Tuesday, March 20, 2018

சிலுவை தரும் அவமானம்


ஊடகங்களால் நிறைந்த இவ்வுலகில் அவமானங்கள் ஒரு சாதாரன காரியமாகி விட்டது. மலேசியா உட்பட எல்லா நாடுகளும் பல துஷ்ட காரியங்களால் அவமானப்படுகின்றன. சபைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நெறி தவறிய செயல்கள், சட்டத்துக்கு விரோதமானவை, சமுதாயத்தால் நிராகரிக்கப்படுபவை, ஆத்திரத்தை மூட்டக் கூடியவை யாவம் அவமானம் தரும் செயல்களே. பவுல் 1 கொரிந்தியர் 1.23ல் சிலுவை அவமானத்தைத் தரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். பின்வரும் காரணங்களால் அது அவமானத்தின் சின்னமாகிறது:

1.        குற்றவாளிகளைத் தண்டிக்கும் கருவியாக சிலுவை பயன்படுத்தப்பட்டு வந்தது – ரோமாபுரி சாம்ராஜ்யம் திருடர்கள், கொலையாளிகளைத் தண்டிக்கும் கருவியாக சிலுவையைப் பயன்படுத்தி வந்தனர். எலும்புக்கூடுகளின் ஸ்தலம் என்று வர்ணிக்கப்படும் கொல்கொதா போன்ற இடங்களில் இந்தத் தண்டனை விதிக்கப்படும். குற்றச்செயல்களுக்குப் பறிகாரம் இல்லை என்பதை உணர்த்துவதற்கு இப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டது. இயேசு கொலை செய்தாரா? திருடினாரா? எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர் பாவமற்றவர் என்று வேதம் சொல்ல, சமுதாயம் அவரைத் தவறாகத் தீர்த்தது. குற்றமற்றவரைக் குற்றவாளி என்று தீர்ப்பது தவறாகும்.

2.        சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பு – இயேசு எருசலேமிக்குள் நுழையும்போது மக்களிடமிருந்து கிடைத்த அபாரமான வரவேற்பினால் சிலர் அலற்சியடைந்தனர். ஜனங்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப இயேசு வாழாததால், மகிழ்ச்சி கோபமாக மாறியது. ரோம ராஜயத்திடம் இருந்து தாங்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்ததால் ஜனங்கள் \ஓசன்னா, ஓசன்னா, ஓசன்னா’ என்று பாடினார்கள். ஆனால், இயேசு அதற்காக வரவில்லை. அவர் உலகை இரட்சிக்கவே வந்தார். தங்கள் பாவங்களில் இருந்து விமோஷனம் தருவதைக் குறித்து ஜனங்கள் அக்கறை காட்டவில்லை. மோசே தங்கள் மூதாதையார்களை எகிப்தில் இருந்து மீட்டது போல, தங்களையும் ரோமாபுரியரிடம் இருந்து மீட்பார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

3.        சீஷர்கள் எங்கே போனார் – பிதா தம்மை விட்டு விலகியிருந்ததால் ஆழமான துக்கத்தில் இயேசு மூழ்கியிருந்த போது, சீஷர்கள்கூட அவரைப் பொருட்படுத்தாமல் போனார். இயேசுவோடு பக்கபலமாக நிற்பதாக வாக்குறுதி கொடுத்த பேதுருகூட மூன்றுமுறை அவரை மறுதலித்தான். யூதர்களாலும் ரோமாபுரி அதிகாரிகளாலும் இயேசு தவறாக நியாயந்தீர்க்கப்பட்டதோடு சாட்டையடியும், தலையில் முள் கிரீடமும் மேலும் வேதனையைத் தந்தது. அவர் மன ரீதியாகவும் சரீர ரீதியாகவும் துன்பத்தை அனுபவித்தார். அவருடைய கடைசி நேரத்தில் யாரும் அவருக்குப் பக்கத்தில் இல்லை. இயேசுவின் சிலுவை மரணம் உண்மையிலேயே வியாகூலமானது. 

4.        மனித பாவம் – தேவனுடைய வார்த்தை திரும்பத் திரும்ப மனுஷர்கள் யாவருக்குமான தேவ அன்பைப் பகர்கிறது (யோவான் 3:16). அன்பு வெளிப்படுத்தப்பட வேண்டும். தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது – உன் ஆண்டவராகிய தேவனை முழு இருதயத்தோடும், முழு ஆத்மாவோடும், முழு சிந்தையோடும் நேசிப்பாயாக என்பதாகும். இந்த முன்னுதாரன ஜீவியத்தையே அவர் வெளிப்படுத்தினார். ஆயினும் தேவ ஜனங்கள் இந்த அழைப்பைப் புரிந்து கொள்ளத் தவறியதோடு அந்த உடன்படிக்கையையும் புறக்கணிக்கின்றனர். அவர்களின் எரிச்சலும் தற்பெருமையும் இயேசுவை சிலுவைக்கு இழுத்துச் சென்றது. சிலுவையில் தொங்கிய போது இயேசு, ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’, என்று சொன்னார். வேதனையின் உச்ச கட்டத்தில் இருந்த போதும் இயேசு உலக மக்களின் இரட்சிப்புக்காக வேண்டுதல் செய்கிறார்.

5.        சித்தத்தை ஒப்புக் கொடுத்தல் – சிலுவை கிருபையை அடையாளப்படுத்துகிறது. நமது எந்தக் கிரியையும் தேவ உள்ளத்தை சமாதானப்படுத்த போதுமானதாயிருக்காது. ஆதித் திருச்சபை சூழ்நிலையில் உணவு பேணப்பட வேண்டியது கட்டாயமாயமானது. இது ஆதி விசுவாசிகளுக்கு குறிப்பாக புறஜாதியாருக்குக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. சிலுவையில் இருந்து நமக்குக் கிடைத்த தியாகபலி ஒட்டுமொத்த மனிதர்களின் பாவ விமோஷனத்துக்கும் போதுமானதாயிருந்தது. கூடுதலான பணி எதுவும் தேவையில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுதல் என்பதை அவர் சிலுவையில் அனுபவித்த பாடுகளை நாமும் சுமப்பது என்று வேதம் நமக்குப் போதிக்கிறது.

சிறந்த மறுமலர்ச்சியாளரான மார்ட்டின் தூதர், முழு கிறிஸ்தவ உலகமும் மனுகுலமும், சிலுவையில் தொங்கியிருக்கும் நலனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்றார். தேவன் நம்மை நேசிப்பதால் அந்தச் சிலுவை இன்னும் இருக்கிறது. பாவம் ஒரு பரிகாரத்தில் யாவருக்கும் தீர்க்கப்படவேண்டியிருப்பதால் சிலுவை இன்னும் இருக்கிறது. சுயம் மரித்து, கிறிஸ்து நம்மில் ஜீவிப்பதற்காக சிலுவை இன்னும் இருக்கிறது. இதுவே நம்பிக்கை. இதைப் புரிந்து கொள்ளத் தவறினால் நம் ஜீவியம் குழப்பம் நிறைந்ததாக இருக்கும்.


No comments:

Post a Comment