பாடம் 2:
தேவனோடு ஒரு தினசரி சந்திப்பு
முன்னுரை
1. மனதின் வரைபடம்
தினந்தோறும் தேவனோடு சந்திப்பு
• தேவனோடு ஐக்கியம் கொள்வதின் அவசியம் (1)
• இயேசுவின் முன் மாதிரிகள் (2-4)
• தியான நேரம் (5-7)
• எனக்கு வேலை அதிகம்;. நேரம் இல்லை என்று சாக்குப் போக்கு சொல்வது பற்றி (5)
• தியான நேரத்தைக் கடைப்பிடிப்பது ஏன் கடிமனமாக இருக்கிறது? (6)
• தியான நேரத்திற்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் (7)
• தியான நேரத்தின் இரண்டு பகுதிகள் (8-10)
• ஜெபம் (8)
• தேவனுடைய வார்த்தை (9-10)
• தியான நேரத்தை ஒழுங்காகக் கடைபிடிக்கத் தீர்மானம் (11)
2. நோக்கங்கள்
- தியானம் செய்வதற்குத் தூண்டுதலை உண்டு பண்ண.
- தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வது கஷ்டமாக இருப்பது ஏன் என்று ஆராய்ந்தறிந்து அது பற்றி ஆய்வு செய்வதற்காக.
- தியானத்திற்குப் போதிய நேரம் ஒதுக்குவதற்குத் தேவையான தீர்மானங்களும் திட்டங்களும் வகுக்க.
3. துதி
4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்காக
- உலக முழுவதிலுமுள்ள ஊழியங்களுக்காக உங்கள் தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காக, உங்களுடைய குறிப்பிட்ட சபைக்காக ஜெபிக்கவும்.
- உங்கள் சபையின் குருவானவர்களுக்காக.
- பயிற்சி பெறுவோருக்காக
- சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காக
5. வீட்டுப் பாடப் பயிற்சியை சரிபார்த்தல் - வீட்டுப் பாடப் பயிற்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரமும் முறையும் ஒவ்வொரு தலைவரின் அனுமானத்தின்படி செய்யப்படலாம்.
1. தியன நேரம் - யாக்கோபின் வாழ்க்கையில் தேவனுடைய கிருபை. ஆதியாகமம் 28:10-22
2. மனப்பாட வசனம் - நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. புலம்பல் 3:22-23
ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும் தைரியமாய்; கிருபாசனத்தண்டையிலே சேரக் கடவோம். எபிரேயர் 4:16
3. அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி
4. வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்ட பாகம்
முன்னுரை
இயேசுவில் விசுவாசம் வைத்தலும், தேவனோடுள்ள ஐக்கியத்தில் நமது இருதயத்திலுள்ளவற்றைப் பகிர்ந்துகொள்ளுதலும் ஒன்றல்ல என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். காலங்காலமாய் தங்கள் பெற்றோh;ரோடுள்ள தங்கள் உறவில் தடுப்புச் சுவர்களை எழுப்பிக் கொள்ளும் மக்களைக் காண்கிறோம். ஒருவருக்குப் பிள்ளையாகப் பிறந்து விட்டால் மட்டுமே அவருடைய பெற்றோருடன் ஒரு நல்ல உறவு இருக்குமென்று யாரும் உத்தரவாதம் தர முடியாது என்ற உண்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்தக் கருத்து நமது பிதாவாகிய தேவனோடு நமக்குள்ள உறவுக்கும் பொருந்தும். ஒரு ஆரோக்கியமும் மகிழ்ச்சியுமான ஆவிக்குரிய ஜீவியத்தை நிலைநாட்டி வைத்துக் கொள்வதற்கு, தேவனோடுள்ள ஆவிக்குரிய ஐக்கியத்தில் நமது இருதயத்தை அவருடன் பகிர்நது கொள்வதில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு தினந்தோறும் தேவனோடு ஐக்கியம் கொள்வதையே நாம் தியான நேரம் என்று குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் தேவனைத் துதித்து, அவருடைய வார்த்தையை வாசித்து, ஜெபிக்க, ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் போது, நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்போம். ஒரு மரத்தினால் போஷிக்கப்பட்டு, பசுமையான இலைகளுடன், கனி தரும் கிளையைப் போல் இருப்போம். சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்திலேய இந்த சிறப்பான பழக்கத்தை நாம் உண்டு பண்ணிக் கொள்வது மிகவும் முக்கியம். இத்தகைய அனுதின ஆவிக்குரிய ஐக்கியம் இல்லாமல், தேவனுடைய மகிமைக்காகப் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. நண்பர்களுக்கிடையே உள்ள ஐக்கியம் இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் காத்துக் கொள்ளப்படும் போது அது மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். இது போன்ற உறவை நாம் தேவனிடத்திலும் கொண்டிருந்தால் இந்த இனிமையை ருசிக்க முடியும். இப்போது இது போன்ற உறவை தேவனோடு அனுதின அடிப்படையில் வைத்துக் கொள்வது எப்படி என்று இந்தப் பாடத்தில் கற்றுக் கொள்வோம்.
