செய்தி: மறைதிரு ரூபன் கனகலிங்கம்
·
ஜீவனுள்ள சாட்சி: ஆவியின் கனி
பரிசுத்த ஆவியானவரின்
கனி, அது நம்மில் வாசம் செய்வதாலும் நாம் அவரிடத்தில் வாசம்செய்வதாலும் ஏற்படும்
நேரடி விளைவு ஆகும். கலா.5:17-23 மாம்சத்தின் கனிக்கும் ஆவியின் கனிக்கும் உள்ள தெட்டத் தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. மாம்சத்தின் கனிகள் (மொத்தம்
17) ஆதாமின் ஜென்ம சுபாவத்தை உடையது. ஆவியின்
கனிகள் (மொத்தம் 9) புதிய ஜீவியத்தில் செயல்படுவதற்கான
வெளிப்படையான ஆதாரம் ஆகும். ரோமர்8:5-9
பரிசுத்த ஆவியின் கனி (கலா.5:22-23)
1.
அன்பு: இது
தெய்வீக அன்பின் ஆச்சரியமான வெளிப்பாடு. ரோமர்
5:5
இது கிறிஸ்து வெளிப்படுத்தும் அன்பைப் போன்றது. எப்போதும் கர்த்தரிடத்தில் காணப்படுகிறது. இந்த அன்பு செயலில் வெளிப்படுகிறது. 1 யோவான்
3:16-18; 4:16, 1 கொரி. 13:1-7
2.
சந்தோஷம்: இது
லோகத்தின் சந்தோஷமல்லாமல் ஆவிக்குரிய சந்தோஷம் ஆகும். மேலும்
போலியான உணர்ச்சியல்லாமல் ஜீவியத்தின் தரமாய் இருக்கிறது. பிலி.4:4.
இந்த அன்பின் அஸ்திபாரம் தேவனாவார். புற சூழ்நிலையால்
இது சார்ந்திருக்கவில்லை. 2 கொரி.11: 24-28, 7;4
3.
சமாதானம்: இது ஆத்துமத்தை நிறைவு செய்யும் சமாதானம். நமது சிந்தை முழுவதும் தேவனிடத்தில்
சார்ந்திருந்து எல்லா அச்சமும் குற்ற உணர்வும் நீங்கி விடும். உங்களின் ஒவ்வொரு நொடியும் ஜீவனும்
தேவனுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வைத் தரும். கடுமையான பிரச்சனை வந்தாலும் நீங்கள் அமைதியாய் இருப்பீர்கள். இந்த மூன்று கிருபைகளையும் கர்த்தர் அஸ்திபாரமாக வைத்திருக்கிறார். இது ஆவிக்குரிய தெய்வீக அன்பும், சந்தோஷமும் சமாதானமும் ஆகும்.
4.
நீடிய பொறுமை. இது நீண்டகால சகிப்புத் தன்மை அல்லது தாங்கிக் கொள்ளுதலைக் குறிக்கிறது. பிறர் நமக்கு விரோதமாக குற்றஞ்செய்யும்
பட்சத்தில் அதைச் சகித்துக் கொள்ளுதலையும் பொருட்படுத்தாமல் விடுவதையும் காட்டுகிறது. இது கோபத்தைக் கட்டுப்படுத்துகிறது. கர்த்தரும் இத்தகையே போக்கைய நம்மிடத்தில்
கடைபிடிக்கிறார்.
5.
தயவு: இது
இரக்கத்தையும் இனிமையையும் குறிக்கிறது. இது உங்களை இனிமையாக்குவரோடு
விரும்பத் தகுந்தவராகவும் அன்பானவராகவும் மாற்றுகிறது.
6.
நற்குணம்: இது
உங்களை நற்கிரியை செய்யத் தூண்டுகிறது. அறமும் தயாளமும் உதவும்
போக்கும் ஏற்படச் செய்கிறது. அனைத்தையும் நன்றாகவும்,
சரியாகவும், உண்மையாகவும் செய்யத் தூண்டுகிறது.
இந்த மூன்று நற்கீர்த்திகளும் சமூக உறவுகளில் வெளிப்படுகிறது.
பிறரோடு தொடர்பு கொள்ளும்போது நம்மை பொறுமையானவர்களாகவும், மென்மையானவர்களாகவும், நல்வர்களாகவும் மாற்றுகிறது.
7.
விசுவாசம்: இது
உங்களைப் பிறர் சார்ந்திருக்கவும், நம்பவும், விசுவாசிக்கவும் வகை செய்கிறது. இத்தகைய நபர்கள் எல்லா
விஷயங்களிலும் நம்பத் தகுந்தவர். இத்தகையவர் எந்தப் பிரச்சனை
வந்தாலும் உண்மையுள்ளவராக இருப்பார்.
8.
