Thursday, October 6, 2016

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;

சப்தம் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். உண்மையில் ஒலி மாசு சராசரி மலேசியர்களைக் குறிப்பிட்ட அளவுக்கு செவிடாக்கியுள்ளது!
இந்த உலகமும் அவசரமயமாய் இருக்கிறது. நாம் நினைக்கிற காரியங்களையெல்லாம் முடிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை.
நமது வாழ்க்கை முறையும் சொந்த நலனையே மையமாக்கி விட்டது. தொடர்புநுட்ப வளர்ச்சியின் விளைவு இது. சமுதாயம் மற்றவர்களோடு எப்போதும் தொடர்புள்ளதாகவே இருக்கிறது.

இருக்கும் வண்ணமாகவே இருப்பது அல்லது மௌனம் சாதிப்பது மறைந்து போன கலையாகி விட்டது.
ஆனால், சங்கீதம் 46:10ல் சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதுகிறான்:
"நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;....."
இது தாவீதுக்கு தேவன் வெளிப்படுத்தின காரியம்.
இங்குச் செயல்படும் பதம் "அமர்ந்திருந்து..." என்பதாகும்.

நமது சவால் இதுதான்: நான் கவலைப்படும் எல்லா காரியங்களையும் அல்லது சூழ்ந்து கொள்ளும் அனைத்தையும் விரும்பிய நிலையில் ஒதுக்கி வைக்க வேண்டும்.
தேவனை ஓயாமல் தேட வேண்டும். இவ்விதமாய் தேவனையும் அவர் ஆற்றலையும் அறியத் தொடங்குவேன்.

இது உண்மையிலேய கடுமையான காரியம். நான் எப்போது தேவனை அறியத் தொடங்குகிறேனோ அப்போது எனது அடையாளமும் செயல்பாடும் அதற்கேற்றவாறு மாற்றம் காணும். சடுதியில் நான் அச்சமற்றவனாக மாறுவேன். நம்பிக்கை எனது ஆவியில் ஊற்றப்படும். எனது தரிசனம் தெளிவானதும் அடையக்கூடியதுமாகும்.

இந்த அமர்ந்திருக்கும் கலையைக் கற்றுக் கொள் பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுவோம்.

தேவன் நாம் அனைவரையும் அசீர்வதிப்பாராக

No comments:

Post a Comment