கடந்த வாரம் நாம் சபை முகாமுக்குச்
சென்றிருந்தோம். சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம்:
1. கரு :
படைப்பில் வேற்றுமை, நோக்கத்தில் ஒற்றுமை.
2. கருவூலம் : மறைதிரு எட்வர்ட் தேவதாசனால் தலைமைதாங்கப்பட்ட
குழு.
3. இடம் :
புக்கிட் கம்பாங் ரிசோர்ட் சிட்டி, குவந்தான்
4. வருகை :
பெரியவர்கள் - 59
சிறியவர்கள் – 17
5. முதல் அங்கம் :
நமது மனோநிலையையும் ஆளுமையையும் அறிந்து
கொள்ளுதல். இது தகவல் நிறைந்ததாகவும் புதுமையாகவும் அமைந்திருந்தது. இப்போது மாற்றத்தை
நோக்கி நமது பெலத்தையும் பெலவீனத்தையும் அறிந்து கொள்ளலாம்.
6. இரண்டாவது அங்கம்: நமது
வெவ்வேறான ஆளுமைகளும் குணங்களும் ஞானங்கும் இருந்தாலும் நாம் ஒருவருக்கு மற்றவருக்கு
உரியவராக இருக்கிறோம். நாம் கிறிஸ்துவின் சரீர
அங்கமாக இருக்கிறோம். சிலர் அவருடைய கண்களாகவும், கரங்களாகவும், பாதங்களாகவும் இருக்கிறோம்.! மறைதிரு எட்வர்ட் 1 கொரிந்தியர் 12வது வசனத்தை இதற்கு உதாரணமாகப் பயன்படுத்தினார். நாம் தேவ சபையின்
அங்கமாக இருக்கிறோம் என்பதையும் வலியுறுத்தினார். நம்மில் ஒவ்வொருவரும்:
- சபையின் நலனுக்காக நன்கொடை செய்யலாம்;
- வேற்றுமையிலும் ஒற்றுமையிலும மகிழலாம்; மற்றும்
- பெரிய காரியங்களைச் செய்ய பொறுப்பு வழங்கப்படலாம்.
7. மூன்றாவது அங்கம் :நாம்
தனித் தன்மை வாய்ந்திருப்பதால் ஏற்படும் சவால்கள் அடுத்த அங்கத்தில் பேசப்பட்டது. நமது
குழுவில் ஒருவராக திரு. ஆன்ட்ரு, இந்த வேற்றுமைகளைச்
சுட்டிக் காட்ட சபையாரை குழு நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். வெறுப்பு மற்றும் மறுப்பு
முக்கிய சவால்களாக இருந்தன.
பரி.
நற்கருணையோடு இந்த முகாம் ஒரு நிறைவுக்கு வந்தது. இதில் கிறிஸ்துவில் நாம்
ஒவ்வொருவருக்கும் வேற்றுமை கலையப்பட்டது.
அன்பார்ந்த சிநேகிதர்களே, மகிழ்ச்சிகரமான
ஆனால், தூண்டப்படுகிற இந்த முகாமுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ரேனர் மற்றும்
அவருடைய தாலந்து நிறைந்த குழுவினருக்காக நமது நன்றிகள்! விசுவாசத்தின்
சமூகத்தினரான நாம் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்கி தேவ மகிமக்காக மாற்றத்தைக்
கொண்டு வருவோம்.
No comments:
Post a Comment