Thursday, June 23, 2016

காணும் தேவன்

பின்வரும் காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். – நான் சங்கீதம் 139ஐ வாசித்ததில் ஆச்சரியப்பட்டேன். வேதத்தில் காணப்படும் தேவனைப் பற்றிய குறிப்புகள் வருமாறு:

1.              அவர் நம்மைத் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்கிறார். வசனம் 1, 2, 3 இதற்கு சாட்சியாக இருக்கின்றன. எனது அன்றாட கடமையைப் பற்றி தேவன் அறிந்து வைத்திருப்பதை அறிய முடிகிறது! என் நோக்கத்தையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார்! ‘அறிந்து வைத்திருக்கிறார்’ என்றால் ‘புரிந்து வைத்திருக்கிறார்’ என்பது கவனத்தை ஈர்க்கும் வசனமாகும். என்னைச் சூழ்ந்துள்ள சூழ்நிலையையும் அது எப்படி என்னைப் பாதிக்கிறது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். இது குதூகலமான காரியம். ஆனால், இது எதைக் காட்டுகிறது? அவர் என்னை அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறார் என்றால் ஆலோசனைகளுக்காக அவரைச் சார்ந்திருக்கலாம்.
                                                                  
2.              13ம் 17ம் வசனங்கள் இன்னும் பெரிதும் மகத்துவமுமான காரியங்களை வெளிப்படுத்துகிறது. அவர் என்னை அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பது மட்டுமல்லாமல் என்னைக் காணவும் செய்கிறார். அவர் உண்மையிலேயே என்னைக் கவனிக்கிறார். நான் என் தாயின் வயிற்றில் கர்ப்பந் தரிக்கும் முன்பே அவர் என்னை முழுமையாகக் காண்கிறார் என்பது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் தகவலாகும். அவர் என்னை அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதும் கவனித்து வருவதும் அற்புதமான காரியம். ஆகவே, நமது சிந்தனையையும் சரீரத்தையும் தேவன் அறிந்து வைத்திருக்கிறார்.

3.              23, 24ம் வசனங்கள் சின்னஞ் சிறிய பிரார்த்தனை. தேவன் என்னோடு இருப்பதின் நிமித்தம் அவரிடம் பிரார்த்தனையை ஏரெடுக்கலாம். தேவனுடைய ஆழமான அன்பைப் புரிந்து வைத்திருக்கிற சங்கீதக் காரன் இப்படி எழுதி வைத்திருக்கிறார். நம் அந்தரங்க ஜீவியத்தின் பெலவீனத்தினால் தேவன் துக்கப்படக்கூடாது என்பதைச் சங்கீதக் காரன் உறுதி செய்ய நினைக்கிறார்.

நண்பர்களே, ஊக்கம்  பெறுங்கள். உங்கள் தேவன் உங்களைப் புரிந்து வைத்திருப்பதோடு காணவும் செய்கிறார். ஆகவே, நாம் பரிசுத்தம் காத்து அவரைப் பிரியப்படுத்துவோம்.


கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment