Thursday, July 21, 2016

கோட்டை காவல்காரர்

பழைய ஏற்பாட்டில், சிறப்பாக எசேக்கியேல் புஸ்தகத்தில், குறிப்பாக 3.17ல் தேவன், நாம் எப்படி அவருடைய கோட்டைக்குக் காவல்காரராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடிப்பட்டிருக்கிறது.

பண்டைய இஸ்ரேல் தேசத்தில் காவற்காரர்கள் சுவர் அறைகளில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் பட்டணத்துக்குப் புறம்பே இருந்து வரும் அபாயங்களை ஜனங்களுக்கு அறிவிப்பார்கள்.

இன்று விசுவாசிகளாகிய நாம் கோட்டைச் சுவர்களில் நின்று நகரத்தையும் நாட்டையும் ஜெபத்தின் மூலம் காக்க வேண்டிய அவசரமான அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாம் ஆபத்து அவசரங்களை அறிவிப்பதில் முன்னோடிகளாக இருக்கலாம். பொல்லாங்கனின் வழி வகைகளை அறிந்து முன் அறிவிக்கலாம். சமுதாயம் என்ன செய்ய வேண்டும், எப்படி பொல்லாங்களின் பொல்லாப்புகளுக்கு விலகியிருக்க வேண்டும், என்ன ஆயத்தம் செய்ய வேண்டும், வழிகாட்டலை எங்கே நாடவேண்டும் என்பதை அறிவிப்பதில் பயனுள்ள ஜனங்களாகத் திகழலாம்.

சிநேகிதர்களே, இந்த நிலம் நமது எதிர்கால சந்ததிகளுக்காகப் பேணப்பட வேண்டியதாயிருக்கிறது: அவர்கள் நமது பிள்ளைளும் பேரப் பிள்ளைகளும் ஆவர்!


அர்ப்பணிப்பு நிறைந்த கோட்டை காவல்காரர்களாக இருப்போம். ஓயாமல் ஜெபிப்போம். உங்கள் ஆவி எப்போதும் பரிசுத்தத்தால் நிரம்பி வழியட்டும்.

No comments:

Post a Comment