Tuesday, May 16, 2017

ஷாரியா சட்டம்

கடந்த வாரம் நாட்டின் தற்போதையே நிலவரத்தைப் பகிர்ந்து கொண்டேன்: ஹூடுட் சட்டம், பொதுவாக நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் மோசமான விளைவுகள்.

மீண்டும் வலியுறுத்துகிறேன்:
1.             குற்றச் செயல்களுக்கான தண்டனை மசோதா (ஷாரியா சட்டம்) நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது ஒரு தவறான செயல்.
2.             இது சட்டத்துக்குப் புறப்பானது. எனவே, இது சட்ட விரோத செயல்.
3.             மலேசியா போன்ற பன்முக சமயத்தவர் நாட்டில் இதுபோன்ற சட்டங்கள் அசௌகரியத்தையும் ஆத்திரத்தையும் கிளப்பும். நமது முன்னோர்கள் இந்நாட்டை அற்புதம் நிறைந்த அமைதியான நாடாக நகர்த்தும் முயற்சியை சீர்குலைக்கும்.
4.             இந்த சட்டதிருத்தத்திற்குப் பின்னால் சதிநாச நோக்கம் இருக்கிறது. ஜனங்களின் நலனைப் பேண வேண்டியதற்குப் பதில் அரசியல் லாபம் நாடப்படுகிறது.
5.             இசாக்கார் தலைமுறைபோல் திருச்சபைகள் எழ வேண்டிய நேரம் வந்து விட்டது. சபையாராகிய நீங்கள் தற்போதையே அரசியல் நிலரவரத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். நமது தேசத்தைக் காக்க தெய்வீக ஞானம் வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டியுள்ளது.

நினைவில் கொள்ளுங்கள்…. நீங்கள் மெய்யான தலைவர்கள். உங்களைச் சூழ்ந்த சமுதாயத்தில் தாக்கம் நிறைந்த தலைவராக எழுங்கள். அதிகம் ஜெபியுங்கள். ஜெப கிருபையைப் பெறுவதற்கு நமது தேசம் தகுதியானது.


தேவன் மலேசியாவை ஆசீர்வதிப்பாராக….. இது நமது தாயகம்!