Friday, July 1, 2016

வெளிப்படுத்தலில் காணப்படும் 7 திருச்சபைகள் - பெர்கமு

பெர்கமு (வெளிப்படுத்தல் 2:12-17) -
மனந்திருப்ப வேண்டிய சபை (2:16)

முன்னுரை:

பெர்கமு சிறிய ஆசியாவின் ரோமாபுரி தலைநகரம் ஒரு முக்கியமான சமைய மையம்
ஆசியாவில் முதன் முதலாக கேசியருக்கு கோயிலையும் வலிபாட்டு ஸ்தலைத்தையும் நிறுவிய நகரம்.
பவுல் எபேசு பட்டணத்தில் ஊழியஞ்செய்த காலத்தில் இப்பட்டணம் காணப்பட்டிருக்கலாம் (அப்போஸ்தலர் 19:10).

1. சபையைப் பற்றிய வர்ணனை:

வெளிப்படுத்தல் 2:12
12 “பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது:
(வெளிப்படுத்தல் 1:16-உம் வாசிக்கவும்)

இரு புறமும் கருக்குள்ள பட்டயம் இரு திசையிலும் வெட்டக் கூடியது
வெளிப்படுத்தல் 1:16ல் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் தேவனுடைய வாயில் இருந்து புறப்படுகிறது.

எபிரேயர் 4:12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

இது தெள்ளந்தெளிவாக தேவனுடைய வல்லமையும், ஜீவனும், செயல்பாடும் உள்ள சபையைச் சுட்டுகிறது.

2. சபையைப் பற்றிய வர்ணனை:

வெளிப்படுத்தல் 2:13
உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.


இச்சபை சாத்தானில் தளத்திலும் சிங்காசனத்திலும் வாசஸ்தலத்திலும் அமைந்திருக்கிறது.
ஆனாலும், இதற்கு மத்தியிலும இச்சபை தேவன் மீது விசுவாசம் கொண்டிருக்க வேண்டும.
இயேசு அந்திப்பாவைக் குறித்துஉண்மையுள்ள சாட்சி’, ‘தமக்காக மரித்தவன்கூறியிருக்கிறார். – இதே பட்டம் இயேசுவுக்கு வெளிப்படுத்தல் 1:5-இல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

3. சபையைப் பற்றிய வெறுப்பு:

வெளிப்படுத்தல் 2:5
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்


அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்களாக இருந்தனர். (எண்ணாகம் 22-25 & 2 பேதுரு 2:15-16).
அவர்கள் நிக்கொலாய் உபதேசத்தையும் பின்பற்றி வந்தார்கள். – இவ்விரண்டும் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரண்பட்டது.

4. சபைக்கான வழிகாட்டல்:

வெளிப்படுத்தல் 2:16
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

இத்திருச்சபையைத் தேவன் கண்டிப்பதோடு மனந்திருப்ப அழைக்கிறார். இல்லையென்றால் அவருடைய ஆக்கினைக்கு இலக்காக நேரிடும்.
இல்லையென்றால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்என்று எச்சரிக்கிறார்.

5. சபைக்கு வாக்குத்தத்தம்:

வெளிப்படுத்தல் 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.


அவர்களுக்கு மறைந்திருக்கும் மன்னாவும் வெண்மையான கல்லும் கொடுக்கப்படும் என்று வாக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:

நமது ஆண்டவராகிய இயேசு அக்கறையுடையவராக இருந்தாலும், வேறு விசுவாசத்தோடு பேரம் பேசுகிறவர்களைக் கடிந்து கொள்ளச் செய்கிறார்

No comments:

Post a Comment