Sunday, May 29, 2016

இயேசு கிறிஸ்து உங்களுக்கு இரட்சகரானால்....

ஸ்தோத்திரம். நமது ஞாயிறு துதித்தல் ஆராதனைக்கு வருக. இன்றையே கேள்வி:
இயேசு கிறிஸ்துவை நமது சொந்த ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதால் அவர் நமக்கு பாவ மன்னிப்பு, நித்திய ஜீவனுக்கான வாக்குறுதி ஆகியவற்றைத் தவிர வேறு எதைத் தருகிறார்? கலாத்தியர் 3:26 - 4:7 ஆகிய வசனங்களை என்னோடு வாசிக்கவும். இந்த வசனம் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.

A. கலாத்தியர்  3: 26-28 – நமது சிந்தை பயனடைகிறது
பிறரைக் குற்றப்படுத்தாதபடி தேவன் நமது சிந்தையை மாற்றியமைக்கிறார். "யூதரானாலும், கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் அனைவரும் சுதந்திரவாளிகளே......" கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம். எந்தவிதமான வேறுபாடும் இருக்கத் தேவையில்லை. தோல் நிறம், மொழி, ஜாதி வேறுபாட்டின் அடிப்படையில் வெறுப்பு, வன்முறை, பேதம் தோன்றாததால், அதிக சந்தோஷம் கிடைக்கிறது.

B. கலாத்தியர்  3:29 – நமது உடைமை பயனடைகிறது
நாம் ஆபிரகாமின் உண்மையான வாரிசாக இருப்பதால், நமது கற்பனைக்கு எட்டாத சுதந்திரத்தை வழங்கியுள்ளார். நாம் மிக மிக செல்வந்தர்களாகியிருக்கிறோம்! உலக பிரகாரமாக அல்ல, வேறு விதமான செல்வந்தர்கள் ஆவோம். தேவன் ஆபிரகாமுக்கு வழங்கிய ஆசீர்வாதம் மிக அறுமையானதும் புரிந்து கொள்ளக்கூடாததுமானது. நாம் மாபெரும் செல்வத்துக்கு சுதந்திரவாளியாக இருக்கிறோம். மிகப் பெரிய ஈவைத் தேவன் வழங்கியிருப்பதால் இது மிகப் பெரிய சந்தோஷமான காரியமாகும்.

C. கலாத்தியர்  4:6 – அளவை ரீதியாக நாம் பயனடைகிறோம்.
தேவன் தமது அற்புதமான பிரசன்னத்தால், புதிய உறவின் அளவையை அருளியுள்ளார். நமது தேவனை, ‘அப்பா, பிதாவே’, என்று அழைப்பது எவ்வளவு பெரிய காரியம்! இது அற்புதத்திலும் அற்புதம். நான் எந்த அளவுக்கு தேவனை நெறுங்கியிருக்கிறேனோ, அந்த அளவுக்கு நீங்களும் மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். ஏப்படி? நான் தேவனுடைய புத்திரன் (புத்திரி)! ஒரு புத்திரனுக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்! ஒன்று வீட்டுக்குள் வாசம் செய்யமுடியும், மற்றொன்றால் முடியாது.

இயேசு கிறிஸ்துவினால் கிடைத்த இந்த ஆசீர்வாதங்களைப் பற்றிச் சிந்திப்போம்.

குறுத்தோலை ஞாயிறு

இன்று ஒரு வரலாற்றுப்பூர்வமான ஆராதனை நடைபெறுகிறது. திருச்சபை வரலாறு, இந்த குறுத்தோலை ஞாயிற்றை, இரண்டு பிரதான காரியங்களை நினைவுகூற  அணுசரிக்கப்படுகிறது என்று கூறுகிறது:

(i)      தாம் கொல்லப்படுவது உறுதி என்று தெரிந்தும் இயேசுவானவர் எருசலேமுக்குப் பயணமாக மன உறுதியோடு தீர்மானித்தார்.

(ii)    அவரைச் சூழ்ந்துள்ள ஜனத்தாரின் புத்தி தடுமாற்றம். பரவசமான நேரத்தில் அவர்கள் கையில் குறுத்தோலைகளோடு இயேசுவானவரை சந்தோஷத்தோடு வரவேற்றனர். ஆனால், சிறிது நேரம் கழித்து இதே கூட்டத்தார் இயேசுவானவரை சிலுவையில் அறையவேண்டும்  என்று கூச்சலிட்டனர்.

முதலாவது, இயேசுவானவர் தலைமைத்துவத்தில் சிறந்தவர் என்று நான் கருதுகிறேன். அவர் காளையின் கொம்பைப் பிடிக்கிறார். அதாவது, முன்னிருக்கும் பிரச்சனையைக் காலம் தாழ்த்தாமல் அல்லது தவிர்க்காமல் எதிர்கொள்வது நல்லது.

இரண்டாவது, கூட்டத்தாரின் மனநிலையால் நாம் தவிக்காமல் இருப்போமாக. நாம் ஒவ்வொருவரும் நம் தனிச்சிறந்த தன்மைகளை அறிந்து கொள்ள தாழ்மையோடும் நோக்கத்தை அறிந்தவர்களாகவும், பெரும்பான்மையானவர்களுக்கு விரோதமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கும்.

இயேசுவானவர் நம்மில் பிரகாசிக்க நமது குணாதிசயங்களைக் கூர்மையாக்கி அச்சு வார்ப்போமாக!

விசுவாசப் பிரமாணம்

அப்போஸ்தலர்களின் விசுவாசம் வாசிப்பதற்கு அறுமையான கட்டுரை ஆகும். அப்போஸ்தலர்கள் மட்டும் அதை எழுதவில்லை. ஆனால், கிறிஸ்தவத்தின் நல்லன்பே ஆதித் திருச்சபைகள் அவற்றைத் தொகுத்தன.

இந்த அப்போஸ்தவ விசுவாசப் பிரமானம்:
"ஒரே பிதாவுமாகிய இந்த வானத்தையும் பூமியையும் அவருடைய ஒரே குமாருமாகிய இயேசு கிறிஸ்துவையும்  ஒரே தேவனுமாகிய பரிசுத்த ஆவியையும் ஜென்மித்த சர்வ வல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியின் மூலம் கன்னி மரியாள் மூலம் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகுக்கு பரிசுத்த ஆவியால் ஜெனிமித்தவர். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அரையப்பட்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் உயிர்த்தெழுந்து பூலோகத்தை விட்டுப் புறப்பட்டவர். பிதாவின் வலதுபாரிசலத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து உயிர்த்தோரையும் மரித்தோரையும் நியாயந் தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன்.ஒரோ கத்தோலொக்க (பொதுவான) திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் பாவ மன்னிப்பையும் மரித்தோரின் உயிர்ய்த்தெழுதலையும் நித்திய ஜீவனையும் விசுவாசிக்கிறேன். " (திருச்சபையின் மொழி பெயர்ப்பு கிடையாது).

இந்தப் பிரமானத்தை நீங்கள் யாவரும் அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது மொத்த கிறிஸ்தவ விசுவாச பிரமானத்தையும் ஒரு மாத்திரையாக தொகுத்து வைக்கிறது. தவறான உபதேசங்கள் திருச்சபைகளை ஆட்டிப்படைக்காமல் இருக்க இது தொகுக்கப்பட்டது.

இந்தப் பிரமாணத்தை மனனமாக தெரிந்து வைத்திருந்தால் வாழ்த்துகள்! ஓரோளவு தெரிந்து வைத்திருப்பதவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வைத்து மனனம்  செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஞாயிறு நற்கருணை ஆராதனையின் போது இதனை நாம் மனனமாக ஒப்புவிக்க வேண்டும். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 

எதிர்காலத்தைக் குறித்து கவலை வேண்டாம்!

கடந்த வாரம் வாலிபர்கள் சந்தோஷமான நிகழ்ச்சியை நடத்தினர். செல்வம் சம்பந்தப்பட்ட விஷயம் அது. குறிப்பாக வாலிபன் தன் செல்வத்தைத் திட்டமிட்டு அதன் மூலம் சிறந்த வாரிசுகளைப் பெற முடியமா என்று பார்த்தோம். உள்ளான அர்த்தம் நிறைந்த உபதேசத்தை வழங்கிய திரு. பாண்டியனுக்கு நன்றிகள்!

எதிர்காலத்தைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத வாலிபர் தலைமுறையை உருவாக்குவோம். உண்மையில் வாலிபர்களும் கொஞ்ச காலம்தான் வாழ்கிறார்கள். அதனால் இந்த உபதேசம் அர்த்தமற்றுக்கூட போகக்கூடும். அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட வாலிபர்கள் யாவரும் இந்த உபதேசத்தை மிகவும் பயனுள்ளதாக எடுத்தக் கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இயேசுவானவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் நிதி நிர்வாகம் பற்றி தம் சீஷர்களுக்கு உபதேசித்தார். செல்வத்தைப் பற்றியும் அது குறித்து விவேகமாக நடந்து கொள்வது பற்றியும் அவர் உபதேசித்தார்.

இந்த உபதேசம் வாலிபர்களுக்கு மட்டும் அல்ல. கடவுளின் பிள்ளைகளாகிய நாமும் நிதி நிர்வாகம் குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

தேவன் நாம் ஒவ்வொருவருக்கும் எதிர்கால ஜீவியம் நிலைத் தன்மை வாய்ந்தாகத் திகழ ஞானத்தை அருளுவாராக

Wednesday, May 4, 2016

செயல்படும் தேவன்

ஸ்தோத்திரம். நமது துதித்தல் ஆராதனைக்கு வரவேற்கிறோம். இன்று பேராயர் ஹிஷார் சிம்மாங்சொங் நம் மத்தியில் வாசம் செய்வதோடு அருட்செய்தியையும் வழங்குவதால் பெருமையடைகிறோம். அத்தோடு அவர்களுடைய ஊழியங்களைப் பற்றியும் நமக்கு விளக்கம் தருவார். ஆராதனை முடிந்தவுடன் சிறு கலந்துரையாடலுக்காக சந்திப்பு அறையில் கூடுவோம். நீங்களும் இணைந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

சங்கீதம் 138:8 பலருக்கும் ஓர் அற்புதமான வசனம்:
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

படிநிலை 1: ஒவ்வொரு தனிப்பட்ட மனுஷனுக்கும் தேவன் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கிறார். உங்களுக்கான அந்த தேவத் திட்டம் மிகவும் பிரத்தியேகமானது. அவர் உங்கள் ஜீவியத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவது உறுதி: உங்கள் ஜீவியத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

படிநிலை 2: தேவ வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற அவரை நம்பலாம். 
விளைவு: தேவனை ஸ்தோத்தரிப்பதோடு அவரைத் தொடர்ந்து விசுவாசிக்கிறோம்.

படிநிலை 3: தேவ அன்பின் குணாதிசயம் – அது தற்காலிகமானது அல்ல. அது என்றென்றும் நிலைத்திருக்கும்.
விளைவு: தேவன் உங்களை எப்போதும் நேசிக்கிறார். உன்னுடைய எந்த காரியமும் அவருடைய நிலையான அன்பை மாற்றவியலாது.

படிநிலை 4: நமக்குத் தேவையான காரியத்திற்காக பிரார்த்தனை செய்யவோ ஜெபிக்கவோ எப்போதும் ஓரிடம் உண்டு. நாம் தேவ கரங்களின் கிரியையாய் இருக்கிறோம்.
விளைவு: தமக்குச் சொந்தமான உங்களை அவர் கைவிட்டு விடுவார் என்ற கவலை கொண்டிருக்கத் தேவையில்லை!

