Friday, December 23, 2016





தேவ ஜனங்கள்
5ல் 4வது பகுதி

‘தேவனின் உடைமை’

முன்னுரை
 ஆட்டு மந்தை பெரிதாக இருக்கும்போது அவை யாருக்குச் சொந்தம் என்பது தெரியாமல் போகலாம்.
 ஆனால், மேய்ப்பர்கள் அவற்றின் காதுகளில் கீறி அடையாளம் வைப்பதன் மூலம் அவற்றை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
 அடையாளம் இடும் முறை மாறுபட்டிருந்தாலும் நோக்கம் ஒன்றே – அடையாளம் கண்டு கொள்வது

1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

தேவனின் உடைமை - இஸ்ரவேலர்கள்
யாத். 19:5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

 இஸ்ரவேலர்கள் தேவனின் உடைமையாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
  •  அவர்களுடைய அடைவுநிலை அல்லது அந்தஸ்தின் நிமித்தம் அவர்கள் தேவனின் உடைமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை
  •  அவருடைய கிருபையால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டனர்.


உபா. 7:7 சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.
  •  எல்லா ஜனங்களிலும் அவர்கள் தேவனின் விசேஷ பொக்கீஷமாகவும் உடைமையாகவும் பிரித்தெடுக்கப்பட்டார்கள்
  •  தேவனே சர்வ சிருஷ்டிப்புக்கும் ஜனங்களுக்கும் உரிமையாளர் – அவரே அவற்றைத் தெரிந்து கொண்டார் (சங்கிதம் 24.1)


லேவி. 20:26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
  •  ஆனால், தேவன் இருவழி உறவாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் என்பது தெளிவு.


லேவி. 26:12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். (எரேமியா 30.22ஐயும் வாசிக்கவும்)
  •  பழைய ஏற்பாட்டின் இறுதி புஸ்தகம் அவருக்கு உரிமையானவற்றை ஆயத்தப்படுத்தும் வாக்குத்தத்த த்தோடு நிறைவடைகிறது.



மல்கியா 3:17 என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்;

2. தேவனுடைய உடைமை - கிறிஸ்தவர்கள்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
  •  கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவில் தேவனுக்கு உரியவர்கள் என்பதை உணர வேண்டும்.
  •  நமது இயல்பான சிந்தனாமுறையில் இருந்து அப்பால் சென்றால்தான் இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

2.1. கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயஞ் செலுத்தப்பட்டோம்
  •  நாம் நமக்குரியவர்கள் அல்லர். ஆனால் கிறிஸ்துவிக்கு நூறு சதம் உரியவர்கள் என்பதை உணர்வோம்.

 அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நாம் கிரயஞ் செலுத்தப்பட்டோம்

1கொரி. 6:19 நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
1கொரி. 6:20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; (அப்.20.28ஐயும் வாசிக்கவும்

2.2. பரிசுத்த ஆவியால் முத்திரிக்கப்பட்டோம்
  •  நாம் தேவனின் உடைமையாய் இருப்பதால் பரிசுத்த ஆவியால் முத்திரிக்கப்பட்டிருக்கிறோம்.


எபே.1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
எபே. 1:14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

2.3. நற்கிரியை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்
  •  ஆகவே, நற்கிரியை செய்யும் பொருட்டு நாம் மீட்கப்பட்டு தேவனுக்கு உரியவர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறோம்.


தீத்து 2:14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

முடிவுரை
  •  அவருடைய மகிமைக்காக நாம் விலையேறப்பெற்ற முத்திரையிடப்பட்டு ஜீவிக்கிறோம்.


சுய பரிசோதனைக்காகவும் கலந்துரையாடலுக்காகவும் கேள்வி
நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்ற அறிவு நமது அன்பின் ஜீவியத்தை எவ்வாறு மாற்றுகிறது?


No comments:

Post a Comment