சாந்தம். இது தாழ்மை, புத்திமதியைக் கேட்கச் செய்தல், பணிவு ஆகிய குணங்களைத் தருவிக்கும்.
இந்நபர் எல்லா விதமான உணர்வுகளைம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு
கர்த்தரையே சார்ந்திருப்பார்.
9.
இச்சையடக்கம்: இக்கிருபை
சுய அடக்கத்தைத் தருகிறது. சரீரத்தின் எல்லா அங்கங்களும் இச்சைகளும்
இதனால் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. உலகின் எந்த துர் இச்சைகளுக்கும்
வயப்படாதவராகவும், மயங்காதவராகவும், அடிமைப்படாதவராகவும்
சுய மரியாதையுடன் இருப்பார். இந்த மூன்று கிருபைகளும் ஒருவரின்
அந்தரங்க வாழ்க்கையில் வெளிப்படும். உங்கள் அந்தரங்கத்தில் நம்பகத்தன்மையும்,
சாந்தமும், சுய கட்டுப்பாடுடையவராகவும் இருப்பீர்கள்.
முடிவுரை:
இந்த ஒன்பது நயங்களும்
ஒருமையில் ஆவியின் கனி என்றழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நயங்களும் ஒருவரிடத்தில் காணப்பட்டால்தான்
அது முழுமையானதாய் இருக்கும். யோவான் 12:24, மத்தேயு 12:33, யோவான் 15:2, லூக்கா
13:6-9
·
சுவிசேஷம்: சாட்சி பகர்தலும் ஆத்தும ஆதாயமும்
சாட்சி பகர்தல்:
இரட்சிப்பைப் பெறுவதற்கு இரண்டு பகுதிகள் இருக்கின்றன:
1. இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக் கொள்ளுதல்
2. இயேசுவே ஆண்டவர் என்று வார்த்தையால் அறிக்கை செய்தல்
ரோமர் 10:9 – விசுவாசமும் அறிக்கையிடுதலும்
மத்தேயு 10:32, 33 – ஒரு இரகசிய விசுவாசியாக இருப்பது கூடாத காரியமாகும்.
எந்த வகையிலாவது உன் விசுவாசம் வெளிப்பட்டு சோதிக்கப்படுவாய்.
அல்லது கிறிஸ்துவில் உன் விசுவாசம் நிமித்தம் பிரச்சனைகளை எதிர்நோக்குவாய்.
லூக்கா 12:8 – கிறிஸ்தவர்கள் மனிதர்கள் முன் கிறிஸ்துவை அறிக்கையிட வேண்டும்.
லூக்கா 24:48
யோவான் 1:7, 8, 15 – யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகர்ந்தார்.
யோவான் 16:26, 27 – பரிசுத்த ஆவியானவர் நம் மூலம் கிறிஸ்துவைக் குறித்து
சாட்சி பகர்கிறார்.
சாட்சி பகர வேண்டிய அவசியம்
1. நாம் சாட்சி பகர அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்போஸ்தலர்
1:18, 2:32; 3:15, 5:32; 13:31
2. நாம் கிறிஸ்துவின் தூதர்களாக இருக்கிறோம். ஏசாயா 43:10-12;
49:6, 1 கொரி.5:20
3. நாம் உலகின் ஒளியாய் இருக்கிறோம். மத்.5:14-16,
பிலிப்.2:15, 1 பேதுரு 2:9
சாட்சி பகரும் முறைகள்
1. சபை கூடுகையில் அல்லது சாட்சி பகரும் சந்திப்பில் அதைச் செய்யலாம்.
2. நண்பர்கள், அயலார், சமூகத் தொடர்புகள்,
உறவினர்கள் போன்ற தரப்போடு தொடர்பு கொள்ளும்போது தனிப்பட்ட முறையில்
இதைச் செய்யலாம். யோவான் 18:37, 1 யோவான்
1:1-3
3. துடிப்பான கிறிஸ்தவனாக இருந்து, ஆராதனைகளில் தவறாமல்
கலந்து கொண்டு, நற்கருணையிலும் பங்கு கொண்டு கிறிஸ்துவை அறிக்கை
செய்யலாம். அப்போஸ்தலர் 2:46, 46, 1 கொரி.11:26
4. பரிசுத்தத்தோடும் நற்கீர்த்தியோடும் முன்னுதாரன ஜீவியத்தில் ஈடுபட்டு கிறிஸ்தவ
விசுவாசத்தை அறிக்கை செய்யலாம். கொலோ.4:5, 6
எப்படி சாட்சி பகர்வது
1. நீ கிறிஸ்தவன் என்பதை அறிக்கை செய். நீ மீட்கப்பட்ட அனுபவத்தை
சாட்சியாகப் பகிர்ந்து கொள்.
2. நீ அறிந்தத்தையும் அனுபவித்ததையும் கூறு. மாற்கு 5:18-20.
