Thursday, August 4, 2016

சிலந்தியும் நாமும்

ஸ்பைடர்மென் (சிலந்தி மனிதன்) எப்போதும் எனக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாநாயகன் ஆவான். நான் வசிக்கும் தோட்டத்தில் இருந்து 12 மைல் சைக்கிள் ஓட்டி அருகில் உள்ள நகரில் அது தொடர்பான சஞ்சிகையை வாங்குவேன். ஆக இயல்பாகவே சிலந்தி சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்னை வெகுவாகக் கவரும்.

சிலந்தியின் வலை இயல்பான அபூர்வம். அது பட்டால் (பட்டு) ஆனது. ஒவ்வொரு சிலந்தியும் ஒரே மாதிரியான வலையைப் பிண்ணும். அந்த வலைக்கோடு அதன் உடல் அளவுக்கு இருக்கும். அது அற்புதமான காரியம். அதன் நூல்கள் யாவும் இரும்பைவிட பெலன் வாய்ந்தது. அமெரிக்கர்கள் இதை ஆராய்ச்சி செய்து, துப்பாக்கிக் குண்டு நுழைய முடியாத கவச ஆடைகளைத் தயாரித்துள்ளனர். நமது தேவனோ சற்று கூடுதலான ஆக்கத்திறத்தை எடுத்து சிலந்தி போன்ற ஒரு அற்புதமான படைப்பை இப்பூலகுக்கு வழங்கியுள்ளார்.

உங்கள் முன்னே உள்ள கண்ணாடியைப் பாருங்கள் – நீங்கள்தான் அது! நீங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட அற்புதமான படைப்பில் ஒருவர். உங்கள் கைரேகைகூட மற்றவரோடு சமமாக இல்லாத அளவுக்குத் தேவன் உங்களைப் படைத்துள்ளார். தேவன் உண்மையிலேயே உங்களைப் படைப்பதில் கூடுதலான அக்கறை எடுத்துள்ளார். …..அவருடைய சொந்த சாயல்! தம் சொந்த கரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.! அந்த சிலந்தியில் காணப்படும் அற்புதம் உங்களிலும் காணப்படுகிறது. அதற்கும் மேலாக, மனிதனைப் படைத்த அவர், இது நல்லதாக இருக்கிறது என்று கூறி நமது அறுமையைப் பாராட்டினார்.


நமது தனித் தன்மைக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம். நம்மைச் சார்ந்த காரியங்கள் யாவற்றிலும் கடவுளுடைய தெய்வீக நோக்கத்தை வெளிப்படுத்துவோம். தேவன் நமது ஜீவியத்தில் மகிமைப்படுத்தப்படுவாராக!

No comments:

Post a Comment