழிகாட்டியின் அமைப்பு


புத்தகம் 1 (சீஷத்துவப் பயிற்சியின் அஸ்திபாரங்கள்)
சீஷத்துவப் பயிற்சியின் அஸ்திபாரங்கள் பற்றி விவரிக்கிறது பயிற்சி பெறுவோரின் ஆவிக்குரிய வாழ்க்கையிலுள்ள பிரச்சனைகளைப் புரிந்துணர்வதிலும், அவர்கள் தினந்தோறும் தேவனுடைய வார்த்தையைக் கற்றறிவதையும் அவர்கள் தினந்தோறும் தேவனுடைய வார்த்தையைக் கற்றறிவதையும் ஜெபிப்தையும் பழக்கமாக அவர்களுக்கு ஏற்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.


புத்தகம் 2 (எனது அசைகக்க் கூடாத, உறுதியான இரட்சிப்பு)
14 வாரங்கள் இரட்சிப்பைக் குறித்த சத்தியத்தில் முக்கிய கவனம் செலுத்துகிறது. சுவிசேஷம், காள்கைகளின் போதனை, தினசரி வாழ்க்கை இம்மூன்றுக்குமிடையே உள்ள சம்பந்தம் அல்லது ஒன்றுபாட்ட உறவைக் குறித்து விவரிக்கிறது. இருதயங்கள் ஆயத்த்த்துடன் திறக்கப்பட்டு வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.


புத்தகம் 3 (இயேசுவைப் போல் ஆகுதுல்)
பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரின் குணாதிசயத்திலும் வாழ்க்கையிலும் முழு மாற்றம் ஏற்படுவதில் கவனம் செலுத்துகிறது. ஒருவன் எவ்வளவுதான் நன்கு பயிற்சி பெற்றிருந்தாலும் அவர் நற்பண்புகளில் முதிர்ச்சி பெறாமலிருந்தால் அவன் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைப் பக்தி விருத்தியடையச் செய்ய முடியாது. இப்படிப்பட்ட முரண்பாடான நிலைமையைத் தவிர்க்கும் படியாக, இது சம்பந்தமான காரியங்களை நன்கு ஆராய்ந்து அறியும்படி 12 வாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை நாம் உபயோகிக்கும் போது மாற்றங்களை ஏற்படுத்துவதில் செலுத்தும் கவனம் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புதலுக்கு வழி நடத்த வேண்டும்.





தலைவரின் வழிகாட்டியை உபயோகிப்பது எப்படி

முன்னுரை
1.     மனவோட்ட வரைபடம் (Mind Map)
மேலே பறக்கும் பறவையின் கண்பார்வைபோல் தலைவர்கள் தாங்கள் ஆயத்தம் செய்யும் பாடத்தை முழுவதுமாகப் பார்க்கத் தக்கதாக ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பத்திலும் மனவோட்ட வரைபடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (அதாவது, மனதளவில் திட்டம் வகுத்து அதை வரைபடமாகப் பார்ப்பது) வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் மனவோட்ட வரைபடம் உதாரணங்கள் குறிப்புகள் மட்டுமே. எனவே, தலைவர்கள் தங்கள் பாடத்திற்குத் தங்கள் மனதிலே சொந்தமாக ஒரு வரைபடம் தீட்டிக் கொள்வது நல்லது.

இவ்வாறாக மனதளவிலான வரைபடம் ஆயத்தம் செய்வதில் உள்ள சில முக்கியமான படிகள் பின் வருவன:
·         முற்றிலும் கவனமாகவும் சரியாகவும் பாடத்தை ஆயத்தம் செய்ய வேண்டும்.
·         கேள்விகளை அவற்றின் தன்மைகளுக்கேற்றபடி வகைப்படுத்த வேண்டும்.
·         ஒவ்வொரு கேள்வியின் கருப்பொருளையும் புரிந்துணர்ந்து அதன்படி வன்கப்படுத்த வேண்டும்.
·         கேள்விகளைத் தொடுத்து ஒன்று சேர்த்து பின்பு சிறிய பகுதிகளாகப் பிரிக்கவும்.
·         ஒவ்வொரு பகுதியின் கருப்பொருளும் தனித்தனியே என்ன என்பதைத் தீர்மானம் செய்யவும்.
·         ஒவ்வொரு பகுதியின் ஒவ்வொரு கேள்வியின் கருப்பொருளுக்கேற்றவாறு மனதளவில் திட்டம் வகுத்து அதை வரைபடமாக நிர்மாணி.

வேதாகமத்தின் அதிகாரம்
-       வேதாகமத்தை எழுதியவர் – தேவன் (1)
-       வெளிப்படுத்தப்பட்டவற்றை நிறைவேற்றுகிறவர் – இயேசு (2)
-       வேதாகமத்தின் பூரணத்துவமும் நிறைவும் (4, 5)
-       தேவ ஆவியானவரால் உள்ளூதப்பட்டு எழுதப்பட்டது (6-8)
-       பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிக்கப்பட்டு, அறிவூட்டப் படுதல் (9, 10)
-       வேதாகமத்தின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் (11, 12)

2.     நோக்கங்கள்
தங்கள் மனதளவில் வரைபடம் தீட்டிக் கொள்வதோடு கூடத் தலைவர்கள் ஒவ்வொரு பாடத்தின் நோக்கங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாடத்தின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதும் மனதளவில் வரைபடம் ஆயத்தம் செய்வதும் ஆகிய இரண்டும் ஒன்று சேர்வதால் முழுமையடைகிறது. என்பதையும் இவை இரண்டும் ஒன்றையொன்று வலுப்படுத்துகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பாடத்தின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கான படிப்படியான வழிமுறைகள் பின்வருவனவாகும்.

ஒவ்வொரு பாடத்திலும் கூறப்பட்டுள்ள வேதாகம உண்மைகளைத் தீர்மானம் செய்து கொள். இந்த வழிமுறை ஒப்பிட்டு ஆய்வு செய்து கற்கும்போது கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல் ஆகிய பகுதிகளைச் சார்ந்திருக்கிறது. இந்தப் பாடத்தில் கற்பிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டு, பயிற்சி பெறுவோர் எப்படித் தங்கள் வாழ்க்கையை ஆழ்ந்து சிந்தித்து சோதித்துப் பார்க்கலாம். இது சுய சிந்தனை என்ற பகுதியைச் சார்ந்த்து. பாடத்தில் போதிக்கப்பட்ட உண்மைகளைக் குறிப்பாக அவர்கள் எவ்விதம் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி எண்ணிப் பார். (இது ஒப்பிட்டு ஆய்வு செய்து கற்பதில் உள்ள செயல்படுத்துதல் என்ற பகுதியைச் சார்ந்த்து)

3.     துதி
எல்லா நேரங்களிலும் துதித்தலைத் தலைவர் தான் வழிநடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. பயிற்சி பெறுவோர் மத்தியில் சங்கீத ஞானமும் தாலந்தும் பெற்றவர்கள் இருந்தால் தலைவரின் ஊக்குவிப்பு ஆதரவுடன் அவர்கள் பாடல்களைத் தெரிந்தெடுப்பதிலும், துதி நேரத்தை வழிநடத்துவதிலும் ஒவ்வொருவராகப் பங்கு கொள்ளலாம்.