மகிழ்ந்து பெருமையோடு தேவனை ஆராதனை செய். உன் கட்டுப்பாட்டிலும் உனக்கு அன்பானவர்களின் கட்டுப்பாட்டிலும் அவர் செயல்படுகிறார். அவர் ஆராதிக்கத் தகுந்தவர்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

சீஷத்துவம்

இந்த ஆண்டில் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் காரியம்: சீஷத்துவம் – சீஷராக்குதல் – சீஷத்துவ திருச்சபை

சீஷர்: செயலிலும் சாயலிலும் இயேசுவானவரை ஒத்து இருக்க முயல்கிறவர்களை சீஷர் என்கிறோம். அவர் தவறாமல் வேதத்தை வாசிப்பவராகவும், ஜெபிப்பவராகவும், தேவனுடைய பெலத்தை நாடுபவராகவும், அவருக்குக் கீழ்ப்படிபவராகவும் முயல்பவர்கள் அவருடைய சீஷர் ஆவார்கள். ஒரு விசுவாசி சீஷராகவும் இருப்பார் என்பது இதன் பொருள் ஆகும்!

ஒரு விசுவாசி அந்த விசுவாச நிலையில் மாத்திரம் நிலைத்திருக்கலாகாது. அவர் சீஷராக ‘பதவி உயர்வைப்’ பெறும்போதுதான் பெருக்கத்தின் தத்துவம் செயல்படத் தொடங்குகிறது. ஒரு சீஷருக்குதான் சுவிசேஷத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் வாஞ்சை இருக்கும். ஒரு சீஷர்தான் புதிய ஆத்துமாக்களைக் கர்த்தரைண்டை கிட்டிச் சேர்ப்பார். இதன்வழி, அவர் கர்த்தரின் கிருபையைப் பகிர்ந்து கொள்ள ஊழியக்காரன் ஆகிறார்!

அன்பார்ந்த தேவ ஜனமே, இயேசுவானவரின் சீஷராகுவதற்கு ஒரு தீர்மானம் எடுங்கள். அப்போதுதான் நீங்கள் மற்றவர்களைச் சீஷராக்க முடியும். அப்போதுதான் ஒரு திருச்சபையில் அங்கத்தினர்களுக்குப் பதில் ஊழியர்கள் நிரம்பியிருப்பார்கள். (ஓர் ஊழியர் எத்தனை ஆத்துமாக்களை தேவனுடைய நன்மைகளுக்காக ஆயத்தப்படுத்துகிறார் என்பதை எண்ணிப் பார்ப்பார். ஓர் அங்கத்தினரோ அந்த நன்மை தனக்கே வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்.).


உங்கள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

நல்ல நண்பர்களை அடையாளம் காண்போம்

கடந்த திங்கட்கிழமை சுவாரஷியமான காரியம் நடந்தது. ஜெடைடா (மகள்) மாடத்தில் இருந்து வரவேற்பரைக்கு உரத்த சத்தத்துடன் என்னை வெளியே எட்டிப் பார்க்கும்படிச் சொன்னாள். வெளியே எட்டிப்பார்த்த நான் ஓர் ஆந்தையைக் கண்டேன். ஒன்றரை அடி கொண்ட அது ஓரளவு பார்ப்பதற்குப் அகோரமாக இருந்தது. ஆனால், அந்த ஆந்த மாலை முழுவதும் அந்த மாடப் பிடியிலேயே அமரந்திருந்தது. அங்கே வந்த என் மனைவி, அது காயப்பட்டிருக்குமோ என்று அஞ்சு, அதற்காக ஜெபித்தாள். பகல் நேரத்தில் அதற்குப் போதுமான பார்வை சக்தி கிடையாது என்பதை நாம் அறியாதிருந்ததோம். ஆயினும் சிறிது நீர் கொடுக்க அதன் அருகே சென்றதும், பயத்தால், அது பறக்கத் தொடங்கிகியதால், எதிரே உள்ள சுவரில் மோதித் தடுமாறியது.

