Wednesday, May 4, 2016

விவாக சிக்கல்

நாம் நிச்சயமாக அபாயகரமான காலத்தில் வாழ்கிறோம். விவாகங்கள், குடும்பங்கள், ஆராதனை வருகையில் எண்ணிக்கை சரிந்து வருகிறது. நம் சமூகம் இந்த நெறிகளைப் பரிகாசம் செய்கின்றது. நவீன சமுதாயத்தில் இவை தத்தம் அடையாளங்களைத் தற்காக்க முயல்கின்றன.

தங்கள் வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைத்துக் கொள்ள மக்கள் நாடுகிறார்கள். ஆகவே, விவாகங்கள் போன்ற ஏற்புடைய சமூக கடப்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்குக்கூட பின்வாங்குகிறார்கள். ‘இணைந்து வாழ்வது’ அனேகருக்கு எளிதானக் காரியமாகி விட்டது.

பயணங்கள் மற்றும் நவீன சுகபோகங்களுக்குத் தடையாக இருக்கிறது என்று கருதி தம்பதிமார்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை.

திருச்சபைகளுக்கும் சொந்த பிரச்சனைகள் உள்ளன. சமுதாயம் பொதுவாக சமயத்தை வெட்டி வேலையாகப் பார்க்கின்றது. நவீன சமுதாயத்தில் சமயத்தைதிற்கு இடம் இல்லை என்று பலர் கருதுகின்றனர்.

ஆனால், வேதம் மாறுபட்ட நடப்புகளைக் காட்டுகிறது.

தேவனே விவாக உறவை ஆரம்பித்து வைத்தார்! ஆதியாகமம் 2.18ல் மிகவும் வல்லமையான அதே நேரத்தில் அர்த்தப்பூர்வமான பிரகடனத்தை அது செய்கிறது:
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். விவாகம் அந்த அளவுக்கு அற்புதமான உறவை ஏற்படுத்தித் தருகிறது!

சங்கீதத்தில் பிள்ளைகள் தேவனுடைய பாரம்பரிய சொத்து என்று வாசிக்கிறோம்.

ஒன்று கூடுவதைப் புறக்கணிக்கலாகது என்று பவுல் எச்சரிக்கிறார்.

அன்பார்ந்த தேவ ஜனங்களே, தேவ திட்டத்தில் நமது சிந்தையையும் உள்ளத்தையும் மையப்படுத்த வேண்டியுள்ளது. நவீன நாயகத் தாக்கத்தை நாம் முறியடிக்க வேண்டும் என்பது இதன் பொருள். விவாகம் மற்றும் குடும்ப நெறிகளை மீட்டுக் காப்பது நமது கடமையாகிறது. ஊழியங்களில் நாம் இடைவிடாமல் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் பல தவறான உபதேசங்களைச் சமுதாயத்தில் முறியடிக்கச் செய்யும்.

இந்த சீர்குலைந்து போன உலகின் நிலைமை சீரடைய தேவன்தாமே அவருடைய ஜனங்களையும் திருச்சபைகளையும் தொடர்ந்து ஆளுகை செய்வாராக.


கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment