கிறிஸ்து
உயிர்த்தெழுவில்லை என்றால் நமது உபதேசங்கள் யாவும் குப்பையாகி விடும் என்று பவுல்
கூறுகிறார். திருச்சபைகள் இன்றளவும் செயல்படுகிறது என்றால், கிறிஸ்து
உயிர்த்தெழுந்ததும் அவர் உயிரோடு ஜீவிப்பதும்தான்!
தேவ ஜனங்களே, இந்த
உண்மை நம்மில் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அநேகர் தங்கள் ஜீவியம் தொடர்பான
ஐயங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சாத்தியமான
பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்தக்
கதையை ஒரு புஸ்தகத்தில் நான் வாசித்தேன். ஒரு மானை வளர்த்த ஒரு தோட்டக்காரரைப்
பற்றிய கதை அது. அந்த மான் குட்டியைத் தன் தோட்டத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ள
தோட்டத்தைச் சுற்றி குழி தோண்டினான். இதனால் அந்த மான் குழியைத் தாண்டி தோட்டத்தை
விட்டு வெளியேற முடியவில்லை. அது வளர்ந்த பிறகு, அக்குழியைத் தாண்டிக் குதித்து
வெளியேற முடிந்தாலும், மான் அவ்வாறு செல்லவில்லை. அந்தக் குழியைத் தாண்டிச் செல்ல
முடியாது என்ற ஆழமான எண்ணம் அதன் மனதில் பதிந்து விட்டது. அந்தக் குழியைத் தாண்டி
தனக்கு வேறு உலகம் இல்லை என்று அந்த மான் மனதில் பதிந்து விட்டது. அந்தக் குழி
எல்லையைத் தாண்டி வேறு உலகம் இல்லை என்ற மாயை தோன்றி விட்டது.
சில நேரம் நமது
கிறிஸ்தவ ஜீவியமும் இந்த மான் குட்டியைப் போன்று அமைந்து விடுகிறது. நம்மைச் சுற்றி
ஒரு குறுகிய சுற்றளவை எல்லையாக்கிக் கொள்கிறோம். நமக்குப் பாதுகாப்பான எல்லையைத்
தாண்ட மனம் மறுக்கிறது.
“எனக்குத் தெரியாது” மற்றும்
“எனக்கு அக்கறை இல்லை” ஆகிய இரண்டு கூற்றுகளும் நாம் மற்றவர்களைப் பற்றிக்
கவலைப்படவில்லை என்பதைப் பிரதிபலிக்கும் கூற்றுகளாகும்.
ஜீவனுள்ள கிறிஸ்து,
நாம் அந்த எல்லையைத் தாவிக் குதிக்கும் எண்ணத்தைத் தருவாராக. உதவிகளும்
நம்பிக்கையான வார்த்தைகளும் தேவைப்படும் ஜனங்களைச் சென்றடைந்து அவர்களுக்கு
ஆறுதலாக இருப்போமாக!
சிநேகிதர்களே, இந்த
ஈஸ்டர் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமையட்டும்!
No comments:
Post a Comment