கடந்த திங்கட்கிழமை
சுவாரஷியமான காரியம் நடந்தது. ஜெடைடா (மகள்) மாடத்தில் இருந்து வரவேற்பரைக்கு
உரத்த சத்தத்துடன் என்னை வெளியே எட்டிப் பார்க்கும்படிச் சொன்னாள். வெளியே எட்டிப்பார்த்த
நான் ஓர் ஆந்தையைக் கண்டேன். ஒன்றரை அடி கொண்ட அது ஓரளவு பார்ப்பதற்குப் அகோரமாக
இருந்தது. ஆனால், அந்த ஆந்த மாலை முழுவதும் அந்த மாடப் பிடியிலேயே அமரந்திருந்தது.
அங்கே வந்த என் மனைவி, அது காயப்பட்டிருக்குமோ என்று அஞ்சு, அதற்காக ஜெபித்தாள்.
பகல் நேரத்தில் அதற்குப் போதுமான பார்வை சக்தி கிடையாது என்பதை நாம்
அறியாதிருந்ததோம். ஆயினும் சிறிது நீர் கொடுக்க அதன் அருகே சென்றதும், பயத்தால்,
அது பறக்கத் தொடங்கிகியதால், எதிரே உள்ள சுவரில் மோதித் தடுமாறியது.
உண்மையில் செலயாங்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்டர் செல்வராஜை சந்திக்க நாங்கள் அங்கு
சென்றிருந்தோம். காரில் அமர்ந்த நாங்கள் வெளியே ஒரு காக்கையின் கூட்டம் ஏதோ
ஒன்றைத் துறத்துவதைக் கண்டோம். காரில் இருந்து வெளியேறிய நான், அந்த ஆந்தையைக்
காக்கையின் பெருங்கூட்டம் துரத்துவதைக் கண்டேன். காகங்கள் யாவும் அந்த ஆந்தையை
வேட்டையாட முயன்றன. அந்தக் காகங்களை விரட்டிய பிறகு விலங்குகளை நேசிப்பவர் ஒருவர்,
அந்த ஆந்தைய்யைப் பெற்றுக் கொண்டார். அன்று இரவு, அந்த ஆந்தை பத்திரமாகப் பறந்த
சென்று விட்டது என்று பின்னர் கேள்விப்பட்டேன்.
இந்தக் கதையின் மூலம்
பகிர்ந்து கொள்ள நினைப்பது என்னவென்றால், கூட்டமாக (நண்பர்களாக) வந்த வல்லமை. அந்தக்
காக்கையின் கூட்டம் உண்மையிலேயே துணிச்சல் நிறைந்தது. அவற்றைத் துறந்த அருகில்
சென்றால்கூட அவை அச்சம் கொள்ளாமல் அங்கே சுற்றித் திரிந்தன. உண்மையில் அவை என்னைத்
திரும்ப தாக்கிவிடுமோ என்று கூட பயந்தேன்!
நட்பு சேர்ந்து
கொள்ளும் உயிரிணங்கள் ஆக்கப்பூர்வமாகவோ அல்லது அபாயகரமாகவோ மாறக்கூடிய
வல்லமையுடையவை. எனவே நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் தோழர்
தொழிலிலோ, ஜீவியத்திலேயே, குடும்பத்திலோ முன்னேற்றத்திற்குச் சவால் விடட்டும். நீ
எதிர்ப்பார்ப்பதைவிட உன் மதிப்பைத் தாழ்த்துப்படிக்கு உன் நண்பர்கள் உன்னை தட்டி
விழ வைக்க வேண்டாம்.
கர்த்தர் உங்கள்
அனைவரையும் ஆசீர்வதிப்ராக
No comments:
Post a Comment