அத்துடன் பாடப்படுகிற பாடல்களின் அர்த்தத்தையும் உணர்ந்து அனுபவிக்க நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். பயிற்சி பெறுபவர்கள் ஒன்றாகச் சேர்ந்து துதி பாடல்களை உரத்த சத்தத்துடன் வாசிக்கலாம். அல்லது ஒருவர் மட்டும் வாசிக்கும் போது மற்றவர்கள் அதைக் கேட்டு தியானம் செய்யலாம்.

சீஷத்துவப் பயிற்சிக் குழுவினருக்காகக் கருப்பொருளை விளக்கிக் கூறும் ஒரு பாடல் தெரிந்தெடுக்கப்படலாம். பயிற்சி பெறுவோரோடு இணைந்து கருப்பொருள் பற்றிய பாடலைத் தீர்மானிக்கும் போது ஒரு ஒற்றுமை உணர்தவும் யாவரும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணமும் உண்டாகிறது.


4.     ஜெபம்
ஆரம்ப ஜெபத்தில் 3 அல்லது 4 காரியங்களுக்காக ஜெபித்துக் கடைசியல் தலைவர் அல்லது பயிற்சி பெறுபவர்களில் ஒருவர் (ஒவ்வொரு கூட்டமும் ஆரம்பிப்பதற்கு முன் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஜெபத்தை முடிக்கலாம்.

ஒவ்வொரு குழுவின் தேவைகளுக்குத் தக்கதாக அல்லது அந்தந்த வாரத்திற்குரிய பாடத்தின் கருப்பொருளுக்கேற்றதாக ஜெபத்திற்குரிய விஷயங்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். பொதுவான ஜெபத்தின் பிரிவுகளைக் குறித்து 5 பரிந்துரைகள் பின்வருமாறு:

1.     தேசத்திற்காக – கடந்த வாரத்தில் நிகழ்ந்த எந்த ஒரு சம்பவத்திற்காகவும் ஜெபம் தேவைப்பட்டால் அதற்காக ஜெபிக்கவும்.
2.     உலக முழுவதிலும் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் உங்கள் தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காகவும் நீங்கள் ஆராதிக்கும் குறிப்பிட்ட சபைக்காகவும் ஜெபிக்கவும்.
3.     உங்கள் சபையின் குருவானவர்களுக்காக, அவர்களுடைய சரீர ஆன்மீக ஆரோக்கியத்திற்காகவும் அவர்களுடைய ஊழியத்திற்காகவும் ஜெபிக்கவும்.
4.     பயிற்சி பெறுவோருக்காக அவர்கள் ஒவ்வொருவருடைய சுய தேவைகளுக்காகவும் அவர்களின் தனிப்பட்ட ஜெப வேண்டுதல்களுக்காகவும் ஜெபிக்கவும்.
5.     சீஷத்துவப் பயிற்சியின் பாட நேரத்திற்காக ஜெபிக்கவும்.
சீஷத்துவப் பயிற்சியின் பாட நேரத்திற்கான ஜெபம் பின்வரும் 3 காரியங்களாகப் பிரிக்கப்படலாம். பின்வரும் ஜெபங்கள் பயிற்சி பெறுவோரின் தேவைகள் மற்றும் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலைக்கேற்றபடி செய்யப்பட வேண்டும்.

முதலாவதாக, பயிற்சி பெறுவர் ஒவ்வொருவரும் சீஷத்துவப் பயிற்சியின் மூலமாக மாற்றப்பட ஜெபிக்க வேண்டும். உதாரணமாக, சீஷத்துவப் பயிற்சியின் மூலமாக இன்னும் அதிகமாகக் கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக் கொடுக்கவும், நாம் ஒவ்வொருவரும் சுவிசேஷத்தைப் பரவச் செய்யவும், தேவனுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்யவும் ஜெபிப்போமாக.

இரண்டாவதாக, சீஷத்துவப் பயிற்சிக் குழுவினருக்காக ஜெபிப்போம். உம்- எங்கள் குழுவிலுள்ள அனைவரும் உண்மை, அன்பு, பரிசுத்த ஆவி நிறைந்தவர்களாயிருக்க வேண்டுமென்று ஜெபிப்போமாக.

மூன்றாவதாக, அந்தந்த வாரத்துப் பாடத்தின் கருப்பொருளுக்காக ஜெபிப்போமாக.


5. வீட்டுப் பாட பயிற்சியை சரிபார்த்தல்
ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பயிற்சி பெறுவோரின் வீட்டுப் பாடப் பயிற்சியை சரிபார்த்துப் பகிர்ந்து கொள்வது அதிகப் படியான வேலையாக இருக்கும். சரி பார்ப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் அதிக நேரம் செலவிடுவதினால் பாடம் படிப்பதற்குப் போதுமான நேரமும் ஆற்றலும் இல்லாமல் போய்விடும். எனவே, தலைவர்கள் முக்கியமாக, ஒவ்வொரு வாரத்திற்குரிய வீட்டுப்பாடப் பயிற்சியை கவனமாகத் தீர்மானித்து, அதற்கான நேரத்தை ஒதுக்குவதில் விவேகத்துடன் செயல்படுவது முக்கியமானதாக இருக்கிறது.


1.     தியான நேரம் பகிர்ந்து கொள்ளுதல்
ஒவ்வொரு தலைவரின் திட்டத்திற்கேற்ப, தியான நேரத்தில் பகிர்ந்து கொள்ளுதல் வெவ்வேறான விதங்களில் செய்யப்படலாம். ஒவ்வொரு குழுவின் சூழ்நிலைக்கும் பயிற்சி பெறுவோரின் தகுதியின் நிலைக்கு பொருத்தமாகப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கு உதவக் கூடிய சில பரிந்துரைகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல், சுயமாக சிந்தனை செய்தல், வாழ்க்கையில் செயல்படுத்துதல் போன்றவைகளிலிருந்து பயிற்சி பெறுவோர் பகிர்ந்து கொள்ளும்படி தலைவர்கள் தெரிந்தெடுக்கலாம்.

சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்தில் தியான நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் கூடுதலான நேரம் செலவிடுவது பயிற்சி பெறுவோர் பகிர்ந்து கொள்ளும்படி தலைவர்கள் தெரிந்தெடுக்கலாம்.

சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்தில் தியான நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் கூடுதலான நேரம் செலவிடுவது பயிற்சி பெறுவோர் தியான நேரத்தின் 4 நிலைகளை நன்கு புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். அவையாவன, கூர்ந்து கவனித்தல், விளக்கம் கூறுதல், சுயமாக சிந்தனை செய்தல், வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவையாகும். தியான நேரத்திலும் பகிர்ந்து கொள்வதிலும் தலைவர்கள் பயிற்சி பெறுவோருக்கு முன் மாதிரிகளாக விளங்கினால், அது தியான நேரத்தின் 4 நிலைகளைப் பயிற்சி பெறுவோர் நன்கு புரிந்துணர உதவியாக இருக்கும். அத்துடன் அதைப் பின்பற்றி அதன்படி செய்யும் நல்ல பழக்கத்தையும் பழகிக் கொள்வார்கள்.

இந்த சீஷத்துவப் பயிற்சி தொடர்ந்து நடைபெறுகையில் பயிற்சி பெறுவோர், தியான நேரத்தின் நான்காவது நிலையான, வாழ்க்கையில் செயல்படுத்துவது குறித்துப் பகிர்ந்து கொள்ளும்போது அது அவர்களுடைய வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் மாற்றம் ஏற்படுவதில் குறிப்பாக கவனம் செலுத்த உதவி செய்வதாக இருக்கும்.

பகிர்ந்து கொள்ளவும், குழுவாக எதுவும் செய்து சமர்ப்பிக்கவும் இவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்தால் அது குழுவில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டுதலாக இருக்கும்.


2.     மனப்பாட வசனம்
மனப்பாடம் செய்வதை இயந்திர கதியில் செய்யக் கூடாது. அது விசுவாசத்தையும் தினசரி வாழ்க்கையையும் ஒன்றுபடுத்தி இயக்கமூட்டும் வலிமை கொண்ட ஒரு கருவியாகவே உபயோகிக்கப்பட வேண்டும். பகிர்ந்து கொள்வதின் வெவ்வேறு முறைகள் பற்றிய பரிந்துரைகள் பின்வருமாறு:-

முதலாவது, தலைப்பு, வேதாகமத்திலுள்ள புத்தகத்தின் பெயர், வசன எண் ஆகியவற்றை மனப்பாடம் செய்ய வேண்டம்.

இரண்டாவதாக, தலைவர்கள் முதலாவது மனப்பாடம் செய்து முன்மாதிரியாக இருப்பது நல்லது. பயிற்சி பெறுவோரோடு இணைந்து மனப்பாடம் செய்யும் போது ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக உச்சரித்து நிதானமாக மனப்பாடம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பயிற்சி பெறுவோருக்குத் தங்கள் திறமையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் தலைவருட்ன கூட இணைந்து கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

மூன்றாவதாக, மனப்பாட வசனத்தைக் குறித்துத் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்கள் இருக்குமானால் அவற்றைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

நான்காவதாக, பயிற்சி பெறுவோர் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அதில் ஒரு குழுவினராக மனப்பாடம் செய்யலாம். இவ்விதமாக ஒரு குழு மனப்பாட வசனத்தை ஒப்புவிக்கும் போது மற்ற குழுக்கள் அதைச் சரிபார்க்கலாம். அல்லது பயிற்சி பெறுவோர் இரண்டிரண்டு பேராகச் சேர்ந்தும் மனப்பாடம் செய்யலாம்.

3.     அன்றாடக வாழ்க்கையின் வீட்டுப் பாடம் பயிற்சியைப் பகிர்ந்து கொள்தால்
முழு மாற்றமடையும் வாழ்க்கையும் குணாதிசயமும் சீஷத்துவப் பயிற்சியின் நோக்கமாக இருப்பதினால் அன்றாடக வாழ்க்கையின் வீட்டுப் பாடம் பயிற்சி, இந்த சீஷத்துவப் பயிற்சியில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது. இந்த அன்றாடக வீட்டுப் பாடப் பயிற்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒதுக்கப்படும் நேரமும் கையாளும் முறைகளும் ஒவ்வொரு தலைவரின் யோசனையின் படி தீர்மானிக்கப் படலாம். அன்றாடக வீட்டுப் பாடப் பயிற்சியைப் பகிர்ந்து கொள்வதற்குச் சில பரிந்துரைகள் பின்வருமாறு உள்ளன.

முதலாவது ஒவ்வொருவரின் அனுபவத்தையும் கவனித்துக் கேட்பது கூடுமாயினும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக இதைச் செய்ய முடியாது என்பதைத் தலைவர்கள் உணரலாம். பயிற்சி பெறுவோர் சிறு குழுக்களாக பிரிக்கப் படலாம். அல்லது இரண்டிரண்டு பேராகக் கூடித் தங்களுக்கிடையே முதலமலாவது பகிர்ந்து கொண்டு குழுவில் உள்ள யாவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு சிலர் மாத்திரம் பகிர்ந்து கொள்ள முன் வரலாம்.

மற்றொரு வழிமுறை என்னவென்றால் பயிற்சி பெறுவோர் எப்பொழுதும் ஊக்குவிக்கப்படுவதாகும். அன்றாடக வாழ்க்கைப் பயிற்சியானது, பயிற்சி பெறுவோர் வாழ்க்கையில் முழு மாற்றம் ஏற்படுவதுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. எனவே, தலைவர்கள் அவர்களை ஊக்குவிப்பதும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்காக அவர்களைப் பாராட்டுவதும் முக்கியமானதாக இருக்கிறது.

பயிற்சி பெறுவோரின் ஜெப விண்ணப்பங்கள் அடிக்கடி அவர்களுடைய அன்றாடக வீட்டுப் பாடம் பயிற்சியில் வெளிப்படுத்தப் படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் பகிர்ந்து கொள்ளும் போது சில வேளைகளில் அவர்களுடைய தேவைகள் வெளிப்படையாகத் தெரிய வருகின்றன. அவ்விதம் தெரியவரும் போது அந்தத் தேவைகளுக்காவும் சேர்ந்து ஜெபிக் வேண்டும்.

