Tuesday, August 23, 2016

கீர்த்தனை வரலாறு 2

இரண்டு வாரத்திற்கு முன்பாக, தமிழ் திருச்சபைகளுக்குக் கீர்த்தனை என்ற பாடல்கள் மூலம் தொண்டு செய்தவர்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன்.

இன்று வேதநாயகம் சாஸ்திரியாரைப் பற்றி அறிவோம். முதலாவது சாஸ்திரியார் அரண்மனைக் கவிஞராக இருந்தார். அவருடைய முக்கியமான பணி அரசரைப் பற்றிப் பாடுவதாகும். செர்ஃபோறு என்ற தஞ்சாவூர் அரசருக்கு அவர் கவிஞராக இருந்தார். 6 வயதாக இருக்கும்போது அவருடைய தாயார் மரித்துப் போனார். 10 வயதாக இருக்கும் போது சிலுவை மற்றும் கிறிஸ்துவைப் பற்றிய தரிசணத்தைத் தெளிவாகக் கண்டார். அரண்மனையில் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு ராஜாதி ராஜனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டும் பாடித் துதிக்க அவர் முடிவு செய்தார். அந்த முடிவினால் அவர் பல அவஸ்தைக்கு ஆளானார். ஆனால், தன் தீர்மானத்தில் அவர் உறுதியாக இருந்ததோடு தேவனும் அற்புதமான சாட்சிகள் தரும் அளவுக்கு அவருக்கு கிருபையாய் இருந்தார்.

நாம் இன்னும் ஆலயத்தில் பாடிக் கொண்டிருக்கிற அவருடைய சில பிரபலமான பாடல்கள்:
-       தந்தானைத் துதிப்போமே;
-       ஆமென் அல்லேலூயா, மகத்துவ தம்பராபரா;
-       இயேசுவையே துதிசெய் நீ மனமே.

ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்து தேவனுடைய அற்புதமான கிருபையால் மீண்ட அவர் பாடிய பாடல் எனக்கு இன்னும் பிடித்தமான பாடலாக அமைகிறது. அந்தப் பாடலின் தலைப்பு தேவ இரக்கம் இல்லையோ, இயேசு தேவ இரக்கம் இல்லையோ.


ஒப்பு நிகரற்ற பாடல்கள் மூலம் மொழிக்கும் இறையியலுக்கும் தொண்டாற்றிய இத்தகைய மனிதர்களுக்காக நாம் தேவனை அவசியம் ஸ்தோத்தரிக்க வேண்டும். அடுத்த முறை இப்பாடல்களைப் பாடும் போது, இவை உண்மையான சூழ்நிலையில் பிறந்தவை என்று உணர்ந்தவர்களாகப் பாடுவோமாக. தேவனுக்கே ஸ்தோத்திரம். 

1 comment:

  1. தந்தானை துதிப்போமே என்ற பாடலை எழுதியவர் என்னுடைய மூதாதையரான வே .மாசிலாமணி போதகர் அவர்கள்.

    ReplyDelete