Wednesday, July 13, 2016

பிசாசின் கிரியை

தற்போது ‘உங்கள் மனப்போக்கு: அதன் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற திம் லேஹாயா எழுதிய புஸ்தகத்தை இரண்டாவது முறையாக வாசித்து வருகிறேன். தம் மனைவி தற்செயலாக கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை அவர் இப்புஸ்தகத்தில் எழுதியுள்ளார்: "பிசாசானவன் நாளைய பிரச்சனையைத் தாங்கிக் கொள்ள முடியாத படிக்கு இன்றைய கிருபையின் ஆவியை முறித்துப் போடுகிறான்."

உண்மையில் இதை வாசிப்பதில் தவறில்லை. ஆனால், ஆழமாக சோதித்துப் பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும். ‘நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்பட்டால், அநேகமாக இன்றைய தினத்தைக் குறித்து மகிழ முடியாது’, என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்வமான விஷயம் என்னவென்றால், நாளைய தினத்தைத் தேவனுக்குக் கொடுக்க முடியாது; உன்னிடம் உள்ளதை மட்டும்தான் கொடுக்க முடியும்… அது இன்றைய நாள்தான்."

நமது ஜீவியத்தின் சில சமயத்தில் நம் நாட்டம் பெருகும். அதுவும் இப்போது மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஈவிரக்கமற்ற கொலை நடந்தேறி வருகிறது. வியாகூலம் நாளைய கவலையைப் போக்காது. ஆனால், இன்றைய பெலத்தை அழித்துப் போடும் என்று ஒரு மருத்துவர் கூறியிருக்கிறார். அது பொல்லாங்கை விட்டு விலகச் செய்யாது. போதாதற்கு நாளைய தின பெலத்தையும் எடுத்துப் போடும்.

தேவன் அனுதினத்திற்கும் புதிய கிருபையை அருளியிருக்கிறார். அக்கிருபையைப் பெற்று பொல்லாங்கை ஜெயிப்போம். நாளைய தினம் என்னத்தை உண்போம், என்னத்தை உடுத்துவோம் என்று எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று வேதம் உபதேசிக்கிறது. தேவன்தாமே நம்மையும் இத்தேசத்தையும் பொல்லாத ஜனங்களிடம் இருந்து மீட்பாராக.


ஜெபிப்பதிலும் வேதம் வாசிப்பதிலும் நேரத்தைக் கழிக்கும் உங்களைத் தேவன் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment