கடந்த
வாரம், ஆர்வமும் அதே நேரத்தில் அபாயமும் நிறைந்த ஒரு காரியத்தைப் பத்திரிக்கைகள்
செய்தி வெளியிட்டிருந்தன. ஒரு விமான நிறுவனம், ‘இப்போது யார் வேண்டுமானாலும் பறக்கலாம்’
என்ற சுலோகத்தைக் காட்சிக்கு வைத்திருந்தது.
சிட்னியில்
இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட ஒரு விமானம் 770 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெல்போர்னில்
காணாமற்போனது! அது விமானியின் தவறு என்று புலனாய்வு கண்டு பிடித்தது. அவர் தவறான
இலக்கத்தை விமானக் கணினியில் உள்ளீடு செய்ததால் இவ்வளவு பெரிய சங்கடமும்
தடுமாற்றமும் ஏற்பட்டது. ஒரே ஒரு தவறான இலக்க உள்ளீடுதான்!
பிலிப்பியர் 2.12ல் அப்போஸ்தலர் பவுல் இவ்வாறு நம்மை
ஊக்குவிக்கிறார் ", அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்
உங்கள் இரட்சிப்பு நிறைவேறப்
பிரயாசப்படுங்கள்". பாவமானது "இலக்கை
விட்டு விலகுவது’ என்று அடையாளப்படுத்தப்படுகிறது"
ஒரேயொரு
தவறான இலக்க உள்ளீடு கவனக்குறைவை ஏற்படுத்தி இலக்கை விட்டு விலகச் செய்கிறது!
பரிசுத்த
ஆவியினவர், நாம் இலக்கை விட்டு விலகாதபடி ஒரு சிறு தவற்றைக் கூடச் செய்யக்கூடாது
என்று தூண்டுகிறார் என்ற ஆழமான உபதேசத்தை நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும். ஆனால்,
நாம் எப்போதும் தோல்வியடைய மாட்டோம் என்பது அதன் அர்த்தமல்ல. சில சமயங்களில் நாம்
வீழ்ந்து போவோம். நாம் எப்போதும் தோல்வியுற்றவர்களாகவே நிலைத்திருக்க வேண்டாம். விழித்து
எழுந்தரிப்போமாக. நமது பாவங்களையும் பெலவீனங்களையும் அறிக்கையிட்டு விசுவாசப்
பயணத்தை உண்மையோடு மேற்கொள்வோமாக.
No comments:
Post a Comment