Saturday, August 6, 2016

யோனா (3ல் 1ம் பகுதி)



கப்பலில் யோனா
—————————————————————————————————————–——
முன்னுரை:
 யோனாவின் புஸ்தகம் ஒரு அற்புதமான ‘தீர்க்கதரிசன புஸ்தகம்’. அதில் யோனாவின் வாழ்க்கை வரலாறு அதிகம் அடங்கியிருக்கிறது. தேவனின் அருட்பணி கோணத்தில் இதை அராய்வோம்
 இந்த ஆராய்ச்சியை 3 கோணத்தில் நடத்துவோம்:
a) கப்பல் (1:1-17)    b) மீன் (2:1-10) c) மகா நகரம் (3:1-4:11)

1. யோனாவின் பின்னனி:
2 ராஜா 14:25 காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.

 யோனா  உண்மையில் தேவ பயம் நிறைந்த தீர்க்கதரிசி. அவனை தேவன் இஸ்ரவேலில் பயன்படுத்தினார்.
 தேவன் அவனைத் தன் தேசத்திற்கு அப்பால் அசீரியாவில் உள்ள நினிவேவுக்குப் போகசொன்னார். (யோனா  1:1-2).
 ஆனால் யோனா  தர்ஷீசுக்கு தப்பியோடினான் (யோனா  1:3). தேவன் நினேவேயில் உள்ள அசீரியர்களிடத்தில் கிருபை காட்டுவதை விரும்பவில்லை (யோனா  4:2).

2. கப்பலின் வயிற்றில்:
யோனா  1:3, 5b அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

 அவன் முற்றிலும் பலன் தராத முயற்சியில் இறங்கினான் – தேவனை விட்டு ஓடினான் (சங்கீதம்139).
 இப்போது கப்பல் அவனுக்கு பாதுகாப்பான இடமாக மாறிற்று – அவன் அதன் அடித்தட்டில் ஆழ்ந்த நித்திரையில் ஈடுபட்டான்.
 ஆனால், விட்டுக் கொடுக்காத தேவன்,  யோனாவுக்காக கொண்ட திட்டத்தைச் செயல்படுத்தினார்.

3. புயலும் கப்பலும்:
யோனா  1:4, 5a
 கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.
 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்;


4. யோனா  கப்பலைப் பற்றிய சாட்சி பகர்கிறான்:
யோனா  1:6, 7b, 8
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
 யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது
 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.

 யோனா  மாலுமியால் எழுப்பப்பட்டு தன்னுடைய தேவனை அழைக்கும்படி நினைவுறுத்தப்பட்டான் (வ. 6).
 மாலுமிகள் சீட்டு போட்டார்கள் (வ. 7). யோனவிடம் வாக்குவாதம் செய்து பின்வரும் கேள்விகளைக் கேட்டார்கள் (வ. 8)
a) “யாருடைய பெயரினல் இந்தக் கடற்கொந்தளிப்பு நம்மைத் தாக்கிற்று
b) உன் தொழில் என்ன?  c) நீ எங்கே இருந்து வந்திருக்கிறாய்? 
d) உன் தேசம் எது? e) நீ எந்த ஜனத்தைச் சார்ந்தவன்?”

யோனா  1:9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.

யோனா  தன்னைப் பற்றியும் தன் தோல்வியைப் பற்றியும் தேவனுக்கு விரோதமான கீழ்ப்படியாமையைப் பற்றியும் அறிவிக்கிறான் (வ. 10) (1 பேதுரு 3:15).

முடிவுரை:
யோனா  1:14-16 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.
 அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.

 யோனாவின் விளக்கமும் சூழ்நிலையும் மாலுமிகளுக்கு விசுவாசத்தை ஏற்படுத்தியது.
a) அவர்கள் ஜெபித்தார்கள்
b) அவர்கள் தேவனுக்குப் பயந்தார்கள்       
c) அவர்கள் பலி செலுத்தி பொருத்தனை பண்ணினார்கள்.


No comments:

Post a Comment