ஒரு
தமிழ்ப் பெண் சிங்கள பாஸ்டரை மணந்து கொண்டார். (சிறுபான்மை தமிழர்களுக்கும்
பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் மிகப் பெரிய பேதம் நிலவி வருகிறது). பெரும்பான்மையான
சிங்களவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்.
அந்த
இளம் தம்பதியினர் தென் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு பகுதிக்கு ஊழியத்தின் நிமித்தம்
சென்றார்கள். இது சிங்களவர்கள் வாழும் பகுதி. சிங்களவர்களில் பலர் வந்து, அவர்களை
அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டினர். அவர்கள் இணங்கவில்லை என்றால் கொன்றுபோடப்
போவதாக மிரட்டினர். அந்தப் பகுதியில்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று அவர் மிகத்
தீர்மானமாக இருந்தனர். ஓர் இரவில் பாஸ்டரின் மனைவி முன்னிலையில் அவரைக் கொன்று
போட்டார்கள்.
இதனால்
அவர்களை ஊழியத்திற்கு அனுப்பிய திருச்சபை அந்த மனைவியில் உயிர் நலன் கருதி அவரை அந்த
இடத்தை விட்டுப் புறப்பட்டு வரச் சொன்னார்கள். ஆனால், அவரின் பதில் அதிர்ச்சியில்
உரையச் செய்தது. “என் கணவரின் மரணம் எனது பெரும்பணியை நிறுத்தவில்லை. எனவே நான்
இங்கேயே நிலைத்திருக்கப் போகிறேன்."
அங்கு
சபை நிறுவப்படும்போது 25 பேரே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், அந்த பாஸ்டர்
இறந்து 5 வருடம் கழித்து மலைப்பூட்டும் வகையில் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 800
பேராக அதிகரித்தது. அந்த இளம் பெண் தம் தேவனையும் ஜனங்களையும் நேசிக்கும்படியாக
எடுத்த எளிய முடிவு என் உள்ளத்தை மிகவும் தொட்டது.
தேவ
ஜனங்களே, நமது இத்தேசத்தில் பல சவால்களை நாம் சந்திக்கக்கூடும் என்று நாம்
நம்புகிறோம். நமது பிரதியுத்திரம் என்னவாக இருக்கப் போகிறது? விசுவாசத்தின்
பயணத்தை நாம் எப்படி மேற்கொள்ளப் போகிறோம்?
பின்வரும்
உண்மைத் தகவல்களை நாம் மறந்து போக வேண்டாம்:
-
தேவன் நம்மை ஆளும்
உரிமை பெற்றவர்.
-
தேவன் அனைத்தையும் தம்
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
-
தேவன் தம் ஜனங்களின்
நலனில் அக்கறையுள்ளவர்.
-
தேவன் தம் ஜனங்களைக்
கைவிடமாட்டார்.
ஆகவே,
மன உறுதியுடன் சாட்சி நிறைவான ஜீவியத்தைப் பல மதங்களைக் கொண்ட இத்தேசத்தில்
வாழ்வோமாக..
தேவன்
நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக
No comments:
Post a Comment