முன்னுரை:
- ஆரோக்கியம் மற்றும் தூய்மையைப் பற்றிக் கவலைப்படும் உலகில் நாம் ஜீவிக்கிறோம்.
- ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நாம் குளியல், பல் துலக்குதல், கை கழுவுதல், துணி துவைத்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறோம்.
- துரதிர்ஷ்டமாக, புற ஆரோக்கியத்திற்குக் காட்டப்படும் அக்கறை ‘ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்குக்’ காட்டப்படுவதில்லை.
1
பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று
தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத்
தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்,
பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்
இருக்கிறீர்கள்.
1. பரிசுத்த கடவுள்:
லேவியராகமம் 11:44
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில்
ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப்
பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.
- நமது தேவன் அன்பும், கனிவும், கருணையும் உடையவர் என்பதை அறிவோம். ஆனால், ஆதியில் அவர் தம்மைப் பரிசுத்தமானவராக இஸ்ரவேலர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
- வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ள பரிசுத்தம், ஆலயத்திற்குச் செல்லுதல், வேதம் வாசித்தல் போன்ற நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட பரிசுத்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- ‘பரிசுத்தம் என்ற எபிரேய (காடோஸ்) மற்றும் கிரேக்க (ஹாகியோஸ்) பதம் ‘பிரித்தெடுக்கப்படல்’, ‘தெரிந்து கொள்ளப்படல்’ என்ற பொருளைக் கொண்டு வருகிறது.
- எனவே, கர்த்தருடைய பரிசுத்தத்தை பூமியில் உள்ள சகல படைப்புகளிலும் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்ட்டவர் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் தேவ தூதர்களைப் போல் பரிசுத்தமானவர்.
ஏசாயா 6:3
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது
என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
2. பரிசுத்த ஜனங்கள்:
யாத்திராகமம்
19:5-6
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும்
நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம்
என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய்
இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.
- தமது ஜனங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்த கர்த்தர்,அவர்களைப் பரிசுத்தமாய் இருக்கும்படி அழைத்தார்.
- தமது ஜனங்கள் பரிசுத்தமாய் இருக்கும்படி அவர்களைக் கர்த்தர் தெரிவு செய்து கொண்டார்.
- ஆயினும் இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், அதைப்பற்றி செயற்பூர்வமாக போதிக்கும்படி கர்த்தரிடத்தில் கேட்டுக் கொண்டனர்.
யாத்திராகமம்
22:31
நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப்
போட்டுவிடுங்கள்.
- கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமாய் வாழும் பொருட்டு அவர்களுக்குத் தேவ கற்பனைகள் கொடுக்கப்பட்டன.
யாத்திராகமம்
26:19
நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்
என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய
கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று
உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
- தேசத்திற்குக் கர்த்தரை அறிவிக்கும் பொருட்டு அவர் தேவ ஜனங்களை அபிஷேகித்தார்.
- ஆனால், அவர்கள் பரிசுத்த ஜனங்களாய் ஜீவிப்பத்தில் திரும்பத் திரும்ப தோல்வியடைந்து போனார்கள்.
3.
பரிசுத்தமாயிருங்கள்
1
பேதுரு 1:15-16
உங்களை
அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும்
பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
- ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாமும் பரிசுத்தஜனங்களாக ஜீவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
- புற ஊந்துதல் அல்லாமல், கர்த்தர் நம்மை பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு இரட்சித்துக் கொண்டதால் நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.
- கிறிஸ்துவில் நாம் உரிமையாக்கிக் கொள்ளப்பட்டதால் பரிசுத்தமாகும்பொருட்டு நாம் தெய்வீக அழைப்பைப் பெற்றிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 7:1
இப்படிப்பட்ட
வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா
அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
முடிவுரை:
- அவரில் நாம் பரிசுத்தாக ஜீவிக்கும் கர்த்தருடைய பரிசுத்த ஜனமாய் இருக்கிறோம்.
———————————————————–————————————
சுய மதிப்பீட்டுக்கும்
கலந்துரையாடலுக்குமான கேள்வி:
தேவ சித்தத்திற்காக நீ தெரிந்து
கொள்ளப்பட்ட நோக்கம் பரிசுத்தமாக வாழும் நோக்கத்திற்கு உனக்கு எவ்வாறு சவாலைத்
தருகிறது?
No comments:
Post a Comment