4.     வாசிப்புப் பயிற்சியைப் பகிர்ந்து கொள்ளுதல்
வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்டவற்றைப் பகிர்ந்து கொளவதற்காக ஒதுக்கப்படும் நேரமும் கையாளும் முறைகளும் ஒவ்வொரு தலைவரின் தீர்மானத்தின்படி நிர்ணயிக்கப்படலாம்.

முலாவதாக, நேரத்தை ஞானத்துடன் நிர்வகிக்க வேண்டும். வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்வற்றைப் பகிர்நது கொள்வதில் அதிகமான நேரம் செலவாகக் கூடும். எனவே, அந்த வாரத்தின் வாசிப்புப் பகுதியில் தாங்கள் சவால் மிகுந்ததாகக் கண்ட ஒரு சுவிசேஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளம்படி பயிற்சி பொறுவோரிடம் தலைவர்கள் கூற வேண்டும்.

இந்த வாசிப்புப் பகுதியை ஒவ்வொரு கூட்டத்தின் ஆரம்பத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அந்தப் பகுதி அந்த வாரத்திற்குரிய பாடத்திற்கு ஒரு ஆயத்தமாகக் கொடுக்கப்பட்டிருந்தால், பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக அதைப் பகிர்ந்து கொள்வது பயிற்சி பெறுவோர் பாடத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். ஆனால் இந்த வாசிப்புப் பகுதி முந்தின வாரத்தில் படித்த பாடத்தை மீள்பார்வை செய்யும் படி கொடுக்கப்பட்டிருந்தால் அன்றைக்குரிய பாடத்திற்குப் பின் அதைப் பகிர்ந்து கொள்வது நலமாக இருக்கும். அல்லவென்றால், பின்பு ஒன்று கூடும் நேரத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் பயிற்சி பெறும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்தையும் தலைவர் மதிக்க வேண்டும்.

வாசிக்கப்பட்ட பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட கருத்துகளும் சவால்களும் பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக இருக்கும். எனவே, ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்திற்கும் மதிப்புக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.


5.     வேத வாசிப்பு பற்றிப் பகிர்ந்து கொள்ளுதல்
எல்லா வேத வாசிப்புப் பகுதிகளைப் பற்றியும் நாங்கள் சிந்தனை செய்த கருத்துகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வதற்கு அதிகமான நேரமாகும். எனவே, பயிற்சி பெறுவோரைத் தாங்கள சுயமாகத் திருத்திக் கொண்டு வீட்டுப் பாட அட்டவணையில் குறித்து கொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் தங்கள் வேத வாசிப்பில் தவறாமல் இருக்கும்படி ஊக்குவிக்கத் தக்கதாக, எப்போதாவது சில வேளைகளில் பகிர்ந்து கொள்ளுதலும் சிபாரிசு செய்யப்படுகிறது.

6.     முன்னுரை
பாடத்தின் மையப் பகுதிக்குள் கடந்து செல்லும்படி பயிற்சி பெறுவோரின் ஆர்வத்தைத் தூண்டுவதே முன்னுரையின் நோக்கம். எனவே, தலைவர்கள் முன்னுரையின் உபயோகத்தை ஒரு வரம்புக்குட்படுத்தி அதன் அடிப்படையான நோக்கத்தை மனதில் கொண்டு முன்னுரையைக் குறித்த ஆழ்ந்த விவாதத்திற்குப் போகாமலிருக்க கவனமாக இருக்க வேண்டும்.

7.     முன்னுரையின் சுருக்கம்
முன்னுரையின் சுருக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னுரையை அனைவரும் சேர்ந்து வாசிப்பதோ அல்லது தனிப்பட்ட சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதோ கட்டாயம் அல்ல. பாடத்திற்காகத் தலைவர் வைத்திருக்கும் குறிக்கோளைப் பொருத்து அவைகளை விட்டு விடலாம். எப்படியானாலும் பயிற்சி பெறுவோருக்குப் பாடத்தின் மையப் பகுதியைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டி பாடத்தின் கருப்பொருளில் நன்கு கவனம் வைக்கும்படி அவர்களுக்கு உதவி செய்வதை உதாசீனம் செய்து விடக் கூடாது.

8.     அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
இந்தப் பெயர் தெரிவிப்பதைப் போலவே அறிமுக நடவடிக்கை என்பது, ஒருவரையொருவர் நன்கு அறிந்திராத ஒரு புதிய சிறு குழுவில் நிலவும் இறுக்கமான அமைதியைக் குலைத்து ஒருவரோடுருவர் உற்சாகமாகப் பகிர்ந்து பேசிக் கொள்வதற்கு உதவி செய்யும் ஒரு செயல்பாடாகும். எனவே, பயிற்சி பெறுவோர் மன இறுக்கமின்றி தங்கள் உள்ளங்களைத் திறந்து குழுவிலுள்ள மற்றவர்களுடன் கலந்துரையாடி ஒரு குழுவாக ஆக்கரமான சூழ்நிலையை உருவாக்க இந்த அறிமுகப் பயிற்சிகள் உதவுகின்றன.

பயிற்சி பெறுவோர் முந்தின வாரம் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதே இந்த சீஷத்துவப் பயிற்சிக் கூட்டங்களின் எளிமையானதும் அடிப்படையானதுமான அறிமுக நடவடிக்கையாக இருக்கும். இவ்வாறு குறிப்பிட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வது அறிமுக நடவடிக்கையை அதிகப்பட்சமான பலனைக் கொடுக்கும்.

ஒரு உற்சாகமான சூழ்நிலையை உருவாக்க உதவி செய்யும் படி இந்த வழிகாட்டியில் அநேக பாடங்களுக்கு ஆரம்பமாகப் பல எளிமையான அறிமுக நடவடிக்கைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாடத்தின் கருப்பொருள் மற்றும் நோக்கம் இவற்றுக்குப் பொருத்தமான அறிமுக நடவடிக்கைகளைக் கொடுத்துதவப் பிரயாசப் பட்டோம். உதாரணமாக, சீஷத்துவப் பயிற்சியின் இந்த முதலாவது புத்தகத்தின் முதலாவது பாடத்தின் ஆரம்பமாகக் கொடுக்கப் பட்டிருக்கும் அறிமுக நடவடிக்கை என்னவென்றால், எந்த ஆரம்பப் பள்ளியில் நீங்கள் படித்தீர்கள்? அல்லது எந்த ஊரில் நீங்கள் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றீர்கள்? அரம்பப் பள்ளி நாட்களில் நீங்கள் பெற்ற மறக்கக் கூடாத அனுபவம் என்ன? இந்த அறிமுகப் பயிற்சி இந்த முதலாவது பாடத்திற்குப் பொருத்தமானது. ஏனென்றால் இப்பாடத்தின் ஒரு நோக்கம் பயிற்சி பெறுவோர், ஒருவர் மற்றவரின் வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துணர்ந்துகொள்ள உதவி செய்தலாகும்.