7. முன்னுரையின் சுருக்கம்
• தேவனோடு ஒரு உறவை ஏற்படுத்துவது, தேவனோடு ஐக்கியம் கொள்வது ஆகிய இரண்டும் வித்தியாசமான விஷயங்கள்.
• தேவனோடு ஐக்கியம் கொள்வது என்பது, தேவனுடைய வார்த்தையிலும், ஜெபத்திலும் அவரோடு நேரம் செலவிடுவதாக இருக்கிறது. (அதாவது தியான நேரம்).
• சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப நிலையிலிருந்தே தினசரி தியான நேரம் வைத்துக் கொள்வதைப் பழக்கமாகக் கொள்வது அவசியம்.
8. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
நீங்களும் உங்கள் கடந்த காலத்தில் அறிந்திருந்தும், தற்போது தொடர்பு அற்றுப் போனதினால் நீங்கள் மறுபடியும் சந்திக்க விரும்பும் யாராவது ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள்.
பயிற்சி பெறுவோர் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக உள்ள சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய். பயிற்சி பெறுவோர் கண்டுபிடிக்க விரும்பும், கடந்த காலத்தில் தாங்கள் அறிந்திருந்த அந்த நபரைக் குறித்து அகிதம் சிந்திப்பதைக் காட்டிலும், அந்த நபரும் தானும் சம்பந்தப்பட்ட கடந்த காலத்து சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது நல்லது. சந்தோஷத்துடனும் நன்றி உணர்வுடனும் தேவனோடு நேரம் செலவிடுவது பற்றிய விஷயங்களை அறிமுகப் படுத்தவும் பயிற்சி பெறுவோர் தாங்கள் என்றென்றைக்கும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய, மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும்;.
9. நுழைவுக் கேள்வி
• இதுவரை நீ எவ்வாறு தேவனோடு ஐக்கியம் வைத்துக் கொண்டிருக்கிறாய்?
• தேவனோடு ஐக்கியம் கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன என்பது பற்றி நாம் சிந்திப்போமாக.
மையப் பகுதி
குறிப்பு
முலாவது கேள்வியைக் குறித்துப் பேசும் போது, பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.
நாம் என்ன மனப்பான்மையுடன் தேவனை அணுக வேண்டும்? (கூர்ந்து கவனித்தல், விளக்குதல்).
தைரியமாகக் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்ற கட்டளைக்கு முன்பாக நீ எவ்விதமான உணர்ச்சியை உணருகிறாய்? (சுய சிந்தனை).
நீ தைரியமாகக் கிருபாசனத்தண்டையிலே சேரக்கூடாதவைனாக இருந்தால், அதன் காரணம் என்ன (சுய சிந்தனை).
இந்த நேரத்திலிருந்து நீ தைரியமாகக் கிருபாசனத்தண்டையிலே சேரக்கூடுமா? (தீர்மானமும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும்)
(தேவனோடுள்ள ஐக்கியத்தின் அவசியம்)
1. எபிரேய நிருபத்தை எழுதியவர் தேவனோடு ஐக்கியம் கொள்வது என்பதில் அர்த்தத்தை மிகத் தெளிவாக விளக்குகிறார். எபிரேயர் 4:16ஐ வாசித்துப் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
அ) நமக்கு எப்பொழுது ஐக்கியம் தேவைப்படுகிறது?
- நமக்குத் தேவையுள்ள நேரத்தில் - இயேசுவின் உதவி நமக்கு எப்பொழுது தேவைப்படுகிறது,
- தேவ கிருபை நமக்கு உதவி செய்யத் தேவை இல்லை என்று நாம் சொல்லக் கூடிய எந்த நேரமும், வினாடியும் இல்லை. அது போலவே நமக்குத் தேவையுள்ள நேரத்தில் என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு வினைhடியையும் குறிக்கிறது.
ஆ) ஐக்கியம் கொள்வதின் நோக்கம் என்ன?
- நமக்கு உதவி செய்வதற்கு இரக்கமும் கிருபையும் பெற்றுக் கொள்வதற்காக.
உன்னுடைய தேவையில் உனக்கு உதவி செய்வதற்கு நீ கிருபை பெற்றுக் கொண்ட அனுபவத்தை எப்போதாவது பெற்றிருக்கிறாயா?
இ) தேவனோடு ஐக்கியம் கொள்வதற்கு நாம் எங்கே செல்ல வேண்டும்?
- கிருபாசனத்தண்டை
பழைய ஏற்பாட்டில் கிருபாசனம் என்பது எதைக் குறி;த்தது?
பழைய ஏற்பாட்டில் மகா பரிசுத்த ஸ்தலத்தில், தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாக விளங்கும் கிருபாசனத்தைக் குறிக்கிறது. (யாத்திராகமம் 25:17-22). இதை வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், தேவன் பிரசன்னமாக இருந்த இடத்தை இது குறிக்கிறது.
எபிரேயர் நிருபத்தை எழுதியவர் ஏன் தேவனுடைய சிம்மாசனத்தை ‘கிருபாசனம்’ என்று குறிப்பிடுகிறார்.
தேவன் தம்மிடம் வருபவர்களுக்கு மிகுதியான கிருகையைக் கொடுப்பதினால் அது கிருபாசனம் என்று அழைக்கப்படுகிறது.
உனக்குத் தேவையுள்ள நேரத்தில் உனக்கு உதவியாக இரக்கமும் கிருபையும் பெற்றுக் கொள்ளும்படி நீ தைரியத்துடன் கிருபாசனத்தண்டை கிட்டிச் சேரக்கூடும் என்று உண்மையாகவே விசுவாசிக்கிறாயா?
(இயேசுவின் முன் மாதிரி)
இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, தேவனுடன் அற்புதமான ஐக்கியத்தைக் கொண்டிருந்தார். இயேசு எங்கே, எப்போது தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தார் என்பதை விளக்கிக் கூறு (மாற்கு 1:35)
(குறிப்பு)
தியான நேரத்தின் போது சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வற்புறுத்திக் காண்பி (நேரம், இடம் போன்றது). இயேசு ஜெபம் பண்ணும்படி அதிகாலையிலே எழுந்து தனிமையான ஒரு இடத்திற்குப் போனார் என்ற உண்மை இயேசுவும் கூட தியான நேரத்திற்கு சுற்றுப்புறத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டார் என்பதைக் காட்டுகிறது.
எப்போது?
அதிகாலையில் இன்னும் இருட்டாக இருந்த போது இந்நாட்களில் சொல்லப் போனால் ‘இன்னமும் இருட்டாக இருக்கும் போது’, என்பது எத்தனை மணியளவில் இருக்கும்?
சூரியன் உதிக்கும் முன்பாக என்பதினால் அது காலையில் ஏறக்குறைய 4-5 மணியாக இருக்கலாம்.
இயேசு ஏன் அதிகாலையில் தேவனோடு பேசினார்? இயேசுவின் அன்றாடக வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாக இருந்தது. எனவே, பகல் நேரத்தில் தேவனோடு பேசி ஐக்கியம் கொள்வதற்கான தியான நேரத்தைக் கண்டு பிடிப்பது கஷ்டமாக இருந்தது.
இயேசு செய்தது போல் நாமும் அதிகாலையில் ஜெபிக்க வேண்டும்?
இயேசு தாம் ஜெபித்த நேரத்தில் நாமும் ஜெபிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையில் ஜெபிக்கவி;லை. இருந்த போதிலும் நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவுதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும், தேவன் நாம் தேவனோடு பேசி ஐக்கியம் கொள்வதை அலட்சியம் செய்யக்கூடாது என்பதற்காக இயேசு நமக்கு ஒரு முன் மாதிரியைக் காண்பிக்க விரும்பினார். தற்காலத்திய வாழ்க்கை முறையில் அதிகாலையில் எழும்புவது அவ்வளவு எளிதல்ல. எனவே, தங்கள் தியான நேரத்தை அதிகாலையின்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பயிற்சி பெறுவோர் எண்ணிக் கொள்ளாதபடி தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் எங்கு, எப்பொழுது தேவனோடு ஐக்கியம் வைத்துக் கொள்ளுகிறீர்கள், ஏன் குறிப்பிட்ட அந்த இடத்திலும் நேரத்திலும் வைத்திருக்கிறீர்கள்?
தலைவர்கள் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் பயிற்சி பெறுவோரிடம் கேட்கத் தக்கதாக, தலைவர்கள் தங்கள் வாழ்க்கையில் எங்கே, எப்போது தேவனோடு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கக வேண்டும.
எந்த இடத்தில்?
தனிமையான இடத்தில்
தனிமையான இடம் என்பது எப்படிப்பட்ட இடத்தைக் குறிப்பிடுகிறது,
மக்களிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்ட ஒரு இடத்தைக் குறிப்பிடுகிறது.
இயேசு ஏன் ஜெபம் செய்யும்படி தனிமையான இடத்திற்குச் சென்றார்?
தாம் தேவனோடு கொண்டிருந்த ஐக்கியத்திற்கு இடையூறு செய்து, கவனத்தைத் திருப்பக் கூடாது சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
தேவனோடு நேரம் செலவிடுவதற்காக இயேசு கண்டிப்புடன் நேரம், இடத்தைக் குறித்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்தினார். நீயும் சுற்றுப்புற சூழ்நிலையின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்ளுகிறாயா?
தேவனோடு ஐக்கியம் கொள்வதற்காக உன்னுடைய சுற்றுப்புற சூழ்நிலையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறாய்?
