தியத்தீரா (வெளிப்படுத்தல் 2:18-29)
- கள்ளத் தீர்க்கதரிசிகளைக் கொண்ட சபை (2:20) -
முன்னுரை:
தியத்தீரா – ஆசியிவின் ரோமாபுதி மாகாணத்தில் உள்ள லைகாஸ் நதியோரம்
அமைந்திருள்ள செல்வச் செழிப்பான நகரம்.
இது மற்ற நகரங்களை விட சிறிய பட்டணமாய் இருந்தாலும் மிக நீண்ட நிரூபத்தைப்
பெற்றது.
ஜவுளி, ஊதா நிறச் சாயம், வணிகர்கள்
போன்றவற்றால் பிரபலமானது. (அப்போஸ்தலர் 16:14-15).
1. சபையைப் பற்றிய வர்ணனை:
வெளிப்படுத்தல் 2:18
தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
இயேசுவானவர் அக்கினி ஜூவாலையைப் போன்ற கண்களையும் பிரகாசமான வெண்கலம்
போன்ற பாதங்களையும் உடையவராய் தோற்றமளிக்கிறார். (வெளிப்படுத்தல் 1:14-15
& தானியேல் 10:6).
2. சபையைப் பற்றிய வர்ணனை:
வெளிப்படுத்தல் 2:19
உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் ஆறு தகுதிகளுடன் வளர்ச்சியையும் பெற்ற சபை
என்று அடையாளம் காணப்படுகிறது.:
2.1). கிரியைகள்:
2.1). கிரியைகள்:
2.2). அன்பு:
2.3). விசுவாசம்:
2.4). ஊழியம்:
2.5). நிலைத் தன்மை:
2.6). இன்னும் அதிக கிரியை
3. சபையைக் குறித்த மறுப்பு:
வெளிப்படுத்தல் 2:20-23
ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
ஆயினும் அச்சபை கள்ளத் தீர்க்கதரியான யேசபேல் என்ற தீர்க்கதரியோடு
இணங்கிபோனது. இவள் ஒழுக்கக்
கேடுகளை உபதேசித்ததோடு சபையை வழிதப்பச் செய்தவள். விக்கிரகங்களுக்குப்
படைக்கப்பட்டவைகளை சபையாரை உண்ண வைத்தவள்.
ஆகவே, அவளுக்கும் அவளைப் பின்பற்றுகிறவகளுக்கும்
விழப்போகிற ஆக்கினையைக் குறித்து எச்சரிக்கிறார்.
4. சபைக்கு வழிகாட்டல்:
வெளிப்படுத்தல் 2:24-25
தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
ஆண்டவர் உண்மையான விசுவாசிகளை வேறுபடுத்திப் பார்ப்பதோடு அவர்களைத்
தொடர்ந்து நிலைத்திருக்கும்படியும் ஊக்குவிக்கிறார்.
5. சபைக்கு வாக்குத்தத்ம்:
வெளிப்படுத்தல் 2:26-29
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். 28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
முடிவுபரியந்தம் நிலைத்திருந்து தம் சித்தத்தின்படி கிரியை
செய்கிறவர்களுக்குக் கீழ்க்கண்ட வாக்குத் தத்ங்களை வழங்குகிறார்.:
5.1). தேசத்தை ஆளும் அதிகாரம் (பார்க்க சங்கீதம் 2:8-9)
5.2). விடி நட்சத்திரம் (பார்க்க வெளிப்படுத்தல் 22:16)
முடிவுரை:
இச்சபை உள்ளே இருந்து அழிக்கும் பிரச்சனையை எதிர்நோக்குகிறது.
இச்சபை அவற்றுக்கு இணங்கிப் போனதால் தேவன் அவர்களைக் கண்டிக்கிறார்.
No comments:
Post a Comment