உண்மையில் செலயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்டர் செல்வராஜை சந்திக்க நாங்கள் அங்கு சென்றிருந்தோம். காரில் அமர்ந்த நாங்கள் வெளியே ஒரு காக்கையின் கூட்டம் ஏதோ ஒன்றைத் துறத்துவதைக் கண்டோம். காரில் இருந்து வெளியேறிய நான், அந்த ஆந்தையைக் காக்கையின் பெருங்கூட்டம் துரத்துவதைக் கண்டேன். காகங்கள் யாவும் அந்த ஆந்தையை வேட்டையாட முயன்றன. அந்தக் காகங்களை விரட்டிய பிறகு விலங்குகளை நேசிப்பவர் ஒருவர், அந்த ஆந்தைய்யைப் பெற்றுக் கொண்டார். அன்று இரவு, அந்த ஆந்தை பத்திரமாகப் பறந்த சென்று விட்டது என்று பின்னர் கேள்விப்பட்டேன்.

இந்தக் கதையின் மூலம் பகிர்ந்து கொள்ள நினைப்பது என்னவென்றால், கூட்டமாக (நண்பர்களாக) வந்த வல்லமை. அந்தக் காக்கையின் கூட்டம் உண்மையிலேயே துணிச்சல் நிறைந்தது. அவற்றைத் துறந்த அருகில் சென்றால்கூட அவை அச்சம் கொள்ளாமல் அங்கே சுற்றித் திரிந்தன. உண்மையில் அவை என்னைத் திரும்ப தாக்கிவிடுமோ என்று கூட பயந்தேன்!

நட்பு சேர்ந்து கொள்ளும் உயிரிணங்கள் ஆக்கப்பூர்வமாகவோ அல்லது அபாயகரமாகவோ மாறக்கூடிய வல்லமையுடையவை. எனவே நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் தோழர் தொழிலிலோ, ஜீவியத்திலேயே, குடும்பத்திலோ முன்னேற்றத்திற்குச் சவால் விடட்டும். நீ எதிர்ப்பார்ப்பதைவிட உன் மதிப்பைத் தாழ்த்துப்படிக்கு உன் நண்பர்கள் உன்னை தட்டி விழ வைக்க வேண்டாம்.


கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்ராக

விந்தைத் திருச்சுதன் உயிர்த்தெழுந்தார்

கிறிஸ்து உயிர்த்தெழுவில்லை என்றால் நமது உபதேசங்கள் யாவும் குப்பையாகி விடும் என்று பவுல் கூறுகிறார். திருச்சபைகள் இன்றளவும் செயல்படுகிறது என்றால், கிறிஸ்து உயிர்த்தெழுந்ததும் அவர் உயிரோடு ஜீவிப்பதும்தான்!

தேவ ஜனங்களே, இந்த உண்மை நம்மில் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அநேகர் தங்கள் ஜீவியம் தொடர்பான ஐயங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சாத்தியமான பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்தக் கதையை ஒரு புஸ்தகத்தில் நான் வாசித்தேன். ஒரு மானை வளர்த்த ஒரு தோட்டக்காரரைப் பற்றிய கதை அது. அந்த மான் குட்டியைத் தன் தோட்டத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ள தோட்டத்தைச் சுற்றி குழி தோண்டினான். இதனால் அந்த மான் குழியைத் தாண்டி தோட்டத்தை விட்டு வெளியேற முடியவில்லை. அது வளர்ந்த பிறகு, அக்குழியைத் தாண்டிக் குதித்து வெளியேற முடிந்தாலும், மான் அவ்வாறு செல்லவில்லை. அந்தக் குழியைத் தாண்டிச் செல்ல முடியாது என்ற ஆழமான எண்ணம் அதன் மனதில் பதிந்து விட்டது. அந்தக் குழியைத் தாண்டி தனக்கு வேறு உலகம் இல்லை என்று அந்த மான் மனதில் பதிந்து விட்டது. அந்தக் குழி எல்லையைத் தாண்டி வேறு உலகம் இல்லை என்ற மாயை தோன்றி விட்டது.