இயேசு என்ன செய்தார்,
இயேசு ஜெபம் செய்தார்.
இயேசுவின் ஜெபத்தின் பொருளடக்கம் என்ன?
வேத பகுதி, இயேசுவின் ஜெபத்தின் பொருளடக்கம் என்ன என்று குறிப்பிடாததினால் இதற்கு சரியான விடை கூற முடியாது. ஆனால், இயேசு ஜெபம் செய்த பின் சீஷர்களிடம், ‘வேறு இடங்களக்குப் போவோம், வாருங்கள்’ (அதவாது அருகிலுள்ள மற்ற ஊர்களுக்கும்) அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ண வேண்டும்’ என்று சொன்னது, இயேசு தாம் இட்நத உலகத்திற்கு வந்ததின் நோக்கத்தை மறுபடியும் உறுதிப்படுத்தினார் என்பதைக் காட்டுகிறது. இயேசு தமது ஜெபத்தில் அந்த நாளில் தாம் செய்ய வேண்டியது எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்பிவித்திருக்கலாம்.
3. இயேசுவின் அன்றாடக வாழ்க்கை மிகவும் பரபரப்பானது. மாற்கு 1ம் அதிகாரத்தை வாசிப்பதின் மூலமாக, இயேசு ஓய்வு நாளிலிருந்தது, மறுநாள் வரை 24 மணி நேரத்தை எப்படி செலவிட்டார் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
(குறிப்பு)
ஒவ்வொரு பகுதியைக் குறித்தும் ஆராய்ந்து விவாதிக்கும்படி பயிற்சி பெறுவோர் 3 அல்லது 4 குழுக்களாகப் பிரிக்கப்படலாம். இவர்கள் தாங்கள் வாசித்து அறிந்து கொண்டவற்றைப் பிற குழுக்களின் முன் சமர்ப்பிக்கலாம்.
அ) ஓய்வு நாள் காலை (வச.21-28)
- அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்துப் போதகம் பண்ணத் தொடங்கினார். ஜெப ஆலயத்திலிருந்;து அசுத்த ஆவி பிடித்த மனிதனைக் குணப்படுத்தினார்.
- உன்னைச் சந்தி;த்து உன்னிடம் உதவி கேட்க விரும்பும் மக்களால் நீ தொந்தரவு செய்யப்பட்டிருக்கிறாயா?
- மக்களுக்கு உதவி செய்து போதிப்பதற்காக அவர்களைச் சந்திப்பது எவ்வளவு கஷ்டமானதும் களைப்பூட்டுவதுமாக இருக்கும் என்பது குறித்துப் பேசு.
ஆ) ஓய்வு நாள் மத்தியான வேளை - வச.29-31
சீமோனின் வீட்டிற்குச் சென்று அங்கு ஜுரமாய்ப் படுத்திருந்த அவனுடைய மாமியைக் குணமாக்கினார்.
ஜெப ஆலயத்தில் போதித்த பின் இயேசு சிறிது நேரமாவது ஓய்வெடுத்தாரா?
29ம் வசனத்தில் ‘உடனே’ என்ற வார்த்தை இயேசுவுக்கு ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கவில்லை என்பதைக் காண்பிக்கிறது.
இ) ஓய்வு நாள் மலை நேரம் (வச.32-34)
சாயங்காலமாகி சூரியன் அஸ்தமித்தபோது சகல பிணியாளிகளையும் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடத்தில் கொண்டு வந்தார;கள். பட்டணத்தவர் யாவரும் வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். இரவின் பின் நேரம் வரை இயேசு அநேகரை குணமாக்கி அநகம் பிசாசுகளைத் துரத்தினார்.
யாருக்கு மிகவும் அதிகமான வேலைப் பளு இருக்கிறது? இயேசுவுக்கா, உனக்கா?
ஈ) மறுநாள் காலை நேரம் (வ.35)
இயேசு அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு தனிமையான ஒரு இடத்திற்கு ஜெபி;க்கும்படி சென்றார்.
4. தமது பரபரப்பான நாளிலும் கூட இயேசு
அதிகாலையில் தேவனோடு நேரம் செலவிட்டார் என்று எண்ணும் போது நீ எப்படி உணருகிறாய்?
இயேசு தேவனாக இருந்ததினால் அவர் எப்பொழுதும் பிதாவாகிய தேவனுடன் ஐக்கியம் கொண்டிருந்தார். இதினிமித்தம் தேவனோடு ஐக்கியம் கொள்வதற்கு அவர் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டு;டியதில்லை. ஆயினும் இயேசு தேவனோடு தனித்து தியானம் செய்ய நேரம் செலவிட வேண்டியதில்லை என்ற போதிலும் இது அவசியம் என்று உணர்ந்தாரென்றால் தனிப்பட்ட முறையில் தேவனோடு தியான நேரம் செலவிடுவது நமக்கு எவ்வளவு அதிகமாகத் தேவைப்படுகிறது?
