வெளிப்படுத்தலில்
காணப்படும் 7 சபைகள் (9ல் 6வது பகுதி)
—————————————————————————————————————–—————————————————————————————————————–————————————————————————————————————————————————————————————————————–—————————————————————————————————————–————————————
சர்த்தை (வெளிப்படுத்தல் 3:1-6)
- உறக்கத்தில் ஆழ்ந்த (செத்த) சபை (3:2).
முன்னுரை:
சர்த்தை – லீடியா என்ற
பண்டைய கால ராஜ்யத்தின் தலைநகரம்
இந்த நகரம் கம்பளி, ஜவுளி,
மற்றும் நகை வியாபாரத்திற்கும் பிரபலம் பெற்றது.
அது ஒரு குன்றின் அறணான
கோட்டையாகத் திகழ்ந்தது. அது விழிப்புடன் இல்லாததால் இரண்டு முறை தாக்கப்பட்டு
கைப்பற்றப்பட்டது.
1. கிறிஸ்துவின் வர்ணனை:
வெளிப்படுத்தல் 3:1a
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது...
‘தேவனுடைய
ஏழு ஆவிகளையும் கொண்ட சபை’ பரிசுத்த ஆவியை உவமானப்படுத்துகிறது (ஏசாயா 11:2-5).
‘ஏழு
நட்சத்திரங்கள்’ சபைகளின் ஏழு தேவ தூதர்கள்’ (வெளி.1:20; யோவான் 10:28).
2. சபையைப் பற்றிய வர்ணனை:
வெளிப்படுத்தல் 3:1b, 4
1 ... நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
வெளித் தோற்றத்தில் அவர்களுக்கு நற்பெயர்
உண்டு.
ஆனால், இயேசுவின் கண்களுக்கு
அவர்கள் ஆவியின் பிரகாரம் ‘செத்தவர்களாய்’ இருக்கிறார்கள்.
2 தீமோத்தேயு 3:5 (2 தீமோத்தேயு 3:1-7-உம் வாசிக்கவும்)
தேவபக்தியின் வேஷத்தைத்
தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
ஆயினும் தேவன் தமக்காக பரிசுத்தமும்
புனிதமுமாகவும் ஜீவிக்கிறவர்களை அடையாளங் கண்டு கொண்டுள்ளார்.
3. வெறுப்பும்
சபைக்கான வழிகாட்டலும்:
வெளிப்படுத்தல் 3:2
நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை
ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
தேவன் அச்சபையை, ‘விழித்துக் கொண்டு
சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்தும்படி’ கண்டிக்கிறார்.
எபேசியர் 5:14-18
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
இதற்குக் காரணம் தேவனுடைய
பார்வையில் அவர்களுடைய கிரியை தேவனைப் பிரியப்படுத்துபவைகளாகக் காணப்படவில்லை.
4. சபைக்கு
ஆலோசனை:
வெளிப்படுத்தல் 3:3
ஆகையால் நீ கேட்டுப்
பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக்
கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான்
உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
தேவன் அச்சபையை மனந்திரும்பி ‘அவருடைய
வார்த்தைக்கு’ கீழ்ப்படியும்படி அழைக்கிறார்.
அவர்கள் ’விழித்துக்கொள்ளாவிட்டால்’
தேவனின் எதிர்ப்பாராத வருகையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
5. சபைக்கு வாக்குத்தத்தம்:
வெளிப்படுத்தல் 3:5-6
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ
அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து
அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என்
பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்
என்றெழுது.
ஆகவே, ஆண்டவராகிய இயேசு விழித்துக்
கொண்டு வெற்றிக் கொள்கிறவர்களுக்குப் பின்வருபவற்றை வாக்கு கொடுக்கிறார்:
5.1). வெண்ணாடை போர்த்தப்படும்
(வெளிப்படுத்தல் 7:13-16)
5.2). ஜீவ புஸ்தகத்தில் பெயர்
கிறுக்கிப்போடப் படாது (பிலிப். 4:3 & வெளி. 20:15)
5.3). பிதாவாகிய தேவனிடத்தில்
பெயர் அறிவிக்கப்படும் (மத்தேயு 10:32-33)
முடிவுரை:
ஆவியின் பிரகாரம் செத்த சபையாகிய சர்த்தை
சபை ஆண்டவருக்காக விழித்திருந்து ஜீவிக்க அழைக்கப்படுகிறது.
ஆனாலும், இந்த அழைப்பு
புரக்கணிக்கப்பட்டதால் அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment