Wednesday, September 21, 2016

ஸ்ரீலங்காவில் ஓர் இரத்த சாட்சி

ஒரு தமிழ்ப் பெண் சிங்கள பாஸ்டரை மணந்து கொண்டார். (சிறுபான்மை தமிழர்களுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் மிகப் பெரிய பேதம் நிலவி வருகிறது). பெரும்பான்மையான சிங்களவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்.

அந்த இளம் தம்பதியினர் தென் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு பகுதிக்கு ஊழியத்தின் நிமித்தம் சென்றார்கள். இது சிங்களவர்கள் வாழும் பகுதி. சிங்களவர்களில் பலர் வந்து, அவர்களை அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டினர். அவர்கள் இணங்கவில்லை என்றால் கொன்றுபோடப் போவதாக மிரட்டினர். அந்தப் பகுதியில்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று அவர் மிகத் தீர்மானமாக இருந்தனர். ஓர் இரவில் பாஸ்டரின் மனைவி முன்னிலையில் அவரைக் கொன்று போட்டார்கள்.

இதனால் அவர்களை ஊழியத்திற்கு அனுப்பிய திருச்சபை அந்த மனைவியில் உயிர் நலன் கருதி அவரை அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வரச் சொன்னார்கள். ஆனால், அவரின் பதில் அதிர்ச்சியில் உரையச் செய்தது. “என் கணவரின் மரணம் எனது பெரும்பணியை நிறுத்தவில்லை. எனவே நான் இங்கேயே நிலைத்திருக்கப் போகிறேன்."

அங்கு சபை நிறுவப்படும்போது 25 பேரே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், அந்த பாஸ்டர் இறந்து 5 வருடம் கழித்து மலைப்பூட்டும் வகையில் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 800 பேராக அதிகரித்தது. அந்த இளம் பெண் தம் தேவனையும் ஜனங்களையும் நேசிக்கும்படியாக எடுத்த எளிய முடிவு என் உள்ளத்தை மிகவும் தொட்டது.

தேவ ஜனங்களே, நமது இத்தேசத்தில் பல சவால்களை நாம் சந்திக்கக்கூடும் என்று நாம் நம்புகிறோம். நமது பிரதியுத்திரம் என்னவாக இருக்கப் போகிறது? விசுவாசத்தின் பயணத்தை நாம் எப்படி மேற்கொள்ளப் போகிறோம்?

பின்வரும் உண்மைத் தகவல்களை நாம் மறந்து போக வேண்டாம்:
-       தேவன் நம்மை ஆளும் உரிமை பெற்றவர்.
-       தேவன் அனைத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
-       தேவன் தம் ஜனங்களின் நலனில் அக்கறையுள்ளவர்.
-       தேவன் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார்.

ஆகவே, மன உறுதியுடன் சாட்சி நிறைவான ஜீவியத்தைப் பல மதங்களைக் கொண்ட இத்தேசத்தில் வாழ்வோமாக..


தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக

Wednesday, September 14, 2016

உற்சாகமான துலங்கும் ஆவி

கடந்த வாரம், ஆர்வமும் அதே நேரத்தில் அபாயமும் நிறைந்த ஒரு காரியத்தைப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஒரு விமான நிறுவனம், ‘இப்போது யார் வேண்டுமானாலும் பறக்கலாம்’ என்ற சுலோகத்தைக் காட்சிக்கு வைத்திருந்தது.

சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட ஒரு விமானம் 770 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெல்போர்னில் காணாமற்போனது! அது விமானியின் தவறு என்று புலனாய்வு கண்டு பிடித்தது. அவர் தவறான இலக்கத்தை விமானக் கணினியில் உள்ளீடு செய்ததால் இவ்வளவு பெரிய சங்கடமும் தடுமாற்றமும் ஏற்பட்டது. ஒரே ஒரு தவறான இலக்க உள்ளீடுதான்!

