கிறிஸ்மஸ்
மூலம் நாம் பெறக்கூடிய மிகவும் அற்புதமான செய்தி இது: தேவன் மனிதனாக வந்தார்!
இது ஓர் அருமையான விஷயம். மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தி. தேவன் எந்த
ரூபத்திலும் பிறக்கும் சித்தத்தைத் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் காணலாம்: மனித
குரங்காகவோ, அடர்த்தியான மரமாகவே, அதிசயமான மலையாகவோ, வேறு எந்த உருவத்திலோ அவர் தோன்ற
முடியும்.
அவர்
மனிதனாக வருவதைத் தேர்ந்தெடுத்தார். அது குறிப்பிடத் தகுந்த மூன்று
ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது:
-
மனுகுலத்திற்கு மரியாதை;
-
ஜீவனுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் மகிமை;
-
தியாக பலியாக
நாம் பிறரை நேசிக்கலாம்.
தேவ
குடும்ப உறுப்பினர்களே, பின்வருவன ஒவ்வொரு விசுவாசிக்கும் மெய்யான சவால்:
-
மனிதர்கள் யாவருக்கும் மகிமையளிப்பது;
-
அவர்களை மதிக்கக் கற்றுக் கொள்வது;
-
பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் தியாக பலியாக ஜீவிப்பது.
இயேசு
கிறிஸ்துவைப் பின்பற்றி ஜீவிக்கிறோம் என்பதற்கு என்ன பொருள்? இதுதான் கிறிஸ்மஸின்
அர்த்தம்.
அனைவருக்கும்
கிறிஸ்து பிறப்பின் சந்தோஷம் உண்டாவதாக!
இன்னும்
6 நாட்களில் நாம் 2016ஐ விட்டு 2017ம் ஆண்டுக்குச் செல்லவுளோம். இந்த ஆண்டு எப்படி
அமைந்திருந்தது? ஆச்சரியத்தாலும் அதிர்ச்சியாலும் அல்லவா! முன்னேற்றத்திற்குத்
தடையான ஆண்டு என்று யாரோ ஒருவர் சொன்னார். அர்த்தம்: இதுவரை உள்ள நிலைமையைப்
புரட்டிப் போட்டது… இயல் நிலையைத் திருப்பிப் போட்டு, முன் அறிவிப்பாளர்கள் மற்றும்
சூதாட்டக்காரர்களின் கணிப்பைப் பொய்யாக்கிப் போட்டது:
-
ஆங்கிலேயே பிரிமியர் போட்டியில் லைசிஸ்டர் முடி சூட்டப்படுவார்
என்று யார் எதிர்ப்பார்த்தது!
-
டேவிட் கேமரூன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம்
வகிக்க வாக்கெடுப்புக்கு அழைத்த போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன்
விலகும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை! இந்த வரலாற்றுப்பூர்வமான சம்பவத்திற்கு
‘பிரிஎக்ஸிட்’ (பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவிட்டது) என்று பெயர்
சூடப்பட்டப்பட வேண்டியதாயிற்று.
-
ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி, ஹிலேரி கிளிண்டனை
வருங்காலப் பிரதமராக தேர்வு செய்த போது, உலகமே அவர்மீது பந்தயம் கட்டியது. தேசிய
செயலாளர் பொறுப்பை விட்டு விலகும் அவருக்கு அரசியல் பலம் பேரளவில் இருந்தது. ஆனால்,
அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தினரும் மத்திய வர்க்கத்தினரும் வேறு விதமாக
சிந்தித்து, அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர்.
இவை
யாவும் நம்மைக் குழப்பக்கூடும். இச்சம்பவங்கள் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி
விசுவாசத்தை இழக்கச் செய்யுக்கூடும். ஆனால், கர்த்தர் அனைத்தையும் தம்
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் அவர் மாட்சிமை நிறைந்தவர் என்றும்
நான் கூற அனுமதியளியுங்கள்!
எனவே,
உங்கள் உள்ளத்தை இயேசுவுக்குக் கொடுத்து அவரை விசுவாசியுங்கள். 2017ம் ஆண்டு
ஆசீர்வாதமாய் அமையட்டும்!
No comments:
Post a Comment