சாட்சி பகர்வது என்பது உபதேசத்திற்குச் சமமாகாது. அப்போஸ்தலர் 22:15
3. உன் ஜெபத்திற்குக் கிடைத்த பலனைப் பற்றி கூறு.
4. கிறிஸ்து உனக்கு யார் என்பதையும்
அவர் உன் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்கிறாய் என்பதையும் கூறு.
5. பாவத்தையும் சோதனைகளையும் நீ எப்படி ஜெயங்கொண்டாய் என்ற சுய அனுபவத்தைக் கூறு.
6. வேதத்தின் மூலம் கர்த்தர் உன்னிடத்தில் பேசியதைப் பகிர்ந்து கொள்.
7. நண்பர்களுக்கு சுவிசேஷத்தைப் பற்றிய துண்டுப் பிரசூரங்கள், தியான புஸ்தகம், கிறிஸ்தவரின் சுய சரிதை போன்றவற்றைப்
பகிர்ந்து கொள்.
வெற்றிகரமான சாட்சிக்குப் படிநிலைகள்
1. உனது இரட்சிப்பின் அனுபவத்தில் நம்பிக்கையாய்
இரு.
2. ஜனங்களுக்கு முன் உன் கிறிஸ்தவ சாட்சிகளை நிறுத்து.
3. வழிகாட்டலுக்கும் வாய்ப்புக்கும் பரிசுத்த ஆவியைச் சார்ந்திரு.
4. உன் விசுவாசத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதில் உற்சாகத்தோடும் உறுதியோடும்
இரு.
5. சாட்சி பகரப்போகும் நபர்களிடத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வேண்டி ஜெபித்துக்
கொள்.
6. ஜனங்கள் இருக்கும் இடத்திற்குச் செல்.
7. இயேசவைக் குறித்துப் பேசு. வாக்குவாதம் செய்யாதே…
பிற மதங்கை ஒப்பிட்டுப் பேசாதே.
8. வேதம் மற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்து.
சாட்சி பகர்வதில் தடைகள்
1. மனித அச்சம். I தீமோ.1:7, 1 யோவான்
4:18
2. வெட்கப்படுதல். 2 தீமோ.1:8, மாற்கு
8:38
3. உதாரத்துவமற்ற ஜீவியம்
முடிவுரை
ஒவ்வொரு கிறிஸ்தவரும் சாட்சி பகர அழைக்கப்பட்டிருக்கிறார்கள். “கிறிஸ்தவர்கள்
வேதத்தை வாசிக்கிறார்கள்; கிறிஸ்தவர் அல்லாதோர் கிறிஸ்தவர்களை
வாசிக்கிறார்கள் “1 கொரி. 2:14-3:3. சாட்சி
பகர்ந்தல் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்துவதோடு ஆவிக்குரிய ஜீவியத்தையும் வளப்படுத்துகிறது.
சாட்சி பகர்ந்தல் ஒரு முடிவில்லாத செயற்பாங்கு.
நம்மைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் நாம் சாட்சியாளர்களே.
·
பரிசுத்த ஆவியின் வரங்கள்:
1 கொரி.12:7-10: பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள்
எபே.4;7-12: பரிசுத்த ஆவியின் ஐந்து வித ஊழியங்கள்
1 கொரி.12:28-30, ரோமர் 12:7-10: பரிசுத்த ஆவியின் பிற வரங்கள்.
பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள் (1 கொரி.12:7-10)
1.
ஞான திருஷ்டி: ஒரு நபரின் நிலைமை (இறந்த
காலம், நிகழ் காலம், எதிர் காலம்).
தேவனைப் போலவே நீ காண முடியும். யோவான்.4:18, 19, 1 ராஜா. 5: 24-26
2.
ஞான உரை: பரிசுத்த
ஆவியால் வழங்கப்பட்ட இந்த ஆற்றல், ஒரு வெளிப்படுத்தல் குறிப்பிட்ட
சூழ்நிலைக்கு எப்படிப் பொருந்தும் என்று விளக்க உதவுகிறது. ஞான
உரையின் மூலம் இந்த வரம் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகளை வெளிப்படுத்தும்.
ஆதி.41:28-41.
3.
விசுவாசத்தின் வரம்: தேவனே செயல்படுவார் என்று தெய்வாதீனமான நம்பிக்கை. இந்த வரம்
செயல்படும் போது, நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொள்வதோடு அற்புதமான மனிதராக மாறுகிறீர்கள்.
நீங்கள் சொல்வதெதுவோ, அது நடக்கும். அப்போஸ்தலர்14:9,10
4.
சுகமளிக்கும் வரம்: நோய் நொடி மற்றும்
பெலவீனங்களை அற்புதமான முறையில் சுகமளிக்கும் வரம்.