பிலிப்பியர் 2.12ல் அப்போஸ்தலர் பவுல் இவ்வாறு நம்மை ஊக்குவிக்கிறார் ", அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்". பாவமானது "இலக்கை விட்டு விலகுவது’ என்று அடையாளப்படுத்தப்படுகிறது"

ஒரேயொரு தவறான இலக்க உள்ளீடு கவனக்குறைவை ஏற்படுத்தி இலக்கை விட்டு விலகச் செய்கிறது!

பரிசுத்த ஆவியினவர், நாம் இலக்கை விட்டு விலகாதபடி ஒரு சிறு தவற்றைக் கூடச் செய்யக்கூடாது என்று தூண்டுகிறார் என்ற ஆழமான உபதேசத்தை நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும். ஆனால், நாம் எப்போதும் தோல்வியடைய மாட்டோம் என்பது அதன் அர்த்தமல்ல. சில சமயங்களில் நாம் வீழ்ந்து போவோம். நாம் எப்போதும் தோல்வியுற்றவர்களாகவே நிலைத்திருக்க வேண்டாம். விழித்து எழுந்தரிப்போமாக. நமது பாவங்களையும் பெலவீனங்களையும் அறிக்கையிட்டு விசுவாசப் பயணத்தை உண்மையோடு மேற்கொள்வோமாக.

உற்சாகமான துலங்கும் ஆவியினால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

Sunday, September 11, 2016

மலேசியாவில் அச்சுறுத்தல்கள்

பள்ளி தவணை விடுமுறை மீண்டும் தொடங்கி விட்டது. டெங்கி காய்ச்சலைத் தவிர்த்து அயல் நாடுகளில் இருந்து ஷீக்கா என்று நச்சுக் கிருமியும் நம்மை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன. நீரிழிவும்  வாய் சம்பந்தப்பட்ட நோயும் நம்மை வளம் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் சமீபத்தில் அறிவேன்.

இவை எல்லாம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று உணர்த்துகின்றன. குறிப்பாக பிள்ளைகளையுடையோர் மிகந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

நமது ஜெபத்தைக் கொண்டு அவர்களை வாதைகளில் இருந்து மீட்க வேண்டும். அதே வேளையில் நற்குடிமகனுக்குரிய பண்புகளும் இருக்க வேண்டும். உதாரணமாக குப்பைக் கூளங்களை முறையாக அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தைப் பேணுதல் போன்ற காரியங்களைக் கடைபிடிக்க வேண்டும்.
‘தெய்வத்துக்கு அடுத்து தூய்மை நிற்கிறது’ யாரோ சொல்லியிருக்கிறார்கள். உண்மைதான்!

தம் படைப்புகளைப் பேண தேவன் நமக்குப் பொறுப்பளித்திருப்பதால் நமது சுற்றுப்புறச் சூழலைப் பேண உபதேசிப்போமாக.


கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இந்த விடுமுறை காலத்தில் ஆசீர்வாதமான முறையில் உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவீர்களாக. 

Friday, September 9, 2016

‘பெரிய நகரத்தில் யோனா ’

3ல் 3வது பகுதி 3 of 3:
பெரிய நகரத்தில் யோனா ’
——————————————————————————————————
முன்னுரை:
 பகுதி 2ல் தேவன் எப்படி யோனாவைக் காப்பாற்றினார் என்றும் மீனின் வயிற்றில் அவனை எப்படிப் பராமரித்தார் என்றும் பார்த்தோம்.
 கடந்த வார பாடத்தின் முக்கிய குறிப்புகள்:
              1. கடலிலும் மீனின் வயிற்றிலும் யோனா
2. மீனின் வயிற்றல் யோனாவின் ஜெபம்
3. இரட்சிக்க தேவனின் வாஞ்சை
 இந்த 3வது பகுதியில் யோனா தீர்க்கதரிசி ஓர் உலர்ந்த நிலத்தில் கக்கப் பட்டதையும் புதுப்பிக்கப்பட்ட தரிசணத்தையும் காண்போம். (யோனா 1:2, 3:1-2).

1. நினிவேயில் யோனா :

யோனா 3:3-4

யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.

 தேவனின் நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்பதும் ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதும் செய்தியாய் இருந்தது.
 நினிவே ஜனங்கள் யோனாவின் செய்திக்கு விநோதமான மறுமொழி வழங்கினர். (யோனா 3:5-9).
 மனந்திரும்புதல் பின்வரும் நிலைகளில் ஜனங்களில் இருந்து ராஜா வரை பின்வருமாறு வருகிறது:
i) ஜனங்கள் உபவாசித்து தங்களைத் தாழ்த்தினர் (வ. 5).
ii) ராஜா உபவாசித்துத் தன்னைத் தாழ்த்தினான் (வ. 6).
iii) உபவாசித்துத் தேவனைத் தேடுமாறும் துன்மார்க்கத்தில் இருந்து திரும்புமாறும் உத்தரவிட்டான். (vவ. 7-10)
 மறுமொழியாக தேவன் நியாயத்தீர்ப்பை நிறுத்தி வைக்கத் தீர்மானித்தார்.
 உண்மையான மனந்திரும்புதல் ‘உள்ளேயிருந்து வெளியே வருகிறது’ – விசுவாசமும் கிரியையும் (லூக்கா 3:8)
 நல்ல வேலையாக நினிவேயின் மனந்திரும்புதலை இயேசுவானவர் அங்கீகரித்தார்:

மத்தேயு 12:41

யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

2. தேவனுக்கு விரோதமாக யோனாவின் விசனம்:

யோனா 4:1, 4

யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,,,, அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.

 நினிவே மெய்யாக தேவனின் சார்பாக மனந்திரும்பினார்கள். ஆனாலும் யோனா தேவனுக்கு விரோதமாக விசனமடைந்தான். (வ. 1-2).
 பின்வரும் தேவனுடைய குணங்களை அவன் உண்மையில் அறிந்து வைத்திருந்தான்:
i) கிருபை அருள்பவர்
ii) இரக்கமுள்ளவர்
iii) அவரின் எரிச்சல் மெதுவாக இரங்கும்
iv) அன்பிலும் மனவுறுக்கத்திலும் தயாளமானவர்
v) பேரிடரை வரச் செய்வதில் தயக்கம் காட்டுபவர் 
 கப்பலிலும், கடலிலும், மீனின் வயிற்றிலும் தேவன் அவனிடம் எவ்வளவு கிருபையாய் இருந்தார் என்பதை யோனா மறந்து போனான்.

3. யோனாவின் VWW உபதேசம்:

யோனா 4:6

யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

 யோனா தன் உள்ளத்தையும் புரிந்து கொள்ள தேவன் உதவினார்:
i) யோனா தனக்கென்று ஒரு தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொண்டான் (வ. 5)
ii) மறைவிடத்திற்காக தேவன் ஒரு ஆமணக்குச் செடியைக் கட்டளையிட்டார் (வ. 6)
iii) அது நிழல் தருமறு தேவன் அதற்குக் கட்டளையிட்டார் (வ. 7)
iv) சூரியனையும் கிழக்குக் காற்றையும் தேவன் வரப்பண்ணி வெப்பக் காற்றைப் போக்கினார் (வ. 8)
 மனந்திரும்ப வேண்டும் என்று ஜெபித்த யோனா தான் சாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் (வவ. 3 & 8)

யோனா 4:10-11
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

 சொல்லணி கொண்ட வார்த்தையால் தேவன் மறுமொழி கூறி யோனாவின் புஸ்தகம் பூர்த்தியடைகிறது. (vவ. 10-11)

முடிவுரை:
 காணாமற்போனோரை தேட தேவன் கொண்டுள்ள வாஞ்சையான உள்ளைத்தை இன்று நாம் அறிவோமாக