மாற்கு 1ம் அதிகாரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் நேரத்தில் இயேசு தினந்தோறும் ஜெபித்தார் என்று நினைக்கிறாயா?
மாற்கு அதி.1ல் நாம் வாசித்தது போல, இயேசு அன்று அதிகாலையில் ஜெபித்தது, விசேஷித்த ஒரு விதிவிலக்கான சம்பவமாக இருக்கலாம் என்று பயிற்சி பெறுவோரில் சிலர் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால் மாற்கு சுவிசேஷத்தின் முழுமையான அமைப்பைக் கொண்டு பார்க்கும் போதும், மாற்குவின் நோக்கம் இந்த சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே இயேசுவின் அன்றாட வாழ்க்கை பற்றி விவரமாக எடுத்துக் கூறுவதாகும் என்பதையும் மனதில் வைத்து, நாம் இந்தக் கேள்வியைக் குறித்து சிந்திக்க வேண்டும். அநேகமாக மாற்கு தனது சுவிசேஷத்தை வாசிக்கும் மக்களுக்கு, இயேசு எவ்ளவு அதிகப்படியான அலுவல்களுக்கு மத்தியிலும், தேவனோடு உறவு கொள்ளும் நேரத்தை அலட்சியம் செய்யவில்லை என்பதைப் போதிக்க விரும்பினான். அவர் புறப்பட்டு (தமது) ‘வழக்கத்தின் படியே’ ஒலிவ மலைக்குப் போனார் என்று லூக்கா 22:39ல் கூறப்பட்டிருக்கிறது. ‘வழக்கம் போல்’ என்று கூறுவது, இயேசு ஜெபம் செய்யும் பழக்கத்தையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதைக் காண்பிக்கிறது.
(தியான நேரத்தைப் பரிசோதித்தல்)
5. ‘எனக்கு அதிகமான வேலை இருக்கிறது’ அல்லது, ‘எனக்கு நேரம் இல்லை’ என்பது போன்ற சாக்குப் போக்குச் சொல்லி தியான நேரத்தைத் தவறவிடும் பழக்கம் உனக்கு இருக்கிறதா? அப்படி இருக்குமானால் நீ எப்போதிருந்து தியான நேரத்தை விட்டு விட ஆரம்பித்தாய் என்றும் அது உன் ஆவிக்குரிய வாழ்க்கையை எவ்விதம் பாதித்தது என்றும் விவரித்துக் கூறு.
உண்மையைச் சொல்வோமானால், ‘தியான நேரம் செலவிட முடியாதபடி எனக்கு அதிக வேலை இருக்கிறது’ என்று சொல்வது பொய். இந்த வார்த்தைகள் சொல்வது என்னவென்றால், ‘நான் தியான நேரம் வைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இதைக் காட்டிலும் முக்கியமான வேறு பல அலுவல்கள் இருக்கின்றன’ என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், தியான நேரத்தை விட்டுவிட ஆரம்பித்தாய் என்றும் அது உன் ஆவிக்குரிய வாழ்க்கையை எவ்விதம் பாதித்தது என்றும் விவரித்துக் கூறு.
உண்மையைச் சொல்வோமானால், ‘தியான நேரம் என்று சொல்வது பொய். இந்த வார்த்தைகள் சொல்வது என்னவென்றால், ‘நான் தியான நேரம் வைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இதைக் காட்டிலும் முக்கியமான வேறு பல அலுவல்கள் இருக்கின்றன’ என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறப் போனால், தியான நேரம் வைத்துக் கொள்ள முடியாதபடி அதிகமான நேலை இருக்கிறதென்று சொல்பவர்கள், தேவனோடு தனித்து நேரம் செலவிடுவதைக் காட்டிலும் மற்ற விஷயங்களே அதிக முக்கியத்துவம் வாய்தவை என்று கருதுகிறார்கள்.
எனக்கு அதிக வேலை இருப்பதினால் நான் ஜெபம் செய்ய முடியவில்லை என்பது அல்ல, ஆனால், நான் அதிக வேலை செய்ய வேண்டியதாக இருப்பதினால் நான் இன்னும் அதிகமாக ஜெபிக்கிறேன்’ என்று மாட்டின் லூதர; கூறினார்.
நான் அதிகமாக ஜெபிக்கிறேன். ஏனென்றால் எனக்கு அதிகமான வேலை இருக்கிறது என்று மார்டின் லுஸதல் ஏன் கூறினார்?
‘ஏனென்றால் நாம் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறோமோ, அதற்கேற்றபடி, அதிகமான காரியங்களுக்காக நாம் தேவன் பேரில் நம்பிக்கை வைத்து அவருடைய உதவியை நாட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஜெபம் செய்வதற்குத் தங்களுக்கு நேரமில்லை என்று சொல்லுகிறவர்கள், என்னுடைய காருக்கு பெட்ரோல் ஊற்ற எனக்கு நேரமில்லை. ஏனென்றால் காரை ஓட்டுவதில் நான் அதிக வேலையாயிருக்கிறேன் என்று சொல்லும் முட்டாளைப் போல் இருக்கிறார்கள்.