5.
பணி முறை வரம்: ஒரு மனிதனின் சராவரி
ஜீவியத்தில் இயற்கை விதிகளை மீறும் அளவுக்கு அசாத்தியமான தலையீடு ஏற்படுதல்.
6.
தீர்க்கதரிசன வரம்: தேவனோடு உரவாடி அவருடைய
செய்தியை ஜனங்களுக்கு அறிவிக்கும் வரம். அப்போஸ்தலர் 13:1-14
7.
ஆவிகளை வேறுபடுத்துதல்: ஒருவரின் வார்த்தை
அல்லது செயலில் காணப்படும் ஆவியை இன்னதென்று வேறுபடுத்திப் பார்க்கும் வரம்.
8.
பல பாஷை பேசுதல்: இது வரைக்கும் கற்றிராத
ஒரு மொழியில் சுயமாகப் பேசுதல்.
9.
பல பாஷை வியாக்கியானம்: அறியப்படாத மொழியில்
பேசும் ஒருவரின் செய்தியை, பார்வையாளர்கள் புரியும்படி வியாக்கியானம் செய்தல்
ஊழிய வரத்தின் ஐந்து படிவங்கள் (எபேசியர் 4:7-11)
1.
அப்போஸ்தலர்: பிரத்தியேகமாக அனுப்பபட்ட
செய்தியாளர். அதிகாரத்தோடும் வல்லமையோடும் தேவனால் அனுப்பப்பட்ட தூதர்.
2.
தீர்கதரிசி : தேவனுடய செய்தியைக்
கொண்டு வரும் ஊக்கமுடைய செய்தியாளர். கர்த்தர் ஜனங்களோடு இவர்களைப் பயன்படுத்திப் பேசுகிறார்.
3.
சுவிசேஷகர்: நற்செய்தி அறிவிப்பாளர்.
இவர் சமாதானத்தையும் இரட்சிப்பையும் கொண்டு வருகிறார். நற்செய்தியை அறிவிப்பதோடு தேவ
ராஜ்யத்தின் வல்லமையைப் பறை சாற்றுகிறார்.
4.
குருவானவர்: நல்ல மேய்ப்பரை பிரதிநிதிக்கிறார்.
இவர் தம் மந்தைகளைக் காத்து, உணவூட்டி, பாதுகாக்கிறார்.
5.
போதகர்: தேவ ஆலோசனையைச் சேர்ப்பிக்கும்
செய்தியாளர். இவர் ஜனங்களுக்கு உபதேசித்து, பயிற்சியளித்து ஆவிக்குரிய முதிர்ச்சியைத்
தருவிக்கிறார்.
வேறு வகையான வரங்கள் (1 கொரி.12:28-30, ரோமர் 12:7-10)
1.
பணிவிடையாளர்: சபையில் நடக்கும்
எல்லா ஊழியங்களையும் கணம் பண்ணுகிறார்.
2.
நிர்வாகங்கள்: சபையின் தலைமைத்துவப்
பொறுப்பை ஏற்பவர். தீர்மானம் எடுப்பவர், நிதி நிர்வாகம், சபை நிர்வாகம் போன்ற பணிகளைக்
கவனிப்பவர்.
3.
பணிவிடை: சரீர தேவைகளையுடைய
ஜனங்களுக்குத் தேவையான பணிவிடை செய்பவர். அப். 6:3
4.
அறிவுறுத்தல்: நல்ல ஆலோசனையும் புத்திமதியும்
வழங்குபவர். விசுவாசிகளுக்குத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துத் திருத்துபவர்.
5.
கொடையாளர்: சபை தேவைக்கு தசம
பாகத்தை விட அதிகமாகக் கொடுப்பவர்.
6.
நிவாரண உதவியாளர்: தேவை ஏற்படும்போது
ஜனங்களுக்கு உதவிகளை வழங்குபவர்.
7.
கிருபையின் செயல்: சமூக உதவிகளை வாஞ்சையோடு
வழங்குதல்.
முடிவுரை
1. பொதுவான நன்மைகளுக்காக
வரங்கள் வழங்கப்படுகின்றன. 1 கொரி. 12:7
2. வரங்கள் இறையாண்மையோடு வழங்கப்படுகின்றன. 1 கொரி. 12:1
3. வரங்கள் தகுதியானவர்களுக்கு
வழங்கப்படுகின்றன. 1 கொரி. 12:31; 14:1
4. வரங்கள் பொருத்தமானவர்களுக்கு
வழங்கப்படுகின்றன. 1 கொரி. 7:7
5. வரங்கள் பயன்படுத்தத்
தகுந்தவை 1 தீமோத்தேயு 4:14
6. வரங்கள் சீர்படுத்தப்பட
வேண்டியவை. 2 தீமோத்தேயு 1:6
No comments:
Post a Comment