Thursday, October 6, 2016

ஜெபம் நமது பிதாவோடு பேசுதல்



உன் ஜெப அனுபவம் எப்படிப்பட்டது?
நீ முதன் முதலில் எப்போது ஜெபித்தாய்?
ஜெபிப்பது எளிதான காரியம் என்பதை உணர்ந்தாயா?
ஜெபிப்பதில் கடினமான காரியம் எது?
ஏதாவது உனது ஜெபத்திற்குத் தேவன் பதில் கொடுத்துள்ளாரா?
ஜெபத்தைக் குறித்த உனது சந்தேகம் என்ன?

நாம் தேவனுக்குச் சொந்தமானவ ர்கள். பிதாவே நம்மைப் படைத்தார்; குமாரன் நம்மை மீட்டார்; பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மீது விசுவாசங் கொள்ளச் செய்து தேவ குடும்பத்தில் உறுப்பினராக்கினார். நேசமிகுந்த நமது பிதா, அவரோடு ஜெபத்தில் பேச நம்மை அழைக்கிறார். அவருடைய பிள்ளைகள் என்பதால் நாம் அவரிடத்தில் நம்பிக்கையோடு ஜெபிக்கலாம். நமது ஜெபத்திற்குச் செவி சாய்த்து, மிகச் சிறந்ததை அவர் நமக்குக் கொடுப்பார்.
கிறிஸ்தவ ஜெபம் என்பது என்ன?
ஜெபமானது:
ஆராதனையின் ஒரு செயல்பாடு
நாம் தேவனைத் துதித்து ஸ்தோத்தரிக்கிறோம்.
நமது பாவங்களை அறிக்கையிடுகிறோம்.
தேவனுடைய உதவியை நமக்காகவும் பிறருக்காகவும் விண்ணப்பிக்கிறோம்
தேவனோடு உறவாடுதல்
நமது வார்த்தையினாலும் சிந்தையாலும் நாம் தேவனோடு உறவாடுகிறோம்.
விசுவாசத்தின் ஓர் அனுபவம்
தேவன் சொன்னதற்கும் செய்ததத்ற்கும் நாம் துலங்குகிறோம்.
நாம் ஏன் ஜெபிக்கிறோம்?
காரணம்:
தேவனுடைய கட்டளை, அழைப்பு
தேவன் நமது சத்தத்தைக் கேட்பார் என்று வாக்கருளினார்.
சொந்த மற்றும் அயலாரின் தேவைகள்
தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

நாம் யாரிடம் ஜெபிக்க வேண்டும்?
நாம் ஒரே மெய்யான தேவனிடத்தில் மட்டும் ஜெபிக்க வேண்டும். நாம் பிதாவோடோ, குமாரனோடோ, பரிசுத்த ஆவியானவரோடோ அல்லது மூவொருவரோடோ பேசலாம்.
எப்படி நாம் ஜெபிக்க வேண்டும்?
இயேசுவின் நாமத்தில்
நமது இரட்சகர் பிதாவுக்கும் நமக்கும் இடையில் வழியைத் திறந்து வைத்துள்ளார். இயேசுவின் மூலமே நாம் பிதாவை அடைய முடியும்.
நம்பிக்கையோடு ஜெபிக்க வேண்டும்
‘இயேசுவின் நிமித்தம்’ தேவன் நமது ஜெபத்தைக் கேட்பார் என்று உறுதியாய் இருக்கலாம்.
தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும்
ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை அடையவேண்டும் என்று தேவன் வாஞ்சிக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், சரீர ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கும்போது, தேவன் தமது தீர்மானத்தின்படி செய்ய வேண்டும் என்று விட்டு விடுகிறோம். ‘உமக்குச் சித்தமானால்……’ என்று சொல்லி நாம் ஜெபிக்கிறோம்.
உண்மையோடு ஜெபிக்க வேண்டும்
ஜெபம் நமது உள்ளத்தில் இருந்து வரவேண்டும்.
எதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்?
நாம் ஜெபிக்க வேண்டிய காரியங்கள்:
தேவனுக்குப் பிரியமான யாவற்றுக்கும்
நமக்குத் தேவையான யாவற்றுக்கும்
அயலாருக்குத் தேவையான யாவற்றுக்கும்.

நாம் எப்போது ஜெபிக்கலாம்?
தேவன் பின்வரும் நேரங்களில் ஜெபிக்க அழைக்கிறார்:
எந்த நேரத்திலும்
நாமோ, அயலாரோ பிரச்சனை அல்லது தேவைகளை எதிர்நோக்கும்போ து
தனிமையில் இருக்கும்போது, அல்லது பிற கிறிஸ்தவர்களோடு இருக்கும்போது

தேவன் நமது ஜெபத்திற்குப் பதிலளிக்கிறாரா?
நாம் அவருடைய சித்தத்தின்படி விசுவாசத்தோடு ஜெபிக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் பதிலளிக்கிறார்:
கிறிஸ்துவுக்காக. நாம் பாத்திரர் என்பதற்காக அல்ல…. இயேசு நம்மை இரட்சித்ததற்காக
அவன் சித்தத்தின்படி. நமது ஜெபத்திற்குப் பதிலளிக்கும் சிறந்த முறையை அவர் அறிவார். அவரின் செயலின் மூலமாகவோ, சொல்லின் மூலமாகவோ அது அமையலாம். நாம் ஜெபிக்கும் காரியத்திற்காக நமக்கோ, பிறருக்கோ உதவுவதன் மூலம் தேவன் நமது ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார்.
அவரின் சொந்த நேரத்தில். நமக்கு நன்மையான காரியத்தை எப்போது வழங்குவது சிறந்தது என்று நமது பிதா அறிந்து வைத்திருக்கிறார். நம்மைச் சோதிக்கவோ, நமக்கு உபதேசிக்கவோ அவருடைய பதிலைத் தாமதப்படுத்தலாம்.

No comments:

Post a Comment