Tuesday, November 21, 2017

ஞாபகார்த்த, ஸ்தோத்திர ஜெப ஆராதனை முறைமை

பரி. யாக்கோபின் ஆலயம்
243 ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா (ஈப்போ சாலை), கோலாலம்பூர்









நிற்கவும்
---------
பிதாவாகிய தேவனின் குடும்பத்தாராகிய நாம் அனைவரும் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் குறிப்பாக உமது அடியாராகிய  _________________________________ அவர்களுக்காக ஏறெடுப்பதற்காக திரண்டு வந்திருக்கிறோம். தேவனுடைய பரிசுத்த செய்தியை அறிவதற்கும், உலகின் தேவைகளை அவரண்டை கொண்ட வருவதற்கும், அவருடைய கிருபையை நாடுவதற்கும் இந்த ஆராதனையில் கலந்து கொள்கிறோம்.

கீதம்

சுருக்க ஜெபம்
எங்கள் பரம பிதாவாகிய நித்திய கடவுளே, எங்கள் நீடிய அன்பால் நேசித்து, மரண இருளை அதிகாலையாக மாற்றக்கூடியவரே, பயபக்தியும் தாழ்மையும் உள்ள இதயத்தோடு உம்மிடம் காத்திருக்க எங்களுக்கு உதவி புரியும். உமது வேதத்தினாலும் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாங்கள் நம்பிக்கையைப் பெற்று எங்களுடைய இருளினின்றும் உபத்திரவங்களினின்றும் உம்முடைய பிரசன்னத்தின் ஒளிக்குள்ளும் சமாதானத்திற்குள்ளும் உயர்த்தப்பட்ட இந்த அமைதியான நேரத்தில் நித்திய காரியங்களைக் குறித்து எங்களோடு பேசியருள வேண்டும் என்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

அஞ்சலி/சாட்சி

சிறப்புப் பாடல்  (இருந்தால்)

வேத பாடங்கள்
1ல் பாடம்              சங்கீதம் 23/சங்கீதம் 130
2ம் பாடம்              யோவான் 5:19-25/ரோமர் 14:7-9

அருளுரை

பாமாலை/பாடல்

ஸ்தோத்திர துதிபாடல்
சகலத்தையும் படைத்த பிதாவாகிய தேவனே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

உலகை இரட்சித்த குமாரனாகிய தேவனே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

சபையைப் பரிசுத்தப்படுத்தும் பரிசுத்த ஆவியாகிய தேவனே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

திரித்துவரே, மூவரில் எகமானரே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

உமது அன்பில் வளர்வதற்குத் தடையாக இருக்கின்ற யாவற்றிலும் இருந்து
எங்களை மன்னித்தருளும் பிதாவே

உமது சமூகத்தில் இருந்து வழிதப்பச் செய்யும் யாவற்றிலும் இருந்தும்
எங்களை மன்னித்தருளும் பிதாவே

காலஞ்சென்ற அடியாரை உணவழித்து கவனித்துக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும்
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.




காலஞ்சென்ற அடியாரை முழு அன்போடு கவனித்து அவர்களின் ஜீவித்து கொண்ட சபையாருக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

உலகைப் பார்வையை விரிவாக்குவதில் உதவிய காலஞ்சென்ற உமது அடியாரின் குருமார்கள், போதகர்கள், அத்தை-மாமன்மார்கள், சிற்றப்பா-சித்திமார்கள், நண்பர்கள் யாவருக்கும்
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியார் _____________________________
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியார் தம் குடும்பத்தாரிடத்தில் உம் அன்பை வெளிப்படுத்தியமைக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியார் தம் கடமையை நிறைவேற்றிய முறைக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

சபையிலும் குறிப்பாக பரி.யாக்கோபின் ஆலயத்திலும், சமூகத்திலும் உமக்கு சாட்சி பகர்ந்த முறைமைக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

உமது மகிமைப்பும் மாட்சிமையும் வளரும் பொருட்டு காலஞ்சென்ற உமது அடியார் பொழிந்த உம் அன்புக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியாரின் குடும்பத்தாரை ஆற்றித் தேற்றியருளும். அவர்களுக்கு உயிர்த்தெழுதலின் ஆவியைத் தாரும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்

எதிர்காலத்தில் நாங்கள் உமதண்டை கிட்டிச் சேரும் பொருட்டு எங்களை வழிநடத்தியருளும்
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்


சபையார் சேர்ந்து சொல்வது
என்றென்றும் நிலைத்திருக்கிறவரும் வரப்போகிறவருமான ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். சகலத்தையும் படைத்தவரும் உமது சித்தம் நிறைவேறுவதற்குப் பாத்திரருமாகிய நிலைவரம் பெற்ற கர்த்தராகிய ஆண்டவரே, நீர் கனமும் மகிமையும் பெறப் பாத்திரராய் இருக்கிறீர். ஆமென்.

காணிக்கைப் பாடல்

ஜெபம்
குரு:       ஆண்டவரே, எங்கள் மீது கிருபையாய் இரும்
சபை:     கிறிஸ்துவே எங்கள் மீது கிருபையாய் இரும்
குரு:       ஆண்டவரே, எங்கள் மீது கிருபையாய் இரும்

சபை:     பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்,

ஜெபம்  (சபை):
உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் எங்களுக்கு மெய்யான அன்பையும் உறுதியான நம்பிக்கையையும் அருளிய பரலோக பிதாவே, இந்த விசுவாசத்தை எங்களிடத்தில் அனுதினமும் உறுதிப்படுத்தியருளும். இவ்விதமாய் நாங்களும் பரிசுத்தவான்களைப் போல், பாவ மன்னிப்பைப் பெற்று, நித்திய ஜீவனுக்கான உயிர்த்தெழுதலைப் பெற கிருபை அருளும். ஆமென்.




சிறப்புப் பாடல்

ஆசீர்வாதம்:

எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் ஜெயத்தை அருளிய எங்கள் கர்த்தாவே, விசுவாசத்தின் மூலம் எங்களுக்கு மகிழ்ச்சையையும் சமாதானத்தையும் அருளும். தேவனாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதம் இன்றும் என்றென்றும் உம்மோடு நிலைத்திருப்பதாக. ஆமென்.

சபை:     ஆமென்

குரு:       சமாதானத்தோடே உலகத்திற்குள் சென்று ஆண்டவரை சேவியுங்கள்
சபை:     கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்

கீதம்