6. தேவனை நாம் அனுதினமும் சந்திப்பதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கி வைக்க நீ விரும்பினாலும் கூட அது ஒரு கடினமான காரியம் என்று நீ ஏன் நினைக்கிறாய்?
- தியானத்துக்காக நேரம் ஒதுக்கி வைப்பது கடினமான காரியமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று நாம் செய்ய வேண்டிய பிரகாரம் தியான நேரத்திற்கு நமது வாழ்க்கையில் முதல் இடம் கொடுக்காததும் அதை முக்கியமானதாக மதிக்காததும்தான்.
- தியான நேரம் நமக்கு அதிக முக்கியமானது என்று நாம் கூறுவதற்கு தியான நேரம் அதிகாலையில் நாம் செய்யும் முதற் காரியமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமா?
- அதிக முக்கியமானதை முதலாவதாகச் செய்வது நல்லது. எப்படியானாலும் தியான நேரத்தை அதிக முக்கியமானது என்று கருதுவது அதற்கு முதலிடம் கொடுப்பதாக இருக்கிறது. (அதாவது முக்கியத்துவம்) மற்றபடி முதலில் செய்தாக வேண்டும் என்பதில்லை. (அதாவது அவசரமான காரியம் அல்ல). தியான நேரத்தைக் காலையில் செய்ய வேண்டிய முதற்காரியமாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும் தினசரி அதைக் கடைப்பிடிப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
7. தியான நேரத்தைக் கடைப்பிடிப்பதில் உண்மையுள்ளவனாக இருப்பதற்கு நீ ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய பழக்க வழக்கம் ஏதாவது இருக்கிறதா?
- பயிற்சி பெறுவோர் தங்கள் எண்ணங்களையும் அபிப்பிரயாங்களையும் வெளிக்காட்டும்படி ஊக்குவியுங்கள்.
நீ முன்பு ஒருபோதும் செய்திராத பட்சத்தில் இப்போது தியான நேரத்தைப் பழக்கப்படுத்திக் கொள்வது எளிதாக இருக்குமா? அல்லது கஷ்டமாக இருக்குமா?
- பொதுவாகப் பழக்க வழக்கங்களை உண்டு பண்ணுவதோ அல்லது திருத்தி சரிப்படுத்துவதோ கடினமான காரியம். எனவே, தினசரி தியான நேரத்தைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் இலகுவானதாக இருக்காது. ஒரு புதிய பழக்கத்தை உண்டு பண்ணுவது பூமியின் புவி ஈர்ப்புச் சக்தியிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற சிரமமான காரியம் என்பதைப் பயிற்சி பெறுவோருக்கு விளக்கிக் கூற வேண்டும். ஒரு விண்கலன் இந்த பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆரம்பத்தில் எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அது போலவே, ஒரு பழக்கத்தை உருவாக்குவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ ஆரம்பத்தில் அதிக சக்தி தேவைப்படுகிறது. இருந்த போதிலும் அந்த விண்கலன் பூமியின் வாயுமண்டலத்திற்கு வெளியே சென்று விட்ட பின் மறுபுறத்தில் உள்ள ஈர்ப்புச் சக்தி விண்கலனைக் கட்டுப்படுத்துகிறது. அது போலவே தினசரி தியான நேரம் வைத்துக் கொள்ளும் பழக்கம் நமது வாழ்க்கையில் வேர் கொள்ளும் போது அந்தப் பழக்கமே நாம் தொடர்ந்து செயலாற்றத் தக்கதாகப் புதிய ஈர்ப்பு சக்தியாகி விடும். தியான நேரத்தைப் பழகிக் கொள்வதில் பயிற்சி செய்வதற்கு ஆரம்பத்தில் அதிகமான முயற்சியும் உறுதியான தீர்மானமும் தேவைப்படுகிறது என்பதைத் தலைவர்கள் வற்புறுத்த வேண்டும்.
(தியான நேரத்தின் இரண்டு பகுதிகள்: ஜெபமும் வார்த்தையும்)
8. தேவனோடு சரியான ஐக்கியம் கொள்வதற்கு ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நாம் இயேசுவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். உங்களுடைய அன்றாட ஜெப ஜீவியம் எப்படி உள்ளது?
- பயிற்சி பெறுவோரிடம் அவர்கள் எப்பொழுது ஜெபிக்கிறார்கள், எங்கு ஜெபிக்கிறார்கள், ஒரு தடைவ ஜெபிக்கும்போது எவ்வளவு நேரம் ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேள். அத்துடன் அவர்களுடைய ஜெபங்களின் பொதுவான பொருடக்கம் என்ன என்பதையும் கேள்.
