இந்த ஆண்டில் நாம்
முக்கியத்துவம் கொடுக்கும் காரியம்: சீஷத்துவம் – சீஷராக்குதல் – சீஷத்துவ
திருச்சபை
சீஷர்: செயலிலும்
சாயலிலும் இயேசுவானவரை ஒத்து இருக்க முயல்கிறவர்களை சீஷர் என்கிறோம். அவர் தவறாமல்
வேதத்தை வாசிப்பவராகவும், ஜெபிப்பவராகவும், தேவனுடைய பெலத்தை நாடுபவராகவும், அவருக்குக்
கீழ்ப்படிபவராகவும் முயல்பவர்கள் அவருடைய சீஷர் ஆவார்கள். ஒரு விசுவாசி சீஷராகவும்
இருப்பார் என்பது இதன் பொருள் ஆகும்!
ஒரு விசுவாசி அந்த
விசுவாச நிலையில் மாத்திரம் நிலைத்திருக்கலாகாது. அவர் சீஷராக ‘பதவி உயர்வைப்’
பெறும்போதுதான் பெருக்கத்தின் தத்துவம் செயல்படத் தொடங்குகிறது. ஒரு சீஷருக்குதான்
சுவிசேஷத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் வாஞ்சை இருக்கும். ஒரு சீஷர்தான் புதிய
ஆத்துமாக்களைக் கர்த்தரைண்டை கிட்டிச் சேர்ப்பார். இதன்வழி, அவர் கர்த்தரின்
கிருபையைப் பகிர்ந்து கொள்ள ஊழியக்காரன் ஆகிறார்!
அன்பார்ந்த தேவ ஜனமே,
இயேசுவானவரின் சீஷராகுவதற்கு ஒரு தீர்மானம் எடுங்கள். அப்போதுதான் நீங்கள்
மற்றவர்களைச் சீஷராக்க முடியும். அப்போதுதான் ஒரு திருச்சபையில் அங்கத்தினர்களுக்குப்
பதில் ஊழியர்கள் நிரம்பியிருப்பார்கள். (ஓர் ஊழியர்
எத்தனை ஆத்துமாக்களை தேவனுடைய நன்மைகளுக்காக ஆயத்தப்படுத்துகிறார் என்பதை எண்ணிப்
பார்ப்பார். ஓர் அங்கத்தினரோ அந்த நன்மை தனக்கே வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்.).
உங்கள் அனைவரையும்
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
No comments:
Post a Comment