சிறுவர்கள்
நமது சிறந்த எதிர்காலத்திற்கு நம்பிக்கையைத் தருகின்றனர். வேதாகமம் சிறுவர்களைப்
பற்றிய அறுமையான தகவல்களைத் தருகின்றது:
சங்கீதம் 127:3 - இதோ, பிள்ளைகள்
கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின்
கனி அவரால் கிடைக்கும் பலன். (அவர்களால்
சந்தோஷப்படுவோம்)
சங்கீதம் 127:4 - வாலவயதின் குமாரர் பலவான்
கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
(பிள்ளைகள் சிறந்த பயனைத் தருமளவும் பெற்றோர்கள் அவர்களைச் சரியான முறையில்
வளர்க்க வேண்டும்)
நீதிமொழிகள் 22:6 - பிள்ளையானவன் நடக்கவேண்டிய
வழியிலே அவனை நடத்து; அவன்
முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (ஞானத்தின் வழியில்
பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்).
பெற்றோர்களாகிய
நாம் குழந்தைகள் மூலம் கிடைக்கும் இன்பதை அனுபவிக்க கர்த்தர் அருள் புரிவாராக.
நமது
குழந்தைகள் ஜீவியத்தின் நோக்கத்தை உணரும் பொருட்டு பொறுத்தமான முறையில்
வளர்க்கப்படும் வகையில் நமக்குக் கர்த்தர் ஆழமான ஞானத்தை அருள்வாராக.
நமது
குழந்தைகளைத் தனிச் சிறப்பு வாய்ந்த ஆளுமையைப் பெற்றவர்களாக வளர்க்க கர்த்தர் ஞானத்தை
அருள்வாராக.
நமது
குழந்தைகளைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!
No comments:
Post a Comment