Sunday, May 29, 2016

இயேசு கிறிஸ்து உங்களுக்கு இரட்சகரானால்....

ஸ்தோத்திரம். நமது ஞாயிறு துதித்தல் ஆராதனைக்கு வருக. இன்றையே கேள்வி:
இயேசு கிறிஸ்துவை நமது சொந்த ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதால் அவர் நமக்கு பாவ மன்னிப்பு, நித்திய ஜீவனுக்கான வாக்குறுதி ஆகியவற்றைத் தவிர வேறு எதைத் தருகிறார்? கலாத்தியர் 3:26 - 4:7 ஆகிய வசனங்களை என்னோடு வாசிக்கவும். இந்த வசனம் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.

A. கலாத்தியர்  3: 26-28 – நமது சிந்தை பயனடைகிறது
பிறரைக் குற்றப்படுத்தாதபடி தேவன் நமது சிந்தையை மாற்றியமைக்கிறார். "யூதரானாலும், கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் அனைவரும் சுதந்திரவாளிகளே......" கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம். எந்தவிதமான வேறுபாடும் இருக்கத் தேவையில்லை. தோல் நிறம், மொழி, ஜாதி வேறுபாட்டின் அடிப்படையில் வெறுப்பு, வன்முறை, பேதம் தோன்றாததால், அதிக சந்தோஷம் கிடைக்கிறது.

B. கலாத்தியர்  3:29 – நமது உடைமை பயனடைகிறது
நாம் ஆபிரகாமின் உண்மையான வாரிசாக இருப்பதால், நமது கற்பனைக்கு எட்டாத சுதந்திரத்தை வழங்கியுள்ளார். நாம் மிக மிக செல்வந்தர்களாகியிருக்கிறோம்! உலக பிரகாரமாக அல்ல, வேறு விதமான செல்வந்தர்கள் ஆவோம். தேவன் ஆபிரகாமுக்கு வழங்கிய ஆசீர்வாதம் மிக அறுமையானதும் புரிந்து கொள்ளக்கூடாததுமானது. நாம் மாபெரும் செல்வத்துக்கு சுதந்திரவாளியாக இருக்கிறோம். மிகப் பெரிய ஈவைத் தேவன் வழங்கியிருப்பதால் இது மிகப் பெரிய சந்தோஷமான காரியமாகும்.

C. கலாத்தியர்  4:6 – அளவை ரீதியாக நாம் பயனடைகிறோம்.
தேவன் தமது அற்புதமான பிரசன்னத்தால், புதிய உறவின் அளவையை அருளியுள்ளார். நமது தேவனை, ‘அப்பா, பிதாவே’, என்று அழைப்பது எவ்வளவு பெரிய காரியம்! இது அற்புதத்திலும் அற்புதம். நான் எந்த அளவுக்கு தேவனை நெறுங்கியிருக்கிறேனோ, அந்த அளவுக்கு நீங்களும் மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். ஏப்படி? நான் தேவனுடைய புத்திரன் (புத்திரி)! ஒரு புத்திரனுக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்! ஒன்று வீட்டுக்குள் வாசம் செய்யமுடியும், மற்றொன்றால் முடியாது.

இயேசு கிறிஸ்துவினால் கிடைத்த இந்த ஆசீர்வாதங்களைப் பற்றிச் சிந்திப்போம்.

No comments:

Post a Comment