அறிமுக நடவடிக்கைகளை உபயோகிக்கும் போது தலைவர்கள் பின்வரும் காரியங்களைக் குறித்து ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

முதலாவதாக, இந்த வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிமுக நடவடிக்கைள் உதாரணங்கள் மட்டுமே என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவற்றை உபயோகிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. சீஷத்துவப் பயிற்சிக் குழுக்களில் பயிற்சி பெறுவோருக்கு மிகவும் பொருத்தமான வேறே அறிமுக நடவடிக்கைகளைத் தலைவர்கள் யோசித்து, உபயோகிக்கக் கூடுமானால் உபயோகிக்கலாம்.

இரண்டாவதாக, இவ்வாறான அறிமுக நடவடிக்கைகளின் நோக்கம் என்னவென்றால், சீஷத்துவப் பயிற்சிகக் குழுவில் பகிர்ந்து கொள்ளுதலை ஊக்குவித்து அதற்கு வாய்ப்பளிப்பதாகும். ஒரு குழுவினர் பகிர்ந்து கொள்ள ஆயத்த நிலையில் இருப்பார்களானால் அந்த சமயத்தில் அறிமுக நடவடிக்கை தேவைப்படாமல் இருக்கலாம்.

மூன்றாவதாக எல்லா நேரங்களிலும் உபயோகிக்கும் அறிமுக நடவடிக்கை பாடத்தின் கருப்பொருளுடன் சம்பத்தப்பட்டதாக இருக்க வேண்டும். என்பதில்லை. ஒவ்வொரு பாடத்திலும் கருப்பொருளுடன் சம்பந்தப்பட்ட அறிமுகப் பயிற்சியை மட்டுமே தலைவர்கள் உபயோகிக்க முயற்சி செய்தால் அது இயற்கைக்கும் புறம்பானதாகவும் விரும்பத் தகாததாகவும் ஆகி விடலாம். அறிமுக நடவடிக்கையால் பாடத்தின் கருப்பொருளுக்குள் அதிகம் செல்லும் அபாயமும் உள்ளது. அச்சமயம் அறிமுக நடவடிக்கை தன் அர்த்தத்தை இழந்து, அதன் நோக்கத்தில் தோல்வியடைந்து விடுகிறது. கலந்துரையாடலைத் துவங்கி வைக்கும் தன் பங்கினை மட்டும் அறிமுக நடவடிக்கை செவ்வனே செய்ய வேண்டும் – நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

9.     நுழைவுக் கேள்வி (பாடத்தை ஆரம்பிப்பதற்கான கேள்வி)
இந்த நுழைவுக் கேள்வியானது பாடத்தின் மையப் பகுதியிலுள்ள முதலாவது கேள்விக்குச் சுலபமாகச் செல்வதற்கு உதவியாக ஆயத்தம் செய்வதற்காகக் கேட்கப்படும் ஆரம்பக் கேள்வியாகும். இதன் காரணமாக இந்த நுழைவு கேள்வி பொதுவாகப் பாடத்தின் முழுமையான கருத்துடன் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது முதலாவது கேள்வியுடன் நேரடியாகத் தொடர்புள்ளதாகவோ இருக்கிறது. இந்த வழிகாட்டி ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி நுழைவுக் கேள்வி ஒன்று கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு தலைவரின் நோக்கம், விருப்பத்தின்படி இக்கேள்வியைப் பல விதங்களில் விரிவு படத்திக் கொள்ளலாம். இந்த வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள நுழைவு கேள்விகள் உதாரணத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


பாடத்தின் மையப் பகுதி


தலைப்பு         குறிப்பு

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

கூடுதலான கேள்வியும் விளக்கமும்

ஒவ்வொரு கேள்விக்கும் உரிய அடையாளங்கள்

துணைப் பகுதிகளும் துணைத் தலைப்புகளும்
வழிகாட்டியிலுள்ள ஒவ்வொரு பாடமும் இரண்டு வகைகளுள் ஒன்றாகப் பிரிக்கப்படலாம். முதலாவது வகையில் 10 கேள்விகள் இருக்கின்றன. இவை 3 முதல் 5 சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். இரண்டாவது வகையில் பல சிறு கேள்விகள் அடங்கிய 3 அல்லது 4 முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. இந்தச் சிறப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பாடத்தின் சுமூகமான போக்கையும் நன்கு அறிந்து கொள்ளத்தக்கதாகக் கேள்விகள் அனைத்தும் சிறிய தலைப்புகளுடன் 4 அல்லது 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் துணைப் பகுதிகளும் துணைத் தலைப்புகளும் அநேகமாக ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பத்திலும் கொடுக்கப்பட்டுள்ள மனதின் வரைபடத்திற்கும் ஒத்ததாகவே இருக்கின்றன என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கேள்விகளை வகைப்படுத்துதல்

கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகிய சிறப்பான அம்சங்களைக் கொண்ட, ஒப்பிட்டு ஆய்வு செய்து வேதபாடம் கற்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த சீஷத்துவப் பயிற்சி பாட வழிகாட்டி எழுதப்பட்டுள்ளன. இதைப் போலவே பாட வழிகாட்டியிலுள்ள கேள்விகளும் கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதால், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல் என்ற 4 வகைகளாகப் பிரிக்கப்படலாம். ஒப்பிட்டு ஆய்வு செய்யும் முறையில் வேத பாட வகுப்பை வழிநடத்தும போது கேள்விகளை வகைப்படுத்துவது முக்கியமானதாக இருக்கிறது. சீஷத்துவப் பயிற்சி பாட வழிகாட்டியிலிருந்து 5 பாடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த முதலாவது புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரிப் பாடங்களின் கேள்விகளையும் வகைப்படுத்தி ஒவ்வொரு கேள்வியின் எண்ணுக்கும் அருகில் ஒரு அடையாளக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தெரிந்தெடுக்கப்பட்ட 5 பாடங்கள் பின்வருமாறு:-
பாட வழிகாட்டி 1 பாடம் 4
பாட வழிகாட்டி 2 பாடம் 6
பாட வழிகாட்டி 2 பாடம் 11
பாட வழிகாட்டி 3 பாடம் 1
பாட வழிகாட்டி 3 பாடம் 7

மேற்கண்ட பாடங்களிலுள்ள ஒவ்வொரு கேள்வியும் பின்வரும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.

