Friday, September 9, 2016

‘என் மேய்ப்பர்’ (காவலர்)

பரி. யாக்கோபின் ஆலயம்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
3ல் 2வது பகுதி: ‘என் மேய்ப்பர்’ (காவலர்)
——–————————————
முன்னுரை:

முதலாவது பகுதியில் நல்ல மேய்ப்பனாகிய நமது ஆண்டவர் இயேசு தமது மந்தைக்கு எவற்றைத் தருகிறார் என்பதைக் கண்டோம். முதல் பகுதியின் முக்கிய சாரம்:
            1. கர்த்தர் நம் மேய்ப்பர்    
            2. நாம் அவரின் மந்தை                 
            3. மேய்ப்பராகிய அவர் நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்
இன்று அவர் நமது தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்கிறார் என்பதை ஆராயவுள்ளோம்.
அனாவசியமான வினா: இந்த உலகில் கொடிய விஷம் வாய்ந்த படைப்பு எது?

1. அபாயங்கள் மத்தியில் ஜீவித்தல்:

சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

மேய்ப்பனின் வாஞ்சைகள் யாவும் தன் மந்தையை நீதியின் பாதையில் வழிநடத்துவது ஆகும்.
ஆயினும் அபாயகரமான பகுதிக்குள் பிரவேசிக்கும் ஆட்டை நாம் காண்கிறோம்.

சங்கீதம் 119:176 (ஏசாயா 53:6-உம் வாசிக்கவும்)
காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.

பெரும்பாலான நேரங்களில் நமது சுயநலத்தினாலோ அல்லது முட்டாள்தனத்தாலோ தேவனுக்குக் கீழ்ப்படியாமல் செயல்படுவதால் நாம் அபாயகரமான சூழலில் சிக்கிக் கொள்வதை அறிகிறோம்.
ஆயினும் நாம் ‘குட்டி தெய்வங்களாக’ வாஞ்சித்து சொந்த வழியில் செல்கிறோம்.

அப்போஸ்தலர் 20:29
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.

எபேசு சபைக்குக் காத்திருக்கும் அபாயத்தைப் பற்றி பவுல் எச்சரிக்கிறார்.
அதற்கும் மேலாக, அபாயகரமான ஜீவியமே நாம் அனைவரையும் சூழ்ந்துள்ள பொல்லாப்பாக இருக்கிறது.
இந்தப் பொல்லப்பான ஜீவியத்தை எதிர்கொள்ள எப்படி நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்?

2. நமது மேய்ப்பர் காக்கிறார்:

சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

பொல்லாப்பில் இருந்து ஆட்டைக் காக்க வேண்டியது மேய்ப்பனின் கடமை.
தாவீது சிறுவனாக இருக்கும் போது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆதாரத்தைக் காண்கிறோம்.

1 சாமுவேல் 17:34-37
34 தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
35 நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து,

ஆட்டின் உயிரைக் காப்பதற்காக மேய்ப்பன் எந்த அர்ப்பணிப்போடும் ஈடுபாடோடும் போராடுகிறான் என்பதைக் காண்கிறோம்.
நமது ஆண்டவராகிய இயேசு நல்ல மேய்ப்பனுக்கும் கூலி (கெட்ட) மேய்ப்பனுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக உபதேசித்திருக்கிறார்:

யோவான் 10:12-13
12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
13 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.

கூலி மேய்ப்பனின் குணாதிசயங்கள் பின்வருமாறு அமைகிறது:
            a) அவர்கள் ‘உண்மையான’ அக்கறையுள்ள மேய்ப்பன் அல்லர்
            b) ஆடுகள் அவனுக்குச் சொந்தமில்லாதவை
            c) அபாயம் வருவதைக் கண்டவுடன் அவர்கள் தப்பியோடுகிறார்கள்
            d) அவர்களுக்கு மந்தையைப் பற்றி அக்கறையில்லை
            e) அவர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறையுடையவர்களாக ஜீவிக்கிறார்கள் (எசேக்கியேல் 34:2)

யோவான் 10:11, 14
நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

நல்ல மேய்ப்பனின் குணாதிசயங்கள் அதற்கு நேர் மாறாக இருக்கிறது:
                        a) அவர் தம் மந்தைக்கு நல்ல மேய்ப்பராய் இருக்கிறார்
                        b) தம் ஆட்டுக்காக தம் ஜீவனை ஒப்புவிக்கிறார்
                        c) அவர் தம் ஆட்டை தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்கிறார்.
                        d) ஆடுகளும் தன் மேய்ப்பனை அறிந்து வைத்திருக்கிறது.

எனவே, நல்ல மேய்ப்பன் தியாக உணர்வோடு தம் மந்தையைக் காக்கிறான் என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார்.
மெய்யாகவே நேசிப்பதாலும் அக்கறையோடு ஆட்டைப் பார்த்துக் கொள்வதாலும் அவர் நம்மைக் காக்கிறார்.

3. மேய்ப்பனின் கோலும் தடியும்

சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

மேய்ப்பனின் பணியை மேற்கொள்கிறவருக்கு கோலும் தடியும் இன்றியமையாதது.
கோல் வனாந்திர மிருகங்களை விரட்டுவதற்குப் (மிரட்டுவதற்குக்/கொள்வதற்குப்) பயன்படுகிறது.
தடி ஆட்டின் பாதுகாப்புக்காகப் பயன்படுகிறது.
இந்த இரண்டு ஆயுதங்களையும் தம் மந்தைகளைக் காக்கும் மேய்ப்பனை அடையாளம் காட்டுகிறது.

முடிவுரை:
1. பொல்லாப்பின் (அபாயம்) மத்தியில் ஜீவித்தல்
2. காக்கும் மேய்ப்பன்
3. மேய்ப்பனின் கோளும் தடியும்

——–————————————
சுய மதிப்பீட்டிட்கான வினா:

1. இன்று நீ அஞ்சும் உண்மையான பொல்லாப்பு (அபாயம்) யாது?
2. உன்னைக் காக்கும் நல்ல மேய்ப்பன் மீது நீ எவ்வாறு உனது நம்பிக்கையை வைக்கலாம்.


2. உன் தேவைகளுக்காக நீ தேவனிடத்தில் ஜெபித்ததோடு உன்னை அரவணைத்துக் கொள்ள வேண்டிக் கொண்டாயா? 

No comments:

Post a Comment