Friday, June 3, 2016

வெளிப்படுத்தலில் உள்ள 7 திருச்சபைகள் (8ல் 1ம் பகுதி)




வெளிப்படுத்தலில் உள்ள 7 திருச்சபைகள் (8ல் 1ம் பகுதி)

முன்னுரை:
நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து பெந்தேகொஸ்தே நாளிலே சபையை நிறுவினார்.
கலந்துரையாடல் கேள்விகள்:
1. நாம் எப்படிப்பட்ட சபையின் உறுப்பினர்?
2. ஒரு திருச்சபையின் பொதுவான தன்மைகள் யாவை?
வெளிப்படுத்தலில் இயேசுவானவர் குறிப்பிடும் ஏழு விதமான சபைகளைப் பற்றி கற்போம்.

1. மனித ஆசிரியர்:
இந்த விஷேசத்தை எழுதியவர் தம்மை யோவான் என்று அடையாளம் கூறுகிறார். (1:1, 4,9; 22:8) அவர் இயேசுவுக்கு அப்போஸ்தலனாகவும் செபெதேயுவின் குமாரனும் ஆவான் (மத்தேயு 10:2).
இந்த புஸ்தகம் சுவிசேஷத்தை நன்கு கற்றறிந்த யூதன் என்றும், சிறிய ஆசியாவில் உள்ள 7 திருச்சபைகளின் தலைவன் என்றும் வெளிப்படுத்துகிறது.

2. நேரமும் தேதியும்:
கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படும் ஆரம்ப காலத்தில் இது எழுதப்பட்டது.
நீரோ அரசாட்சியின் பிற்காலம் என்று காலக்கட்டம் காட்டப்படுகிறது. (கிபி 54–68) அல்லது டோமிஷன்* அரசாட்சியின் (கிபி 81–96) பிற்காலம்

3. சம்பவம்:
ரோம அதிகாரிகள் தங்கள் அரசரை ஆராதிக்க கட்டளையிட்டனர். கிறிஸ்தவர்களோ காசியர்* அல்லாமல் கிறிஸ்துவை ஆராதித்ததால், அதிகதிகமான ஒடுக்கப்படுதலை எதிர்நோக்கினர்.
சிமிர்னாவில் உள்ள விசுவாசிகள் வரப்போகும் எதிர்ப்புகளைக் குறித்து எச்சரிக்கப்பட்டனர். (2:10), பிலதெல்பியா சபைக்கு உலகுக்கு வரப்போகிற ஒரு மணிநேர சோதனை குறித்து கூறப்பட்டது. (3:10).
அந்திப்பா ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டான் (2:13) பிறரும் கொல்லப்பட்டனர் (6:9).
கிறிஸ்தவ சாட்சிகளின் நிமித்தம் யோவான் பத்முவுக்கு நாடு கடத்தப்பட்டான் (1:9).
ஆயினும் சபையில் உள்ள சிலர் துஷ்டத்தைச் சமாளிக்க சமரசத்தில் ஈடுபட்டனர். (2:14–15,20), இதனால் ஆவிக்குரிய புற்றி நோயாக மாறாமல் இருக்க சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

4. நோக்கம்:
பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட இப்புத்தகம், கிறிஸ்தவர்கள் பேரரசனின் கோரிக்கைகளுக்கு எதிர்த்து நிற்க வலியுறுத்துகிறது. உயிரே பரிபோனாலும் கூட பெருகி வரும் ஒடுக்கப்படுதலுக்கு அடி பணியக்கூடாது.
கிறிஸ்து திரும்ப வரும்போது அவர்களுடைய கொள்கை உண்மையென்று நிரூபிக்கப்படும். துஷ்டர்கள் அழிக்கப்படுவார்கள். தேவ ஜனங்கள் நீடித்த மகிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


5. வெளிப்படுத்தலின் துணைத் தலைப்புகள்:

முன்னுரை (1-3)

எபேசு (வெளிப்படுத்தல் 2:1-7) – முதற்பங்கான் அன்பைப் புரக்கணித்த சபை (2:4).
சமாரியா (வெளிப்படுத்தல் 2:8-11) – ஒடுக்கப்படுதலைச் சந்திக்கும் சபை (2:10).
பெர்காமு (வெளிப்படுத்தல் 2:12-17) – மனந்திரும்ப வேண்டிய சபை (2:16).
தியத்துரா (வெளிப்படுத்தல் 2:18-29) – கள்ள தீர்க்கதரிசிகளைக் கொண்ட சபை (2:20).
சர்தை (வெளிப்படுத்தல் 3:1-6) – நித்திரையில் ஆழ்ந்துள்ள சபை (3:2).
பிலதெல்பியா (வெளிப்படுத்தல் 3:7-13) – பொறுமையோடு சகித்துக் கொண்ட சபை (3:10).
லவோதிக்கேயா (வெளிப்படுத்தல் 3:14-22) – மத்தமான விசுவாசத்தைக் கொண்ட சபை (3:16).

பரலோகமும் ஏழு முத்திரைகளும் (4:1-8:1)
ஏழு எக்காளங்கள் (8:2-11:19)
ஸ்திரியும் நாகமும் (12-14)
ஏழு கிண்ணங்களில் வெஞ்சினம் (15-16)
பாபிலோனின் வீழ்ச்சியும் கிறிஸ்துவின் மறு வருகையும் (17-19)
புதிய வானமும் புதிய பூமியும் (20-22)

முடிவுரை:
இந்தப் பயணத்தைத் தொடங்கும் நாம் இயேசுவின் சத்தத்தை அறிய ஜெபித்துக் கொள்வோம்.


No comments:

Post a Comment