முதலாவது ஒரு கேள்வியானது ஒரு வேதாகமப் பகுதியைக் குறித்ததாக இருந்தால் அது கூர்ந்து கவனித்தல் அல்லது அர்த்தம் சொல்லுதல் () வகையைச் சார்ந்த்து எனப்படும். ஒரு வேதாகமப் பகுதியின் உண்மை அல்லது சுருக்கம் பற்றி ஒரு கேள்வி கேட்டால் அது கூர்ந்து கவனிக்கும் வகையைச் சேர்ந்தது எனப்படும். மாறாக அதே பகுதியின் அர்த்தத்தைப் பற்றியோ அல்லது கற்பிக்கப்படும் உண்மையைப் பற்றியோ கேள்வி கேட்டால் அது விளக்கம் சொல்லுதல் வகையான கேள்வியாக வகைப்டுத்தப்படும்.

இரண்டாவதக பயிற்சி பெறுவோரின் வாழ்க்கையைப் பற்றிக் கேள்வி கேட்டால் அது ஆழ்ந்த சுய சிந்தனை () அல்லது வாழ்க்கையில் செயல்படுத்துவது () என்று வகைப்படுத்தப்படும். பயிற்சி பெறுவோரின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்க்கை பற்றிக் கேள்வி கேட்டால் (அது சிந்தனையும் தன்னைக் குறித்து ஆய்வு செய்தலும்) அது சுயமாக ஆழ்ந்து சிந்தித்தல் என்று வகைப்படுத்தப்படும். மாறாக அந்தக் கேள்வி அவரது வாழ்க்கையின் மாற்றம் (செயல் படுத்துதலும் தீர்மானமும்) குறித்துக் கேள்வி கேட்டால் அது வாழ்க்கையில் செயல்படுத்தும் வகையைச் சார்ந்தது எனப்படும்.

மூன்றாவதாக, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அம்சங்களைக் கொண்ட கேள்விகளும் (அம்சங்கள்) உள்ளன. அப்படிப்பட்ட கேள்விகளில் கூடுமானவரை எல்லாவிதமான அம்சங்களும் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன.

(ப18) மாதிரி விடை
தலைவர்கள் வேதாகம பகுதிகளின் கருத்தைக் கூர்ந்து கவனித்து அதற்கு விளக்கம் அளிப்பதில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும்படி ஒவ்வொரு கேள்விக்கும் மாதிரி விடையை இந்த வழிகாட்டி கொடுக்கிறது. பின்வரும் கொள்கைகளுக்கு ஏற்றபடி மாதிரி விடைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது, கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல் வகையைச் சார்ந்த பல கேள்விகளுக்கு மாதிரி விடைகளைக் கொடுக்க இந்த வழிகாட்டி முயற்சி செய்திருக்கிறது.

இருந்த போதிலும் தலைவர்கள் இந்த விடைகளை மாத்திரமே அதிகமாகச் சார்ந்திராமல் இருக்கும் படி கவனம் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ஆழ்ந்த சுய சிந்தனைகள், வாழ்க்கையில் செயல்படுத்துதல் இவற்றுக்கு உபயோகமான குறிப்புகளும் சில விளக்கங்களும் அவைகள் சார்ந்திருக்கும் தன்மைக்கேற்ப கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கூடுதலான கேள்விகளும் விளக்கங்களும்
ஒப்பிட்டு ஆய்வு செய்யும் முறையான வேதபாட வகுப்பை நடத்துவதில் நல்ல திறமை பெற்ற தலைவர்கள் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்தப பாட வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான கேள்விகளைத் தவிர கூடுதலான வேறு பல கேள்விகளும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கூடுதலான கேள்விகள் () இது போன்ற அடையாளச் சின்னத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளன. முக்கியமான கேள்விகளைத் தலைவர் மிகுந்த திறமையுடன் கையாள்வதற்கு உதவியாக இருக்கும்படி இந்த கூடுதலான கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தலைவரும் தனது விவேகமான தீர்மானத்தின் படி இந்தக் கேள்விகளைப் பாட நேரத்தில் பயன்படுத்தி, பாடத்தை நிதானமாகவும் சரியான வழிமுறையில் நடத்த வேண்டும்.

குறிப்பு
சீஷத்துவ பயிற்சி கூட்டங்களைப் பயனுள்ளதாக நடத்துவதற்கு உதவியாக சில குறிப்புகளை இந்த வழிகாட்டி கொடுக்கிறது. திறமை வாய்ந்த ஒரு தலைவர், எதை எப்படிக் கற்பிக்க வேண்டுமென்று நன்கறிவார். இதை வேறு விதமாகச் சொல்வோமானால், போதிப்பதில் எதை (பொருளடக்கம்) எப்படி (போதிக்கும் முறை) போதிக்க வேண்டும் என்பதை சீக்கிரத்தில் கிரகித்து உணர்ந்து கொள்ளக் கூடிய தன்மைமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் தலைவர்களுக்கு உதவி செய்வதற்குப் போதிக்க வேண்டிய பகுதியின் பொருளடக்கம், போதனா முறை பற்றிய தகவலின்படி இந்த விழகாட்டியில் அடங்கியுள்ளன்.

முடிவுரை
1.     சுருக்கம்.
ஒரு பாடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்ட உண்மைகள் போதனைகளை சுருக்கமாகக் கூற வேண்டியது அவசியமாக இருக்கிறது. இது பாட வழிகாட்டியில் அடங்கியுள்ளதின் சுருக்கமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. அந்த நாளின் விசேஷித்த சந்தர்ப்பத்தைப் பொருத்து சில எதிர்பாராத விஷயங்கள் கூட எந்த ஒரு பாட நேரத்திலும் பகிர்ந்து கொள்ளப் படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, ஆவியானவரால் இவ்வாறு வெளிப்டுத்தப்பட்ட விஷயங்களை பாடத்தின் பொருளடக்கம், மனதின் வரைபடம் இவைகளுடன் ஞாபகப் படுத்தி சுருக்கமாகத் தலைவர் எடுத்துக் கூற வேண்டியது மிக முக்கியம். இது மிகச் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட வேண்டும்.

2. தீர்மானங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துதல் – இவற்றை எழுதி வைத்துக் கொள்.
அறிவார்ந்த உண்மைகளை சுய வாழ்கைக்கான உண்மைகளாக ஏற்றுக் கொள்வதே, தீர்மானங்களையும் செயல்படுத்தும் திட்டங்களையும் எழுதி வைப்பதின் நோக்கமாகும். படித்துக் கொண்ட பாடங்கள், உண்மைகள், மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்கள் இவற்றை எழுதி வைத்துக் கொள்வது, பயிற்சி பெறுவோர் அவைகளைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தி உபயோகிக்கும்படி ஊக்குவிப்பதாக இருக்கும். எனவே, எப்போதும் தீர்மானங்களைச் செய்யவும் அவற்றை நிறைவேற்றுவது பற்றிச் சிந்திக்கவும் சிறிது நேரத்தையாவது ஒதுக்குவது முக்கியமானதாக இருக்கிறது.

3. செயல்படுத்த வேண்டிய காரியங்களுக்கான திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவராகத் தங்கள் தீர்மானங்களையும் அவர்கள் வாழ்க்கையில் அதின்படி செய்வதைப் பற்றியும் பகிர்ந்து கொள்வதற்கான நேரத்தை அனுமதிக்க வேண்டும். இது தேவனுடைய வார்த்தையின்படி ஜீவிக்கவும், தேவனுக்குக் கணக்கொப்புவிக்க வேண்டும் என்பதை உணரவும் இவர்களுக்கு நினைப்பூட்டுவதாக இருக்கும்.


4. முடிவு பாடல்கள்
ஒவ்வொரு பாடத்தின் கருப்பொருளுக்கும் பொருத்தமான பாடல்களைத் தலைவர்கள் நேர்ந்தெடுக்கலாம்.

5. முடிவுக்குக் கொண்டுவரும் ஜெபம்
ஜெபங்களைப் பொதுவாகப் பின்வரும் 4 வகைகளாகப் பிரிக்கலாம். பாடத்தின் போது குறிப்பிடப் பட்ட விசேஷித்த ஜெப வேண்டுதல்களும் பின்வரும் பட்டியலுடன் சேர்த்துக் கொள்ளப்படலாம்.

அ) பரிசுத்த ஆவியானவர் ஒளியூட்டித் தெளிவுபடுத்தி அவர்கள் இருதயங்களில் புதுப்பித்த சத்தியங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்தி அவரைத் துதித்து ஜெபித்தல்.

ஆ) அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தின பாவம் எதுவும் இருக்குமானால் மனஸ்தாப்ப்பட்டு மனந்திரும்பும் படி ஜெபித்தல்.

இ) அவர்களுடைய வாழ்க்கையிலும் குணாதிசயத்திலும் முற்றிலும் மாற்றம் ஏற்படுவதற்கு செய்யத் தேவையான தீர்மைனங்களுக்காக ஜெபித்தல்.

ஈ) அவர்களுடைய வாழ்க்கை குணாதிசயத்தை முற்றிலும் மாற்றும்படி பரிசுத்த ஆவியானவரை வேண்டிக் கொண்டு ஜெபித்தல்.


6. வீட்டுப் பாடப் பயிற்சி
வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டுப் பாடப் பயிற்சிகள் யாவும் உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொரு தலைவரின் குறிக்கோள்கள், ஒவ்வொரு குழுவின் சூழ்நிலை குழுவிலுள்ள பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தக்கதாக வீட்டுப்பாட பயிற்சியின் அளவை நிர்ணயிக்கலாம். ஒவ்வொருவரின் ஆற்றல், திறன், குடும்ப சூழ்நிலை ஆகியவை வேறுபட்டவையாக இருக்கும். விவேகமுள்ள தலைவர் தமது அறிவாற்றலை உபயோகித்து வீட்டுப்பாட பய்றிசியின் அளவைத் திட்டம் பண்ணலாம்.

அ) தினசரி வாழ்க்கையின் வீட்டுப்பாடம் பயிற்சி
தினசரி வாழ்க்கையின் பயிற்சியானது, பயிற்சி பெறுவோர் தாங்கள் கற்ற உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த உதவி செய்யும் படி ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே இருக்கிறது. தலைவரின் வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாட பயிற்சி, ஒவ்வொரு பாடத்தின் மையமான கருத்தை மனதில் கொண்டு தெளிவாக முறைப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவரும் தமது சிறிய குழுவின் தனிப்பட் சூழ்நிலைகள் தேவைகளுக்குப் பொருத்தமான வேறு வீட்டுப்பாட பயிற்சியையும் கொடுக்கலாம். வீட்டுப்பாட பயிற்சியானது ஒவ்வொது பாடத்தின் கருப்பொருளையும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆ) வாசிக்கும்படி கொடுக்கப்பட்டிருக்கும் வேலை.
வாசிப்புக்கான பகுதிகளைக் கொடுக்கும் போது தலைவர்கள் 3 விதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
·         வாசிக்கும் படியாகப் பயிற்சி கொடுப்பது வழிகாட்டியிலுள்ள பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொளவ்தற்குக் கூடுதலான ஒரு கருவி மட்டுமே. வழிகாட்டியிலுள்ள பாடல்களை விவரித்துக் கூறும் போது போதுமான அளவு சொல்லாமல் விட்டுவிடும் தவறைத் தலைவர்கள் செய்யக் கூடாது. முக்கியமாகப் பாடத்திற்குப் பதிலாக வாசிப்புப் பயிற்சியைக் கொடுத்து விடலாமே எனும் ஒரு சோதனையான எண்ணம் பல தலைவர்களுக்கு ஏற்படலாம்.
·         அதிகப்படியாக வாசிக்கும் பகுதியைக் கொடுப்பது எப்போதும் ஒரு நல்ல யோசனை அல்ல. வாசிக்க வேண்டிய அளவானது பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும். அத்துடன் வாராவாரம் செய்வதற்காகக் கொடுக்கப்படும் வீட்டுப் பாடப் பயிற்சியே போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தலைவர்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
·         கொடுக்கப்பட்ட வாசிப்புப் பகுதி ஒவ்வொரு பாடத்தின் கருப்பொருளுக்கு ஒத்ததாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்த வழிகாட்டி, சிபாரிசு செய்யப்பட்ட வாசிப்புப் பாகங்களுக்காக ஒரு சிறிய கைப்புத்தகம் வெளியிட்ருக்கிறது. இவைகளும் சிபாரிசு செய்யப்பட்வைகளே தவிர, கட்டாயமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைவரும் தன்னுடைய குழுவிற்கு வாசிககக் கொடுக்க வேண்டிய புத்தகங்களின் படியலை அவசியம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
·         மனப்பாட வசனம் – ஒவ்வொரு வாரத்திற்கும், வரப்போகும் வாரத்திற்குரிய பாடத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட இரண்டு மனப்பாட வசனங்களை வழிகாட்டி குறிப்பிட்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலைகளையும் பயிற்சி பெறுவோரின் திறமையையும் பொருத்து மனப்பாட வசனத்தை ஒன்று ஆகக் குறைக்கலாம். மனப்பாட வசனங்கள் கொடுக்கும் போது சில ஆலோசனைகள் பின்வருமாறு:-
o   மனப்பாட வசனங்களைத் தியான நேரத்தில் உபயோகிக்கலாம். அதே சமயம் தியான நேரத்தில் அதிகமான வேலை கொடுக்காதபடியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
o   பயிற்சி பெறுவோர் மனப்பாட வசனங்களைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்கிக் கூறும்படி சொல்வதும் உதவியாக இருக்கும். பயிற்சி பெறுவோர் எவ்வளவு நன்றாக மனப்பாட வசனங்களைக் கொண்டு தியானம் செய்திருக்கிறார்கள் என்பதை சோதித்தறியவும் இது உதவியாக இருக்கும். தங்கள் குடும்பத்தாருடன் தினசரி உரையாடலின் போது இந்த மனப்பாட வசனங்களையும் எடுத்துக் கூறும்படி ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வது இந்த வசனங்களை மறந்து போகாமல் எப்போதும் மனதில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.
·         தியான நேரம் – ஒவ்வொரு வாரத்தின் தியான நேரத்திற்காக அடுத்த வாரத்திற்குரிய பாடம் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியை இந்தத் வழிகாட்டி தெரிந்தெடுத்திருக்கிறது. பயிற்சி பெறுவோர் அந்தப் பகுதியிலுள்ளவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவது பற்றி தியானம் செய்யும்படி கூற வேண்டும். தியானத்திதுக்கான பகுதி வேதாகமத்தின் எந்தப் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்படலாம் என்ற போதிலும், சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்தில் கதைகள் போன்ற பகுதிகளைத் (சரித்திரங்களைக் கூறும் புத்தகங்கள் சுவிசேஷங்களிலிருந்து) தெரிந்தெடுக்க சிபாரிசு செய்யப்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால், பயிற்சி வெறுவோரில் பலருக்கு இந்த வேளையில் தீர்க்கதரிசனப் புத்தங்கள் அல்லது நிரூபங்களை வாசித்துப் புரிந்துணருவது கடினமாக இருக்கும்.
·         ஒரு வாரத்தில் எத்தனை தியான நேரங்கள் கொடுக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு தலைவரையும பொருத்ததாக இருந்த போதிலும், வாரத்திற்கு 4-5 தியான நேரங்களை வைத்துக் கொள்வதுடன், அதில் ஒன்று 4வது வகையைச் சார்ந்ததாக இருப்பது பொருத்தமாக இருக்கும். கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தியானத்திற்குப் பதிலாக பயிற்சி பெறுவோர் ஞாயிறு அல்லது புதன் (வார நடுவில் ஆராதனை இருக்குமானால்) கிழமைகளில் ஆராதனையின் போது செய்யப்ட்ட பிரசங்கத்தின் சுருக்கத்தை தியானம் செய்யும் படி சொல்வது மற்றொரு ஆலோசனையாக இருக்கிறது. பயிற்சி பெறுவோர் தியானப் பகுதியை அவசரமாக வாசிப்பதுடன் முடித்து விடாமல், அந்த பகுதியைக் கொண்டு தாங்கள் செய்யும் தீர்மானங்களையும் அவற்றை செயல்படுத்தும் விதத்தையும் குறித்து கவனமாகச் சிந்திக்கவும், அவற்றைத் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் சரியானபடி செயல்படுத்தவும் அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தியானத்திற்குரிய பகுதியை அவர்கள் வாசித்து, இந்த 4வது வகையான வாழ்க்கையில் செய்லபடுத்துதல் என்ற தியானத்தைச் செய்யும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
7. தலைவர்கள் தற்பரிசோதனை செய்வதற்கான பட்டியல்
தலைவர்கள் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளைக் குறிக்கோள் கண்காணிப்பு முறையில் மதிப்பீடு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பின்வரும் பட்டியல், சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களையும் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளையும் மதிப்பீடு செய்வதற்கு உதவியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீஷத்துவப் பயிற்சி பாடத்தையும் முடித்த பின்பு பின்வரும் பட்டியலின் படி தலைவர்கள் சுயமதிப்பீடு செய்தபின் தங்கள் பெலவீனங்களை அறிந்து அதற்கு ஈடு செய்வது சுய மேம்படுத்துதலுக்கு உதவியாக இருக்கும்.

(ப.22) தலைவரின் தற்பரிசோதனை பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுயமதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

1.     மனத்தின் வரைபடத்தின் உபயோகம்
a.     இந்தப் பாடம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?
b.     பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் புரிந்துணந்திருந்தேனா?
c.     ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையேயும் கடந்து செல்லும்போது சுமூகமாக இருந்ததா?
2.     அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
a.     அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்) பொருத்தமானதாக இருந்ததா?
b.     நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?
3.     கேள்வி
a.     நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
b.     பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
c.     (Open and closed questions) தெளிவாக விபரமாக பதில் கூற வேண்டிய கேள்விகளையும், ஆம்-இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
d.     கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த கேள்விகளை நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
4.     கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
a.     பயிற்சி பெறுவோர் விடையளிக்கும்போது நான் அனுதாபத்துடன் கேட்டு, பொருத்தமான பாவனை, சைகை, குரலில் ஏற்றத் தாழ்வு , நேருக்கு நேர் பார்த்தல், ஆகியவற்றை உபயோகித்தேனா?
b.     பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும், விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக ஒழுங்கு படித்தினேனா?
5.     திறந்த மனப்பான்மை
a.     பயிற்சி பெறுவோரிடம் மனம் விட்டுப் பேசினேனா?
b.     பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை, குணாதிசயம்  பற்றி வெளிப்படையாகப் பகிர்நது கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
c.     மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பீத்தேனா?
d.     பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களைப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?
6.     ஊக்குவிப்பு
a.     பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
b.     பகிர்நது கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி, நன்றி கூறி ஊக்குவித்தேனா?
7.     நேரத்தை நிர்வாகித்தல்
a.     ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தை ஒதுக்கினேனா? கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல்.
b.     பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?
8.     பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்
a.     பரிசுத்த ஆவியானவரின் ஒயியூட்டித் தெளிவு படுத்துவதை நான் நாடித் தேடினேனா?
b.     பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையம் உள்ளத்தில் உணர்து அதின் படி செய்லபட்டேனா?
9.     கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும்
a.     பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
b.     பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டிறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம் செய்து சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?
10.   பயிற்சி பெறுவரைப் புரிந்துணர்ந்து கொள்தல்
a.     பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?

b.     இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும் ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?