Thursday, August 11, 2016

‘மீனின் வயிற்றில் யோனா ’ 3ல் 2வது பகுதி:






முன்னுரை:
பகுதி 1ல் தேவன் யோனாவையும் சூறாவளியையும் பயன்படுத்தி மாலுமிகளை எப்படி விசுவாசிகளாக்கினார் என்று பார்த்தோம்.
கடந்த வார வேத பாடத்தின் முக்கிய குறிப்புகள்:
1. யோனாவின் பூர்வீகம்
2. கப்பலின் வயிற்றுப் பகுதி
3. சூறாவளியும் கப்பலும்
4. யோனா  கப்பலில் சாட்சி பகர்கிறான்
5. முடிவுரை - புத்தாக்கமடைதல்

இன்று இரண்டாவது பகுதியாக, யோனா கப்பலில் இருந்து தூக்கியெறியப்படுவதையும் கடலிலும் மீனின் வயிற்றில் இருந்ததையும் காண்போம்.

1. கடலிலும் மீனிலும் யோனா :
யோனா  1:17
யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

யோனா கப்பலில் இருந்து தூக்கியெறியப்படுகிறான். உண்மையில் அவன் கடலில் மூழ்குகிறான் (யோனா  2:5-6).
அப்படி மூழ்கும் தருவாயில் தேவன் அற்புதமாக ஏற்பாடு செய்த மீன் யோனாவைக் காப்பாற்றுகிறது.
யோனா  மூன்று பகலும் மூன்று இரவும் மீனின் வயிற்றில் இருப்பதை உணர்கிறான்.
இயேசுவானவர் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருக்கப் போவதற்கு இது உவமானமாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது:

மத்தேயு 12:39-40
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

2. யோனா  மீனின் வயிற்றில் இருந்து ஜெபிக்கிறான்:

யோனா  2:1
அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

  i) அவன் விண்ணப்பம் கேட்கப்பட்டது (வ. 2)
ii) கடலில் மூழ்குதல் (வ. 3-6a)
iii) கப்பலில் இருந்து காப்பாற்றப்படுதல் (வ. 6b-7)
Iv) பொருத்தனையும் ஒப்புக் கொடுத்தலும் (வ. 8-9)

யோனா  மூழ்கிக் கொண்டிருக்கும் போது ஒரு வேளை மனதுக்குள் ஜெபித்திருப்பான்.
தேவன் தம் கிருபையின்படி யோனாவைக் காப்பாற்றுவதற்குப் பதில் அவனை விழுங்கச் செய்தார்.

3. தேவன் இரட்சிக்க விரும்பினார்:
யோனா  2:9-10
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.

யோனா விண்ணப்பத்தை முடித்துக் கொண்ட பிறகு மீன் அவனை உலர்ந்த நிலத்தில் கக்கிப்போட்டது.
விண்ணப்பத்தின் இறுதிப் பகுதி அந்த புஸ்தகத்தின் கடைசி பகுதிக்கு முக்கியமானதாக அமைகிறது. (v. 9).
இறுதியில் ‘கிருபை தேவனிடத்தில் இருந்தே வருகிறது’ என்பதை உணர்ந்து அவருக்குக் கீழ்ப்படிகிறான்.

அப்போஸ்தலர் 10:28
அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.

சீமோன் பேதுருவுக்கு தேவன் அந்நிய ஜாதியாரிடத்தில் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்படி தரிசனத்தில் சவால் விட்டதற்கு இது ஒப்பானது. (அப்போஸ்தலர் 10).

முடிவுர:
கிருபை தேவனுடையது என்பதையும் யாரும் அழிந்து போகக் கூடாது என்று அவர் விருப்பம் கொண்டிருப்பதையும் உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். a) அவர்கள் ஜெபித்தார்கள் b) அவர்கள் தேவனுக்குப் பயந்தார்கள்    c) பலிகளைச் செலுத்தி பொருத்தனைப் பண்ணினார்கள்.


No comments:

Post a Comment