இன்று ஒரு வரலாற்றுப்பூர்வமான ஆராதனை
நடைபெறுகிறது. திருச்சபை வரலாறு, இந்த குறுத்தோலை ஞாயிற்றை, இரண்டு பிரதான
காரியங்களை நினைவுகூற அணுசரிக்கப்படுகிறது
என்று கூறுகிறது:
(i) தாம் கொல்லப்படுவது உறுதி என்று
தெரிந்தும் இயேசுவானவர் எருசலேமுக்குப் பயணமாக மன உறுதியோடு தீர்மானித்தார்.
(ii) அவரைச் சூழ்ந்துள்ள ஜனத்தாரின் புத்தி
தடுமாற்றம். பரவசமான நேரத்தில் அவர்கள் கையில் குறுத்தோலைகளோடு இயேசுவானவரை
சந்தோஷத்தோடு வரவேற்றனர். ஆனால், சிறிது நேரம் கழித்து இதே கூட்டத்தார்
இயேசுவானவரை சிலுவையில் அறையவேண்டும் என்று
கூச்சலிட்டனர்.
முதலாவது, இயேசுவானவர்
தலைமைத்துவத்தில் சிறந்தவர் என்று நான் கருதுகிறேன். அவர் காளையின் கொம்பைப்
பிடிக்கிறார். அதாவது, முன்னிருக்கும் பிரச்சனையைக் காலம் தாழ்த்தாமல் அல்லது
தவிர்க்காமல் எதிர்கொள்வது நல்லது.
இரண்டாவது, கூட்டத்தாரின் மனநிலையால்
நாம் தவிக்காமல் இருப்போமாக. நாம் ஒவ்வொருவரும் நம் தனிச்சிறந்த தன்மைகளை அறிந்து
கொள்ள தாழ்மையோடும் நோக்கத்தை அறிந்தவர்களாகவும், பெரும்பான்மையானவர்களுக்கு
விரோதமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment