Thursday, November 3, 2016

நமது பாவமும் கிருபையும்

தவறான இடத்தில் என் காரை நிறுத்தி வைத்ததற்கு, பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக அலுவலகத்தில் அபராதம் செலுத்தக் காத்திருக்கும் தருவாயில் இதனை எழுதுகிறேன். நூறு ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்! ஆனால், முகப்பில் உள்ள நபர் 30 ரிங்கிட் மாத்திரமே அபராதப் பணம் வாங்கினார். ஒரு சிறிய கவனக்குறைவுக்கு அத்தொகை பெரிய தண்டனை!

நாம் தேவனுடைய கற்பனைகளை மீறும்போது இதுபோன்றே தண்டனை அனுபவிக்கிறோம். ஆம்! கூடவே கிருபையும் வருகிறது. அந்தக் கிருபைக்குக் கிரயம் தேவையில்லை. ஆனால், நம்மை ஒழுக்கப்படுத்தாத கிருபை அற்பமானது.

நாம் கற்பனைகளை மீறும்போது, உடனடியாக பாவ மன்னிப்பு கேட்கிறோம். கிருபையுள்ள தேவனோ, 1யோவான் 1.9ல் எழுதப்பட்டதுபோல், நம்மிடத்தில் கிருபையாய் இருக்கிறார். ஆனால், பாவத்திற்கான பின் விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்!

தேவன் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக்கவும் கிருபை அருளவும் நமது ஜீவியங்களில் காணப்படும் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்போமாக. பரலோகத்தில் இருக்கும் நமது பிதா நல்லவர்.


தேவனுக்கே ஸ்தோத்திரம்.

No comments:

Post a Comment