- தங்கள் ஜெப ஜீவியத்தைப் பற்றி ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும்.
- ஜெபம் செய்யாதவர்கள் கர்வம், தற்பெருமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படலாம். இது ஏன்?
- இது ஏனென்றால் ஜெபம் செய்யாதவர்கள் தாங்கள் தேவனுடைய உதவியும் கிருபையும் இல்லாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள்.
9. தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானம் செய்வது, தேவனோடுள்ள நமது தினசரி சந்திப்பில் அவர் பேசும் சத்தத்தைக் கவனித்துக் கேட்பதாகும்.
சங்கீதம் 119.97-102ஐ வாசித்துப் பின்வரும் கேள்விகளுக்கு விடை கூறு.
அ) வேதாகமத்தைக் குறித்து நமது மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்? (வச.97)
- அவருடைய வார்த்தையை நாம் நேசிக்க வேண்டும் (உமது கட்டளைகளை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்).
வசனம் 103ல் சங்கீதக்காரன் தேவனுடைய வார்த்தையின் பேரில் தனக்குள்ள அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறான்?
- தேவனிலும் மதருமாயிருக்கும்??? வேறு வார்த்தைகளில் கூறப் போனால் அவனுக்குப் பிரியமான உணவிலும் அதிகமாக அவன் வேதத்தை நேசிக்கிறான் என்று அர்த்தமாகும். உண்மையாகவே நீ தேவனுடைய வார்த்தையைத் தேனிலும் அதிகமாக நேசிக்கிறாயா?
ஆ) வேதத்தை வாசிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் நமது மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்? வ.102.
- நாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். (நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்).
இ) நாம் படித்துள்ள வார்த்தையை எப்படி மனதில் வைத்துக் காத்துக் கொள்ளுகிறோம்? வச.97, 99. களைக் குறித்துத் தியானம் செய்ய வேண்டும். (நாள் முழுவதும் அது என் தியானம்).
- வச.98-100ன் பிரகாரம் தேவனுடைய வார்த்தையை தியானிப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள் எவை?
- சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறார். (அதாவது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அபாயகரமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கும் தேவையான ஞானம் கிடைக்கும்).
- போதித்தவர்களைக் காட்டிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறார். (அதாவது அறிவுக்கு மேற்பட்டதும், அப்பாற்பட்டதுமான நுண்ணறிவும் ஞானமும் கிடைக்கும்).
- முதியோரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்குகிறார். (நமது அனுபவத்திற்கும் வயதிற்கும் மேற்பட்டதும் அப்பாற்பட்டதுமான ஞானம் கிடைக்கும்).
ஈ) நாம் படித்துள்ள வார்த்தையின்படி எவ்வாறு ஜீவிக்கிறோம்? தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கும் படி (வச.101) நாம் தொடர்ந்;து முயற்சி செய்ய வேண்டும். (சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்)
(தியான நேரத்திற்கு வேண்டிய தீர்மானம்)
10. மேற்கண்ட இரண்டு பகுதிகளில் எது உனக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது?
- பயிற்சி பெறுவார் தாராளமாகப் பகிர்ந்து கொள்வதற்கேதுவான சூழ்நிலையை உருவாக்கி, அவர்கள் உண்மையுடன் பகிர்நது கொள்ள ஊக்குவியுங்கள்.
(குறிப்பு)
தினசரி தியான நேர;த்தைக் கைக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்த மூன்று காரியங்கள் அவசியமாக இருக்கின்றன.
முதலாவது, எபியேரர் 4:16ல் சொல்லப்பட்டிருப்பது போல, தியான நேரத்தைக் குறித்து நமக்கு ஒரு வலுவான தூண்டுதல் தேவைப்படுகிறது. இரண்டாவது, நமது நேரத்தை நாம் நன்றாக விவேகத்துடன் நிர்வாகிக்க நமக்கு உதவியும் உக்குவிப்பும் தேவைப்படுகிறது.
மூன்றாவதாக, தியான நேரத்தைக் குறித்து நாம் ஒரு பொறுப்புணர்ச்சியை உணரவேண்டும். எனவே, நேரத்தை நிர்வகிப்பதில் பயிற்சி பெறுவாருக்கு உதவியாக இருக்கும்படி அவர்கள் ஒரு வாரத்தித்திற்குரிய கால அட்டவணையை தயாரிக்கும்படி சொல்வது உதவியாக இருக்கும். அத்துடன் பயிற்சி பெறுவோர் கால அட்டவணையைத் தயாரிக்கும் படி சொல்வது உதவியாக இருக்கும். அத்துடன் பயிற்சி பெறுவோர் ஒருவருக்கொருவர் பொறுப்பாளிகளாகும் உறவை வளர்த்துக் கொண்டு யாவரும் ஒன்றுபட்டுத் தங்கள் தியான நேரத்தைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
(ஒருவருக்கொருவர் உத்தரவாதிகளாகும் உறவு)
11. இந்தப் பாடத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் படித்துப் பார்த்து, நீங்கள் உடனே செயல்படுத்த வேண்டிய காரியம் ஏதாவது இருந்தால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பயிற்சி பெறுவார் தேவனுக்கு முன்பாக அவசியமான தீர்மானங்களைச் செய்யும்படி ஊக்குவிக்க இந்த நேரத்தை பயன்படுத்தவும்.