சில நேரம் நமது கிறிஸ்தவ ஜீவியமும் இந்த மான் குட்டியைப் போன்று அமைந்து விடுகிறது. நம்மைச் சுற்றி ஒரு குறுகிய சுற்றளவை எல்லையாக்கிக் கொள்கிறோம். நமக்குப் பாதுகாப்பான எல்லையைத் தாண்ட மனம் மறுக்கிறது.

“எனக்குத் தெரியாது” மற்றும் “எனக்கு அக்கறை இல்லை” ஆகிய இரண்டு கூற்றுகளும் நாம் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைப் பிரதிபலிக்கும் கூற்றுகளாகும்.

ஜீவனுள்ள கிறிஸ்து, நாம் அந்த எல்லையைத் தாவிக் குதிக்கும் எண்ணத்தைத் தருவாராக. உதவிகளும் நம்பிக்கையான வார்த்தைகளும் தேவைப்படும் ஜனங்களைச் சென்றடைந்து அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமாக!


சிநேகிதர்களே, இந்த ஈஸ்டர் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமையட்டும்!

விவாக சிக்கல்

நாம் நிச்சயமாக அபாயகரமான காலத்தில் வாழ்கிறோம். விவாகங்கள், குடும்பங்கள், ஆராதனை வருகையில் எண்ணிக்கை சரிந்து வருகிறது. நம் சமூகம் இந்த நெறிகளைப் பரிகாசம் செய்கின்றது. நவீன சமுதாயத்தில் இவை தத்தம் அடையாளங்களைத் தற்காக்க முயல்கின்றன.

தங்கள் வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைத்துக் கொள்ள மக்கள் நாடுகிறார்கள். ஆகவே, விவாகங்கள் போன்ற ஏற்புடைய சமூக கடப்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்குக்கூட பின்வாங்குகிறார்கள். ‘இணைந்து வாழ்வது’ அனேகருக்கு எளிதானக் காரியமாகி விட்டது.

பயணங்கள் மற்றும் நவீன சுகபோகங்களுக்குத் தடையாக இருக்கிறது என்று கருதி தம்பதிமார்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை.

திருச்சபைகளுக்கும் சொந்த பிரச்சனைகள் உள்ளன. சமுதாயம் பொதுவாக சமயத்தை வெட்டி வேலையாகப் பார்க்கின்றது. நவீன சமுதாயத்தில் சமயத்தைதிற்கு இடம் இல்லை என்று பலர் கருதுகின்றனர்.

ஆனால், வேதம் மாறுபட்ட நடப்புகளைக் காட்டுகிறது.

தேவனே விவாக உறவை ஆரம்பித்து வைத்தார்! ஆதியாகமம் 2.18ல் மிகவும் வல்லமையான அதே நேரத்தில் அர்த்தப்பூர்வமான பிரகடனத்தை அது செய்கிறது:
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். விவாகம் அந்த அளவுக்கு அற்புதமான உறவை ஏற்படுத்தித் தருகிறது!

சங்கீதத்தில் பிள்ளைகள் தேவனுடைய பாரம்பரிய சொத்து என்று வாசிக்கிறோம்.

ஒன்று கூடுவதைப் புறக்கணிக்கலாகது என்று பவுல் எச்சரிக்கிறார்.

அன்பார்ந்த தேவ ஜனங்களே, தேவ திட்டத்தில் நமது சிந்தையையும் உள்ளத்தையும் மையப்படுத்த வேண்டியுள்ளது. நவீன நாயகத் தாக்கத்தை நாம் முறியடிக்க வேண்டும் என்பது இதன் பொருள். விவாகம் மற்றும் குடும்ப நெறிகளை மீட்டுக் காப்பது நமது கடமையாகிறது. ஊழியங்களில் நாம் இடைவிடாமல் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் பல தவறான உபதேசங்களைச் சமுதாயத்தில் முறியடிக்கச் செய்யும்.

இந்த சீர்குலைந்து போன உலகின் நிலைமை சீரடைய தேவன்தாமே அவருடைய ஜனங்களையும் திருச்சபைகளையும் தொடர்ந்து ஆளுகை செய்வாராக.


கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.