நான் தேவனைச் சந்திக்க் வாக்குக் கொடுக்கிறேன் ( ) இருந்து ( ) வரை வரும் மாதம் தேதி
கையொப்பம்
முடிவுரை
1. சுருக்கம்
மனவோட்டவரையை உபயோகித்துப் பாடத்தை சுருக்கமாகக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதயங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும்படி உதவி செய்ய வேண்டு;ம்.
2. தீர்மானங்களும் செயல்படுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி, அவைகளைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும்படி எழுதி, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
3. செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றைச் செய்லபடுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகச் கிரமப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும்.
4. முடிவில் துதி செலுத்துதல்
5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டித் தெளிவுபடுத்திப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
- அவர்களுடைய குணமும் வாழ்க்கையும் முற்றிலும் மாற்றம் அடைவதற்கு செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்க்கையையும் பரிசுத்த ஆவியானவர் முற்றிலும் மாற்றும்படி ஜெபிக்கவும்.
6. வீட்டுப் பாடப் பயிற்சி
1) அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி
பயிற்சி பெறுவோர் தங்களைத் தினசரி அலுவல்களைப் ஒரு கால அட்டவணையில் பதிவு செய்து வைக்கும்படி சொல்லவும். பயிற்சி பெறுவோர் தங்கள் நேரத்தை மேலும் சிறந்த வகையில் நிர்வகிக்க உதவி செய்வதே கால அட்டவணையின் நோக்கம் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டும். இது வரையிலும் எவ்வளவு நேரம் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் சிந்தித்துப் பரிசோதித்துப பார்க்கவும் ஒரு புதிய தியான நேரத்திற்கான திட்டத்தை எழுதிக் கொள்ளவும். அவர்களிடம் கூறுங்கள்.
2) வாசிக்கும்படி கொடுக்கப்படும் பகுதி.
3) மனப்பாட வசனங்கள்
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:1-2
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119.105
4) தியான நேரம்
ஏசாயாவின் தியன நேரம்
ஏசாயா 6:1-13
தலைவரின் தற்பரிசோதனைப் பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுய மதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 5 4 3 2 1
1. மனதின் வரைபடத்தின் உபயோகம்
- இந்தப் பாடம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?
- பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் சரிவர புரிந்துணர்ந்திருந்தேனா?
- ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கு இடையேயும் கடந்து செல்வது சுமூகமாக இருந்ததா?
2. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
- அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை பொருத்தமானதாக இருந்ததா?
- நான் அறிமுக நடவடிக்கயை நல்ல விதமாகவும் சரியான விதமாகவும் உபயோகம் செய்தேனா?
3. கேள்வி
- நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
- பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
- தெளிவாகவும் விபரமாகவும் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் ஆம், இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் சம அளவி;லும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
4. கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
- பயிற்சி பெறுவோர் விடையளிக்கும் போது நான் அனுதாபத்துடன் கேட்டு, பொருத்தமான பாவனை சைகை, குரலில் ஏற்றத் தாழ்வு, நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகப் படுத்தினேனா?
- பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக, ஒழுங்கு படுத்தினேனா?
5. திறந்த மனப்பான்மை
- பயிற்சி பெறுவோரிடம் மனம் விட்டுப் பேசினேனா?
- பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை, குணாதிசயம் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
- மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் என் அங்கீகாரத்தைக் காண்பித்தேனா?
- பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களைப் பாடத்தின் கருப் பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?
6. ஊக்குவிப்பு
- பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
பகிர்ந்து கொண்டவற்றுக்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?
7. நேரத்தை நிர்வகித்தல்
ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகமாக நேரத்தை ஒதுக்கினேனா? கூர்ந்து நோக்குதல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல்.
- பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?
8. பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்
- பரிசுத்த ஆவியானவர் ஒளியூட்டித் தெளிவுபடுத்துவதை நான் நாடித் தேடினேனா?
- பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையும் உள்ளத்தில் உணர்ந்து அதின்படி செயல்பட்டேனா?
9. கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும்
- பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
- பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டிறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செய்லபடுத்துவதற்குத் தீர்மானம் செய்து சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?
10. பயிற்சி பெறுவோரைப் புரிந்துணர்ந்து கொள்ளுதல்.
- பயிற்சி பெறுவோர் எதிர்நோ;க்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
- இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும், ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொ ண்டேனா?
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல. மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்யுங்கள் (1பேதுரு 5:3)

No comments:
Post a Comment